அசத்தியவாதிகளின் அச்சுறுத்தல், சத்தியப் பணி செய்வோரை அசைத்து விடப் போவதில்லை

 _நபித்தோழர்களுக்குப் பின்னர் வணக்கசாலிகளின் தலைவர் என்பதாக  வர்ணிக்கப்படும் 'உவைஸ் அல்கர்னீ (ரஹ்)' கூறுகின்றார்கள்:_ 
      *"'நன்மையை* *ஏவி, தீமையைத் தடுத்தல்'*என்ற (முக்கிய இரு கூறுகள் அடங்கிய) இப்பணி, இதில் ஈடுபடும் இறை விசுவாசியொருவருக்கு நண்பனொருவனைக்கூட விட்டு வைக்காதிருக்கலாம்! இருந்தாலும், மக்களுக்கு நாம் நன்மையை ஏவிக்கொண்டே இருப்போம்! அப்போது அவர்கள், எமது மானங்களைத் திட்டித் தொலைப்பதோடு இதற்காக கெட்டவர்களில் சிலரை உதவியாளர்களாகவும் பெற்றுக்  கொள்வர்.
         எந்தளவுக்கென்றால், சத்தியத்தைச் சொன்ன எனக்கு கடும் சோதனைகளை மக்கள் ஏற்படுத்தினர். அல்லாஹ் மீது ஆணையாக! இதற்காக வேண்டி  அல்லாஹ்வின் கடமையை அவர்களிடம் மேற்கொள்ளும்  பணியை நான் விட்டு விடவேயில்லை!".
 _{ நூல்: 'அல்இஃதிஸாம்' லிஷ்ஷாதிபீb, பக்கம்: 21 }_
🔵➖➖➖➖➖➖➖➖🔵 
 _قال سيد العباد بعد الصحابة أويس بن عامر القرني رحمه الله تعالى:_
        { إن الأمر بالمعروف والنهي عن المنكر لم يدعا للمؤمن صديقا، نأمرهم بالمعروف فيشتمون أعراضنا ويجدون في ذالك أعوانا من الفاسقين، حتى والله لقد رموني بالعظائم، وأيم الله! لا أدع أن أقوم فيهم بحقه } 
 _[ الإعتصام للشاطبي، ص - ٢١]_
🔵➖➖➖➖➖➖➖➖🔵

               ✍தமிழில்✍
              அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
Previous Post Next Post