இப்னுல் முபாறக் (ரஹ்) அவர்கள் “விபச்சாரம் புரிபவன் முஃமினான நிலையில் விபச்சாரம் புரிவதில்லை” என்ற ஹதீஸைக் கூறிய போது
ஒரு மனிதர் இந்த ஹதீஸின் கருத்தை மறுக்கும் தொனியில் என்ன இது என்று கேட்டார்.
இதனால் கோபப்பட்டவராக,
“இவர்கள் நபி(ச) அவர்களது ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டும் எம்மைத் தடுக்கின்றனர்.
ஹதீஸின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளாத போதெல்லாம் ஹதீஸை நாம் விட்டுவிட வேண்டுமா?
இல்லை. நாம் செவியேற்றது போல் ஹதீஸை அறிவித்துக் கொண்டே இருப்போம். (ஹதீஸை மறுக்காமல்) எங்களிடம்தான் அறியாமை இருக்கின்றது என ஏற்றுக் கொள்வோம் என்ற கருத்துப்பட கூறினார்கள்.”
(தஃழீமு கத்ருஸ் ஸலாத்: 1ஃ504)
Ismail salafi..