நபியவர்கள் காட்டிக் கொடுக்காத நடைமுறையை, நபித்தோழர்கள் 'சுன்னா'வாகப் பார்க்கவே இல்லை!


         ஈராக்கின் கூபா நகர பள்ளிவாசலில் இருந்த சிலர், பொடிக் கற்களைக் கொண்டு தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தமக்கு முன்னால், பொடிக்கல் குவியலொன்றை  வைத்துக்கொண்டு அக்கற்களால் தாம் செய்யும் தஸ்பீஹுகளை எண்ணிக்கொண்டே இருந்தனர். அப்போது அவர்களிடம் வந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள், “மார்க்கத்தில் நூதன அனுஷ்டானம் ஒன்றையும், அநியாயத்தையும் நீங்கள் ஏற்படுத்தி விட்டீர்கள்! முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களை விட, அறிவால் நீங்கள் சிறப்புப்பெற்று விட்டீர்களா?” என்று சொல்லி அவர்களைக் கண்டித்ததோடு பள்ளிவாசலை விட்டு அவர்களை வெளியேற்றியும் விட்டார்கள்!.

{ நூல்: 'அல்இஃதிஸாம்' லில் இமாம் அஷ்ஷாதிபீB, பக்கம்: 308 }

        أن ناسا بالكوفة يسبحون بالحصى فى المسجد، فاتاهم عبد الله بن مسعود رضي الله عنه وقد كوم كل رجل منهم بين يديه كوما من حصى ، فلم يزل يحصبهم بالحصى حتى اخرجهم من المسجد ويقول: *[ لقد احدثتم بدعة وظلما، وقد فضلتم اصحاب محمد صلى الله عليه وسلم علما؟ ]*

{ الإعتصام للإمام الشاطبي، ص - ٣٠٨ }

➖➖➖➖➖➖➖➖➖➖


🌻👉🏿 இமாம், அல்ஹாபிfழ் இப்னு கஸீர் (ரஹ்) கூறுகின்றார்கள்:

          “மார்க்கம் என்று ஸஹாபாக்களால் உறுதிப்படுத்தி வராத ஒவ்வொரு செயலையும், சொல்லையும் மார்க்கத்தில் புகுத்தப்பட்ட நூதன அனுஷ்டானம் என்றே 'அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்'தினர் கூறுகின்றார்கள். ஏனெனில், அது மார்க்கம் அங்கீகரித்த நல்ல காரியமாக இருந்திருப்பின், அதைச் செய்வதற்கு நிச்சயமாக  அவர்கள் எம்மை முந்தியிருப்பார்கள்!  எந்தவொரு நல்ல காரியமாக இருப்பினும், அதை முந்திக்கொண்டு செய்யாமல் அவர்கள் விட்டதும் கிடையாது!”.

{ நூல்: 'தப்ஸீர் இப்னு கஸீர்' , 7/278, 279 }


         قال الإمام الحافظ ابن كثير رحمه الله تعالى:-

           [ أهل السنة والجماعة يقولون في كل فعل وقول لم يثبت عن الصحابة هو بدعة؛ لأنه لو كان خيرا لسبقونا إليه، لأنهم لم يتركوا خصلة من خصال الخير إلا وقد بادروا إليها ! ]

{ تفسير إبن كثير، ٧/ ٢٧٨،٢٧٩ }

☘➖➖➖➖➖➖➖➖☘

                  ✍தமிழில்✍

                 அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post