பாவங்களால் பறிபோகும் அருட்கொடைகள்


          அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“பாவங்கள் இறையருட்கொடைகளை இல்லாமல் ஆக்கி விடுகின்றன.  கண்டிப்பாக இது நடக்கவே செய்கின்றன!  பாவமொன்றை ஒரு மனிதன் புரிந்து விட்டால், அப்பாவத்திற்கேற்ப அல்லாஹ்விடமிருந்து அவனுக்குக் கிடைத்த அருட்கொடையொன்று அவனை விட்டும் நீங்கி விடுகின்றது. பாவமன்னிப்புக் கோரி அவன் திரும்பி விட்டால் அவ்வருட்கொடையோ, அல்லது அது போன்றதோ அவனிடம் மீளத் திரும்பி வந்து விடுகிறது. பாவத்தில் அவன் தொடர்ச்சியாக  இருந்துவிட்டால் (அவனை விட்டும் நீங்கிப்போன அவ்வருட்கொடை) அவன் பக்கம் மீளத் திரும்பி வராது. பாவத்தில் ஈடுபட்டு வரும் மனிதனிடம் இருக்கின்ற அருட்கொடைகள் அனைத்தும் (அவனிடமிருந்து) முழுமையாகப் பறிக்கப்படும் வரை  (அவனிடமிருக்கும்) அருட்கொடைகளை  ஒவ்வொன்றாக அப்பாவங்கள் இல்லாமல் ஆக்கிக்கொண்டே செல்கின்றன*.

       *அருட்கொடைகளில் மிகச் சிறந்தது 'ஈமான்' எனும் இறைநம்பிக்கையாகும்! விபச்சாரம், திருட்டு, மதுபானம் அருந்துதல், அபகரிப்பு ஆகிய (ஒவ்வொரு) பாவமும் அருட்கொடைகளை அகற்றி, அவற்றைப் பறித்தெடுத்து விடுகிறது!.*

          எமக்கு முன் வாழ்ந்து மரணித்த ஸலfபுஸ் ஸாலிஹீன்களில் சிலர் இவ்வாறு கூறுகின்றார்கள்: *“பாவம் ஒன்றை நான் செய்துவிட்டேன்; அதனால் ஒரு வருடம் இரவு வணக்கம் நிறைவேற்ற முடியாமல் தடுக்கப்பட்டேன்”*

         மற்றொருவர் கூறுகிறார்: *“பாவம் ஒன்றை நான் செய்துவிட்டதால் அல்குர்ஆனை விளங்கும் பாக்கியம் இழக்கப்பட்டேன்!”*

           சுருங்கக்கூறின், நெருப்பு விறகைச் சாப்பிடுவது போல, பாவங்கள் என்ற நெருப்பு அருட்கொடைகளைச் சாப்பிட்டு விடுகின்றன. அல்லாஹ் தந்த அருட்கொடை நீங்கிப் போவதிலிருந்தும், அவன் அளித்த ஆரோக்கியம் திருப்பி விடப்படுவதிலிருந்தும் அவன் பாதுகாப்பானாக!!!

{ நூல்: 'தரீகுல் ஹிஜ்ரதைன்', பக்கம்: 257 }

🍀➖➖➖➖➖➖➖➖🍀

           قال العلّامة إبن القيم رحمه الله تعالى:-

            *{ فإن الذنوب تزيل النعم ولابدّ، فما أذنب عبد ذنبا إلا زالت عنه نعمة من الله بحسب ذلك الذنب، فإن تاب وراجع رجعت إليه أو مثلها، وإن أصرّ لم ترجع إليه، ولاتزال الذنوب تزيل عنه نعمة نعمة حتى تسلب النّعم كلها.* 

          *وأعظم النّعم الإيمان، وذنب الزنا والسرقة وشرب الخمر وانتهاب النهبة يزيلها ويسلبها.*

     وقال بعض السلف: *« أذنبت ذنبا فحرمت قيام الليل سنة »*.

        وقال آخر: *« أذنبب ذنبا فحرمت فهم القرآن »*

        *وبالجملة فإن المعاصي نار النّعم تأكلها كما تأكل النّار الحطب، عياذا بالله من زوال نعمته وتحويل عافيته }*

[ طريق الهجرتين وباب السّعادتين، ص - ٢٥٨ ]

🍀➖➖➖➖➖➖➖➖🍀

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post