நபிவழியைப் பின்பற்றிய இஸ்லாமிய அறிஞரை, கொலை செய்யத் திட்டமிட்ட மத்ஹப் வெறியர்கள்


       மாலிக் மத்ஹப் அறிஞர் இமாம் அல்காழீ இப்னுல் அரபீ  (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “கண்ணியத்திற்குரிய எனது ஆசான் இமாம் அபூபக்கர் அத்தர்தூஷீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பள்ளிவாசல் ஒன்றுக்குச் சென்று தொழுதார்கள். அப்போது, ருகூவுக்குச் செல்கின்ற வேளையில் தனது இரு கைகளையும் உயர்த்தினார்கள். அங்கே ஹனபி மத்ஹபில் வெறிபிடித்த சிலர் இருந்துகொண்டிருந்தனர். தொழுகையை ஆரம்பிக்கும்போது கைகள் இரண்டையும் உயர்த்திக் கட்டுகின்ற ஆரம்பத் தக்பீரில் மட்டுமே தவிர வேறு எந்த இடத்திலும் தொழுகையில் கைகளை உயர்த்துவது இவர்களின் மத்ஹபில் சட்டமாக இல்லை. ருகூஃவின் போதும், ருகூஃவிலிருந்து தலையை உயர்த்தி நிலைக்கு வருகின்ற போதும் எனது ஆசான் (நபிவழியைப் பின்பற்றி) கைககள் இரண்டையும் உயர்த்தியதை இவர்கள் பார்த்தார்கள். அப்போது இவர்களில் சிலர் மற்றும் சிலரிடம், *“கிழக்குப் பிரதேசத்தானான இவனைப் பார்த்தீர்களா? எமது பள்ளிவாசலுக்குள் எப்படி இவன் நுழைந்து,  ருகூஃவிலிருந்து நிலைக்கு நிமிர்ந்து வரும்போது கைகள் இரண்டையும் உயர்த்துகிறான்? எழுந்து இவனிடம் செல்லுங்கள்; இவனைக் கொலை செய்து, ஒருவரும் உங்களைக் காணாதவாறு இவனைக் கொண்டுபோய் கடலிலே வீசிவிடுங்கள்!”* ௭ன்று கூறியதை நான் செவிமடுத்தேன். 

      அப்போது, என் உள்ளம் பறந்து போய்விட்டது; 'சுப்ஹானழ்ழாஹ்!' (அல்லாஹ் தூய்மையானவன்! ) என்று சொன்னேன். 'இமாம் அத்தர்தூஷீ இந்த நேர இஸ்லாமிய  சட்டத்துறை அறிஞர்; இக்கால இஸ்லாமியப் பேரறிஞர்களில் ஒருவர்! (இவருக்கே இப்படியா? என்று எனக்குள் சொல்லியவனாக) இவர்களிடம் சென்று, *'அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்!'* என்றேன். அதற்கு அவர்கள், *'ஏன் அவர் கைகள் இரண்டையும் உயர்த்த வேண்டும்?'* என்று என்னிடம் கேட்டனர். *'நபியவர்கள் இப்படித்தான் செய்யக்கூடியவர்களாக இரு்தார்கள்!'* என நான் சொன்னேன். 

        பின்னர், இமாம் அத்தர்தூஷீ  தொழுது முடிக்கும் வரைக்கும் இவர்களை அமைதிப்படுத்தி, மெளனப்படுத்திக் கொண்டிருந்தேன். பிறகு எழுந்து ஆசானுடன் இருப்பிடம் சென்றேன். எனது முக மாற்றத்தையும், பதற்றத்தையும் பார்த்த அவர், *என்ன நடந்தது?'* என்று என்னிடம்  கேட்டார். நடந்ததைத் தெரிவித்தேன். சிரித்துவிட்டார்! *“எங்கே! நபிவழியை நான் பின்பற்றிய வேளையில் கொல்லப்பட்டிருக்க வேண்டுமே!!”* என்றும் சொன்னார்கள்.

( நூல்: 'அல்இஃதிஸாம்' லில்இமாம் அஷ்ஷாதிbபீ, பக்கம்: 464 )


            يقول الإمام القاضي إبن العربي المالكي رحمه الله تعالى:-

           « إن شيخي الإمام أبو بكر الطرطوشي رحمه الله دخل المسجد، وصلّى ورفع يديه عند الركوع، وهناك بعض المتعصّبة لمذهب الأحناف، وليس عندهم في مذهبهم رفع اليد إلا في تكبيرة الإحرام فقط. فلمّا رأوا هذا الإمام يرفع يديه عند الركوع، وعند رفع الرأس عند الركوع، يقول ابن العربي: سمعت بعضهم يقول لبعض: *" ألا ترون إلى هذا المشرقي، كيف دخل مسجدنا، ويرفع يديه عند الرفع منه؟ قوموا إليه فاقتلوه؛ وارموا به في البحر، ولا يراكم أحد"*.

           يقول ابن العربي رحمه الله: فطار قلبي من بين جوانحي، وقلت: سبحان الله! هذا الطرطوشي فقيه الوقت، هذا من أكبر علماء الزمان... وذهبت إليهم وقلت: *" اتقوا الله "*، فقالوا لي: *"ولماذا يرفع يديه"*، قلت: *"كذلك كان النّبيّ صلّى الله عليه وسلم يفعل!"*

          قال: ثم جعلت أسكّنهم وأسكتهم حتى فرغ من صلاته، وقمت معه إلى المسكن، فرأى تغيّر وجهي وانزعاجي، فسألني، فأخبرته، فضحك، ثم قال: *"ومن أين لي أن أقتل على سنّة؟"*.

[ المصدر: 'الإعتصام' للشاطبي، ص - ٤٦٤ ]

💢➖➖➖➖➖➖➖➖💢

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post