ஒரு சகோதரர் நீங்கள் ஏன் ஸவுதி தொடர்பில் அதிகமான செய்திகளை பதிவிடுகிறீர்கள் என்று கேட்கிறார்.
அதற்கு எனது பதில் பின்வருமாறு ..
சகோதரர் அவர்களே இருக்கும் இஸ்லாமிய நாடுகளில் ஸவுதி மிகச் சிறந்த நாடு என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்...
அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவை யாப்பாக கொண்டுள்ள ஒரு நாடு
இஸ்லாத்திற்காக உழைக்கும் நாடுகளில் முதன்மையானது...
எந்த ஒரு நாட்டையும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட 100வீதம் பரிசுத்தமான நாடு என்று வாதிட முடியாது அதற்கு ஸவுதியும் விதிவிலக்கல்ல...
ஸவுதி மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டுவருகின்றது
ஈரானின் பிராந்திய ஆதிக்க வெறி அரபு எதிர்ப்புப் பிரச்சாரம்...
இஸ்ரேலின் நில விஸ்தரிப்பு...
வல்லரசுகளின் வளங்களின் மீதான இலக்கு
தூய இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ததால் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வரும் இஹ்வான் ஸுரூரி போன்றவர்களின் எதிர்ப்புக்கள்
நாளாந்தம் எல்லையை இலக்கு வைக்கும் ஈரான் தயவில் இயங்கும் ஹூதிகளின் தாக்குதல்கள்...
.....
ஸவுதி இத்தனை சவால்களையும் மிகவும் புத்திசாதுர்யமாக எதிர்கொண்டு தன்னையும் பாதுகாத்துக்கொண்டு அடுத்தவர்களுக்கும் தன்னால் முடியுமான அத்தனையையும் செய்துவருகின்றது...
துருக்கி, யெமன், இநுதோனேசியா பாகிஸ்தானை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பல பில்லியன் டொலர்களை கொடுத்து பாதுகாத்தது...
ஈரான் ஆதரவுக் குழுக்கலால் துவம்சம் செய்யப்பட்ட ஸிரியாவையும் யெமனையும் முழுமையாக அபிவிருத்தி செய்கிறது...
உள் நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சூடானை மீளக்கட்டியெழுப்ப உழைக்கிறது...
பஷர் அல் அஸாதின் பொடுங்கோள் ஆட்சியின்போது இடம்பெயர்ந்த பல மில்லியன் ஸிரியா மக்களை சொந்த நாட்டு மக்களைப் போன்று ஆதரித்தது
குவைட் தாக்கப்பட்டபோது அந்த மக்களுக்காக தன் நாட்டின் அனைத்து வழங்களையும் திறந்தது ...
மியன்மார் முஸ்லிம்களை தன் நாட்டில் குடியமர்த்தியது...
இதுவரை எவரும் வழங்காத அளவு உதவியை பலஸ்தீனத்திற்கு வழங்குகிறது அதன் நிருவாகச் செலவுகளுக்கு வருடாந்தம் கனிசமான அளவு பங்களிப்பு ஸவுதியால் வழப்படுகிறது...
காஸா ஒவ்வொருமுறையும் யுத்தத்தாள் பாதிக்கப்படும்போது அதன் மீள் கட்டுமானத்தில் மிகக் கனிசமான அளவு பங்கெடுத்தது ஸவுதிதான்...
தற்போதைய காஸா பிரச்சினையிலும் ஸவுதி தன்னால் முடியுமான அத்தனை வழிகளிலும் உதவியது உதவுகிறது...
காஸா மக்களுக்கு நிவாரணம் வழங்க தனியான ஒரு நிதியத்தை ஆரம்பித்தது கடல் தரை ஆகாயம் என அத்தனை மார்க்கங்களையும் பயன்படுத்தி உதவியது உதவுகிறது
அவர்களுக்கு துரிதமாக நிவாரணங்களை கொண்டு சேர்க்க சர்வதேச நிவாரணக்குழுக்களுடன் ஒப்பந்தங்களைச் செய்தது... தொடர்ந்தும் பயணிக்கிறது...
முஸ்லிம் நாடுகளுக்கிடையில் பலஸ்தீன தனி நாடு தொடர்பில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த பல மாநாடுகளை நடத்தியது... பலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வாக மன்னர் பஹ்தின் காலத்தில் முன்வைக்கப்பட்டு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்திலேயே இப்போதும் பயணிக்கிறது 1967ல் இருந்த எல்லைகளைக் கொண்ட பலஸ்தீன் தனி நாடு உருவானால் மாத்திரமே இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்போம் என்கிறது...
நிம்மதியாக நாம் ஹஜ் உம்ராக்களை நிறைவேற்ற மக்கா மதீனாவை எவரும் குறை சொல்லாத அளவு மிக சிறப்பாக பரிபாலிக்கிறது...
அல்குர்ஆனை மில்லியன் கணக்கில் அச்சிட்டு வருடாந்தம் இலவசமாக விநியோகிக்கின்றது...
உலகின் பல மொழிகளில் மொழிபெயர்த்து இலவசமாகவே அச்சிட்டு விநியோகிக்கிறது...
ஹதீஸ் பிகுஹு தப்ஸீர் அகீதா அரபு மொழி என்று முஸ்லிம்களுக்கு தேவையான அத்தனை நூல்களையும் அச்சிட்டு இலவசமாக விநியோகிக்கின்றது....
முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர் என்ற வேறுபாடின்றி தேவைப்படுவோருக்கெல்லாம் தனது செல்வத்தை வாரியிறைக்கிறது...
தற்போது உலகில் மிகப் பெரும் நிவாரண மையம் மன்னர் ஸல்மான் நிவாரண மையம்தான்...
இவ்வாறு ஸவுதியால் செய்யப்பட்ட செய்யப்படுகின்ற சேவைகள் பல புத்தகஙங்கள் எழுதும் அளவு அதிகமாக உள்ளது...
ஆனாலும் இவை அத்தனையும் செய்த ஸவுதியும் அதன் ஆட்சியாலர்களும் ஸியோனிஸ்டுகளாக வர்ணிக்கப்படிகிறார்கள் நாளாந்தம் அவர்களைத் தூற்றுகின்ற ஏசுகின்ற வீடியோக்களும் போட்டோக்களும் கடுடிரைகளும் திட்டமிட்ட அடிப்படையில் புனையப்பட்டு பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது...
அண்மைக் காலமாக இந்தப்பிரச்சாரம் மிகவும் சூடுபிடித்தது படித்தவர்கள் பாமரர்கள் மௌலவிகள் சேஹ்மார்கள் என்று பலரும் இந்தப் பிரச்சாரத்தின் பின்னால் அள்ளுன்டி செல்கிறார்கள்...
பலரும் பகிரங்கமாக சாபமிடுகிறார்கள்.... சில உலமாக்கள் அவர்களை மிகவும் கீழ்தத்தரமான வார்த்தைகளால் விமர்சிக்கிறார்கள் இலுமினாட்டிகள், பச்சோந்திகள், காட்டரபிகள், காபிர்கள் .... என்றெல்லாம் எழுதுகிறார்கள்...
இந்நிலையில் விடயம் அறிந்தவர்கள் இது தொடர்பில் மௌனம் காப்பது அடுத்தவர்களுக்கு செயுயும் அநியாயம் என்றே நான் கருதுகின்றேன்.
திட்டமிட்டு இட்டுக்கட்டுகளை பரப்புபவர்களை நாம் எதுவும் செய்ய முடியாது... ஆனால் உண்மைச்செய்திகள் பரப்பப்படாதபோது பரப்பப்படும் செய்திகளின் பால் சமூகம் அள்ளுன்டு செல்வதை தடுக்க முடியாது...
அதனால் இந்த நேரத்தில் குறித்த விடயம் தொடர்பில் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கின்றேன்... அவ்வளவுதான்...
இது தொடர்பிலும் இதனோடு ஒட்டிய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துவது கடமை என்று கருதுகின்றேன்.
- இஸ்மாயில் மதனி