ஈமானில் உறுதியைத் தந்து இறுதி முடிவை சிறப்பாக்கிக் தரும்படி அடிக்கடி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்


        அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “இறைவிசுவாசியொருவர் தனது ஈமானில் உறுதியைத் தரும்படி எப்போதும் அல்லாஹ்விடம் கெஞ்சி மன்றாட வேண்டியது அவசியமாக இருப்பதோடு இதற்குத் தேவையான கட்டாயக் காரணிகளையும் அவர் செய்ய வேண்டும். மேலும், இறுதி முடிவை நல்லதாக்கித் தரும்படியும், அருட்கொடையைப் பூர்த்தி செய்து தருமாறும் அல்லாஹ்விடம் அவர் கேட்க வேண்டும். யூசுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட பின்வரும் பிரார்த்தனையில் இது காணப்படுகின்றது. *“என் இரட்சகனே! எனக்கு நீ ஆட்சியில் சிறிதளவு வழங்கி, கனவுகளின் விளக்கத்தையும் எனக்கு நீ கற்றுத் தந்தாய். வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாக மரணிக்கச் செய்து, நல்லடியார்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!”* (அல்குர்ஆன், 12:101)

[ நூல்: 'தய்சீருல் கரீமிர் ரஹ்மான்', பக்கம்: 366 ]

    

              قال العلّامة المفسّر عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:-

      { أنه ينبغي للعبد أن يتملق إلى الله دائما في تثبيت إيمانه، ويعمل الأسباب الموجبة لذلك، ويسأل الله حسن الخاتمة، وتمام النعمة لقول يوسف عليه الصلاة والسلام: *« ربّ قد آتيتني من الملك وعلّمتني من تأويل الأحاديث فاطر السموات والأرض أنت وليّي في الدّنيا والآخرة توفّني مسلما وألحقني بالصّالحين »* (سورة يوسف، الآية : ١٠١ )

[ المصدر: تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان، ص - ٣٦٦ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post