அல்லாஹ்விடம் தன் நோக்கத்தை அடைவதில் ஆர்வம் காட்டி, அவன் கடமையை நிறைவேற்றுவதில் புறக்கணிப்புக் காட்டும் மனிதன் ஓர் அநியாயக்காரனே


       அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், *“மனிதனுக்குத் துன்பம் நேர்ந்துவிட்டால் அவன் தனது விலாப்புறத்தில் சாய்ந்தவனாக, அல்லது உட்கார்ந்தவனாக, அல்லது நின்றவனாக எம்மை அவன் அழைக்கின்றான். அவனது துன்பத்தை அவனை விட்டும் நாம் நீக்கிவிட்டால், தனக்கு நேர்ந்த துன்பத்திற்காக எம்மை அழைக்காதவன் போன்று அவன் சென்று விடுகின்றான்! வரம்பு மீறுவோருக்கு அவர்கள் செய்து கொண்டிருப்பவை இவ்வாறே அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளது”* (அல்குர்ஆன், 10:12) என்ற இவ்வசனத்திற்கு பின்வருமாறு விளக்கம் கூறுகின்றார்கள்:-

          *“இது, மனிதனின் இயல்பு குறித்து (அல்லாஹ் தெரிவிக்கின்ற) செய்தியாகும். நோய், அல்லது சோதனை என்ற தீங்கு ஒன்று மனிதனைப் பீடித்து விட்டால் உடனே அவன் பிரார்த்தனையில் கடுமையாக ஈடுபாடு காட்டுகின்றான். நின்றவனாக, உட்கார்ந்தவனாக, படுத்துச் சாய்ந்தவனாக என தனது எல்லா நிலைகளிலும் அல்லாஹ்விடம் அவன் கேட்கின்றான்; தனக்கு ஏற்பட்ட தீங்கை தன்னை விட்டும் அல்லாஹ் நீக்கிவிட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனையில் அவன் தொடர்ச்சியாக இருந்து விடுகின்றான்.*

          *பின்னர், (அவனது துன்பத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி விட்டால்) தனக்கு தீங்கு ஏதும் வந்து, தன்னை விட்டும் அதை அல்லாஹ் நீக்கி வைக்காதது போல தன் இரட்சகனை விட்டும் புறக்கணித்தவனாக தனது அலட்சியத்தில் அவன் தொடர்ந்திருக்கின்றான். இந்த அநியாயத்தை விட மிகப்பெரிய அநியாயம் வேறு என்னதான் இருக்கிறது?!! தனது நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடம் வேண்டுகிறான்; அவன் கேட்ட விடயத்தை அவனுக்கு அல்லாஹ் கிடைக்கச் செய்துவிட்டால் தனது இரட்சகனின் கடமையின் பக்கம் (திரும்பிப்) பார்க்காது, அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற கடமையொன்றே தனக்கு இல்லை என்பது போல அவன் இருந்து விடுகின்றான். இது, ஷைத்தானிடமிருந்து வருகின்ற அலங்கரிப்பாகும். சிந்தனைகளிலும் இயல்பிலும் அருவருக்கத்தக்கதாகவும் மோசமானதாகவும் இருக்கின்றவற்றை அவனுக்கு ஷைத்தான் (இப்படித்தான்) அலங்கரித்துக் காட்டி விட்டான்!”*

{ நூல்: 'தய்சீருல் கரீமிர் ரஹ்மான் fபீ தfப்சீரி கலாமில் மன்னான்' லிஸ்ஸஃதீ, பக்கம்: 316 }

❇➖➖➖➖➖➖➖➖❇

🔅قال الله تعالى: *{وإذا مسّ الإنسان الضّرّ دعانا لجنبه أو قاعدا أو قائما فلمّا كشفنا عنه ضرّه مرّ كأن لّم يدعنا إلى ضرّ مسّه كذلك زيّن للمسرفين ما كانوا يعملون}* (سورة يونس، الآية - ١٢)

          يفسّر العلّامة المفسّر عبدالرحمن بن ناصر السّعدي رحمه الله تعالى هذه الآية: 

*« وهذا إخبار عن طبيعة الإنسان، وأنه إذا مسّه ضرّ من مرض أو مصيبة إجتهد في الدعاء. وسأل الله في جميع أحواله، قائما، وقاعدا، ومضطجعا! وألح في الدعاء ليكشف الله عنه ضرّه.*

           *ثم استمرّ في غفلته معرضا عن ربّه كأنه ما جاءه ضرّ فكشفه الله عنه. فأي ظلم أعظم من هذا الظلم؟!! يطلب من الله قضاء غرضه، فإذا أناله إياه لم ينظر إلى حق ربّه، وكأنه ليس عليه للّه حق! وهذا تزيين من الشيطان، زيّن له ما كان مستهجنا مستقبحا في العقول والفطر »*

{ تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان للسعدي، ص - ٣١٦ }

❇➖➖➖➖➖➖➖➖❇

               *✍தமிழில்✍*

                      அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post