மக்களுடன் பண்பாடாக நடந்துகொள்வது போல், அல்லாஹ்வுடனும் பண்பாடாகவே நடந்து கொள்ள வேண்டும்


            இஸ்லாமியப் பேரறிஞர் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “மக்களுடன் உறவாடுகின்றபோது மட்டும்தான் அழகிய பண்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்; அல்லாஹ்வுடன் உறவாடுகின்றபோது தேவையில்லை என்றவாறான விளக்கம் பெரும்பாலான மக்களிடம் போய்க்கொண்டிருக்கிறது. எனினும், இது குறைபாடுடைய விளக்கமாகும். மக்கள் உறவாடலில் அழகிய பண்பாடு இருக்க வேண்டும் என்பதுபோல அல்லாஹ்வுடனான உறவாடலிலும் அழகிய பண்பாடு இருக்கவே வேண்டும். அல்லாஹ்வுடனான உறவாடலில் அழகிய பண்பாடு என்றால் என்ன?. இது, மூன்று விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது.

*1)* அல்லாஹ்வின் செய்திகளை உண்மைப்படுத்தி, அவற்றுக்குக் கட்டுப்பட்டு ஏற்றுக்கொள்ளல்.

*2)* அவன் வகுத்துத் தந்துள்ள சட்டங்களை அமுல்படுத்துவது கொண்டு அவற்றை எடுத்து நடத்தல்.

*3)* அவன் நாட்டப்படி நடப்பவற்றை பொறுமையுடனும், திருப்தியுடனும் ஏற்று நடத்தல்.

           அல்லாஹ்வுடன் அழகிய பண்பாடாக நடத்தல் என்பது இம்மூன்று விடயங்களுடன்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது.

              அல்லாஹ்வின் செய்திகளை உண்மைப்படுத்தி, அவற்றுக்குக் கட்டுப்பட்டு ஏற்றுக்கொள்ளல் என்பது அல்லாஹ்வின் செய்தியை உண்மைப்படுத்துவதில் இறைவிசுவாசியிடம் சந்தேகமோ அல்லது தடுமாற்றமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாகும். ஏனெனில், அல்லாஹ்வின் செய்தி உறுதியான அறிவின் அடிப்படையில் வந்திருக்கிறது. *“அல்லாஹ்வை விட பேச்சில் மிக உண்மையாளன் யார் இருக்கின்றான்?”*.  (அல்குர்ஆன், 04:87) என்று தன்னைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடுவது போன்று பேசுபவர்களில் மிக உண்மையாளன் அவனேதான்.

          மேலும்,   அல்லாஹ்வின் செய்திகள் மற்றும் அவன் தூதருடைய செய்திகளில் சந்தேகம் வந்து  புகுந்துகொள்ளாதவாறும், அவற்றில் சந்தேகத்தை ஏற்படுத்திக்கொள்ளாதவாறும் அவற்றை  உண்மைப்படுத்தி, உறுதிகொண்டவனாகவும், அவற்றைப் பாதுகாத்தவனாகவும், அவற்றின் மூலம் போராடுபவனாகவும் இருக்க வேண்டியது இறைவிசுவாசிக்கு அவசியமாகும். இப்பண்பாட்டை இவர் கடைப்பிடித்து வந்தால் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள் தெரிவித்த செய்திகளில் காழ்ப்புணர்ச்சி நோக்கம் கொண்டோர் கொண்டு வரும் ஒவ்வொரு சந்தேகத்தையும் இவரால் தடுத்து நிறுத்த முடியும். அவர்கள், மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கமாகப் புகுத்தும் முஸ்லிம்களில் உள்ளவர்களாக  இருந்தாலும் சரி; அல்லது, முஸ்லிம்களின் உள்ளங்களில் சந்தேகத்தைப் போடுகின்ற முஸ்லிம் அல்லாதவர்களில் உள்ளவர்களாக இருந்தாலும் சரியே! புகாரி நபிமொழிக் கிரந்தத்தில் பதிவாகியிருக்கும் பின்வரும் நபிமொழியை இங்கு  உதாரணமாக எடுத்துக்  கொள்வோம்: *“உங்கள் ஒருவருடைய பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்து விடுங்கள். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோய் இருக்கிறது. இன்னொன்றில் நிவாரணம் இருக்கிறது”*. (புகாரி - 5782)

            மறைமுக விடயங்களில் வரும்படியான செய்தியொன்றுதான் நபியவர்கள் கூறியிருக்கின்ற இச்செய்தியாகும். இறைச்செய்தியாக அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததைத் தவிர வேறெதையும் இறைத்தூதர் மார்க்கமாகப் பேசமாட்டார்கள். காரணம், அவர் ஒரு மனிதர்; மனிதர்கள் மறைமுக விடயங்களை அறிந்துகொள்ள மாட்டார்கள். தனது தூதருக்கு (இப்படிக் கூறும்படி) அல்லாஹ்  கூறுகிறான்: *“என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று உங்களுக்கு நான் கூறமாட்டேன்; மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்கு நான் கூறமாட்டேன்; எனக்கு இறைச்செய்தியாக அறிவிக்கப்படுவதைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை என்று (நபியே) நீர் கூறுவீராக!”*. (அல்குர்ஆன், 06:50)

           மேலே நாம் குறித்துக் காட்டிய நபிமொழிச் செய்தியை அழகிய பண்பாட்டுடன் நாம் எதிர்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். உண்மை என இச்செய்தியை அப்படியே நாம் ஏற்றுக்கொள்வதும், ஆட்சேபனை தெரிவிப்பவன் என்ன ஆட்சேபனை தெரிவித்தாலும் இச்செய்தியில் உள்ளது  யதார்த்தமானதும் உண்மையானதும் என நம்புவதும்தான் இவ்விடயத்தில் பண்பாடாக நடந்து கொள்ளல் என்பதன் விளக்கமாகும். ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள் கூறிய ஆதாரபூர்வமான செய்திகளுக்கு முரணாக வரும் சிந்தனைகள் எல்லாம் தவறானவை என்றே மிக உறுதியாக நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்”.

[ நூல்: 'கிதாபுல் இல்ம்' லில் உஸைமீன், பக்கம்:

256 - 258 ]


               قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

            { كثير من الناس يذهب فهمه إلى أن حسن الخلق لا يكون إلا في معاملة الخلق، دون معاملة الخالق. ولكن هذا الفهم قاصر. فإن حسن الخلق كما يكون في معاملة الخلق يكون في معاملة الخالق. فما هو حسن الخلق في معاملة الخالق؟

           حسن الخلق في معاملة الخالق يجمع ثلاثة أمور:

*١)* تلقي أخبار الله تعالى بالتصديق.

*٢)* تلقي أحكامه بالتنفيذ والتطبيق.

*٣)* تلقي أقداره بالصبر والرضا.

           فهذه ثلاثة أشياء عليها مدار حسن الخلق مع الله عزّ وجلّ.

           تلقي أخباره بالتصديق بحيث لا يقع عند الإنسان شك أو تردّد في تصديق خبر الله تعالى، لأن، لأن خبر الله سبحانه وتعالى صادر عن علم، وهو أصدق القائلين كما قال تعالى عن نفسه: *( ومن أصدق من الله حديثا )* « سورة النساء، الآية - ٨٧ ».

           ولازم تصديق أخبار الله تعالى أن يكون الإنسان واثقا بها مدافعا عنها مجاهدا بها. بحيث لا يدخله شك، أو تشكيك في أخبار الله سبحانه وتعالى وأخبار رسوله صلّى الله عليه وسلم. وإذا تخلّق بهذا الخلق أمكنه أن يدفع كلّ شبهة يوردها المغرضون على أخبار رسوله صلّى الله عليه وسلم، سواء أكانوا من المسلمين الذين ابتدعوا في دين الله ما ليس منه، أم كانوا من غير المسلمين الذين يلقون الشبهة في قلوب المسلمين. 

              ولنضرب لذلك مثلا ثبت في صحيح البخاري من حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى عليه وسلم قال: *( إذا وقع الذباب في شراب أحدكم فليغمسه ثم لينزعه، فإن في إحدى جناحيه داء والأخرى شفاء )*. « رواه البخاري -  »

          هذا خبر رسول الله صلّى الله عليه وسلم، وهو في أمور الغيب لا ينطق إلّا بما أوحى الله إليه؛ لأنه بشر والبشر لا يعلم الغيب بل قال الله له: *( قل لّا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إنّي ملك إن أتبع إلا ما يوحى إليّ )* . « سورة الأنعام، الآية - ٥٠ ». هذا الخبر يجب علينا أن نقابله بحسن خلق، وحسن الخلق نحو هذا الخبر أن نتلقى هذا الخبر بالقبول، وأن نجزم بأن ما قال النّبي صلّى الله عليه وسلم في هذا الحديث فهو حقّ وصدق وإن اعترض عليه من يعترض. ونعلم علم اليقين أن ما خالف ما صحّ عن رسول الله صلّى الله عليه وسلم فإنه باطل }.

[ المصدر: 'كتاب العلم' للعثيمين، ص : ٢٥٦ - ٢٥٨ ]

🍑➖➖➖➖➖➖➖➖🍑

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post