அல்லாஹ்வுக்காக நேசம் கொள்பவர் ஈமானின் சுவையை ருசிப்பார்


🔅 நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள் கூறினார்கள்:

        *“எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்து கொள்வார்.* 

*1.* அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட நேசத்திற்குரியோராய் இருப்பது.

*2.* அவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

*3.* இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை நெருப்பில் தாம் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று அவர் வெறுப்பது”. ( நூல்: முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் - 67 )

        அல்லாமா ரபீbஃ பின் ஹாதீ அல்மத்ஹலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           “ஒரு மனிதரை நேசித்தல் என்ற விடயம் அல்லாஹ்வுக்காக நேசித்தல் என்பதற்காகவே இருக்க வேண்டும். உலகியல் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காகவோ, நலன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவோ அது இருக்கக்கூடாது; அல்லது நேசிக்கப்படுபவர் பட்டம், பதவி, உயர் அந்தஸ்தில் இருக்கின்றார்  என்பதற்காகவும் அது  இருக்கக்கூடாது. *'இஸ்லாத்தில் அவர் என் சகோதரர்; இஸ்லாத்தின் ஆரம்ப அடிப்படை விடயங்களையெல்லாம் அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்; அத்தோடு அவற்றை முறையாகப் பற்றிப்பிடித்து, அவற்றை கண்ணியப்படுத்தவும் செய்கிறார்!'* என்ற அடிப்படையிலேயே அல்லாஹ்வுக்காக வேண்டி ஒருவர்  மற்றவரை நேசிக்க வேண்டும். இப்படி, தூய்மையான, சிறப்புக்குரியதாக இந்த அன்பும் நேசமும் காணப்படுமாக இருந்தால் அது, நேசிப்பவருடைய ஈமானின் உண்மை நிலைக்கு ஆதாரமாக அமையும். இவரே ஈமானின் சுவையை இதன்மூலம் அடைந்துகொள்வார்”.

{ நூல்: 'முதக்கிரதுல் ஹதீஸ் அந்நபவீ' லில்மத்ஹலீ, பக்கம்: 85,86 }


🔅عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسٍ  عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: *{ ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ بِهِنَّ حَلَاوَةَ الْإِيمَانِ . مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ بَعْدَ أَنْ أَنْقَذَهُ اللَّهُ مِنْهُ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ }*

          قال العلّامة ربيع بن هادي المدخلي حفظه الله تعالى:-

         « أن يحبّ المرء لا يحبّه إلّا للّه لا لغرض ولا لمصلحة دنيويّة، ولا من أجل جاهه ومنصبه. وإنّما يحبّه للّه لأنّه أخوه في الإسلام، يؤمن بمبادئ الإسلام ويلتزمها ويحترمها. فإذا وجد هذا الحبّ الشريف النّزيه فذلك دليل على صدق إيمانه، وسوف يجد بذلك حلاوة الإيمان ». 

[ المصدر: "مذكرة الحديث النبوي للمستوى المتقدم والجامعي" للمدخلي، ص - ٨٥،٨٦ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post