வீடு எனக்கு இருக்கிறது! உங்கள் வீடு எனக்கு வேண்டாம்!


         சஊதி அரேபிய நாட்டு அறிஞர், பன்னூலாசிரியர், அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களை அந்நாட்டின்  அப்போதைய மன்னராக இருந்த ஹாலித் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் ஒரு தடவை சந்தித்தார்கள். அறிஞரின் வீட்டைப் பார்த்த மன்னரின் கண்களுக்கு அவ்வீட்டிலிருந்த எதுவும் திருப்தியாகத் தெரியவில்லை; வீடு பழையதாக இருந்தது! அப்போது மன்னர் அறிஞரிடம், *“ஷெய்க் அவர்களே! உங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் நல்ல முறையில் புதிய வீடொன்றை உங்களுக்காக நிர்மாணித்துத் தரும்படி நாம் பணிக்கின்றோம்!”*என்று கூறினார்.

        அதற்கு ஷெய்க் உஸைமீன் (ரஹ்) அவர்கள், *“மன்னரே! 'ஜஸாகல்லாஹு ஹைரா'! (அல்லாஹ் உங்களுக்கு நல்ல கூலியைத் தருவானாக)  'ஸாலிஹிய்யா' பகுதியில் எங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது; எல்லா ஏற்பாட்டையும் அதில் நாம் செய்திருக்கிறோம்; கூடிய சீக்கிரம் அதற்கு நாம் சென்று விடுவோம்!”*௭ன்று சொன்னார்கள். இதைக்கேட்ட மன்னர் ஹாலித் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்!.

           அவ்விடத்தை விட்டு மன்னர் சென்றதற்குப் பின்னால் ஷெய்க் அவர்களிடம் அவர்களின் மாணவர்கள் ஆச்சரியத்தோடு, *“ஆசிரியரே! 'ஸாலிஹிய்யா'வில் வீடு ஒன்று  உங்களுக்கு இருப்பது எங்களுக்குத் தெரியாதே!”*என்று கூறினர். அதற்கவர்கள், *“ஸாலிஹிய்யாவில் மையவாடி இல்லையா? மண்ணறை வீடு அங்கேதான் உள்ளது! மறுமை வீடுதான் குடியிருப்புக்குத் தகுதியான உண்மையான வீடாகும்!”*என்று பதிலளித்தார்கள்.

{ முகநூலில் சகோதரர் أبو أنس அவர்கள் }

❇➖➖➖➖➖➖➖➖❇


            الشيخ العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى فقد زاره مرة الملك خالد بن عبدالعزيز ، فرأى بيت الشيخ قديما ليس فيه شيئ يرد العين. فقال له: *"سنأمر لك بتشييد بيت جديد يليق بمقامك!"*

فقال الشيخ إبن عثيمين: *"جزاك الله خيرا، لدينا بيت فى الصالحية نجهز فيه وسننتقل إليه.... !"*، فاطمأن الملك خالد!!!

         فبعد إنصراف الملك خالد، سأل الطلاب بتعجب: *”يا شيخنا لا نعرف لك بيتا فى الصالحية!"*

فرد عليهم: *"أليست المقبرة فى الصالحية؟ فالقبر هناك، وبيت الآخرة حقيق بالعمران!"*

{ الأخ/ أبو أنس في فيس بوك }

❇➖➖➖➖➖➖➖➖❇

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Previous Post Next Post