பாவமன்னிப்புத் தேட விரையுங்கள்; இல்லையேல், அதற்காகப் பாவமன்னிப்புத் தேட வேண்டும்


            அல்லாமா இப்னு கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *பாவத்திலிருந்து (அல்லாஹ்விடம்) மன்னிப்புத் தேட முந்திக்கொள்ள வேண்டும் என்ற விடயம் உடனடியாகவே செய்ய வேண்டிய கட்டாயக் கடமையொன்றாகும். இதைப் பிற்படுத்துவது கூடாது. எப்பொழுது இதை ஒருவர் பிற்படுத்துகிறாரோ அவர் இதைப் பிற்படுத்திய காரணத்தினால் மாறு செய்தவராகி விடுகிறார். பாவத்திலிருந்து அவர் மன்னிப்புத் தேடினாலும், இன்னொரு பாவமன்னிப்புத் தேடல் அவர்மீது எஞ்சியிருக்கின்றது. அதுதான், பாவமன்னிப்புத் தேடலை பிற்படுத்திய பாவத்திற்காகச் செய்ய வேண்டிய பாவமன்னிப்பாகும்!”*

{ நூல்: 'மதாரிஜுஸ் ஸாலிகீன்', 01/488 }


               قال العلاّمة إبن قيم الجوزية رحمه الله تعالى:-

         *[ المبادرة إلى التوبة من الذنب فرض على الفور؛ ولا يجوز تأخيرها. فمتى أخرها عصى بالتأخير. فإذا تاب من الذنب بقي عليه توبة أخرى وهي توبة تأخير التوبة ]*

{ مدارج السالكين ،  ١/٤٨٨ }

➖➖👇👇👇👇👇👇➖➖

📘 அல்லாஹ் கூறுகிறான்: *“நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்!”* (அல்குர்ஆன், 24:31)

             *“நம்பிக்கை கொண்டோரே! தூய முறையில் பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். உங்கள் இரட்சகன் உங்களை விட்டும் உங்கள் தீமைகளைப் போக்கி, உங்களைச் சுவனச் சோலைகளில் நுழைவிப்பான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்”* (அல்குர்ஆன், 66:08)

📖➖➖➖➖➖➖➖➖📖

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post