அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“புற அழகும், அக அழகும் பெற்றிருந்த யூசுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சம்பவத்தில் படிப்பினை இருக்கிறது. அவரின் புற அழகு, மன்னருடைய மனைவி வீட்டில் அவர் இருந்தபோது ஒரு பெண்ணுக்கு என்ன பாலியல் சபலத்தைக் கட்டாயம் ஏற்படுத்துமோ அதை மன்னருடைய மனைவிக்கும் ஏற்படுத்தவே செய்தது. மேலும், கத்தியால் தம் கைகளை வெட்டிக்கொண்ட அந்தப் பெண்களுக்கும் இது பாலியல் சபலத்தையே ஏற்படுத்தியது. அதாவது, (தன் வீட்டில் வளர்ந்த அடிமை இளைஞன் யூசுப் மீது மன்னரின் மனைவி காதல் மோகம் கொண்டுவிட்டாள் என்று நகரத்துப்) பெண்களெல்லாம் மன்னரின் மனைவியைப் பழித்தனர். அப்போது அப்பெண்களையெல்லாம் ஒன்றுசேர்த்த மன்னரின் மனைவி, கனிகளை வெட்டுவதற்காக அவர்களது கைகளில் கத்தியைக் கொடுத்தபோது யூசுபின் அழகில் மயங்கிய அப்பெண்கள் கனிகளை வெட்டுவதற்குப் பதிலாக தம் கைகளை வெட்டிக்கொண்டனர் என்பதுதான் அந்த சம்பவம்! இதனால்தான் அப்பெண்கள், *“இவர் மனிதரேயல்லர்; இவர் கண்ணியமிக்க மலக்கேயன்றி வேறில்லை என்று கூறினர்”*.
பாவத்தில் வீழ்வதற்கான காரணிகளும் சாத்தியப்பாடுகளும் அதிகம் இருந்தும் அப்பாவத்தை விட்டும் ஒதுங்கத் தேவையாக இருந்த மிகச்சிறந்த பத்தினித்தனம்தான் யூசுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் இருந்த அக அழகு என்பதாகும். மன்னருடைய மனைவியின் சாட்சியமும், அதன் பின்னர் கைகளை வெட்டிக்கொண்ட அப்பெண்கள் கூறிய 'யூசுப் நிரபராதி' என்ற கூற்றும் இதை உண்மைப்படுத்துகின்றன. இதனால்தான், *“நான்தான் அவர் மீது மோகம் கொண்டேன். அவர் தன்னைப் பாதுகாத்துக்கொண்டார்”* என்று மன்னரின் மனைவி கூறினாள். மேலும் இதற்குப் பின்னர், *“உண்மை இப்போது வெளிப்பட்டுவிட்டது. நான்தான் அவர் மீது மோகம் கொண்டேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர் ”* எனவும் மன்னரின் மனைவி கூறினாள். இதனால்தான், *“அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக! நாம் அவரிடம் எந்தத் தீங்கையும் காணவில்லை என (கைகளை வெட்டிக்கொண்ட அப்பெண்கள் மன்னரிடம்) கூறினர்”*.
( நூல்: 'தய்சீருல் கரீமிர் ரஹ்மான்', பக்கம்: 364 )
قال العلاّمة المفسّر عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:-
{ ما عليه يوسف من الجمال الظاهر والباطن، فإن جماله الظاهر أوجب للمرأة التي هو في بيتها ما أوجب، وللنّساء اللاتي جمعتهنّ حين لمنها على ذلك أن قطعن أيديهنّ وقلن: *« ما هذا بشرا إن هذا إلّا ملك كريم »*.
وأمّا جماله الباطن: فهو العفّة العظيمة عن المعصية، مع وجود الدّواعي الكثيرة لوقوعها، وشهادة امراة العزيز والنّسوة بعد ذلك ببراءته، ولهذا قالت امرأة العزيز: *« ولقد راودتّه عن نفسه فاستعصم »*، وقالت بعد ذلك: *« الآن حصحص الحق أنا راودتّه عن نفسه وإنّه لمن الصّادقين »*، وقالت النّسوة: *« حاش للّه ما علمنا عليه من سوء »* }
[ المصدر: ' تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان'، ص - ٣٦٤ ]
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா