ஆட்சியாளர்களுக்கு உபதேசம் செய்வது எவ்வாறு?

ஷேய்க் உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது "உலகத்தில் குழப்பங்கள் அதிகரித்துவிட்டது, ஆட்சியாளர்கள் அநீதி செய்கிறார்கள், எங்கும் அநீதி, எதிலும் அநீதி.......(இன்னும் பல கேள்விகள்)"... அதுமட்டுமில்லாமல் "நீங்கள் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? அரசுக்கு ஏன் பயப்படுகிறீர்கள்? ஏன் ஆட்சிளாயர்களை எதிர்த்து பேசவில்லை, உபதேசிக்கவில்லை? அறிஞர்கள் ஏன் இப்படி இருக்கின்றீர்கள்? (என்று பல விமர்சனங்கள்)

எல்லாவற்றையும் கேட்ட ஷேய்க் அவர்கள் கேட்டார்கள் "பேசிவிட்டீர்களா?..  நான் ஒரே ஒரு கேள்வியை கேட்கிறேன். நாங்கள் ஆட்சியாளருக்கு உபதேசம் செய்யவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும் ? ....
நாங்கள் ஆட்சியாளர்களுக்கு உபதேசம் செய்கிறோம், எச்சரிக்கிறோம், ஆனால் வெளிப்படையாக அல்ல, தனிமையில். தவறுகளை சுட்டி காட்டுகிறோம், நன்மையை ஏவுகிறோம். 
நாங்கள் உபதேசம் செய்து விட்டு உடனே மிம்பர்களில் ஏறி அதை மக்களுக்கு மத்தியில் உரையாக பேசவும் மாட்டோம். இது தான் நபி ஸல் அவர்களின் வழிமுறை. அவர்கள் உபதேசத்தை கேட்பதும், விட்டுவிடுவதும் எங்களது கைகளில் இல்லை. சொல்வது தான் எங்கள் கடமை, அதை செய்துவிடுவோம் "......

- ஷேய்க் இஸ்மாயில் அல்-மந்தகர் 
 
தமிழில் - அபூ அப்தில்லாஹ் ஜமீல்
أحدث أقدم