இமாம் அபூ நுஐம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
*“அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கோபப்படாத மனிதராக இருந்தார்கள். யாராவது ஒருவர் அவரைக் கோபமூட்டினால், 'உம் விடயத்தில் அல்லாஹ் அருள்வளம் சொரிவானாக!' என்று சொல்லி விடுவார்கள்”*.
{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா' லி அபீ நுஐம், 03/39 }
🔅அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“கோபம் ஏற்படுகின்றபோது எமது நிலையுடனும், எமது பேச்சுடனும் இதை நாம் ஒப்பீடு செய்து படிப்பினை பெறலாமல்லவா! தன்னைக் கோபமூட்டியவருக்குத்தான் இந்த மகத்தான பிரார்த்தனையை அந்த இமாமவர்கள் செய்திருக்கிறார்கள் என்றால், தான் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருந்த நிலையில் மற்றவர்களுக்காக எதை(ப் பிரார்த்தித்து)க் கூறக்கூடியவர்களாக இருந்திருப்பார்கள்...! தான் கோபப்பட்ட நேரத்தில் இவ்வாறு அவர்கள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டதென்பது நிச்சயமாக அது ஓர் பலமும், வீரமும்தான்!”.
{ www.al-bars.net/muqolat/5341 }
⭕➖➖➖➖➖➖➖➖⭕
*{ كان عبدالله بن عون رحمه الله لا يغضب، فإذا أغضبه رجل قال: بارك الله فيك }*
[ حلية الأولياء لأبي نعيم، ٣/٣٩ ]
🔅قال الشيخ عبدالرزاق البدر حفظه: « ليتنا نعتبر مقارنة بحالنا ومقالنا عند الغضب، يدعو بهذه الدعوة العظيمة لمن أغضبه؟ فماذا كان يقول إذا حال إرتياحه وانبساطه؟ إنها القوة والشدة أن يملك نفسه هكذا عند غضبه! ».
{ www.al-bars.net/muqolat/5341 }
➖➖👇👇👇👇👇👇➖➖
👉🏿 நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: *“மக்களைத் தன்னுடைய பலத்தால் அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே உண்மையில் வீரன் ஆவான்!”* (புகாரி - 6114)
⭕➖➖➖➖➖➖➖➖⭕
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா