ஸலபுகளிடமிருந்து.. பகுதி 01

ஸலபு & ஸலபிகளின் வாழ்வு/கூற்றுகளிலிருந்து..

தொகுப்பும் மொழிபெயர்ப்பும்:

அஷ்ஷெய்க்: N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)


1. இறையருட்கொடைகளின் பெறுமதியை அறிய வேண்டுமா!?

இமாம் பக்ர் அல்முஸனீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

"மனிதா! அல்லாஹ் உனக்குப் புரிந்திருக்கும் அருட்கொடைகளின் பெறுமதியை அறிந்து கொள்ள நீ விரும்பினால், உனது கண்கள் இரண்டையும் மூடிக் கொள்!!"

{ நூல்: அஷ்ஷுக்ர் லிப்னி அபிbத் துன்யா, பக்கம்- 62 }

‎ _قال الإمام بكر المزني رحمه الله تعالى:-_ 

{ يابن آدم! إذا أردت أن تعلم قدر ما أنعم الله عليك فاغمض عينيك }

‎[ الشكر لابن أبي الدنيا،  ص -٦٢ ]


2. உபதேசம் செய்வோரும் சமூகத்தில் வேண்டும்! உபதேசத்தை  விரும்புவோரும் சமூகத்தில்  வேண்டும்!!

உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:-

"உபதேசம் செய்யாதோர் இருக்கும்  சமூகத்தில் நலவேதும் இருக்காது! உபதேசத்தை விரும்பாதோர் இருக்கும் சமூகத்திலும் நலவேதும் இருக்காது!!".

{ நூல்: அல்இஸ்திகாமா லிப்னி தைமிய்யா, பக்: 148 }

‎قال عمربن الخطاب رضي الله عنه: [ لا خير في قوم ليسوا بناصحين! ولا خير في قوم لا يحبون النصح! ]

‎{ الإستقامة لابن تيمية، ص ١٤٨ }

" உபதேசம், நினைவூட்டல் விடயங்களை நாம் அனுப்பிக் கொண்டிருப்பதால் மார்க்க நெறியைக் கடைப்பிடித்தொழுகுவதில் நாம்  உச்சத்தில் இருக்கின்றோம்; அல்லது முன்மாதிரியிலும் பூரணத்துவத்திலும் உச்சத்தில் இருக்கின்றோம் என்பது அர்த்தமல்ல! மாறாக, மார்க்கத் தகவல்கள் அடங்கிய இத்தகைய குறிப்புக்களை உங்களுக்கு முன்னர் எமக்கே நாம் முன்வைக்கின்றோம். மார்க்க   நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்  நாங்களும் நீங்களும் முன்னேறலாம்; மனோ இச்சையுடன் போராடலாம் என்பதற்காகத்தான்!

அறிவு, மார்க்க நெறிமுறை பேணி வாழ்தல் ஆகியவற்றில் நல்ல நிலையை நாம் அடைந்தாலும், அல்லது அறியாமை மற்றும் பாவங்களில் நாம் இருந்தாலும் எமக்கிடையில் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்ளும் தேவையுடையவர்களாகவே நாம் இருக்கின்றோம்!".

"உண்மையைக் கொண்டும்,பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் அவர்கள் உபதேசித்துக் கொள்வார்கள்" (அல்குர்ஆன்,103:03)

{ முகநூல்: التوحيد والسنة எனும் பக்கம் }

‎حين نرسل بالنصح والتذكير لا يعني أننا في قمة التدين أو المثالية أو الكمال.....!

‎بل هي رسائل نوجهها لأنفسنا قبلكم لعلنا و إياكم نرتقي ونجاهد الهوى، مهما بلغنا من العلم والتدين أو الجهل والمعاصي فنحن محتاجون للتواصي والتناصح فيما بيننا.

‎قال تعالى: { وتواصوا بالحق وتواصوا بالصبر}

‎{ فيس بوك: التوحيد والسنة}

            

3. தாடி வழித்தவர்களே!  மன்னித்துக் கொள்ளுங்கள்! சிந்தித்தும் கொள்ளுங்கள்!!

தாடி வைத்த தந்தையொருவர், தன் ஆண் குழந்தையைத் தூக்கி வைத்திருந்தார். வழமைக்கு மாறாக அக்குழந்தை தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்தது! அப்போது அங்கே தாடி வழித்த ஒருவர் இருந்து கொண்டிருந்தார். குழந்தையின் அழுகுரலால் தாக்கமடைந்த அவர், தந்தையின் இரு முழங்கைகளுக்கிடையிலிருந்து அவர் குழந்தையை வாங்கி எடுத்தார். உடனே அக்குழந்தை, அழுகையை நிறுத்தி அமைதியாகி விட்டது! 

அப்போது தாடி வழித்தவர், தாடி வைத்திருந்த சகோதரரிடம், "தாடிக்கார நீங்கள்,பயம் காட்டுபவர்கள்; சிறு பிள்ளைகள் கூட உங்களைப் பார்த்துப் பயப்படுகின்றனர்!" என்றார். அதற்கு தாடி வைத்திருந்தவர், "அக்குழந்தை, உம்மை தனது தாய் என எண்ணித்தான் தன் அழுகையை நிறுத்தி அமைதியடைந்தது!" என்று பதிலளித்தார்.  (முகநூல்:  بكري محمد أحمد علي என்பவர்)

‎أحد الملتحين كان يحمل إبنه، وابنه يبكي بشكل غير طبيعي بالمواصلات!...

‎فكان أحد الناس من حالقي اللحى تأثر ببكاء الفتى فأخذه من بين ذراعي أبيه فسكت الفتى واطمئن.

‎فقال حالق اللحية للأخ الملتحي: "أنتم الملتحون مخيفون حتى للأطفال الصغار!"

‎فرد عليه الملتحي: "لقد سكت ظن أنك أمه!".

‎( فيس بوك: بكري محمد أحمد علي)

நவீன கால ஹதீஸ் கலை மேதை அல்லாமா நாஸிருந்தீன் அல்பானீ (ரஹ்) அவர்கள், தாடி வழித்தல் குறித்து  இப்படிச் சொல்கிறார்கள்:- 

"தாடி வழித்தல் என்பது ஒரு முஸீபத்தாகும்; இதுவொரு கெட்ட காரியமும் பாவமுமாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. அல்குர்ஆனுக்கும், ரஸூல் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் முரணாக இருக்கும் இதில், காபிர்களுக்கும் பெண்களுக்கும் ஒப்பாகும் அம்சமும் இருக்கின்றது!!".

‎(سلسلة الهدى والنور، الشريط الثالث)

‎قال الإمام المحدث ناصر الدين الألباني رحمه الله:- 

‎"حلق اللحى مصيبة! وانها بلا شك فسق ومعصية، ومخالفة للقرآن وللرسول، وفيه تشبه بالكفار وبالنساء! " ( سلسلة الهدى والنور/ الشريط الثالث)

             

4. தொழுகையை விட்டவன் கேவலமானவன்!

இமாம் லாலகாஈ (ரஹ்) கூறுகின்றார்கள்:

தொழுகையை விட்டவன் முஸ்லிமா? அல்லது காபிரா? என்று அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதே அவனது கேவலத்திற்குப் போதுமானதாகும்!”

{நூல்: ஷர்ஹு உஸூலி இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னா, பக்:20}

‎قال الإمام اللا لكائي رحمه الله تعالى:

‎"يكفي تارك الصلاة عارا أن أهل العلم اختلفوا فيه هل هو مسلم أو كافر؟"

‎{ شرح أصول اعتقاد أهل السنة والجماعة!"

               

5. செய்த பாவத்தை நீங்கள் பார்க்கும் பார்வை, முஃமினுடைய பார்வையா? முனாபிfக்குடைய பார்வையா?

நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:-

“ முஃமின் (இறைவிசுவாசி) ஒருவர் தான் செய்த பாவத்தை தனக்கு மேல் விழுந்துவிடப் போகும் பாறாங்கல்லைப் பயப்படுவது போன்று (பாரதூரமானதாகப்) பார்ப்பார். முனாபிfக் (நயவஞ்சகன்) ஒருவனோ, தனது பாவத்தை கொசு ஒன்று தன் மூக்கின் மேல் வந்தமர்ந்து, உடனே அது பறந்து சென்று விட்டதைப் போன்று (அற்பத்தனமாகவும், அலட்சியமாகவும்) பார்ப்பான்!”

{ நூல்: 'முஸன்னப்f இப்னு அபீ ஷைபாb' ,13/292 }

‎قال عبد الله بن مسعود رضي الله عنه :- 

‎      *[ المؤمن يرى ذنبه كأنه صخرة يخاف أن تقع عليه، والمنافق يرى ذنبه كذباب وقع على أنفه فطار فذهب! ]*

‎{ مصنف إبن أبي شيبة، ١٣/ ٢٩٢ }

       

6. இறுதி வெற்றி சத்தியத்திற்கே!

இமாம் அலீ இப்னு முகம்மது அஷ்ஷவ்கானீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

“அசத்தியம் சத்தியத்தை வென்று, அதை மேலோங்கி விட்டதாக சில நிலைமைகளில் காணப்பட்டாலும் அசத்தியத்தை அழித்து, அதை அல்லாஹ் வீணாக்கியே விடுவான்; அத்தோடு, சத்தியத்திற்கும், சத்தியசீலர்களுக்கும் இறுதி முடிவை அவன் நல்லதாக்கியும் கொடுப்பான்!”

{ நூல்: 'பfத்ஹுல் கதீர்' ,3/75 }

‎قال الإمام علي بن محمد الشوكاني رحمه الله تعالى:

‎       [ إن الباطل وإن ظهر على الحق في بعض الأحوال وعلاه فإن الله سيمحقه ويبطله، ويجعل العاقبة للحق وأهله! ] 

‎{ فتح القدير،  ٣/٧٥ }

அல்லாஹ் கூறுகின்றான்: “குற்றவாளிகள் வெறுத்த போதிலும் சத்தியத்தை நிலைநாட்டிடவும், அசத்தியத்தை அழிக்கவுமே அவன் விரும்புகிறான்!”

(அல்குர்ஆன், 8:8)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: “மாறாக, சத்தியத்தை அசத்தியத்தின் மீது நாம் வீசுகின்றோம். அது அசத்தியத்தை நொறுக்குகிறது; அப்போது அது அழிந்து விடுகிறது!”

(அல்குர்ஆன், 21:18 )

               

7. தஃவாப் பணியில் எதிர்நோக்கும் இடர்களுக்காக வருத்தப்படாதீர்கள்!!

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

“அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியில் நீ ஈடுபடுகின்ற காரணத்தால், அல்லது இஸ்லாத்தை பலமாகப் பற்றிப் பிடித்து நீ நடக்கின்ற காரணத்தால் குற்றவாளிகளிடமிருந்து உனக்கு ஏற்படும் கேலி, பரிகாசம் ஆகிய இவ்வொவ்வொன்றுக்கும் உனக்குக் கூலியுண்டு. ஏனெனில், இது அல்லாஹ்வின் பாதையில் சந்தித்த விடயமாகும்! ”.

{ நூல்: 'அல்பாBபுBல் மப்fதூஹ்' - 94 }

‎      قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:- 

‎      [ كل ما أصابك من استهزاء أو سخرية من المجرمين بسبب ما قمت به من الدعوة إلى الله أو التمسك بدين الله اعلم ان لك أجرا في ذلك، لأنه في سبيل الله تبارك وتعالى ].

அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே!) உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தவர்களைச் சூழ்ந்தது”. (அல்குர்ஆன், 6:10 )


8. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோர் நிறையப் பேர்! அதில் உறுதியாக இருப்பவர்களோ கொஞ்சப் பேர்!!!

அல்லாஹ் கூறுகின்றான்: “நிச்சயமாக எவர்கள் எங்கள் இரட்சகன் அல்லாஹ்வே எனக் கூறி, பின்னர் (அதில்) உறுதியாக இருக்கிறார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்கி, 'நீங்கள் அச்சப்பட வேண்டாம்; துக்கப்படவும் வேண்டாம்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் பெறுங்கள்! (என்று கூறுவர்)” 

(அல்குர்ஆன், 41:30)

இமாம் இப்னு ரஜப் அல்ஹன்பbலீ (ரஹ்) கூறுகின்றார்கள்:

“எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறுவோர் நிறையப் பேர்! ஆனால், (அக்கொள்கையில்) உறுதியாக நிலைத்திருப்பவர்களோ கொஞ்சப் பேர்!!*

{ நூல்: 'மஜ்மூஉ இப்னி ரஜப்' , 1/339 }

 قال الله تعالى [ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون ]  (سورة فصلت، الآية - ٣٠ )

قال الإمام إبن رجب الحنبلي رحمه الله تعالى: "الذين قالوا ربنا الله كثير، ولكن أهل الاستقامة قليل! ".

‎{ مجموع إبن رجب، ١/٣٣٩ }

           

9. நேரத்தை வீணடித்து கைசேதத்தை வாங்காதீர்கள்!!

அல்லாமா அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்) கூறுகின்றார்கள்:

“நேரம்தான் வாழ்க்கையாகும். நேரத்தை வீணடித்தவர், வாழ்க்கையையே தொலைத்து விட்டார். வாழ்க்கையைத் தொலைத்தவர் கைசேதப்படுவார்; அக்கைசேதம் அவருக்குப் பயனளிக்காது!!

{ நூல்: 'மஜ்மூஉல் பfதாவா' ,16/261 }

قال العلامة عبد العزيز بن عبدالله بن باز رحمه الله تعالى:  [ الوقت هو الحياة! ومن أضاع وقته أضاع حياته، ومن أضاع حياته ندم، ولا تنفعه الندامة! ].

‎{ مجموع الفتاوى،  ١٦/٢٦١ }

அல்லாஹ் கூறுகிறான்: “முடிவில், அவர்களில் ஒருவனுக்கு மரணம் வந்து விட்டால், எனது இரட்சகனே! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னை நீ (உலகிற்கு) திருப்பி அனுப்புவாயாக! எனக் கூறுவான். நிச்சயமாக அது அவன் கூறும் வெற்று வார்த்தையேயாகும்.அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்கு முன்னால் ஒரு திரை இருக்கின்றது”. 

(அல்குர்ஆன், 23:99,100 )

                  

10. கவலைகள் எங்கிருந்து  வருகின்றன?

இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:

“கவலைகள், துன்பங்கள், சஞ்சலங்கள் ஏற்படுவதெல்லாம் இரண்டு வழிகள் மூலமாகத்தான்!

*ஒன்று:*உலகத்தில் மோகம் கொண்டு, அதன்மேல் பேராசை வைத்தல்.

*இரண்டு:*நற்காரியங்களிலும், வழிபாட்டிலும் காணப்படுகின்ற குறைபாடு.

{ நூல்: 'உத்ததுஸ் ஸாபிbரீன்' பக்கம்: 256 }

‎             قال العلامة إبن القيم رحمه الله تعالى: [ إنما تكون الهموم والغموم والأحزان من جهتين :- 

‎*إحداهما*: الرغبة فى الدنيا والحرص عليها.

‎*الثاني*: التقصير في أعمال البر والطاعة.

‎{ عدة الصابرين،  ص - ٢٥٦ }


11. உடல் நோய் சிகிச்சைக்குக் காட்டப்படும் அக்கறை, உள நோய் சிகிச்சைக்கு ஏன் காட்டப்படுவதில்லை?

இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

“உடல் நோய் ஒன்று உனக்கு ஏற்பட்டுவிட்டால் உன் சிகிச்சைக்காக ஒவ்வொரு வைத்தியரின் கதவையும் நீ போய் தட்டுகிறாய். அறுவைச் சிகிச்சையின் போது உனக்கு ஏற்படும் வலி,  மருந்தின் கசப்பு ஆகியவற்றுக்காக நீ பொறுமையாக இருக்கிறாய். நீ ஏன் பாவங்கள் மூலம் ஏற்படுகின்ற உன் உள நோய்க்கு இது போன்று  செய்யாமல் இருக்கின்றாய்?”

( நூல்: அகீதது அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ , பக்கம்:78,96 }

‎قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى: [ إذا أصبت بمرض جسمي طرقت باب كل طبيب لعلاجك، وصبرت على ما ينالك من ألم عملية الجراحة، وعلى مرارة الدواء، فلماذا لا تفعل مثل ذلك في مرض قلبك بالمعاصي؟ ]

‎{ عقيدة أهل السنة والجماعة، ص -  ٧٨، ٩٦ }

                    

12. உள்ளத்தைத் தேடுங்கள்; கிடைக்காவிட்டால் உள்ளத்தை அல்லாஹ்விடம் கேளுங்கள்!!

இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:

“மூன்று இடங்களில் உனது உள்ளத்தைத் தேடிக்கொள்!

*1)* அல்குர்ஆனைச் செவிமடுக்கின்ற நேரத்தில்...

*2)* அல்லாஹ்வை நினைவுகூரும் சபைகளில்...

*3)* தனிமையில் இருக்கும் நேரங்களில்...

இந்த இடங்களில் அதை நீ பெற்றுக்கொள்ளவில்லை என்றால் உனக்கொரு உள்ளத்தை அருட்கொடையாகத் தரும்படி அல்லாஹ்விடம் நீ கேள்! ஏனெனில், உனக்கு உள்ளமே இல்லை!!”.

{ நூல்: 'அல்பfவாயித்', 1/149 }


 قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى: [ أطلب قلبك في ثلاثة مواطن:

‎*الأول:* عند سماع القرآن...

‎*الثاني:* وفي مجالس الذكر...

‎*الثالث:* وفي أوقات الخلوة...

‎         فإن لم تجده في هذه المواطن فسل الله أن يمن عليك بقلب، فإنه لا قلب لك!!

‎{ الفوائد ،  ١ / ١٤٩ }

                 

13. உனது பார்வை இப்படித்தான் இருக்க வேண்டும்!!

இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) கூறுகின்றார்கள்:

“சொத்துப்பத்திலும், நிலைமை மற்றும் ஆரோக்கியத்திலும் உனக்குக் கீழுள்ளவர்களைப் பார்! மார்க்கம், கல்வி, சிறப்புக்கள் ஆகியவற்றில் உனக்கு மேல் உள்ளவர்களைப் பார்!!”*

{ நூல்: 'அல்அஹ்லாக் வஸ்ஸியர்', பக்கம்: 23 }

‎            قال الإمام إبن حزم رحمه الله تعالى [ أنظر فى المال والحال والصحة إلى من دونك، وانظر فى الدين والعلم والفضائل إلى من هو فوقك ]

‎ { الأخلاق والسير،  ص - ٢٣ }

                  

14. உன்னை நீயே குற்றம் சுமத்திக்கொள்!!

இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:

“ அல்குர்ஆனின் மூலம் உனது உள்ளம் தாக்கம் பெறாதிருக்கிறது என்று நீ கண்டால் உன்னை நீயே குற்றம் சாட்டிக்கொள்! ஏனெனில், இந்தக் குர்ஆனை ஓர் மலை மீது  தான் இறக்கி வைத்திருந்தால் கூட அது நொறுங்கியிருக்கும் என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான்!*”

{ நூல்: 'ஷர்ஹுல் அகீதா அல்வாசிதிய்யா', பக்கம்: 440 }

‎         قال العلامة محمد بن  صالح العثيمين رحمه الله تعالى:

‎*[ إذا رأيت قلبك لا يتأثر بالقرآن فاتّهم نفسك! لأن الله أخبر أن هذا القرآن لو أنزل على جبل لتصدع ]*

‎{ شرح العقيدة الواسطية، ص - ٤٤٠ }

அல்லாஹ் கூறுகிறான்: *“இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பயந்து நொறுங்கி விடுவதை நீர் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்கு நாம் கூறுகிறோம்”* (அல்குர்ஆன், 59:21)

                

15. சூரிய, சந்திர கிரகணத்தைத் தெரிந்திருக்கும் நீங்கள், உள்ளக் கிரகணம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்)கூறுகின்றார்கள்:

*“அல்லாஹ்வின் அன்பும், அவனைச் சந்திப்பதற்கான தயார் நிலையும் மனிதனின் உள்ளத்தை விட்டும் நகர்ந்து சென்று, அவ்வுள்ளத்தில்  படைத்தவன் அல்லாது படைப்பினங்களின் அன்பு குடிகொண்டு, அவ்வுள்ளம் இவ்வுலக வாழ்க்கை குறித்து திருப்தியும் ஆசையும் கொண்டு, அதன் மூலம் நிம்மதியும் அமைதியும் அது பெற்றுவிட்டதாக எப்போது நீ கண்டு விட்டாயோ அப்போது  அவ்வுள்ளத்தில் கிரகணம் ஏற்பட்டு விட்டது என்று  உறுதியாகவே நீ அறிந்து கொள்!”*

{ நூல்: 'பதாஇஉல் பfவாயித்', 3/743 }

‎             قال الإمام العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:

‎*[ متى رأيت قلب الرجل قد ترحّل عنه حب الله والإستعداد للقائه، وحلّ فيه حب المخلوق دون الخالق، والرضا والقنوع بالحياة الدنيا، والطمأنينة بها، والسكون إليها فاعلم يقينا أنه قد خسف به ]*

‎{ بدائع الفوائد،  ٣/٧٤٣ }

            

16. மகா கெட்ட பாவமே இந்த வட்டி!!

இமாம் மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்:

அல்லாஹ்வின் வேதத்தையும், அவனது நபியின் சுன்னாவையும் புரட்டிப் பார்த்தேன். அப்போது, வட்டியை விட மகா கெட்ட பாவமாக வேறு எதையும் நான் காணவில்லை! காரணம், இது விடயத்திலேதான் தன்னோடு போர் புரிவதற்கான பிரகடனத்தைச் செய்யுமாறு அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான்!*

{ நூல்: 'தப்fசீர் அல்குர்துபீB', 3/364 }

‎           قال الإمام مالك رحمه الله تعالى: *[ إني تصفّحت كتاب الله وسنة نبيه فلم أر شيئا أشرّ من الرّبا لأن الله آذن فيه بالحرب]*

‎{ تفسير القرطبي،  ٣/٣٦٤ }

அல்லாஹ் கூறுகிறான்: *“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் வட்டியில் எஞ்சியுள்ளதை விட்டு விடுங்கள். (அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!”*

(அல்குர்ஆன், 2:278,279)

           

17. உள்ளம் கெட்டுப்போனவனே அஹ்லுஸ்ஸுன்னாக்களைத் திட்டுவான்!

அல்லாமா ஸாலிஹ் அல்பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

“உள்ளம் கெட்டுப்போன மோஷமானவனைத் தவிர வேறு யாரும் (குர்ஆன், சுன்னா அடிப்படையில் வாழும்) அஹ்லுஸ்ஸுன்னாக்களையும், ஹதீஸ் துறை அறிஞர்களையும் திட்டமாட்டான். அவர்களின் தனிப்பட்ட விடயங்களுக்காக இவன் அவர்களைத் திட்டுவதில்லை. அவர்கள் சுமந்திருக்கும் அறிவுக்காகவும், சத்தியத்தை அவர்கள் பாதுகாக்கின்றார்கள் என்பதற்காகவும் வேண்டித்தான் இவன் அவர்களைத் திட்டுகிறான்!”

{ நூல்: 'ஷர்ஹுல் காபிfயா அஷ்ஷாபிfயா', பக்கம்: 603 }

‎         قال العلامة صالح الفوزان الفوزان حفظه الله تعالى:-

‎*[ لا يسب أهل السنة وعلماء الحديث إلا خبيث فاسد القلب، لأنه ما سبهم من أجل أشخاص، إنما من أجل ما يحملونه من العلم والدفاع عن الحق ]*

             

18. இவன்,சத்தியத்தைப் பார்க்கவேமாட்டான்!

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

“அறிவையும் விளங்கிக் கொள்ளும் சக்தியையும் எவனுக்கு அல்லாஹ் குருடாக்கி விட்டானோ அவன், சத்தியத்தின் ஒளிகளுக்கு முன்னால் போய் நின்று கொண்டாலும் அவற்றைப் பார்க்கவேமாட்டான்! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!!!*

{ நூல்: 'ஷர்ஹுல் அகீதா அல்வாசிதிய்யா', பக்கம்: 33 }

‎              قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:

‎*[ من أعمى الله بصيرته، لو وقف أمام أنوار الحق ما رآها. والعياذ بالله! ]*

‎{ شرح العقيدة الواسطية،  ص - ٣٣ }

            

19. பொறுமை ஓர் பொக்கிஷம்!

இமாம் ஹஸனுல் பஸரீ(ரஹ்) கூறுகின்றார்கள்:-

“பொறுமை, சுவனப் புதையல்களில் ஓர் புதையலாகும். ஒரு மணி நேரப் பொறுமை மூலம் அனைத்து நலவுகளையும் மனிதன் அடைந்து கொள்கிறான்!”

{ நூல்: 'ஆதாபுbல் ஹசன்', பக்கம்: 38 }

 قال الإمام الحسن البصري رحمه الله تعالى:

‎*[ الصّبر كنز من كنوز الجنة، وإنما يدرك الإنسان الخير كله بصبر ساعة!"*

‎{ آداب الحسن،  ص - ٣٨ }


20. ஆதாரத்திற்குக் கட்டுப்படுவதே இறைவிசுவாசிக்குரிய பண்பாகும்!

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

ஆதாரம் உன்னிடம் வந்து செல்லும் போது அதை எதிர்க்க நீ முயற்சிக்காமல் இருக்க வேண்டும் என்ற விடயத்தில் நீ எச்சரிக்கையாக இருந்து கொள்வது அவசியமாகும்.மாறாக, 'செவியேற்றோம்; கட்டுப்பட்டோம்!' என்றே நீ சொல். ஏனெனில், அதை எதிர்க்க நீ முயற்சித்தால் சிலவேளை எதிர்காலத்தில்  நேர்வழியை இழந்து விடுவாய்!*

{ நூல்: 'ஷர்ஹுல் காபிfயா அஷ்ஷாபிfயா', 2/445 }

‎          قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:

‎*[ يجب عليك الحذر إذا مرّ بك الدليل ألا تحاول معارضته، بل قل: "سمعنا وأطعنا" ، لأنك لو حاولت معارضته فإنه ربما تحرم الهداية فى المستقبل ]*

‎{ شرح الكافية الشافية،  ص - ٤٤٥ }

           

21. அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்!

இமாம் அபூ கிலாபாb (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

“மனிதன் பாவம் செய்துவிட்டு, 'நிச்சயமாக நான் அழிந்து விட்டேன்; எனக்கு பாவமன்னிப்பே இல்லை!' என்று கூறி அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து, எதையும் பொருட்படுத்தாதவனாக (திரும்பவும்) பாவங்களில் மூழ்கிப்போய் விடுகின்றான்! இத்தகைய மனிதர்களை (இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என) இதை விட்டும்  அல்லாஹ் தடுக்கின்றான்”*

அல்லாஹ் கூறுகிறான்: *“அல்லாஹ்வின் அருளில் நீங்கள் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். ஏனெனில், நிராகரிக்கும் கூட்டத்தினரே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழப்பார்கள்!”*(அல்குர்ஆன், 12:87)

{ நூல்: 'மஆலிமுத் தன்ஸீல்' லில் பகவீ, 1/217 }

  قال أبو قلابة رحمه الله تعالى:-

‎*[ الرجل يصيب الذنب فيقول: قد هلكت ليس لي توبة! فييأس من رحمة الله، وينهمك فى المعاصي، فنهاهم الله تعالى عن ذلك.

‎قال الله تعالى: « ولا تيأسوا من رّوح الله إنه لا ييأس من رّوح الله إلا القوم الكافرون »

‎{ معالم التنزيل للبغوي، ١/٢١٧ }

அல்லாஹ் கூறுகிறான்: *“தமக்குத்தாமே (அநியாயம் செய்து) வரம்பு மீறிய எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன் என (நபியே) நீர் கூறுவீராக!”*(அல்குர்ஆன், 39:53) 

              

22. உன் மரணத்துடன் உன் பாவங்களும் மரணித்து விடட்டும்!

ஹபீப் அல்பாfரிசீ (ரஹ்) கூறுகின்றார்கள்:-

*“ஒரு மனிதன் மரணிக்கின்றபோது, அவனுடன் சேர்ந்து அவனது பாவங்களும் மரணித்து விடுவதுதான் அவனுக்குரிய மகிழ்ச்சியும் ஈடேற்றமுமாகும்!”*

{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 06/152 }

‎               قال حبيب الفارسي رحمه الله تعالى:- 

‎*[ إن من سعادة المرء أن يموت  وتموت معه ذنوبه! ]*

‎{ حلية الأولياء،  ٦ /١٥٢ }

*“சமூக வலைத்தளங்களில் பாவங்களை நீ பரப்பிவிட்டு, பின்னர் நீ மரணித்து விடுகின்றாய்;  உனது அப்பாவங்கள், உனது  மரணத்திற்குப் பின்னர்  தொடரும்படியாகத் தங்கி விடுகின்றன என்றால் அதுதான் மிகப்பெரிய முஸீபத்தாகும்!!*

{ முகநூலில் -  مهدي مهدي}

‎            *[ أعظم مصيبة أن تنشر المعاصي في مواقع التواصل الإجتماعي ثم تموت ،وتبقى ذنوبك مستمرة بعد موتك ]*

‎{ مهدي مهدي في فيس بوك }

               

23. வழி காட்டும் கழுதையும், வழி தெரியாதிருக்கும் சில மனிதர்களும்!

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-

“மிருகங்களிலேயே ஆகப் புத்தியற்ற மிருகமாக கழுதை இருந்தும்,  (போகும் இடத்திற்கான) வழியைக் காட்டுகின்ற தன்மை அதிலே இருக்கிறது. எப்படியெனில், ஒரு மனிதன் அதிலே பயணம் மேற்கொள்கிறான்;  தூரத்திலிருந்து இருள் நிறைந்த இரவில் அவனை அது கொண்டு சென்று அவனது வீட்டை சரியாக  அறிந்து கொள்கிறது; தனிமையில் விடப்பட்டாலும் அவனின் வீட்டிற்கு அது வந்து சேர்ந்து  விடுகிறது; தன்னை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற சத்தம், செல்வதற்குத் தூண்டப்படுகின்ற சத்தம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டையும் அது பிரித்து அறிந்து கொள்கிறது!*

*எனவே, எவனொருவன் 'சுவர்க்கம்' என்ற தனது வீட்டிற்குச் செல்வதற்கான வழியை  அறியவில்லையோ அவன் கழுதையை விட புத்தியற்றவனாவான்!”*

{ நூல்: 'ஷிபாfஉல் அலீல்', பக்கம்: 76 }

‎            قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-

‎          *[ من هداية الحمار - الذي هو أبلد الحيوانات - أن الرجل يسير به ويأتي به إلى منزله من البعد في ليلة مظلمة فيعرف المنزل، فإذا خلي جاء إليه، ويفرق بين الصوت الذي يستوقف به والصوت الذي يحث به على السير*.

‎           *فمن لم يعرف الطريق إلى منزله - وهو الجنة - فهو أبلد من الحمار ! ]*

‎{ شفاء العليل ،  ص -  ٧٦ }

             

24. நோன்பாளி ஓர்  போராளி!

இமாம், அல்ஹாபிfழ் இப்னு ரஜப் அல்ஹன்பbலீ (ரஹ்) கூறுகின்றார்கள்:

“இறை விசுவாசிக்கு தனது உள்ளத்தோடு போராடும் இரு போராட்டங்களுக்கான வாய்ப்பு ரமழான் மாதத்தில் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

*1)* நோன்பிருந்து கொண்டு பகல் நேரத்தில் புரியும் ஓர் போராட்டம்.

*2)* நின்று வணங்கிக்கொண்டு இரவில் மேற்கொள்ளும் ஓர் போராட்டம்.

*இவ்விரு போராட்டங்களையும் எவரொருவர் ஒருசேரப் பெற்று, இவ்விரண்டின் கடமைகளைப் பூரணமாக நிறைவேற்றி, இதற்காகப் பொறுமையையும் கடைப்பிடிப்பாரோ அவர் தனக்கான கூலியை கணக்கின்றி பரிபூரணமாகப் பெற்றுக்கொள்வார்!”*

{ நூல்: 'லதாஇபுfல் மஆரிப்f', 01/171 }                

‎         قال الإمام الحافظ إبن رجب الحنبلي رحمه الله تعالى:

‎           *[ إعلم! أن المؤمن يجتمع له في شهر رمضان جهادان لنفسه:*

‎*⬅ جهاد بالنهار على الصيام،*

‎*⬅ جهاد بالليل على القيام.*

‎            *فمن جمع بين هذين الجهادين، ووفّى بحقوقهما، وصبر عليهما وفّى أجره بغير حساب!"* 

‎{ لطائف المعارف ، ١/١٧١ }

           

25. ரமழானில் ஸஹாபாக்களின் நிலை!

அபுல் முதவக்கில் அந்நாஜீ (ரஹ்) கூறுகின்றார்கள்:-

*“அபூஹுரைரா (ரழி) அவர்களும், அவரின் தோழர்களும் நோன்பு நோற்றுவிட்டால் பள்ளிவாசலில் உட்கார்ந்து கொண்டு, 'எமது நோன்பை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோம்!' என்று சொல்லிக்கொள்வார்கள்”.*

மற்றொரு அறிவிப்பில், *'எமது நோன்பை நாம் பேணிப் பாதுகாத்துக் கொள்வோம்!'* என்று சொல்லிக்கொள்வார்கள் என வந்துள்ளது.

{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா' 01/382 , 'அஸ்ஸுஹ்த்' லில் இமாம் அஹ்மத் - பக்கம்: 992 }

‎           قال أبو المتوكل الناجي رحمه الله تعالى:-

‎       *[ كان أبو هريرة وأصحابه رضي الله عنهم إذا صاموا جلسوا في المسجد قالوا: « نطهّر صيامنا »*.

‎         وفي رواية: *« نعفّ صيامنا »*

‎{ حلية الأولياء   ١/٣٨٢ ، الزهد للإمام أحمد، ص - ٩٩٢ }

              

26. இலாபத்தை இழக்க வைக்கும் கவனயீனம்!

அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

*“கவனயீனம் இலாபத்தை இழக்கச் செய்து விடும்; பாவம் நஷ்டத்தை ஏற்படுத்தும்; கவனயீனம் சுவர்க்கத்தின் வாசல்களை அடைத்து விடுகிறது; பாவம் நரகத்தின் வாசல்களைத் திறந்து விடுகின்றது!”*{ நூல்: 'அத்தஸ்கிரா', பக்கம்: 103 }

‎          قال العلّامة إبن الجوزي رحمه الله تعالى:-

‎           *[ الغفلة تحرم الربح؛ والمعصية توجب الخسران! الغفلة تغلق أبواب الجنة؛ والمعصية تفتح أبواب النار! ]*

‎{ التذكرة، ص - ١٠٣ }

             

27. இறைவிசுவாசியை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் இஸ்திஃfபார்!*

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- 

*“-இஸ்திஃfபார்- எனும் பாவமன்னிப்புக் கோருதல், மனிதனை வெறுக்கப்பட்ட செயலிலிருந்து வெளியேற்றி விருப்புக்குரிய செயலுக்கு இட்டுச் செல்கிறது; குறைபாடுடைய செயலிலிருந்து பூர்த்தியான செயலுக்கு அவனைக் கொண்டு செல்கிறது; மேலும், தாழ்ந்த இடத்திலிருந்து அதை விட உயர்ந்த இடத்திற்கும், பூரணத்துவமான நிலைக்கும் மனிதனைக் கொண்டு செல்கின்றது!”*

{ நூல்: 'மஜ்மூஉல் fபதாவா', 11/696 }

‎            قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى:-

‎          *[ الإستغفار يخرج العبد من الفعل المكروه إلى الفعل المحبوب؛ من العمل الناقص إلى العمل التام؛ ويرفع العبد من المقام الأدنى إلى الأعلى منه والأكمل! ]*

‎{ مجموع الفتاوى، ١١/٦٩٦ }

               

28. மனிதர்களின் இந்நிலைப்பாடு அழிவுக்கே வழிவகுக்கும்!*

இமாம் இப்னு குதாமா அல்மக்திஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

*“அறிந்து கொள்ளுங்கள்! மக்கள் பழிப்பார்கள் என்று பயந்ததாலும், அவர்களின் புகழ்ச்சியை விரும்பியதாலுமே மனிதர்களில் அதிகமானோர் அழிந்து போனார்கள். இவர்களின் அசைவுகள் அனைத்தும் மக்களின் திருப்திக்கு உடன்பட்டதாகவே மாறிவிட்டது. புகழை எதிர்பார்த்தும்,  பழிப்பைப் பயந்துமே இவ்வாறு இவர்கள் நடந்து கொள்கின்றனர். இது, அழிவுக்கு இட்டுச் செல்லும் விடயங்களில் உள்ளதாகும். இதற்குச் சிகிச்சை செய்யப்பட வேண்டியது அவசியமாகும்!”*

{ நூல்: 'முஹ்தஸரு மின்ஹாஜில் காஸிதீன்', பக்கம்: 212 }

‎           قال الإمام إبن قدامة المقدسي رحمه الله تعالى:-

‎              *[ واعلم! أن أكثر الناس إنما هلكوا لخوف مذمة الناس، وحب مدحهم. فصارت حركاتهم كلها على ما يوافق رضى الناس، رجاء المدح وخوفا من الذم. وذلك من المهلكات فوجبت معالجته! ]*

‎{ مختصر منهاج القاصدين ، ص - ٢١٢ }

             

29. வயோதிப உற்சாகமும், வாலிப சோம்பலும்!!*

அஹ்னfப் பின் கைஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், *“நீங்கள் ஓர் வயோதிபர்; நோன்பு உங்களை பலவீனப்படுத்தி விடும்!”* என்று கூறப்பட்டது. அதற்கவர், *“ நீண்டதோர் பயணத்திற்காக அதை நான் ஆயத்தப்படுத்துகிறேன்!”* எனப் பதிலளித்தார்கள்.

( நூல்: 'சியரு அஃலாமின் நுbபலா', 04/91 }

‎            قيل للأحنف بن قيس رضي الله عنه: *« إنك كبير، والصوم يضعفك... »*

‎قال: *« إني أعدّه لسفر طويل"*.

‎{ سير أعلام النبلاء، ٤/٩١ }

              

30. வேண்டாம் இந்நிலைப்பாடு!!

இமாம் வஹ்ப் இப்னுல் வர்த் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

*“உள்ளே ஷைத்தானின் நண்பனாக நீ இருந்துகொண்டு, வெளியே அவனைத் திட்டாதே. அல்லாஹ்வை நீ அஞ்சிக்கொள்!”*.

{ நூல்: 'ஸிfபதுஸ் ஸfப்வா', 03/135 }

‎           قال الإمام وهب بن الورد رحمه الله تعالى:-

‎           *[ ولا تسبّ الشيطان في العلانية، وأنت صديقه في السّرّ. إتّق الله! ]*

‎{ صفة الصفوة، ٣/ ١٣٥ }

            

31. உலகிற்கு ஒப்பான உவமை எது?

இமாம் இப்ராஹீம் பின் உயைனா(ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

 *“உலகிற்கு மிக ஒப்பான விடயம் எது?”* என அறிஞர்கள் சிலரிடம் வினவப்பட்டது. அதற்கு ஒருவர் சொன்னார்: *“தூங்குபவன் காணும் கனவுகள்”* என்று...... !

{ நூல்: 'அஸ்ஸுஹ்த்' லிப்னி அபித்துன்யா, பக்கம்: 22 }

‎          قال الإمام إبراهيم بن عيينة رحمه الله تعالى:-

‎            *"قيل لبعض الحكماء:أي شيئ أشبه بالدنيا؟ قال: أحلام النائم !]*

‎{ الزهد لابن أبي الدنيا، ص - ٢٢ }

              

32. உலகத்தை விடச் சிறந்தது 'ஒரு தஸ்பீஹ்'!

              அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

            *“மனிதனின் பதிவேட்டில் இருக்கின்ற ஒரு தஸ்பீஹ், இவ்வுலகையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும். ஏனெனில், இவ்வுலகமும் அதிலுள்ளவையும் அழிந்து போகக்கூடியவை; (நிலைக்காது) நீங்கிவிடக் கூடியவை. தஸ்பீஹும், நற்செயலும் நிலைத்து நிற்கக்கூடியவையாகும்!”* 

{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 03/478 }


‎              قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

‎               *[ إن التسبيحة الواحدة في صحيفة الإنسان خير من الدنيا وما فيها. لأن الدنيا وما فيها تذهب وتزول! والتسبيح والعمل الصالح يبقى!! ]*

‎{شرح رياض الصالحين، ٣/٤٧٨ }


 நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்:

            *“இரண்டு வாக்கியங்கள் இருக்கின்றன. அவை, (மொழிவதற்கு) நாவுக்கு எளிதானவையாகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும்; அளவற்ற அருளாளனுக்கு பிரியத்திற்குரியவையுமாகும். அவை:*

‎*سبحان الله العظيم، سبحان الله وبحمده !* 

*(பொருள்:* கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்!)

{ நூல்: புகாரி - 6406 }

            

33. எப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக் கொடுக்கலாம்?

           ஒருவர், இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம்: *“எனது மகளை எப்படியானவருக்கு நான் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும்?”* என்று கேட்டார். அதற்கவர்கள் கூறினார்கள்: *“அல்லாஹ்வை அஞ்சி  நடப்பவருக்கு முடித்துக் கொடுங்கள்! ஏனெனில்,  அவளை அவர் நேசித்து விட்டால் அவளை கண்ணியப்படுத்துவார்; அவளை வெறுத்துக் கோபித்து விட்டால் அவளுக்கு அநியாயம் செய்யமாட்டார்”.*

{ நூல்: 'முஹ்தஸரு மின்ஹாஜில் காஸிதீன்', பக்கம்:102 }

‎              قال رجل للحسن البصري رحمه الله تعالى: *« ممّن أزوّج إبنتي؟ »* قال: *« ممّن يتّقي الله؛ فإن أحبّها أكرمها، وإن أبغضها لم يظلمها »*

‎{ مختصر منهاج القاصدين، ص - ١٠٢ }

 நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

            *“மார்க்கப் பற்றிலும், நற்பண்பிலும் நீங்கள் திருப்திப்படும் ஒருவர் (பெண் கேட்டு) உங்களிடம் வந்தால், அவருக்கு நீங்கள் திருமணம் முடித்துக் கொடுங்கள்! அப்படி நீங்கள் செய்யவில்லை என்றால் பூமியில் சோதனையும், பெரியதோர் குழப்பமும் ஏற்பட்டு விடும்!”*

{ நூல்: 'அல்முஸ்தத்ரக் அலஸ்ஸஹீஹைன்' லில்ஹாகிம்  - 2695 }


‎               عن أبي هريرة رضي الله عنه قال، قال رسول الله صلّى الله عليه وسلم: *[ إذا أتاكم من ترضون خلقه ودينه فانكحوه. ألّا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض ]*

‎{ المستدرك على الصحيحين للحاكم - ٢٦٩٥ }

            


34. அவரா சொன்னார்!? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!

        இமாம் முஸனீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

            (எனது ஆசான்) இமாம் ஷாfபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எனக்கு இவ்வாறு கூறினார்கள்:-

          “(ஈராக்கின்) பக்தாத் நகரத்தில் ஒரு இளைஞனை நான் கண்டேன். அவர், *'(இந்த ஹதீஸை, அல்லது இச்செய்தியை இன்னார்) எங்களுக்குத் தெரிவித்தார்!'* என்று கூறினால், *'உண்மையையே அவர் உரைத்துவிட்டார்!'* என்று மக்கள் எல்லோரும் சொல்வார்கள். அப்போது நான் இமாம் ஷாfபிஈ அவர்களிடம், யார் அவர்?' என்று கேட்டேன். அதற்கவர், *'இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்தான் அவர்!'* எனக் கூறினார்”.

{ நூல்: 'சியரு அஃலாமின் நுbபலா', 11/195 }


‎           قال الإمام المزني رحمه الله تعالى: قال لي الإمام الشافعي رحمه الله تعالى:-

‎         [ رأيت ببغداد شابا إذا قال: « حدّثنا » قال الناس كلّهم: صدق! قلت: ومن هو؟

‎قال: *'أحمد بن حنبل رحمه الله*' ]

‎{ سير أعلام النبلاء، ١١/١٩٥ }

               

35. நன்மையை நன்மையாகவும், தீமையை தீமையாகவும் பார்க்கத் தெரியாதவன் யார் தெரியுமா?*

            அல்லாமா ரபீbஃ பின் ஹாதீ அல்மத்ஹலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“ஒருவர் சத்தியத்தின் மீதிருப்பதையும், மற்றொருவர்  அசத்தியத்தின் மீதிருப்பதையும் நீ கண்டால் அசத்தியத்தில் (செல்வதிலிருந்து) நீ எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டியதும் சத்தியத்திற்கு உதவுவதும் உனக்குக் கடமையானதாக இருக்கின்றது. அப்படி நீ செய்யவில்லை என்றால் நன்மையை நன்மையாகவும், தீமையை தீமையாவும் பார்க்க  முடியாது போய்விட்ட செத்துப்போன ஒருவனாகத்தான் நீயிருப்பாய்! மேலும் இது,  (நேர்வழியை விட்டும்) உள்ளங்கள் தடம்புரண்டு சென்று விட்டதற்கான அடையாளமாகவும் காணப்படும்!”*

{ நூல்: 'அல்மஜ்மூஃ', 14/271 }


‎            قال العلّامة ربيع بن هادي المدخلي حفظه الله تعالى:-

‎           *[ إذا رأيت شخصا على حق، وآخر على باطل يجب أن تنصر الحق وتحذر من الباطل! وإلا فأنت ميّت لا تعرف معروفا ولا تنكر منكرا؛ وهذه علامة إنتكاس القلوب ! ]*

‎{ المجموع ، ١٤/٢٧١ }



36. உடல் வலிமை வீரம் அல்ல; உள வலிமைதான் உண்மையான வீரமாகும்!

          ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“ உடல் வலிமைதான் வீரம்  என்பதல்ல! ஏனெனில், மனிதன் சிலவேளை உடல் வலிமையானவனாக இருந்து  உள பலவீனமுடையவனாக இருப்பான். எனவே, உள்ளம் வலிமை பெற்று, அது உறுதியோடு இருப்பதே  (உண்மையான) வீரமாகும்!”*

{ நூல்: 'அல்இஸ்திகாமா', 02/270 }

‎            قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى:-

‎         *[ الشجاعة ليست هي قوة البدن؛ فقد يكون الرجل قويّ البدن ضعيف القلب! وإنما هي قوة القلب وثباته. ]*

‎{ الإستقامة، ٢/٢٧٠ }

சுfப்யான் பின் அப்தில்லா அஸ்ஸகfபீ (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:

         *“அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குப் பிறகு யாரிடமும், அல்லது தங்களைத் தவிர வேறு யாரிடமும் நான் கேட்க முடியாதளவுக்கு இஸ்லாம் குறித்து எனக்குச் சொல்லித் தாருங்கள்!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டுவிட்டேன்!' என்று கூறி, அதில் நீர் உறுதியாக நிலைத்து நிற்பீராக!”* ௭ன்று சொன்னார்கள்.

{ நூல்: முஸ்லிம் - 62 }

             

37. உன் உள்ளத்தைக் கழுவி, அதை சுத்தப்படுத்திக்கொள்  சகோதரா!

        அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         *“உன்னிடம் முகஸ்துதி இருக்கிறதா? சத்தியத்திற்கான வெறுப்பு இருக்கிறதா? இறைவிசுவாசிகளான முஃமின்கள் குறித்த பகைமை இருக்கிறதா? அவர்கள் மீது  குரோதமும் இருக்கிறதா? என்றெல்லாம் உனது உள்ளத்தை நீ சோதித்துப் பார்த்துக்கொள்!  ஏனெனில், தினந்தோறும் ஆடைகளைக் கழுவுவதைப் பார்க்கிலும், தினந்தோறும் உள்ளத்தைக் கழுவுவதே அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது! எனவே, உனது உள்ளத்தைக் கழுவி அதை சுத்தப்படுத்திக்கொள் சகோதரா!”* 

{ நூல்: 'அல்லிகாஉஷ் ஷஹ்ரீ', 02/75 }


‎           قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

‎         *« فتّش قلبك يا أخي، هل فيك رياء؟ هل فيك كراهة للحق؟ هل فيك بغضاء للمؤمنين؟ هل فيك حقد على المؤمنين؟ فإن غسيل القلب كلّ يوم أهمّ من غسيل الثياب كلّ يوم؛ إغسل قلبك وطهّره! »*

‎{ اللّقاء الشهري، ٢/٧٥ }

              

38. ஈமானிய மரத்தை உரமூட்டி வளர்ப்பது நற்செயல்களே!

         அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“நற்செயல்கள் என்பன, மரங்களுக்கு நீர் புகட்டும் மழையின் அந்தஸ்தில் இருக்கின்றன. உள்ளத்தில் வளர்கின்ற மரம் ஒன்றுதான் ஈமானிய மரமாகும்! நற்செயல்களே இதற்குத் தீன் கொடுத்து, இதை வளர்க்கின்றன.  இதனால்தான், மார்க்கம் வேண்டியிருக்கும்  அமைப்பில் நற்செயலொன்றை ஒருவர் செய்கின்ற போதெல்லாம் அதிலே தனது ஈமான் பலம் பெற்று, அது  அதிகரித்திருப்பதை அவர் கண்டுகொள்கிறார்!”*.

{ நூல்: 'ஷர்ஹுல் காfபியா அஷ்ஷாfபியா', 01/296 }


‎           قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

‎           *« الأعمال الصالحة بمنزلة المطر يسقي الشجر، وشجرة الإيمان هي شجرة في القلب؛ ولكن الأعمال الصالحة تغذيها وتنميها. ولذلك كلّما عمل الإنسان عملا صالحا على المطلوب منه يجد أن إيمانه يقوى ويزداد »*.

‎{ شرح الكافية الشافية، ١/٢٩٦ }

            

39. இளமைப் பருவத்தை இறை வழிபாட்டில் ஈடுபடுத்துங்கள் இளைஞர்களே!

       அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“நான் ஒரு இளைஞன்;  பிந்திப்பிறகு  பாவமன்னிப்புத் தேடிக்கொள்வேன் என்று நீ கூற வேண்டாம்!   முதுமையடைவதற்கு முன்பாகவே எத்தனை இளைஞனை மரணம்  பிடித்திருக்கின்றது! தனது பயிரை அறுவடை செய்வதற்கு முன்னதாகவே எத்தனை விவசாயிக்கு அழிவு ஏற்பட்டிருக்கின்றது! எனவே, மரணம் என்பது திடீரென்றுதான் வரும். (இளைஞனே!) இம்மையிலும் மறுமையிலும் உனக்குப்  பயனளிப்பது நற்செயல் மாத்திரம்தான். மேலும், அல்லாஹ்வின் வழிபாட்டில் இருக்கும் நிலையில் ஆயிரம் வருடங்கள் நீ வாழ்ந்தாலும், நலவில்தான் நீ இருந்துகொண்டிருப்பாய்! ஆதலால், இளமைப் பருவம் குறித்தும், பலம் மற்றும் பணம் குறித்தும் நீ பெருமிதம் கொள்ளாதே”.*

{ நூல்: 'மஜ்மூஉல் fபதாவா', 24/304 }


‎           قال العلاّمة الشيخ عبدالعزيز بن باز رحمه الله:-

‎           *« لا تقل أنا شابّ سوف أتوب، كم من شابّ أخذه الموت قبل أن يشيب.وكم من زارع أصابه الهلاك قبل أن يحصد زرعه! فالموت يأتي بغتة، والعمل الصالح ينفعك في الدنيا والآخرة؛ ولو عشت ألف عام وأنت في طاعة الله فأنت على خير. لا تغترّ بالشباب والقوّة والمال! »*

‎{ مجموع الفتاوى، ٢٤/٣٠٤ }

            


40. மார்க்க அறிவைப் பரப்புகின்ற பணி, அறப்போராட்டப் பணியாகும்!

         அஷ்ஷெய்க் ஸாலிஹ் ஆலுஷ் ஷெய்க் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“அல்லாஹ்வின் எதிரிகளுடனும், ஷைத்தானுடனும் நீ போராடுவதற்கு மிகச்சிறந்த (ஆயுதம்) ஒன்றாக இருப்பது மார்க்க அறிவைப் பரப்புவதாகும். எனவே, உன்னால் முடிந்தளவு எல்லா இடங்களிலும் அதைப் பரப்பும் பணியில் நீ ஈடுபடு!”*

{ நூல்: 'அல்வஸாயா அல்ஜலிய்யா', பக்கம்: 46


‎          قال الشيخ صالح آل الشيخ حفظه الله تعالى:-

‎        *« أعظم ما تجاهد به أعداء الله جلّ وعلا، والشيطان نشر العلم! فانشره في كل مكان بحسب ما تستطيع »*.

‎{ المصدر: 'الوصايا الجليلة'، ص- ٤٦ }

             


41. கணவன் - மனைவி சந்தோசம் எதனால் ஏற்படும் தெரியுமா?

          அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         *“வன்முறையின் மூலமோ, அதிகாரத் திணிப்பின் மூலமோ கணவன் - மனைவி சந்தோசம் வரமாட்டாது. இப்படிச் செய்வது தவறுமாகும். எனினும் கணவன் தன் மனைவியை தன்னுடைய மனைவி என்ற அடிப்படையிலும், தன் பிள்ளைகளின் தாய் என்ற அடிப்படையிலும், தனது வீட்டைக் கண்காணிப்பவள் என்ற அடிப்படையிலும் பார்க்க வேண்டியது கட்டாயமாகும். அத்தோடு, மனைவி தன்னை மதித்து மரியாதையுடன் நடக்க  வேண்டும் என்று அவன் விரும்புவதுபோல் அவளையும் அவன் மதித்து நடக்க வேண்டும்”.*

{ நூல்: 'நூருன் அலத் தர்ப்' , 13/19 }


‎       قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

‎        *« السعادة الزوجية لا تأتي بالعنف وفرض السيطرة، فإن هذا من الخطأ. ولكن يجب أن ينظر الزوج إلى زوجته على أنّها قرينته وأم أولاده وراعية بيته، فيحترمها كما يحبّ هو أن تحترمه »*

‎{ المصدر: نور على الدرب، ١٣/١٩ }

               


42. நல்ல ஆண்களை உருவாக்க வேண்டுமானால்,  முதலில் மார்க்கமுள்ள   பெண்களை  உருவாக்க வேண்டும்!

      அல்லாமா அப்துல் ஹமீது பின் பாbதீஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“(சன்மார்க்க அடிப்படையில் வாழும்) ஆண்களை நாம் உருவாக்க விரும்பினால், மார்க்கமுள்ள தாய்மார்களை நாம் உருவாக்க வேண்டியது எமக்கு அவசியமாகும். பெண் பிள்ளைகளுக்கு மார்க்க அடிப்படையிலான கல்வியைப் போதித்து, இஸ்லாமிய ரீதியிலான பயிற்றுவிப்பை அவர்களுக்கு வழங்குவதைத் தவிர இதற்கு வேறு வழியே கிடையாது. மார்க்கம் பற்றிய அறியாமையில் இருக்கும்படியாகவே அவர்களை நாம் விட்டுவிடுவோமாக இருந்தால்,  கண்ணியமும் மகத்துவமுமுள்ள ஆண்களை எமக்காக (த் தருவார்கள் என்று)  அவர்களிடமிருந்து நாம் நல்லாதரவு வைப்பது  சாத்தியமற்றதாகி விடும். அத்தோடு, மார்க்கத்தைப் படிக்காத அறிவிலிகளாக அவர்களை விட்டுவிடுவது தீங்காகவும்  அமைந்துவிடும்!”*

{ நூல்' 'அல்ஆதார்', 04/201 }


‎       قال الإمام عبدالحميد بن باديس رحمه الله تعالى:-

‎        *« فإذا أردنا أن نكوّن رجالا فعلينا أن نكوّن أمهات دينيات؛ ولا سبيل لذلك إلا بتعليم البنات تعليما دينيّا، وتربيتهنّ تربية إسلامية. واذا تركناهنّ على ما هنّ عليه من الجهل بالدين فمحال أن نرجو منهنّ أن يكون لنا عظماء الرجال، وشرّ من تركهنّ جاهلات بالدين »*

‎{ المصدر: آثار، ٤/٢٠١ }

              


43. கல்விப் போதனை இடம்பெறும் அவைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!

           அல்லாமா ஸாலிஹ் fபவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“கல்விப் போதனை இடம்பெறும் அவைகளில் கலந்துகொள்கின்ற விடயத்திலும், அதற்கு நாடிச்செல்ல முற்படுகின்ற விடயத்திலும் அலட்சியம் காட்டி பொடுபோக்காக இருப்பது மனிதனுக்கு ஆகாது. ஏனெனில், (அவ் அவைகளிலிருந்து) சிலவேளை அவன் ஒரு பிரயோசனத்தைப் பெற்றிருப்பான். அவனின் சுவனப் பிரவேசத்திற்கு அதுவே ஓர் காரணமாகிவிடும்!”*

{ நூல்: 'அல்முன்தகா' லிஷ்ஷெய்க் பfவ்ஸான், பக்கம்: 29 }


‎           قال العلاّمة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-

‎       *« لا يجوز للإنسان أن يتساهل في حضور مجالس العلم والسّعي إليها. لأنه قد يستفيد فائدة تكون سببا لدخوله الجنة »*

‎{ المصدر: المنتقى للشيخ صالح الفوزان، ص - ٢٩ }

         


44. இவன்தான் உன் நண்பன்!

        அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         *“நன்மைக்கு வழிகாட்டி அதற்கு உதவுவோராகவும், நீ மறந்துவிடுகின்றபோது உனக்கு நினைவூட்டுவோராகவும், நீ அறியாமையில் இருக்கின்றபோது  உனக்கு அறிவூட்டுவோராகவும் இருப்பவர்களாக உன் நண்பர்களை நீ கண்டால் அவர்களின் ஆடைகளைப் பிடித்து இறுகப் பற்றிக்கொள்; கடவாய்ப் பற்களால் கடித்துக் கெட்டியாகப் பிடித்துக்கொள்!(அதாவது, பிரிந்து விடாமல் உன் உற்ற நண்பனாக எடுத்துக்கொள்!)*

          *உன் நண்பர்களில் ஒருவன் உன் உரிமையை நிறைவேற்றும் விடயத்தில் அசிரத்தை காட்டுபவனாக, நீ அழிந்தால் என்ன? இருந்தால் என்ன? என்றெல்லாம்  பொருட்படுத்தாதவனாக, சிலவேளை உன் அழிவுக்கான முயற்சியில் ஈடுபடுபவனாக இருக்க நீ கண்டால் இவன் விடயத்தில் நீ எச்சரிக்கையாக இருந்துகொள்! ஏனெனில், இவன் கொல்லும் விஷமாவான். -அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் - இவன் போன்றவர்களிடம் நெருங்காதே; மாறாக, இவர்களை விட்டும் நீ தூரமாகிவிடு; சிங்கத்தைக் கண்டு நீ விரண்டோடுவதுபோல் இவர்களிலிருந்து நீ விரண்டோடு!”*

{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்',02/388 }

               

‎         قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

‎          *{ إذا رأيت أصحابك يدلّونك على الخير ويعينونك عليه، وإذا نسيت ذكروك، وإذا جهلت علموك فاستمسك بحجزهم، وعضّ عليهم بالنواجذ.*

‎       *وإذا رأيت من أصحابك من هو، مهمل في حقك، ولا يبالي هل هلكت أم بقيت، بل ربما يسعى لهلاكك فاحذره فإنه السّمّ النّاقع! - والعياذ بالله - ، لا تقرب هؤلاء؛ بل ابتعد عنهم، فرّ منهم فرارك من الأسد }*

‎[ المصدر: شرح رياض الصالحين، ٢/٣٨٨ ]


              


45. வாழ்நாட்கள் செயல்களின் பொக்கிஷங்கள்!

       அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

        *“அவசரமாகக் கடந்து செல்கின்ற இரவுகள், மற்றும் பகல்கள் குறித்து நீங்கள் படிப்பினை பெறுங்கள். அவை, உங்கள் வாழ்நாட்களாகும்;  உங்கள் செயல்களின் பொக்கிஷங்களுமாகும்!* 

        *மறுமை நாளில்தான் பொக்கிஷங்கள் திறக்கப்படும். இறைவிசுவாசிகளின் பொக்கிஷங்களாக  கண்ணியமும் கெளரவமும் இருந்துகொண்டிருக்கும். பொடுபோக்கும், அலட்சியப் போக்கும் உடையவர்கள் இழிவையும் கேவலத்தையுமே தமது பொக்கிஷங்களில் பெற்றுக்கொள்வார்கள்.*

       *எனவே, (வாழ்வதற்காக வழங்கப்பட்ட)  உங்கள் தவணைக் காலங்களின் முடிவடைவோடு  பொக்கிஷங்கள் மூடப்படுவதற்கு முன்னர் இறையச்சத்தின் மூலமும், நற்கருமங்கள் மூலமும் அப்பொக்கிஷங்களை நீங்கள் நிரப்பிக்கொள்ளுங்கள்!”*

{ முகநூல்: أهل السنة والجماعة )


‎       قال العلاّمة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-

‎            *{ اعتبروا بسرعة مرور الليالي والأيام! فإنها من أعماركم،  وهي خزائن أعمالكم، ففي يوم القيامة تفتح الخزائن، فالمؤمنون خزائنهم العزّة والكرامة. والمفرطون يجدون في خزائنهم الذّلّة والإهانة.*

‎          *فاملؤوا هذه الخزائن بتقوى الله سبحانه،وبالأعمال الصالحة قبل أن تغلق بانتهاء آجالكم }*

‎[ فيس بوك: صفحة أهل السنة والجماعة ]

            


46. உள்ளத்தில் படியும் அழுக்குகளை உடனடியாக அகற்றவே வேண்டும்!

      இமாம் அப்துல் ஹமீத் பின் bபாதீஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

        *“கவனயீனம், கல்நெஞ்சம், சந்தேகங்கள், கற்பனைகள்,அறியாமைகள் ஆகியன உள்ளங்களை ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்றன. முகம் பார்க்கும் கண்ணாடி மீது அடுக்கடுக்காக அழுக்குகள் படிந்து, அவை கண்ணாடியின் பொலிவை நீக்கி, அதன் பயன்பாட்டையே பாழாக்கி விடுவதுபோல, இந்த அசுத்தங்களும் உள்ளங்கள் மீது அடுக்கடுக்காகக் குவிந்து பாழாக்கிக் கொண்டிருக்கின்றன. சிலவேளை, இவற்றில் கொஞ்சம் உள்ளங்களைப் பீடிக்கின்றன;  அல்லது சிலது பீடிக்கின்றன. எனவே எப்போதும், தொடர்ந்தும் உள்ளங்களை அல்குர்ஆன் ஓதுவதன் மூலம் புடம் போட்டு சுத்தப்படுத்த வேண்டிய தேவைப்பாடு இருந்துகொண்டிருக்கிறது!”*.

{ நூல்: 'மஜாலிசுத் தஸ்கீர் மின் கலாமில் ஹகீமில் ஹபீர்', 01/82 }


‎        قال الإمام عبدالحميد بن باديس رحمه الله تعالى:

‎        *« إن القلوب تعتريها الغفلة والقسوة والشكوك والأوهام والجهالات، وقد تتراكم عليها هذه الأدران كما تتراكم الأوساخ على المرآة فتطمسها وتبطل منفعتها. وقد يصيبها القليل منها أو من بعضها،  فهي محتاجة دائما وأبدا إلى صقل وتنظيف بتلاوة القرآن »*

‎{ المصدر: 'مجالس التذكير من كلام الحكيم الخبير، ١/٨٢ }

               


47. நபிவழியைக் கடைப்பிடிக்க வைக்க அறிஞர் கையாண்ட நுட்பமான வழிமுறை!

            ஹதீஸ் கலை மேதை இமாம்  அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹிமஹுல்லாஹ்)  அவர்களின் மார்க்க விளக்க வகுப்பில் இருந்த ஒருவர் தும்மிவிட்டு, *“அல்ஹம்து லில்லாஹ்!”* (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று கூற வேண்டிய வார்த்தையை) அவர் கூறாதிருந்தார்.  அப்போது அவரிடம், *“தும்மியவர் என்ன சொல்ல வேண்டும்?”* என அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கேட்டார்கள். *“அல்ஹம்து லில்லாஹ்!”* என்று கூற வேண்டும் என அவர் கூறினார். உடனே இமாமவர்கள், (தும்மியவர் 'அல்ஹம்து லில்லாஹ்!' என்று கூறியதைக் கேட்பவர் கூற வேண்டிய) *“யர்ஹமுகழ்ழாஹ்!”* (அல்லாஹ் உம்மீது கருணை காட்டுவானாக!) என்ற வார்த்தையைக் கூறினார்கள்.

[ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 08/170 ]


‎            عطس رجل في مجلس عبدالله بن المبارك رحمه الله تعالى، فلم يحمد الله.

‎فقال له ابن المبارك : *« ماذا يقول الرجل إذا عطس؟»*

‎قال: *« الحمد لله »*

‎قال: *« يرحمك الله »*

‎[ المصدر: حلية الأولياء، ٨/١٧٠ ]

            


48. உலகத்திற்காக நாம் படைக்கப்படவில்லை! மறுமையை ஏன் நாம் மறந்து வாழ வேண்டும்?

        இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “மனிதர்கள் இவ்வுலகத்திற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்றிருப்பின் அவர்களில் நபிமார்களும்,  இறைத்தூதர்களுமே  இவ்வுலகில் மரணிக்காது நிலைத்திருக்க மிக ஏற்றமானவர்களாக இருந்திருப்பர்!!

        எனவே, இவ்வுலகத்திற்காக நாம் படைக்கப்படவில்லை என்றிருக்கும்போது இதற்காக வேண்டி  மக்களுடன் நாம் ஏன் போட்டி போட வேண்டும்?! மறுமையை  நாம் ஏன் மறந்து வாழ  வேண்டும்?

          புத்தாடையை மனிதன் அணிகின்றபோது சிலவேளை மாலையில் அவனுக்கு கபfன் ஆடை கூட அணிவிக்கப்படலாம் என்று ஏன் அவன் நினைத்துப் பார்க்கக் கூடாது? அவன் புத்தாடை அணிவது இரவில் இருந்தால், காலையாவதற்கு முன்  தனக்கு கபfன் ஆடை அணிவிக்கப்படலாம் என்றும் ஏன் அவன் நினைத்துப்பார்க்கக் கூடாது? என்றாலும், உள்ளங்கள் அலட்சியத்தில் இருக்கின்றன!!

    எமது உள்ளங்களை  அறிவைக்கொண்டும்,  ஈமானைக்கொண்டும் உயிர்ப்பிக்கும்படி அல்லாஹ்விடம் நாம் கேட்போமாக!!”

{ நூல்: 'ஷர்ஹுன் நூனிய்யா', 04/474 }



‎       « لو كان البشر مخلوقين للدّنيا لكان أولاهم بالبقاء الأنبياء والرّسل...

‎           فإذا كنّا لم نخلق للدّنيا فلماذا نزاحم أهلها عليها؟ ولماذا ننسى الآخرة؟

‎        لماذا لا يذكر الإنسان وهو يلبس الثوب الجديد أنه ربما يلبس الكفن في آخر النهار؟ وإن كان في الليل ربما يلبسه قبل الصباح؟ لكن القلوب في غفلة!

‎          نسأل الله أن يحيي قلوبنا بالعلم والإيمان.... »

‎[ المصدر: 'شرح النونية' ، ٤/٤٧٤ ]


             


49. எப்போதோ மரணித்த மார்க்க மேதைகள், இப்போதும் நன்மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்!

         இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *«(நபிமொழி) ஹதீஸ் துறை, (fபிக்ஹ்) இஸ்லாமிய சட்டத்துறை போன்றவற்றில் மேதைகளாக இருந்தவர்கள்  போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் நிலைமைகளை  ஆழமாக சிந்தித்துப் பார்க்கும் ஒருவர்,  “மண்ணுக்குக் கீழ் அவர்கள் அடங்கப்பட்டிருந்தாலும் (மண்ணுக்கு மேல் வாழ்ந்து வரும்) மக்கள் மத்தியில்  உயிர் வாழ்வோர் போன்று எப்படி  அவர்கள் ( இப்போதும்) இருந்து கொண்டிருக்கிறார்கள்!?” என்ற ஆச்சரியத்தை அவர் அறிந்து கொள்வார். அவர்களின் உருவங்களைத் தவிர வேறெதுவுமே அவர்களிலிருந்து காணாமல் போகவில்லை; அவர்களின் ஞாபகமும், அவர்களின் செய்தியும்,  பேச்சும், அவர்கள் மீதான புகழும் துண்டிக்கப்படாமல்தான் இருக்கின்றன. இதுதான் உண்மையான வாழ்க்கையாகும்!»*.

( நூல்: 'மிfப்தாஹு தாரிஸ் ஸஆதா', பக்கம் - 139 )


‎            قال العلّامة إبن القيم رحمه الله تعالى:-

‎             *{ من تأمل أحوال أئمة الإسلام كأئمة الحديث والفقه كيف هم تحت التراب وهم في العالمين كأنهم أحياء بينهم؛ لم يفقدوا منهم إلا صورهم. وإلا فذكرهم وحديثهم والثناء عليهم غير منقطع. وهذه هي الحياة حقا }*.

‎[ المصدر: 'مفتاح دار السعادة' لابن القيم ، ص - ١٣٩ ]

            

Previous Post Next Post