அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“ஒரு மனிதன் தனது உறவுகளுக்குக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய உடல் ரீதியான, அல்லது பணம் மற்றும் சொத்து ரீதியான கடமையொன்றை நிறைவேற்றாமல் தடுத்து விடுவதுதான் குடும்ப உறவைத் துண்டித்து வாழுதல் என்பதாகும். நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: *“உறவை முறித்து வாழ்பவன் சுவர்க்கத்தில் நுழையமாட்டான்”*.(புகாரி - 5984).
நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மேலும் கூறினார்கள்: *“அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்' என்று கூறி(மன்றாடி)யது. அப்போது
அல்லாஹ், 'ஆம்! (உறவாகிய) உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம்! (திருப்தியளிக்கிறது) என் இறைவா!' என்று கூறியது. அப்போது, 'இது உனக்காக நடக்கும்' என்று அல்லாஹ் சொன்னான். பின்னர்
இறைத்தூதர்(ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், *'(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?'* எனும் (அல்குர்ஆனின் 47:22 வது) வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்”. (புகாரி - 5987, முஸ்லிம் - 4994)
கவலைக்குரிய விடயம் என்னவென்றால், முஸ்லிம்களில் அதிகம்பேர் இன்று பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமையில் அலட்சியம் காட்டி உறவுக் கயிற்றை துண்டித்தும் விடுகின்றனர். *'தமது உறவினர்கள் தம்மைச் சேர்த்து நடக்கிறார்கள் இல்லை!'* என்பதே இவர்களில் சிலரது வாதமாகும். இவ்வாதம் பயனளிக்கக்கூடியது அல்ல. ஏனெனில், தன்னோடு உறவு பாராட்டுபவரைத் தவிர மற்றவர்களோடு உறவுபாராட்டதவராக ஒருவர் இருப்பாராக இருந்தால் அவரின் உறவுபாராட்டுதல் அல்லாஹ்வுக்காக வேண்டி இருக்கவில்லை; புகாரி கிரந்தத்தில் வந்திருப்பது போல *'பதிலுக்குப் பதில் உறவுபாராட்டுதல்'* என்பதற்காகவே அது இருக்கிறது.
*“பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்”* (நூல்: புகாரி - 5991)
என நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம், *“அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னைத் துண்டித்து நடந்தும் நான் அவர்களுடன் சேர்ந்து நடக்கிறேன்; அவர்கள் எனக்குத் தீங்கு செய்தும் நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன்; அவர்கள் என்னுடன் மடமைத்தனமாக நடந்தும் அதை நான் சகித்துக் கொள்கிறேன்!”* என்று கூறினார். அதற்கு நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், *“நீ சொல்வது சரியாக இருந்தால் அது அவர்களுக்குச் சுடுசாம்பலை நீ உண்ணக் கொடுப்பது போன்றதாகும். மேலும், இவ்வாறு நீர் செய்து கொண்டிருக்கும் வரை அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஓர் உதவியாளர் எப்போதும் உம்முடன் இருந்துகொண்டேயிருப்பார்!”* என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
{ நூல்: 'மஜாலிசு ஷஹ்ரி ரமழான்' , பக்கம்: 200,201 }
🔰➖➖➖➖➖➖➖➖🔰
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
{ قطيعة الرّحم وهي أن يقاطع الرجل قرابته فيمنع ما يجب لهم من حقوق بدنية أو مالية. ففي الصحيحين عن جبير بن مطعم أن النّبي صلّى الله عليه وسلم قال: *« لا يدخل الجنة قاطع »*. وفيهما أيضا عن أبي هريرة رضي الله عنه أن النّبي صلّى الله عليه وسلم قال: *« إن الرّحم قامت فقالت لله عزّ وجلّ: هذا مقام العائذ بك من القطيعة قال: نعم أما ترضين أن أصل من وصلك، وأقطع من قطعك؟ قالت: بلى، قال: فذلك لك، ثم قال رسول الله صلّى الله عليه وسلم: إقرؤوا إن شئتم « فهل عسيتم إن تولّيتم أن تفسدوا في الأرض وتقطّعوا أرحامكم »* (سورة محمد، الآية ، ٢٢ )
ومن المؤسف أن كثيرا من المسلمين اليوم غفلوا عن القيام بحق الوالدين والأرحام وقطعوا حبل الوصل، وحجة بعضهم أن أقاربه لا يصلونه. وهذه الحجة لا تنفع لأنه لو كان لا يصل إلا من وصله لم تكن صلته للّه وإنما هي مكافأة كما في صحيح البخاري عن عبدالله ابن عمرو بن العاص رضي الله عنهما أن النّبي صلّى الله عليه وسلم قال: *« ليس الواصل بالمكافئ ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها »*. وعن أبي هريرة رضي الله عنه *أن رجلا قال: يا رسول الله! إن لي قرابة أصلهم ويقطعونني وأحسن إليهم ويسيئون إليّ، وأحلم عليهم ويجهلون عليّ. فقال النّبي صلّى الله عليه وسلم: إن كنت كما قلت فكأنما تسفّهم الملّ، ولا يزال معك من الله ظهير عليهم ما دمت على ذلك »* (رواه مسلم)
{ مجالس شهر رمضان ، ص - ٢٠٠،٢٠١ }
🔰➖➖➖➖➖➖➖➖🔰
*✍தமிழில்*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா