அல்குர்ஆன் : 65:2,3

பிரச்சனையா? 

கவலையா? 

திருமணம் செய்ய முடியாதா?
 
நிதி நெருக்கடி?

கருவுறுதல் பிரச்சனையா? 

உடல்நலப் பிரச்சினைகள்?

وَمَنْ يَتَّقِ اللهَ
 வமன் யத்தக்தகில்லாஹ் 

وَمَنْ يَتَّقِ اللهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللهِ فَهُوَ حَسْبُهُ

எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு (ஒவ்வொரு சங்கடத்திலிருந்தும்) வெளியேறும் வழியை அவன் ஆக்குவான். 

(அல்குர்ஆன் : 65:2)
 
மேலும், அவர் எண்ணியிராத விதத்தில் அவருக்கு வாழ்வாதாரங்களை அவன் வழங்குவான், 

எவர் அல்லாஹ்வின் மீது (தன் காரியத்தை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்,
 
(அல்குர்ஆன் : 65:3)


அபூதர் கிஃபாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 
ரசூல் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

"உண்மையில், 

ஒரு வசனத்தை நான் அறிவேன், 

அதை மக்கள் பிடித்துக் கொண்டால் அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்..."

நூல் : அல்-ஹக்கீம், அல்-பைஹாகி.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ரசூல்  ﷺ கூறுவார்கள்:

"(மேற்கண்ட வசனத்தை ஓதிய பிறகு) மக்கள் இந்த வசனத்தை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தினால், 

அவர்கள் உலகின் அனைத்து சந்தேகங்கள் மற்றும் துயரங்கள், 

மரணத்தின் துன்பம் மற்றும் இறுதிநாளின் துன்பங்களிலிருந்து விடுபடுவார்கள்."

நூல் : அபு நுஐம் அபு யாலா


எனவே எதை வேண்டினாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள் அன்பர்களே அல்லாஹ்வின் கஜானா மிகப்பெரியது அதில் முதல் மனிதர் ஆதம் (அலை) முதல் இறுதியாக படைக்கப்பட்ட எல்லா படைப்புகளும் வரை அல்லாஹ்விடமே தன் தேவைகளை அனைத்தையும் கேட்டாலும் அதில் கடலில் ஒரு ஊசியை முக்கி எடுத்தால் எவ்வளவு குறையுமோ அதைவிட அல்லாஹ்வின்‌ கஜானா வில் எந்த ஒர் குறையும் வந்து விடாது 

அல்லாஹ்வின் மீதே அருளை தேடுவோம் அல்லாஹ் நம் அனைவரின்‌ பிராத்தனைகளை ஏற்று அருள்புரிவானாக

Previous Post Next Post