இறைவிசுவாசிக்குப் பலத்தைப் பெற்றுக்கொடுக்கும் 'திக்ர்


            அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “(அல்லாஹ்வை) திக்ர் செய்தல், திக்ர் செய்பவருக்கு நல்ல பலத்தைக் கொடுக்கிறது. எந்தளவுக்கென்றால், திக்ர் இல்லாமல் செய்ய முடியாதிருக்கும் ஓர் விடயத்தை திக்ருடன் ஒருவர் உண்மையாகவே செய்து விடுகின்றார். ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் நடை அமைப்பிலும், அவரின் பேச்சிலும், அவரின் வீரத்திலும், எழுத்திலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் பலம் இருந்ததை நான் நேரடியாகவே பார்த்தேன். புத்தகம் ஒன்றைத் தொகுத்து எழுதக்கூடிய ஒருவர் ஒரு வாரத்தில், அல்லது அல்லது அதைவிட அதிகமான காலப்பகுதியில் எழுதக்கூடியதை ஷைகுல் இஸ்லாம் அவர்கள் ஒரு நாளில் எழுதக்கூடியவர்களாக இருந்தார்கள். யுத்தத்தில் அவருக்கிருந்த பலத்தின் பிரமாண்டத் தன்மையை படையணியும் நேரடியாகக் கண்டுகொண்டது.

            மேலும், நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் மகள் பாத்திமா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் தன் கணவர் அலி (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்களுடன் நபியவர்களிடம் வந்து, தான் திரிகை சுற்றுவதால் தன் கையில் காய்ப்பு ஏற்படுவதாகக் கூறி (பணிவிடை செய்வதற்காக போர்க் கைதிகளில் அடிமையாக இருந்த ஒருவரை) பணியாளராகத் தரும்படிக் கேட்டார்கள். அப்போது நபியவர்கள் அவ்விருவருக்கும், *“ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்லும்போது 33 முறை 'சுப்ஹானழ்ழாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், 33 முறை 'அல்ஹம்து லில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், 34 முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்)* என்றும் சொல்லும்படிக் கூறி, *“இது, உங்கள் இருவருக்கும் பணியாளர் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்!”*  என்றும் போதித்தார்கள். (புகாரி - 5361)

            எனவேதான் இவ்வாறு சொல்லப்படுகின்றது: *“இந்த திக்ரை எவர் ஒருவர் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வருவாரோ அவர், பணியாளர் ஒருவர் தேவைப்படாத அளவுக்கு தனது உடலில் பலத்தைப் பெற்றுக்கொள்வார்!”*

{ நூல்: 'அல்வாபிbலுஸ் ஸய்யிப்b', பக்கம்: 185 }

♻➖➖➖➖➖➖➖➖♻


             قال العلّامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-

           [ الذكر يعطي الذاكر قوة، حتى إنه ليفعل مع الذكر مالا يطيق فعله بدونه، وقد شاهدت من قوة شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى في مشيته وكلامه وإقدامه وكتابته أمرا عجيبا. فكان يكتب في اليوم من التصنيف ما يكتبه الناسخ في جمعة - أي: أسبوع - أو أكثر، وقد شاهد العسكر من قوته في الحرب أمرا عظيما.

              وقد علّم النّبيّ صلّى الله عليه وسلم إبنته فاطمة وعليّا رضي الله عنهما أن يسبّحا كل ليلة إذا أخذا مضاجعهما ثلاثا وثلاثين، ويحمدا ثلاثا وثلاثين، ويكبّرا أربعا وثلاثين؛ لمّا سألته الخادم، وشكت إليه ما تقاسيه من الطحن، فعلّمها ذلك وقال:  *« إنه خير لكما من خادم »*.

              فقيل: *« إن من داوم على ذلك وجد قوة في بدنه مغنية عن خادم »*.

{ الوابل الصيّب ، ص - ١٨٥ }

♻➖➖➖➖➖➖➖➖♻

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post