மனோ இச்சை மனிதனை குருடனாக்குகிறது; செவிடனாக்குகிறது

 ஷைகுல் இஸ்லாம், இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

           “மனோ இச்சையைப் பின்பற்றுபவனை, அது குருடனாக்குகிறது; செவிடனாகவும் ஆக்குகிறது! இத்தகையவன், இதில்  அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும்  தான் செய்ய வேண்டியது என்ன? என்பதை தன் முன் கொண்டு வந்து சிந்தித்துப் பார்க்கமாட்டான்; அதைத் தேடவும் மாட்டான்! அல்லாஹ்வுடையவும், அவனது தூதருடையவும் திருப்திக்காக இவன் திருப்தி கொள்ளமாட்டான்; அத்தோடு, அல்லாஹ்வுடையவும் அவனது தூதருடையவும் கோபத்திற்காக இவன் கோபம் கொள்ளவும் மாட்டான். மாற்றமாக, தனது மனோ இச்சையின் திருப்திக்கேற்ப ஏதும் நடந்துவிட்டால் இவன் திருப்தி கொள்வான்; தனது மனோ இச்சை கோபப்பட்டதற்கு அமைய நடந்த ஒன்றுக்காகவே இவன் கோபமும் கொள்வான்!”.

{ நூல்: 'மின்ஹாஜுஸ் ஸுன்னா அந்நபவிய்யா' , 5/257 }

☘➖➖➖➖➖➖➖➖☘


           قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى:- 

[ وصاحب الهوى يعميه الهوى ويصمه، فلا يستحضر ما لله ورسوله في ذلك، ولا يطلبه. ولا يرضى لرضا الله ورسوله، ولا يغضب لغضب الله ورسوله، بل يرضى إذا حصل ما يرضاه بهواه، ويغضب إذا حصل ما يغضب له بهواه ]

{ منهاج السنة النبوية، ٥/٢٥٧ }

☘➖➖➖➖➖➖➖➖☘

                   ✍தமிழில்✍

                   அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post