நெருங்கிய உறவினராக இருப்பினும் நீதியையே நிலைநாட்டுங்கள்


🔅அல்லாஹ் கூறுகிறான்: *“நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும் நீங்கள் பேசும்போது நீதியாகவே நடந்துகொள்ளுங்கள்”* (அல்குர்ஆன், 06:152)

         உஸ்தாத் அஹ்மத் அல்குர்தீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “சட்டத்தோடு தொடர்புபட்ட வார்த்தையொன்றை நீங்கள் கூறினால், அல்லது சாட்சியத்தோடு சம்பந்தப்பட்ட வார்த்தையை, அல்லது ஏதாவதொரு விடயத்தைத் திருத்தும்படியாக வரக்கூடிய வார்த்தையை நீங்கள் கூறினால் மனோ இச்சையுடன் சாயாத வகையிலும், பலாபலன் ஒன்றுக்காகச் செல்லாத அமைப்பிலும் சத்தியம் மற்றும் நீதியின் அடிப்படையில் வரக்கூடியதாகவே நீங்கள் பேசுகின்ற  உங்களது அந்த வார்த்தை இருக்க வேண்டும். ஏனெனில், சத்தியம்தான் பின்பற்றப்படுவதற்கு மிகத் தகுதியானதாகும். நாம் யாருக்கு சாட்சி கூறுகின்றோமோ, அல்லது யாருக்காக தீர்ப்புச் சொல்கின்றோமோ அவர்களை எம்மோடு இணைக்கின்ற தொடர்பு எப்படித்தான் இருந்தாலும் எமது பேச்சுக்கள் ஒவ்வொன்றிலும் நீதியுடனேயே நாம் இருக்க வேண்டும் என இவ்வுபதேசத்தில் எம்மிடமிருந்து அல்லாஹ் கண்டிப்பாக  வேண்டுகிறான்.

         நெருங்கிய உறவினரின் உறவுத் தாக்கம், அவருக்கு நன்மை பயக்கும் காரியத்தைச் செய்ய வேண்டும் அல்லது அவரை விட்டும் தீங்கை அகற்ற வேண்டும் என்ற ஆசை, அல்லது ஆட்சியாளரை நெருங்குகின்ற விடயத்தில் ஏற்படும் ஆர்வம், அல்லது அவருக்கு அஞ்சுதல் ஆகிய இவ்விடயங்கள்தான் சாட்சி கூறுகின்ற விடயத்திலும் தீர்ப்புச் சொல்கின்ற விடயத்திலும் சத்தியப் பிறழ்வு ஏற்படுவதற்குரிய மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதற்காகத்தான்  சத்தியத்தை உறுதியாகக்  கடைப்பிடித்து, அதற்காகவே நிற்கவும் வேண்டும் என்ற அடிப்படையில் முஸ்லிமின் உள்ளத்தைப் பயிற்றுவிக்கின்ற அல்லாஹ்வின் சிறந்ததொரு பேச்சு நடையாக இந்த உபதேசம் இருந்துகொண்டிருக்கிறது. (சமூக நீதியை நிலைநாட்டுகின்ற இவ்விடயத்தில்) நபிகள் நாயகம் ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம் அவர்களும் இப்படிக் கூறினார்கள்: *“முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது இணையாக! முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும், அவளின் கரத்தை இந்த முஹம்மத் துண்டித்தே விடுவார்!”*

{ நூல்: 'தப்fசீருல் குர்ஆனில் கரீம்' லிஷ்ஷைக் அஹ்மத்  அல்குர்தீ, பக்கம்: 73,74 )

           


🔅قال الله تعالى: *{ وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى }*     « سورة الأنعام، الآية - ١٥٢ »

           قال الأستاذ أحمد الكردي حفظه الله تعالى:-

          « أي: إذا قلتم قولا فيه حكم، أو فيه شهادة، أو فيه تقويم لأمر من الأمور فليكن قولكم ناشئا عن الحق والعدل دون ميل مع الهوى،أو انحراف لمنفعة؛ فالحق أحق أن يتّبع. وقد طلب الله منّا في هذه الوصيّة أن نكون مع العدل في كلّ أقوالنا مهما كانت العلاقة التي تربطنا بمن نشهد له أو نحكم عليه. 

            فإن من أهم أسباب الإنحراف في الشهادة والحكم هو التأثر بقرابة القريب والرّغبة في نفعه أو دفع الضّرّ عنه أو الرّغبة في التقرب من السلطان أو الخوف منه. لذلك كانت هذه الوصيّة أسلوبا إلهيا في تربية الضمير المسلم على التزام الحق، والوقوف عنده. يقول صلوات الله وسلامه عليه: *« والذي نفسد محمد بيده لو أن فاطمة بنت محمد سرقت لقطع محمد يدها »*.

[ المصدر: ' تفسير القرآن الكريم' للشيخ أحمد الكردي، ص - ٧٣،٧٤ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post