🎯 அல்லாஹ் கூறுகிறான்: *“நரகத்தில் உள்ளவர்கள் நரகத்தின் காவலர்களிடம், 'ஒரு நாளைக்கேனும் வேதனையை எங்களை விட்டும் இலகுபடுத்துமாறு உங்கள் இரட்சகனிடம் வேண்டுங்கள்!' எனக் கேட்பர்”* (அல்குர்ஆன், 40:49)
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“மேற்படி வசனத்தை பல முறைகளில் ஆய்வு செய்து சிந்தித்துப் பாருங்கள்!
*01)* (வேதனையை இலகுபடுத்தும்படி) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்கவில்லை. மாறாக, (அல்லாஹ்விடம் இதைத்) தமக்காகக் கேட்கும்படி நரகத்தின் காவலர்களிடம்தான் வேண்டிக்கொள்கிறார்கள்! ஏனெனில், *“(நரகமாகிய) அதிலேயே நீங்கள் சிறுமையடைந்து விடுங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!”* (அல்குர்ஆன், 23:108) என்று (ஏற்கனவே) அவர்களுக்கு அல்லாஹ் கூறிவிட்டான்.
எனவேதான், அல்லாஹ்விடம் தாமாகவே இதைக் கேட்பதற்கும், அவனை அழைப்பதற்கும் தாம் தகுதியுடையவர்கள் அல்லர் என்பதாக தம்மை அவர்கள் கருதி, சிபாரிசின் மூலம் அவனை அவர்கள் அழைக்கலாயினர்.
*02)* அவர்கள், *'எங்கள் இரட்சகனிடம் நீங்கள் வேண்டுங்கள்!'* என்று கூறாமல் *'உங்கள் இரட்சகனிடம் நீங்கள் வேண்டுங்கள்!'* என்றே கூறினர். ஏனெனில், அல்லாஹ்வை தமது இரட்சகன் என்று இணைத்துச் சொல்வதற்கு அவர்களது முகங்களுக்கும் உள்ளங்களுக்கும் முடியாமலே போய்விட்டது. பழிப்பும், இழிவும் தம்மிடம் இருந்ததால்தான் *'எமது இரட்சகனான அல்லாஹ்'* என்று கூறுவதற்கே தாம் தகுதியில்லாதவர்கள் என்பதாக அவர்கள் கருதி *'உங்கள் இரட்சகன்'* என்பதாக அவர்கள் கூறினர்.
*03)* *'வேதனையை எம்மை விட்டும் அல்லாஹ் நீக்கிவிட வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டுங்கள்!'* என்று அவர்கள் (நரகத்தின் காவலர்களிடம்) கேட்கவில்லை. மாற்றமாக, *'இலகுபடுத்தும்படியாக வேண்டுங்கள்!'* என்றே அவர்கள் கேட்டனர். காரணம், - அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேடுவோம்- வேதனை அவர்களை விட்டும் நீக்கப்படும் என்பதில் நிச்சயமாக அவர்கள் நம்பிக்கையிழந்தவர்களாக இருந்தனர்.
*04)* “வேதனையை எம்மை விட்டும் நிரந்தரமாக அல்லாஹ் இலகுபடுத்த வேண்டும்
என்று வேண்டுங்கள்!” என்று அவர்கள் (நரகத்தின் காவலர்களிடம்) கேட்கவில்லை. மாற்றமாக, *“ஒரேயொரு நாள் வேதனையை இலகுபடுத்தும்படியாக வேண்டுங்கள்!”* என்றுதான் அவர்கள் கேட்டனர்.
வேதனை, இழிவு, கேவலம் ஆகியவற்றில் அவர்கள் இருந்துகொண்டிருப்பார்கள் என்பதே இதன்மூலம் தெளிவாகின்றது. இவர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: *“சிறுமையினால் தலைகுனிந்து, கடைக்கண்ணால் நோட்மிட்வர்களாக (நரகமாகிய) அதன்மீது அவர்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும் (நபியே) நீர் காண்பீர்!”* (அல்குர்ஆன், 42:45)
நரகத்திலிருந்து அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!!!
{ நூல்: 'தfப்ஸீரு ஜுஸ்இ அம்ம' லிஷ்ஷெய்க் உஸைமீன், பக்கம்: 33 }
☘➖➖➖➖➖➖➖➖☘
🎯 قال الله تبارك وتعالى: *{ وقال الذين في النار لخزنة جهنم أدعوا ربّكم يخفّف عنّا يوما من العذاب }* (سورة غافر، الآية - ٤٩)
يقول العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى: *تأمّل هذه الآية من عدة أوجه:-*
*🎯 أولا:* أنهم لم يسألوا الله سبحانه وتعالى. وإنما طلبوا من خزنة جهنم أن يدعوا لهم! لأن الله قال لهم: *« إخسئوا فيها ولا تكلّمون »* (سورة المؤمنون، الآية - ١٠٨)
فرأوا أنفسهم أنهم ليسوا أهلا لأن يسألوا الله ويدعوه بأنفسهم؛ بل لا يدعونه إلا بواسطة.
*🎯 ثانيا:* أنهم قالوا *« أدعوا ربّكم »*، ولم يقولوا *« أدعوا ربّنا »*. لأن وجوههم وقلوبهم لا تستطيع أن تتحدث أو أن تتكلم بإضافة ربوبية الله لهم، أي: بأن يقولوا ربّنا، عندهم من العار والخزي ما يرون أنهم ليسوا أهلا لأن تضاف ربوبية الله إليهم بل قالوا *« ربّكم »*.
*🎯 ثالثا:* لم يقولوا *« يرفع عنا العذاب »*، بل قالوا *« يخفّف »* لأنهم - نعوذ بالله - آيسون من أن يرفع عنهم.
*🎯 رابعا:* أنهم لم يقولوا *« يخفّف عنا العذاب دائما »*، بل قالوا *« يوما من العذاب »* يوما واحدا.
بهذا يتبيّن ما هم عليه من العذاب والهوان والذل... *« وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي »* (سورة الشورى، الآية - ٤٥)
*أعاذنا الله منها.... !*
{ من كتاب تفسير جزء عمّ للشيخ بن عثيمين رحمه الله، ص - ٣٣ }
☘➖➖➖➖➖➖➖➖☘
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா