🎯 உமர் இப்னுல் ஹத்தாப் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்: *“முதலில் ஒழுக்கத்தைப் பேணுங்கள்; பின்னர், அறிவைக் கற்றுக் கொள்ளுங்கள்!”* (நூல்: 'அல்ஆதாப் அஷ்ஷரஇய்யா', பக்கம்: 03/552)
🎯 இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: *“முப்பது ஆண்டுகள் ஒழுக்கத்தைத் தேடிப் பெற்றேன். இருபது ஆண்டுகள் கல்வியைத் தேடிப் படித்தேன். நன்மக்களெல்லாம் கல்விக்கு முன்னர், ஒழுக்கத்தையே தேடிப் பெறக்கூடியவர்களாக இருந்தனர்!”*. ( நூல்: 'காயதுன் நிஹாயா fபீ தபகாதில் குர்ரா',01/198)
இமாம் அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்: *“அறிவு ஞானம் எம்மிடம் அதிகமாக இருப்பதை விட, குறைவாக இருந்தாலும் ஒழுக்கத்தின்பால் அதிக தேவையுடையவர்களாகவே நாம் இருக்கிறோம்!”* ( நூல்: 'மதாரிஜுஸ் ஸாலிகீன்', 02/376)
🎯 இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: “எனது தாய் என்னை இறுக அணைத்து, *'மகனே நீ ரபீbஆ அவர்களிடம் செல்; அவரிடம் நீ அறிவைக் கற்க முன், ஒழுக்கத்தை அவரிடமிருந்து கற்றுக்கொள்!' என்று எனக்குக் கூறினார்கள்”.* ( நூல்: 'தர்தீபுல் மதாரிக் வ தக்ரீபுல் மசாலிக்', 01/130)
🎯 இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: *“அறிவின் மூன்றில் இரண்டு பகுதி ஒழுக்கமாகவே இருக்க வேண்டும்!”.*
( நூல்: 'ஸிfபதுஸ் ஸfப்வா', 04/145)
🌠➖➖➖➖➖➖➖➖🌠
🎯 قال عمر بن الخطاب رضي الله عنه: *« تأدّبوا ثم تعلّموا »*
{ الآداب الشرعية والمنح المرعية، ٣/٥٥٢ }
🎯 قال عبدالله بن المبارك رحمه الله تعالى: *« طلبت الأدب ثلاثين سنة، وطلبت العلم عشرين سنة، وكانوا يطلبون الأدب قبل العلم »*
{ غاية النهاية في طبقات القرّاء، ١/١٩٨ }
وقال أيضا: *« نحن إلى قليل من الأدب أحوج منّا إلى كثير من العلم »*
{ مدارج السالكين، ٢/٣٧٦ }
🎯 قال الإمام مالك بن أنس رحمه الله تعالى: *« كانت أمي تضمّني وتقول لي: إذهب إلى ربيعة؛ فتعلّم من أدبه قبل علمه »*
{ ترتيب المدارك وتقريب المسالك، ١/١٣٠ }
🎯 قال الإمام إبن الجوزي رحمه الله تعالى: *« كاد الأدب يكون ثلثي العلم »*
{ صفة الصفوة، ٤/١٤٥ }
🌠➖➖➖➖➖➖➖➖🌠
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐