கருவறைகளில் உள்ளவற்றை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான்!

🔰 அல்குர்ஆன் கூறுகிறது: *“கருவறைகளில் உள்ளவற்றையும் அவனே நன்கறிவான்”* (அல்குர்ஆன், 31:34)


🎤 இஸ்லாமியப் பேரறிஞர் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்)  கூறுகின்றார்கள்:

           “உயர்திணை - அஃறிணை ஆகிய இவ்விரண்டும் உள்ளடங்கும்படியாகவும், 'இது மாத்திரம்தான்'  என்று குறிப்பிட்ட ஒன்றை மட்டுப்படுத்தி வரையறுக்காதவாறு 'பொதுவானது' எனும் கருத்தைத் தருகின்ற அமைப்பிலும் *"ما"* என்ற எழுத்துப் பிரயோகம் மொழிபெயர்ப்பு வசனத்தின் அரபு மூலத்தில்  இடம்பெற்றிருக்கின்றது. இது அவதானத்திற்குரிய விடயமாகும்.  'பொதுவானது' என்ற பொருள் தரும்  இக்கருத்துடன்  அல்லாஹ்வின் அறிவை தொடர்புபடுத்தும்போது 'கருவறைகளில் உள்ளவற்றை அறியும் அல்லாஹ்வின் அறிவு என்பது அது ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தையாக இருப்பதைப் பற்றிய அறிவை மாத்திரமோ,  அல்லது ஒரு குழந்தை அல்லது பல குழந்தைகள் பற்றிய அறிவை மாத்திரமோ சுருக்கிவிடக்கூடியதாக இருக்கமாட்டாது. மாறாக, கருவறைகளில் உள்ளவற்றின் பல்வகை அறிவையும் பொதிந்திருப்பதாகவே அல்லாஹ்வின் அறிவு இருந்துகொண்டிருக்கும். 

             இந்த வகையில், கருவறைகளில் உள்ளது ஆண் குழந்தையா? அல்லது  பெண் குழந்தையா  என்பதையும் அது உள்ளடக்கும்; ஒரு குழந்தையா? அல்லது பல குழந்தைகளா  என்பதையும் அது உள்ளடக்கும்; அக்குழந்தை தாயின் வயிற்றிலிருந்து உயிருள்ளதாக வெளிவருமா? அல்லது  மரணித்தவாறு வெளிவருமா  என்பதையும் அது உள்ளடக்கும்; கருவறையிலுள்ள  சின்னஞ்சிறு அந்தச் சிசு இவ்வுலகில் நீண்ட காலம் வாழுமா? அல்லது குறுகிய காலம் தங்கியிருக்குமா என்ற அறிவையும் அது உள்ளடக்கும்;  அக்குழந்தை அதிக சொத்தும் செல்வமும் உடைய குழந்தையாக இருக்குமா? அல்லது கடும் வறுமையில் வாடும் குழந்தையாக இருக்குமா? அக்குழந்தை அறிவாளியாக இருக்குமா? அல்லது அறிவிலியாக இருக்குமா என்ற  அறிவுகளையும்  உள்ளடக்கியதாகவே அல்லாஹ்வின் அறிவு இருந்துகொண்டிருக்கும். இப்படி,  கருவறையில் உள்ள அந்த சிசுவுடன் சம்பந்தப்பட்ட அனைத்து வகை அறிவுகளும் *“கருவறைகளில் உள்ளவற்றையும் அவனே நன்கறிவான்”* என்ற இத்திருமறை வசனத்திற்குள் வந்துவிடுகிறது. எனவேதான், கருவறை ரகசியங்கள் குறித்த அல்லாஹ்வின் அறிவு சிலதுடன் மட்டுப்படுத்தப்படாமல்  பொதுவானதாவும், அனைத்தையும் உள்ளடக்கியிருக்கக்கூடியதாகவும், அவனுக்கு மட்டுமே உரியதாகவும் காணப்படுகின்றது.

            என்றாலும், விடயம் இப்படி இருக்கும்போது இது எமக்கு ஒரு சிக்கலையும்  குழப்பத்தையும்  ஏற்படுத்தலாம். *'அறிவியல் முன்னேறியிருக்கும் இந்த நவீன யுகத்தில் தாயின் கருவறையில் உள்ளது ஆணா? அல்லது பெண்ணா என்பதை மருத்துவம் இன்று கண்டுபிடித்து விடுகிறது. இது, அல்லாஹ்வின் அறிவு குறித்துக் கூறும் அந்த அல்குர்ஆன் வசனத்துடன் முரண்படாதா?'* என்பதுதான் அந்த சிக்கலும் குழப்பமுமாகும்.

*இதற்கான விடை வருமாறு:*

            அல்குர்ஆன் வசனத்துடன் முரண்படும் எந்தவொன்றும் இதில் கிடையாது. ஏனெனில்,  தாயின் கருவறையில் வளரும் சிசு குறிப்பிட்ட மாதங்களில் அது  ஆணாக, அல்லது பெண்ணாக உருவம் பெற்று தோற்றம் பெற்றதற்குப் பிறகுதான் பரிசோதனையின் பின்னர் அது ஆண் குழந்தை என்றும், அல்லது பெண் குழந்தை என்றும் மருத்துவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அதற்கு முன்னர் இதை அவர்களால் அறிந்துகொள்ளவே முடியாது. எனவே, அல்குர்ஆன் வசனத்தில் எந்த முரண்பாடும் கிடையாது.

            கருவறைகளில் உள்ள சிசுக்கள் பற்றிய அல்லாஹ்வின் அறிவு விசாலமானது; அனைத்தையும் உள்ளடக்கியிருக்கக்கூடியது; ஆண் குழந்தை, அல்லது பெண் குழந்தை என்று மட்டும் கண்டுபிடித்துச் சொல்கின்ற அறிவு மாத்திரம் அது கிடையாது என்பதை நாம் விளக்கப்படுத்திக் கூறியவற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம். உலகம் அழிந்து மறுமை நாள் ஏற்படுகின்ற  வரைக்கும் மனிதர்களில் எவருக்கும் இதில் அதிகாரம் செலுத்தவே  முடியாது.

             இந்த சந்தர்ப்பத்தில் இன்னொன்றையும் உங்களுக்குக் கூறிக்கொள்ள இங்கு  நான் ஆசைப்படுகின்றேன். அதாவது, *'அல்குர்ஆனிலும், ஆதாரபூர்வமான நபிமொழிகளிலும் வந்திருக்கின்ற எந்தவொன்றும் நடைமுறைக்கு முரண்படவே முடியாது!'* என்பதுதான் அந்த விடயமாகும்”.

[ நூல்: 'ஷர்ஹு ஹதீஸி ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்' பக்கம்: 111-113 ]


            


📚 قال الله تعالى: *{ ويعلم ما في الأرحام }* « سورة لقمان، الآية - ٣٤ »


🎯 قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:

       « 'ما' إسم الموصول يفيد العموم، وتعلق العلم بهذا العام هو تعلق عام أيضا. فعلم ما في الأرحام لا يقتصر على علم كونه ذكرا ، أو أنثى، واحدا أم متعددا. بل علم ما في الأرحام لا يقتصر على علم كونه ذكرا أو أنثى، واحدا أم متعددا. بل علم ما في الأرحام أشمل من ذلك، فهو يشمل كونه ذكرا أو أنثى، يشمل كونه واحدا أو متعددا، يشمل يخرج حيا أو يخرج ميتا، يشمل أن هذا الجنين سيبقى مدة طويلة في الدنيا أو مدة قصيرة، يشمل أن هذا الجنين سيكون ذا مال كثير أو فقر مدقع، يشمل أن هذا الجنين سيكون عالما أو جاهلا. فكل ما يتعلق بهذا الجنين يدخل في قوله: *{ ويعلم ما في الأرحام }* « سورة لقمان، الآية - ٣٤ ». فهو شامل عام خاص بالله تعالى.

         ولكن يشكل على هذا أنه في عصرنا الحاضر توصّل الطب إلى أن يعلم أن ما في بطن هذه الأنثى ذكر أو أنثى فهل يبقى معارضة في الآية؟ *فالجواب:* أنه ليس هناك معارضة للآية، لأنهم لا يعلمون أنه ذكر أو أنثى إلا بعد أن يكون ذكرا أو أنثى، أما قبل ذلك فلا يستطيعون العلم بأنه ذكر أو أنثى...

           ذكرنا أن علم ما في الأرحام لا يختص بعلم كونه ذكرا أو أنثى، ولكنه يشمل أكثر من ذلك. ولهذا لا يمكن لأحد إلى يوم القيامة أن يقول هذا الجنين سوف يخرج ويبقى مدة طويلة أو قصيرة، ويكون غنيا أو فقيرا، عالما أو جاهلا، طويلا أو قصيرا، لأن هذا كله أمره إلى الله عزّ وجلّ. وبهذا أتبين أن ما يتحدث عنه الأطباء اليوم من إمكان معرفة الجنين أنه ذكر أو أنثى لا يعارض الآية.

        وبهذه المناسبة أود أن أقول لكم كل ما جاء به القرآن وصحت به السنة فإنه لا يمكن أن يعارض الواقع ».

[ المصدر: 'شرح حديث جبريل عليه السلام' صفحة : ١١١-١١٣ ]

🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

               *✍🏻தமிழில்✍🏻*

                 அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி) 

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.

             

Previous Post Next Post