கணவன் - மனைவி நல்லுறவுக்குத் தேவைப்படும் முதலாவது அடிப்படை


         கலாநிதி ஹின்த் பின்த் முஸ்தபா ஷரீfபீ கூறுகின்றார்கள்:-

         “அல்லாஹ்வை  நேசித்தல்,  அவனுக்குக் கட்டுப்பட்டு வழிபட்டு நடத்தல் ஆகியவற்றின்  மீது கணவன் - மனைவி தொடர்பாடலை மேற்கொள்வதுதான் இஸ்லாமியக் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கட்டியெழுப்புவதற்குரிய  முதலாவது அடிப்படையாகும்.

         அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துகின்ற விடயத்தில் கணவனும் மனைவியும் ஒன்றுசேர்வதுதான் இஸ்லாமியக் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தேவைப்படுகின்ற மிகப் பிரதானமான அடிப்படையாக இருக்கின்றது. ஏனெனில், அல்லாஹ் ஒருவனால்  மாத்திரம்தான் உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி,  அவற்றை ஒன்றிணைக்க முடியும். உள்ளங்களுக்கிடையிலான இணைப்பும், நேசமும், கணவன் - மனைவிக்கிடையிலான உடன்பாடும் ஆட்சி செலுத்துகின்ற விடயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக 'அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, அவனுக்கு வழிபட்டு நடத்தல்' என்ற இந்த விடயம் காணப்படுகின்றது. கணவன் - மனைவி தொடர்பாடலில் இருக்கின்ற சுவையைத் தெளிவுபடுத்தும் வண்ணம் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியிருக்கின்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அழகான அமைப்பை ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்: *“இரவில் எழும்பும்  கணவன் தானும் தொழுது, தன் மனைவியை  எழுப்பி விடுகின்றபோது அவளும் எழுந்து  தொழுகிறாள்; அவள் எழும்ப மறுக்கின்றபோது அவள் முகத்தில் அவன் தண்ணீரைத் தெளித்து விடுகின்றான். இத்தகைய கணவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!! இவ்வாறே இரவில் எழும்பும் மனைவி தானும் தொழுது, தன் கணவனை எழுப்பி விடுகின்றபோது அவனும் எழுந்து தொழுதுவிடுகிறான்; அவன் எழும்ப மறுக்கின்றபோது அவன் முகத்தில் அவள் தண்ணீரைத் தெளித்து விடுகின்றாள். இத்தகைய மனைவிக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!”*. ( நூல்: 'ஸஹீஹ் இப்னு மாஜா' லில்அல்பானீ, ஹதீஸ் இலக்கம் - 1107, 'ஸஹீஹ் அபீ தாவூத்' லில்அல்பானீ, ஹதீஸ் இலக்கம் - 1450)

*[ 'அல்fபுர்கான்' அரபு சஞ்சிகை, இதழ்: 865, திகதி 18/04/2016 ]*



          تقول هند بنت مصطفى شريفي حفظها الله:-

         { قيام العلاقة الزوجية على محبّة الله تعالى وطاعته هو  الأساس الأول لبناء السعادة في الأسرة المسلمة.

         إن اجتماع الزوجين على ما يرضي الله تعالى هو أعظم أساس لبناء السعادة في الأسرة المسلمة. فالله وحده تعالى هو الذي يؤلف بين القلوب ويجمع بينها، وطاعته لها أثر كبير في سيادة الألفة والمحبّة والتوافق بين الزوجين، والتأمل في الصورة الرائعة التي ذكرها النّبي صلّى الله عليه وسلم تبين حلاوة هذه العلاقة: *" رحم الله رجلا قام من الليل فصلّى وأيقظ امرأته فصلّت؛ فإن أبت رشت في وجهها الماء. رحم الله امراة قامت من الليل فصلّت وأيقظت زوجها فصلّى، فإن أبى رشت في وجهه الماء"* }

[ مجلة الفرقان، العدد - ٨٦٥ ،  التاريخ ٢٠١٦/٤/١٨م ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم