அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-_
"பொறாமை கொள்ளுதல், அல்லாஹ்வின் கழா கத்ரில் ஆட்சேபனை தெரிவிப்பதாகும்! ஏனெனில் பொறாமைக்காரன், இவன் பொறாமைப்படும் அம்மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள சொத்து செல்வங்களில், அல்லது அல்லாஹ் அவனுக்ககுக் கொடுத்துள்ள கல்வியில் திருப்திகொள்ளாமல் இருக்கின்றான்!"
(நூல்: ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன், ஹதீஸ் இலக்கம் 1569 )
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
{ الحسد فيه إعتراض على قضاء الله وقدره، لأن الحاسد لم يرض أن الله أعطى هذا الرجل مالا أو أعطاه علما }
( شرح رياض الصالحين، رقم الحديث ـ ١٥٦٩)
➖➖➖➖➖➖➖➖➖➖
👉 இமாம் அபூ ஹாதம் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
"தனது சகோதரனுக்கு அல்லாஹ் அளித்துள்ள அருட்கொடை இல்லாமல் போவதைப் பார்க்கின்ற வரை பொறாமைக்காரனின் ஆன்மா அமைதி கொள்ளாது; அவனது உடலும் நிம்மதியடையாது!"
{ நூல்: ரவ்ழதுல் உகலா, 1/133 }
قال الإمام أبو حاتم رحمه الله تعالى:-
{ الحاسد لاتهدأ روحه، ولا يستريح بدنه إلا عند رؤية زوال النعمة عن أخيه }
( روضة العقلاء، ١/١٣٣ }
➖➖➖➖➖𢞖➖➖➖➖
👉 பொறாமைக்காரனின் அடையாளங்கள் மூன்று:-
*1)* பொறாமை கொள்ளப்படும் மனிதன் முன்னால் இல்லாவிட்டால் அவனைப் பற்றி புறம் பேசுவான்.
*2)* அவனை நேரடியாகச் சந்தித்து விட்டால், குனிந்து பணிந்து கனிவாகப் பேசுவான்.
*3)* அவனுக்கு ஏற்பட்ட சோதனையில் இன்பம் காண்பான்.
{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 4/47 }
➖➖➖➖➖➖➖➖➖➖
{ للحاسد ثلاث علامات: يغتاب إذا غاب المحسود، ويتملق إذا شهد، ويشمت بالمصيبة }
( حلية الأولياء، ٤/٤٧)
🍂➖➖➖➖➖➖➖➖🍂
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா