அல்லாஹ் தந்த அருட்கொடைகளை நினைத்துப் பார் மனிதா


          பேராசிரியர், கலாநிதி அப்துல்லா பின் ழைfபுல்லாஹ் அர்ருஹைலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           “சகோதரா! உனக்கு வாழ்த்துச் சொல்லப்படும் நாளில், கவலைக்காக ஆறுதல் கூறப்படும் நாளை நீ  நினைத்துப் பார். உனது பதவியேற்பு நாளில், உனது பதவியிழப்பு நாளை நினைத்துப் பார். நீ நன்றாக இருக்கும் நாளில், உனது சோதனையான நாளை நினைத்துப் பார். உனது மகிழ்ச்சியான நாளில், உனது கவலையான நாளை நினைத்துப் பார். உனது ஆரோக்கியமான நாளில், உனது நோய் நாளை நினைத்துப் பார். மேலும், ஒன்றுகூடும் நாளில் பிரிந்து செல்லும் நாளையும், வசதி வாய்ப்பான நாளில் நெருக்கடியான நாளையும் நினைத்துப் பார். உனது உணர்வுகளும் உறுப்புகளும் ஈடேற்றத்துடன் பாதுகாப்பாக இருக்கும் நாளில், அவை இல்லாமல் போகின்ற, அல்லது அவை நோயுற்றிருக்கின்ற நாளை நீ நினைத்துப் பார். இதுபோல, உனது வாலிப நாளில் உனது வயோதிப, மற்றும் இயலாமை நாளை நீ நினைத்துப் பார்ப்பதோடு, நீ உயிர் வாழும் நாளில் நீ மரணிக்கின்ற நாளையும் நினைத்துப் பார்!

             (எழுந்து நடமாட முடியாமல்) உட்கார்ந்திருப்பவரை நீ கண்டால், நடமாடித் திரிவதற்குரிய பலத்தை அல்லாஹ் உனக்குத் தந்திருக்கின்றான் என்பதை நினைவில் கொள். தனது மார்க்க விடயத்திலும் பண்பாட்டிலும் சோதிக்கப்பட்டிருப்பவனை நீ கண்டால், அந்த சோதனையிலிருந்து அல்லாஹ் உனக்குத் தந்திருக்கும் சுகத்தை நீ நினைத்துப் பார்.... இப்படி நிறைய விடயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.... !

           அல்லாஹ் கூறுகிறான்: *“அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிட்டால் அதை உங்களால் எண்ண முடியாது. நிச்சயமாக மனிதன் பெரும் அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்”* (அல்குர்ஆன், 14:34)

{ நூல்: 'அல்அஹ்லாகுல் fபாழிலா', பக்கம்: 162,163 }

⚾➖➖➖➖➖➖➖➖⚾

               

                  قال الأستاذ الدكتور عبدالله بن ضيف الله الرحيلي حفظه الله تعالى:-

         { تذكّر  -يا اخي- في يوم تهنئتك يوم تعزيتك، وفي يوم توليتك يوم تنحيتك، وفي يوم عافيتك يوم إبتلائك، وفي يوم سرورك يوم حزنك، وفي يوم صحتك يوم مرضك، وفي يوم الإجتماع يوم الفراق، وفي يوم السّعة يوم الضيق، وفي يوم سلامة حواسك وأعضائك يوم فقدها أو مرضها، وفي يوم شبابك يوم هرمك وعجزك، وفي يوم حياتك يوم مماتك.

            إذا رأيت مقعدا فتذكّر أن الله أقدرك على الحركة! وإذا رأيت مبتلى في دينه أو خلقه فتذكّر معافاة الله لك من تلك البليّة.... إلى آخر ما هنالك. 

              قال الله تبارك وتعالى: *« وإن تعدّوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفّار »* ( سورة إبراهيم، الآية - ٣٤)

[ الأخلاق الفاضلة - قواعد ومنطلقات لاكتسابها ، ص - ١٦٢،١٦٣ ]

⚾➖➖➖➖➖➖➖➖⚾

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)* 

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post