அஷ்ஷெய்க் அப்துல்லா பின் அப்துர்ரஹ்மான் அல்ஜிப்ரீன் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“உலகத்தைப் பயன்படுத்தும் விடயத்தில் மனிதர்கள் மூன்று வகையினராகப் பிரிகின்றனர்.
*முதலாவது வகையினர்:*
உலகமே தஞ்சம் என அதிலேயே மூழ்கிப் போனவர்கள்; இவர்கள், உலகத்தை உயர்வாக மதித்து, அதன் இன்பங்களின்பால் சாய்ந்து, அதை நேசித்துவிட்டவர்கள். தமது மிகப்பெரும் இலக்கையும், கவலையையும், தமது ஒட்டுமொத்த அறிவையும் தாம் நேசிக்கும் உலகுக்கே என்று இவர்கள் ஆக்கிவிட்டார்கள். தமது முழு நேரங்களையும் இதற்காகவே இவர்கள் ஈடுபடுத்திவிட்டார்கள். மறுமையை இவர்கள் மறந்து, மார்க்கத்தில் அதிகரிப்பையும் செய்து, எல்லை மீறியும் நடந்துவிட்டார்கள் என்பதிலே எதுவித சந்தேகமும் கிடையாது.
*இரண்டாவது வகையினர்:*
துறவற நோக்கில் உலகை வெறுத்துவிட்டவர்கள்தான் இவர்கள்! தமக்கான நலன்களைக்கூட எடுக்காமல் விட்டுவிடுவதிலே இந்நிலைப்பாடு இவர்களைத் தள்ளிவிட்டது. மக்கள் தொடர்பாடலை விட்டும் இவர்கள் நீங்கியிருப்பதோடு தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்களையும் இவர்கள் பாழ்படுத்தி விட்டார்கள். இதனால், தமக்குப் போதுமான அளவுக்கு சொத்து செல்வங்களை இவர்கள் சம்பாதிக்கவுமில்லை; தமது பிள்ளைகளுக்கும் தாராளமாகவோ, போதுமான அளவோ இதைக் கொடுக்கவுமில்லை; உணவளிக்கவுமில்லை. இவர்களும் தமது பொறுப்பில் தவறித்தவர்களாகவும், குறைவு செய்தவர்களாகவுமே இருக்கின்றனர்.
*மூன்றாவது வகையினர்:*
மேற்படி இரு நிலைப்பாடுகளுக்கிடையே நடுநிலையோடு இருப்பவர்கள்.
*"இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்குப் பசியைத் தணிக்கத் தேவையான உணவை வழங்குவாயாக!"* (நூல்: முஸ்லிம், ஹதீஸ் இலக்கம்- 1904 ) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் பிரார்த்தித்தது போல, இவர்களில் ஒருவர் தனக்குப் போதுமான உணவையும், ஏனையவற்றையுமே இவ்வுலகிலிருந்து தேடிக்கொள்வார்.
துறவற நோக்கில் உலகை வெறுக்கும் அலட்சியப் போக்கும் இவரிடம் இருக்காது; உலகமே தஞ்சம் என மூழ்கும் எல்லைமீறலும் இவரிடம் இருக்காது. அதாவது இப்படியும் அல்லாமல், அப்படியும் அல்லாமல் அளவுடன் தன் உலக விவகாரங்களில் ஈடுபட்டுக்கொள்வார்; அளவுடனேயே தன் மறுமைக்காகவும் ஈடுபட்டுக்கொள்வார். தன் மறுமை வாழ்வை மறக்கச் செய்யும் அளவுக்கு உலக மோகத்தில் மூழ்கிப் போய்விடவுமாட்டார்!”.
( நூல்: 'அல்இஸ்லாம் பய்னல் குலுவ்வி வல்ஜfபா வல்இfப்ராத் வத்தfப்ரீத்', பக்கம்: 62,63 )
قال الشيخ عبدالله بن عبدالرحمن الجبرين حفظه الله:-
{ إنقسم النّاس في الإقبال على الدّنيا إلى ثلاث طوائف:
*قسم أكبّوا على الدّنيا وعظّموا شأنها،* وركنوا إليها، وأحبّوها ، وجعلوا دنياهم أكبر همّهم ومبلغ علمهم، فشغلوا بها أوقاتهم كلّها! ولا شك أن هؤلاء قد نسوا الآخرة، وأنهم قد زادوا في هذا الأمر وقد غلوا.
*وقسم قد زهدوها*، ولكن أوقعهم ذلك في تركهم مصالح أنفسهم، أضاعوا من تحت أيديهم، فلم يكتسبوا مالا يغنون به أنفسهم، وأضافوا أولادهم دون أن يعطوهم، ويكفوهم ويرزقوهم، ومآ أشبه ذلك... فهؤلاء أيضا مخلّون ومقصرون.
*والأمر الوسط بين ذلك* هو أن يطلب الإنسان من الدّنيا الكفاف والقوت، كما في قول النّبي صلّى الله عليه وسلم: *« ألّلهم اجعل رزق آل محمد كفافا »* (رواه مسلم، حديث رقم - ١٩٠٤).
لا إفراط ولا تفريط، لا هذا ولا هذا، بل يشتغل في دنياه بقدر، ويشتغل لآخرته بقدر. ولا يبالغ في محبّة الدّنيا التي تنسيه الآخرة }
[ المصدر: ' الإسلام بين الغلو والجفاء والإفراط والتفريط' للجبرين، ص - ٦٢،٦٣ ]
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா