பாவங்களைப் புரிந்து கொண்டு ஈமான் உள்ளத்தில் இருக்கிறது என்று கூறாதீர்கள்


        அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “மனிதன் பாவங்களில் ஈடுபட்டுக்கொண்டு, *'ஈமான் உள்ளத்தில் இருக்கிறது!'* என்று கூறுகிறான். அறிவீனர்களில் சிலரும், அல்லது தவறில் வீழ்ந்துகிடக்கும்  சிலருமே இவ்வார்த்தையை அதிகமாகக் கூறுவர்.   *'ஈமான் உள்ளத்தில் இருக்கிறது!'* என்ற  இவ்வார்த்தை உண்மையானது; இதன்மூலம்  நாடப்படுகின்ற கருத்துத்தான் பிழையானதாகும். ஏனெனில், இதைக் கூறுபவன் தான் செய்து வரும் பாவங்களை நியாயப்படுத்தி சரிகாணவே விரும்புகிறான். அத்தோடு,  தான் நன்மைகள் செய்யவோ, விலக்கப்பட்டவற்றை விட்டுவிடவோ தேவையில்லை என்றும், உள்ளத்தில் இருக்கின்ற ஈமானே போதுமானது என்றும் அவன் எண்ணிவிடுகின்றான். இது ஒரு வெளிப்படையான தவறாகும். காரணம், உள்ளத்தில் இருப்பது மாத்திரம் ஈமான் இல்லை; அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினர் வரைவிலக்கணம் கூறியிருப்பதுபோல், *“உள்ளத்தால் உறுதிகொண்டு, நாவால் மொழிந்து, உடல் உறுப்புகளைக்கொண்டு செயல்படுவதே ஈமானாகும்!”*

{ நூல்: 'அல்முன்தகா மின் பfதாவா ஷேக் ஸாலிஹ் அல்பfவ்ஸான்', 01/19 }


قال العلاّمة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-

      *« يرتكب المعاصي ويقول: 'الإيمان في القلب'.هذه الكلمة كثيرا ما يقولها بعض الجهّال أو المغالطين، وهي كلمة حق يراد بها باطل. لأن قائلها يريد تبرير ما هو عليه من المعاصي؛ لأنه يزعم أنه يكفي الإيمان الذي في القلب عن عمل الطاعات وترك المحرمات، وهذه مغالطة مكشوفة. فإن الإيمان ليس في القلب فقط، بل الإيمان كما عرّفه أهل السنة والجماعة: ' قول بالّلسان، واعتقاد بالقلب، وعمل بالجوارح »*.

{ المصدر: 'المنتقى من فتاوى الشيخ صالح الفوزان'، ١/١٩ }

🌐➖➖➖➖➖➖➖➖🌐

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post