பாவங்களை விட்டுவிட துணை புரியும் காரியங்கள்


         இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “பாவத்தை விட்டுவிட மனிதனுக்கு துணை புரியும் காரியங்களில் மிக முக்கியமானது:

*01) அல்லாஹ்வின் அச்சம்:*

             அல்லாஹ்வின் பின்வரும் கூற்றை மனிதன் தன் சிந்தனையில் மீட்டிக்கொண்டிருக்க வேண்டும். *“மனிதனே! நிச்சயமாக நீ உனது இரட்சகனின்பால் (செல்லும் வரை) கஷ்டத்துடன் முயற்சிப்பவனாக இருக்கின்றாய். எனவே, அவனை நீ சந்திப்பாய்”* (அல்குர்ஆன், 84:06). எந்தவொரு காரியத்தை தான் செய்தாலும், அதனுடன் தனது இரட்சகனைத் தான் சந்திப்பேன் என்று மனிதன் நம்ப வேண்டும்; உறுதிகொள்ள வேண்டும்.

*02)* இறுதி முடிவு குறித்தும், பாவத்தின் இறுதி முடிவு என்றால் என்ன? என்பது குறித்தும் மனிதன் சிந்திக்க வேண்டும். பாவங்களின் இறுதி முடிவுகள் மோசமானவையாகவே இருக்கும்; அல்லாஹ்வுக்கு மாறுசெய்து நடக்க அவனுக்கு இவை இலகுபடுத்திக் கொடுக்கும்; கொடிய இணை வைப்பின்பால் அவனைக் கொண்டுபோய் சேர்க்கும் வரைக்கும் ஷைத்தானுடனேயே அவன் இருந்துகொண்டிருப்பான். இதனால்தான், *“பாவங்கள் நிராகரிப்புக்கு தூது கொண்டு செல்லக்கூடியவைகள்”* என அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். அதாவது, “மனிதன் கட்டம் கட்டமாக அந்த பாவங்களைச் செய்து, முடிவில் ஷைத்தானின் இலக்கின்பால் சேர்ந்து விடுகின்றான்” என்பது இதன் அர்த்தமாகும். *“நமது வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், '(இவை) முன்னோர்களின் கட்டுக்கதைகளே' என்று அவன் கூறுகின்றான்.🔅அவ்வாறன்று; எனினும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களின் உள்ளங்கள் மீது துருவாகப் படிந்துவிட்டது”* (அல்குர்ஆன், 83:13,14) என்ற அல்லாஹ்வின் இக்கூற்று இதற்கு ஆதாரமாக இருக்கிறது. 

            பாவங்கள் மனிதனின் உள்ளத்தில் துருவாகப் படிந்து விடுகின்றபோது  அல்லாஹ்வின் வசனங்களை அவனுக்கு அவை கட்டுக்கதைகள் என்று காட்டி விடும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! எனவே, பாவத்தின் மோசமான முடிவை மனிதன் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அவற்றை விட்டு விடுவதற்குரிய காரணிகளில் இது இருக்கிறது என்பதை அவனால் அறிந்துந்துகொள்ள முடியும்.

*03)*  மனிதனை பாவம் அல்லாஹ்விலிருந்து தூரப்படுத்துகின்ற வேலையைத்தான் அதிகரித்துக்கொண்டிருக்கும் என்பதை அவன் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற விடயங்களை அவன் ஆழ்ந்து சிந்தித்துணர்கின்றபோது பாவத்தை விட்டு விடுவதற்கான பலத்தை அவனுக்கு அது வழங்கும்.

*04)* கெட்டவர்களோடு சேர்ந்து உறவு பாராட்டுவதுதான் பாவத்திற்கான காரணமாக இருப்பின் அவர்களை விட்டும் அவன் தூரமாகி ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில்,  நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கெட்ட நண்பனை (உலைக் களத்தில்) உலை ஊதுபவனுக்கு உதாரணமாகக் கூறினார்கள். *“....உலை ஊதுபவனோ, ஒன்றில் உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது, (அவனிடமிருந்து) துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்”*  (புகாரி, ஹதீஸ் இலக்கம் - 2101,5534)

*[* நூல்: 'சில்சிலது லிகாஆதில் பாபில் மப்fதூஹ்' - 103 *]*


              قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

*أولا:* أهم شيئ يعين الإنسان على ترك المعصية خوف الله عزّ وجلّ، وأن يردّد في فكره قول الله تعالى: *{ يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه }* « سورة الإنشقاق، الآية - ٦ ». وأن يؤمن ويوقن بأن أي عمل يعمله فإنه سيلاقي ربّه بذلك.

*ثانيا:* أن يفكر في العاقبة، ما هي العاقبة من المعصية؟ عواقب المعاصي سيئة؛ لأنها تهون على العبد معصية الله عزّ وجلّ، فلا يزال مع الشيطان حتى يوصله إلى الشرك. ولهذا قال بعض أهل العلم: *« إن المعاصي بريد الكفر »* ؛ أي: أن الإنسان يرتحل منها مرحلة مرحلة حتى يصل إلى غايته، ويدلّ لهذا القول قول الله تبارك وتعالى: *{ إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين🔅كلّا بل ران على قلوبهم ما كانوا يكسبون }* « سورة المطفّفين، الآية - ١٣،١٤ ». فالذنوب لمّا رانت على القلب - والعياذ بالله - أرته آيات الله القرآن العظيم أنه أساطير الأولين؛ فإذا تأمل الإنسان في عواقب المعصية فإن هذه من أسباب تركها. 

*ثالثا:* أن يعلم أن المعصية لا تزيده من الله إلّا بعدا. واذا ابتعد عن الله ابتعد النّاس عنه؛ فيتأمل مثل هذه الأشياء؛ وهذا ممّا يقويه على ترك المعصية.

*رابعا:* ،ومن أسباب ذلك أيضا: إذا كانت المعصية بسبب معاشرة بعض أهل السوء فليبتعد عنهم ويجتنبهم؛ لأن النّبي صلّى الله عليه وسلم مثّل جليس السوء بنافخ الكير، قال: *{ إمّا أن يحرق ثيابك، وإمّا أن تجد منه رائحة خبيثة }* 

[ المصدر: سلسلة لقاءات الباب المفتوح، ١٠٣ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم