உங்கள் தொடர்பு, அறிவையும் ஈமானையும் எனக்கு அதிகப்படுத்துகிறது அறிஞரே!


        *[* அல்லாமா அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்), அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) ஆகிய இருவரும் சஊதி அரேபிய நாட்டின் பேரறிஞர்கள். சமகாலத்தில் வாழ்ந்த இருவரும் இஸ்லாத்திற்கும், இஸ்லாமிய சமூகத்திற்கும் அளப்பெரிய சேவைகளைப் புரிந்தவர்கள்!  நட்பு மற்றும் தஃவா ரீதியான கடிதப் பரிமாற்றங்கள் இருவருக்குமிடையில் இருந்து வந்திருக்கிறன! தற்போது மண்ணறை வாழ்வில் இருந்துகொண்டிருக்கும் இருவருக்கும் அல்லாஹ் நல்லருள்பாலிப்பானாக!! *]*

           அல்லாமா அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியிருந்தார்கள்:-

         *“ஷெய்க் அவர்களே! உங்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதை உண்மையிலேயே நான் விரும்புகிறேன். ஏனெனில், உங்களோடு நான் வைத்துக்கொள்ளும் தொடர்பு அறிவையும் ஈமானையும் எனக்கு அதிகப்படுத்துகின்றது!”*

{ நூல்: 'அர்ரசாஇல் அல்முதபாதலா',பக்கம்: 401 }

✍✉✉✉✉✉✉✉✉✍


         يقول العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى في رسالته إلى الشيخ عبدالعزيز بن عبدالله بن باز رحمه الله تعالى:-

        *[ والحقيقية يا شيخ أنني أحب الإتصال بكم.... لأن إتصالي بك يزيدني علما وإيمانا ]*

{ الرسائل المتبادلة، ص -  ٤٠١ }


📩✉📩✉📕📕✉📩✉📩

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post