🔅அல்லாஹ் கூறுகிறான்: *“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான் என்று (நபியே) நீர் கூறுவீராக!”* (அல்குர்ஆன், 03: 31)
பிரபல அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“நபிவழியில் இல்லாதிருந்துகொண்டு, அல்லாஹ்வை தான் நேசிப்பதாக வாதிடும் ஒவ்வொருவருக்கும் (அவரது வாதாட்டம் பிழை என்று) தீர்ப்பளிக்கக்கூடியதாக இவ்வசனம் காணப்படுகின்றது. எனவே ஒருவர், தனது பேச்சுக்கள் மற்றும் தன் செயல்பாடுகள் அனைத்திலும் முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கொண்டு வந்த ஷரீஆ சட்டங்களைப் பின்பற்றி நடக்கின்ற வரைக்கும் (அல்லாஹ்வை தான் நேசிப்பதாகக் கூறும்) இவ்விவகாரத்தில் தனது வாதத்தில் பொய்யுரைப்பவராகவே அவர் கருதப்படுவார்.
இமாம் ஹசனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும், சலபித்துவக் கொள்கையுடைய வேறு சில அறிஞர்களும் இவ்வாறு கூறுகின்றார்கள்: “(நபிவழிப்படி நடக்காமல் இருந்து) அல்லாஹ்வை தாம் நேசிப்பதாக ஒரு கூட்டம் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்! அவர்களை, *“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்”* என்ற இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் சோதித்துவிட்டான்!”.
{ நூல்: 'தப்சீருல் குர்ஆனில் அழீம்' லிப்னி கஸீர்', 01/358 }
📚➖➖➖➖➖➖➖➖📚
🔅قال الله تعالى: *« قل إن كنتم تحبّون الله فاتّبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رّحيم »* (سورة آل عمران: الآية - ٣١)
قال العلّامة إبن كثير رحمه الله تعالى: { هذه الآية الكريمة حاكمة على كلّ من ادّعى محبّة الله وليس هو على الطريقة المحمّدية، فإنه كاذب في دعواه في نفس الأمر حتى يتّبع الشرع المحمّدي والدّين النبويّ في جميع أقواله وأفعاله.
وقال الحسن البصري وغيره من السلف: { زعم قوم أنهم يحبّون الله فابتلاهم الله بهذه الآية: *« قل إن كنتم تحبّون الله فاتّبعوني يحببكم الله »* }
[ تفسير القرآن العظيم لابن كثير، ١/٣٥٨ ]
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா