சோதனைகளின் போது உறுதியாக இருத்தல்!


         இமாம் மைமூன் பின் அல்அஸ்பbஃ (ரஹ்) கூறுகின்றார்கள்:

            ஈராக்கின் பக்தாத் நகரத்தில் நான் இருந்து கொண்டிந்த போது கூச்சல், அலறல் சத்தம் ஒன்றைக் கேட்டேன். *“என்ன இது?”* என்று நான் கேட்க, *“அஹ்மத் இப்னு ஹன்பல் - ரஹ் - அவர்கள், ('அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு அல்ல; அது படைக்கப்பட்டது!' என்ற வழிகெட்ட முஃதஸிலா இயக்கக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி துன்புறுத்தப்பட்டு) சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!”* என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.

          உடனே, நானும் உள்ளே சென்று பார்த்தேன். அங்கே இமாம் அஹ்மதுக்கு  சாட்டையால் ஒரு அடி அடிக்கப்பட்டபோது, *“பிஸ்மில்லாஹ்”* என்று சொன்னார்கள். இரண்டாவது அடி அடிக்கப்பட்டபோது, *“லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பிbல்லாஹ்!”*என்று சொன்னார்கள். மூன்றாவது அடி அடிக்கப்பட்டபோது, *“அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு; அது படைக்கப்படவில்லை!”* என்று சொன்னார்கள். நான்காவது அடி அடிக்கப்பட்டபோது,

*" قل لّن يّصيبنا إلا ما كتب الله لنا"*

(அல்லாஹ் எமக்கு விதித்ததைத் தவிர வேறு எதுவும் எம்மைப் பீடிக்காது என நபியே நீர் கூறுவீராக! - அல்குர்ஆன்  9:51) என்ற வசனத்தை ஓதினார்கள். 

         அப்போது, இமாம் அஹ்மத் அவர்கள் 29 கசையடிகள் அடிக்கப்பட்டார்கள்!!.

{ நூல்: 'ஸிபfதுஸ் ஸப்fவா' லிப்னில் ஜவ்ஸீ், 1/485 }


            قال ميمون بن الأصبع رحمه الله تعالى: *كنت ببغداد فسمعت ضجة، فقلت: ما هذا؟ فقالوا: أحمد بن حنبل يمتحن...*

        فدخلت، فلما ضرب سوطا قال: *بسم الله!*

فلما ضرب الثاني، قال: *لا حول ولا قوة إلا بالله!*

فلما ضرب الثالث، قال: *القرآن كلام الله، غير مخلوق!*

فلما ضرب الرابع قال: *« قل لّن يّصيبنا إلا ما كتب الله لنا »*.

فضرب تسعة وعشرين سوطا !!!.

{ صفة الصفوة لابن الجوزي،  ١/٤٨٥ }

➖➖👇👇👇👇👇👇➖➖

❇👉🏿 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

         *“யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு அவன் உள்ளாக்குகிறான்!”*

{ நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம்- 5645 }

🌻➖➖➖➖➖➖➖➖🌻

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Previous Post Next Post