அல்- மதீனா அத்தைய்யுபாவின் பச்சை குவிமாடம் - (Green Dome - القبة الخضراء )

-உஸ்தாத் SM. இஸ்மாயீல் நத்வி

வரலாற்றுப் பார்வை :

அல்- மதீனா அத்தைய்யுபா எங்கும் அமைதியும் , மன நிம்மதியும் சூழ்ந்திருக்கும் ஒரு நகரமாகும் , மதினாவில் நாம் நுழையும் பொழுது நமக்கு ஏற்படும் மெய் சிலிர்ப்புகளும் நபியவர்களின் மீது நாம் கொண்டிருக்கும் நேசமும் மஸ்ஜித் நபவியை நெருங்க நெருங்க நம்மை தொற்றிக் கொள்ளும் ஒரு விதமான உணர்வுகளும் அதை உணர்ந்தவர்கள் தான் புரிந்து கொள்ள முடியும்.

மதீனமா நகரம் என்று சொல்லும் பொழுதே நம் அனைவரின் சிந்தனையில் உதிக்கும் ஒரு காட்சி மஸ்ஜித் நபவியில் இறைத்தூதர் ﷺ அவர்களின் மண்ணறைக்கு மேல் இருக்கும் பச்சை குவிமாடம் தான் - (Green Dome - القبة الخضراء).

மஸ்ஜித் நபவியில் எங்களது நேசர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தங்களது நபி தோழர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார்கள், இஸ்லாத்தின் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினார்கள் என்ற சிந்தனைகள் எல்லாம் நமது கண் முன் வந்து போகும்.

ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் செல்பவர்கள் தங்களது வாழ்நாளின் கனவாக பார்ப்பது,
இறைத்தூதர் ﷺ அவர்களின் கண்ணியத்திற்குரிய மஸ்ஜித் நபவிக்கு வருகை புரிந்து அங்கு நபிமொழிகளில்  ஒரு ரக்கஃஆத்திற்கு ஆயிரம் நன்மைகளை என்று கூறப்பட்டிருக்கும் நன்மாராயங்களையும், சுவனத்தின் பூங்காவன அர்ரவ்ழா ஷரீபில் தொழுது  நபியவர்களின் மண்ணறைக்கு சலாம் சொல்வதையும் தான்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் உம்ரா உடைய பாக்கியங்களை வழங்கிடுவானாக !!

நபி நேசம் என்பது ஒரு இறை நம்பிக்கையைச் சேர்ந்த விடயம் , நபி அவர்களை பின்பற்றுவதுதான் உண்மையான நேசத்தின் அடையாளம் அவ்வாறு செய்வதினால் அல்லாஹ்வின் நேசத்தையும் அடைய முடியும்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறும் பொழுது

 قُلۡ إِن كُنتُمۡ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِي يُحۡبِبۡكُمُ ٱللَّهُ وَيَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான்.  உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்."
(அல்குர்ஆன் : 3:31)

உங்களில் ஒருவர் இறை நம்பிக்கையாளராக முடியாது 
நான் அவரிடத்தில் தனது பிள்ளை, தந்தை, அனைவரையும் விட பிரியமானவராக ஆகும் வரை .

நூல் - திர்மிதி - 7582
தரம் - ஸஹீஹ்
அறிவிப்பாளர் - அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு

لا يُؤْمِنُ أحدُكم حتى أكونَ أحبَّ إليه من ولدِهِ ، ووالدِهِ ، والناسِ أجمعينَ
الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 7582 | خلاصة حكم المحدث : صحيح
ஆனால் நபி நேசம் என்ற பெயரில் சிலர் செய்யும் அனாச்சாரங்களை, பித்அதுகளை மார்க்கம் அங்கீகரிப்பதில்லை , நபியவர்களின் மண்ணரையின் குவிமாடம் பச்சையாக இருப்பதால் , இதை நபி நேசத்திற்கு அடையாளமாகவும் தங்களது வீடுகளிலும் தங்களது கம்பெனிகளிலும் அலுவலகத்திலும் முகநூல் ப்ரொபைல் ஆகவும் புனிதப்படுத்தி நபியவர்கள் நேசத்தை சிலர் வெளிப்படுத்துகிறார்கள்
(!!!)

இது மார்க்க பார்வையில் என்ன கூடுமா கூடாதா ? 

ஹஜ் உம்ரா காலங்களில் இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் சில நாடுகளில் இருந்தும் வரும் சில ஹாஜிகள் பச்சை நிறத்தில் தலையில் இருந்து கால் வரை ஆடை அணிந்து இருப்பார்கள், 
நபி நேசத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள் (!!!) 

அங்கிருக்கும் உலமா பெருமக்கள் அவர்களை அழைத்து அவர்களுக்கு இங்கிதமாக அழைப்பு பணி செய்வதை உண்மையான நபி நேசத்தை அவர்களின் மொழிகளில் விளக்கப்படுவதை நாம் பல முறை அங்கு கண்டிருக்கிறோம்.

சவுதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் உம்ராவிற்கு செல்லும் போதெல்லாம் மஸ்ஜித் நபவியில் அமர்ந்து கொண்டு இறைத்தூதர் ﷺ அவர்களின் மண்ணறைக்கு மேல் இருக்கும் பச்சை குவிமாடத்தை பார்த்து யோசித்ததுண்டு !!

இது இந்த நிறத்தில் தான் நபி அவர்கள் காலத்தில் இருந்ததா ? சஹாபாக்கள் காலத்திலும் இருந்ததா ?

இதன் பின்னணி என்ன ?

இந்த நிறத்தை வைத்துக் கொண்டுதான் "தர்காக்கள்", என்ற சித்தாந்தங்களை மக்கள் உருவாக்கினார்களா ?

பள்ளிவாயில்களில் மண்ணறைகள் இருந்தால் அங்கு தொழலாமா ?

இறை ஆலயமாகிய கஃபத்துல்லாஹ் இறைத்தூதர் அவர்களின் வருகைக்கு முன்பதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது பின்பு அதை இடிப்பதற்கு பலர் முயன்றனர்,

அல்லாஹ் அவர்களின் இழிவான கரங்களில் இருந்து இறை இல்லத்தை பாதுகாத்தான் இது நாம் அறிந்த வரலாறு ....

"அல்பிதாயா வன் நிஹாயா ", என்ற வரலாற்று புத்தகத்தில் பின்வருமாறு இமாம் இப்னு கஸீர் குறிப்பிடுகிறார்கள்....

நபி அவர்கள் காலத்துக்கு பின்பு கஃபா ஆலயம் இரண்டு முறை இடிக்கப்பட்டு , புனர்நிர்மாணம் செய்யப்பட்டது ஒன்று புகாரி, முஸ்லிம் போன்ற இன்னும் பல ஹதீஸ் கிரந்தங்களில் இடம்பெற்றிருக்கும் அங்கீகாரமான நபிமொழி அப்துல்லாஹ் பின் ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறிய தாயாகிய ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் சொல்லுக்கு இணங்க நபியவர்கள் கூறினார்கள் உயிரோடு இருந்தால் வரும் காலத்தில் இந்த ஆலயத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் இரண்டு வாயில்களை வைத்து ஹஜ்ருல் அஸ்வதை உள்ளே வைப்பேன் ஆனால் மக்களோ புதிதாக இஸ்லாத்திற்கு வந்திருப்பதனால் (அவ்வாறு செய்ய விரும்பவில்லை) என்று கூறினார்கள்,

யஸீத் பின் முஃஆவியாவின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் இறையில்லம் தீக்கிரையாக்கப்பட்டது எனவே கஃபாவை நபியவர்கள் வேண்டிக் கொண்டது அடிப்படையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

பின்னர் அப்துல் மலிக் பின் மர்வான் அவர்களின் ஆட்சி காலத்தில் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் இறைத் தூதர் ﷺ அவர்கள் காலத்தில் கஃபா எவ்வாறு இருந்ததோ அவ்வாறு மாற்றி அமைத்தார், பிறகுதான் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் நபிமொழி அவருக்கு கிடைக்கிறது அதற்காக அவர் வேதனை பட்டார்.

பிறகு கலீபா இப்னு மன்சூர் அல்மஹதி
மீண்டும் இப்னு சுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் திட்டப்படி காபாவை மாற்றி அமைக்க முயற்சித்தார் அன்று இருந்த மாமேதை இமாம் மாலிக் பின் அனஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பை கேட்டார் இமாம் அவர்கள் ஆட்சியாளர்கள் விளையாடும் பொருளாக கஃபா மாறிவிட்டது என்று தனது மறுப்பை தெரிவித்து விட்டார்கள்.

அன்று முதல் கஃபா பாதுகாக்கப்பட்டு எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இன்றும் இருந்து வருகிறது.

இமாம் இப்னு கஸீர் தங்களது புத்தகத்தில்
ஹிஜ்ரி 317ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு வருத்தமான சம்பவத்தையும் குறிப்பிடுகிறார்கள், ஹஜ் உடைய காலத்தில் "கராமத்தா", என்று சொல்லக்கூடிய பாரசீக நெருப்பு வணங்கிகளாக இருந்தவர்கள் , யூதர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது ஜஃபஃர் அஸ்ஸாதிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பரம்பரையில் இருந்து வந்த நபி அவர்கள் குடும்பத்தார் என்று பொய் உரைத்து மக்களை நம்ப வைத்து தனி நாடேயே  உருவாக்கி ,ஹரமில் நுழைந்து ஹாஜிகள் அனைவரையும் கொன்று காபத்துல்லாவை சேதப்படுத்தி ஹஜருல் அஸ்வதை தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்று விட்டனர் , சுமார் 22 வருடங்களுக்கு பிறகு ஹஜருல் அஸ்வதை பாத்திமா கலிஃபா மஹதி மீட்டார் , ஹஜ் கிருகைகள் பல வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.

ஆக வரலாற்றில் பித்அத் வாதிகளான  ஷிஆ ராஃபிழியாக்கள் செய்த அநீதங்களும் அழிச்சாட்டியங்களும் எண்ணிலடங்காதவைகள்.

இறை இல்லத்தை மதிக்காத அதை வெறும் கட்டிடமாக பார்த்த "கராமத்தா ", வழிகேட்டினர் அதை இழிவு படுத்த முயற்சித்து தாங்கள் இழிவானவர்களாக ஆகினார்கள் என்பது வரலாறு.

இங்கு ஒரு முக்கிய ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் இந்த கராமத்தியாக்கள்  நபி அவர்களின் குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் என்று பொய்யுரைத்து மக்களை நம்பி நாடையும் உருவாக்கி அவர்களுக்கு தினந்தோறும் 50 தொழுகைகள் தொழுக வேண்டும் என்று அன்றைய அரசன் கராமத்தா பின் அஷ்அத்  கட்டளையிட்டானாம்.

மக்கள் அனைவரும் வழிபாடுகளிலும் வணக்கங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது மக்காவில் கொள்ளையையும் கொலையையும் செய்து ஹஜருல் அஸ்வதை எவ்வாறு திருடி எடுத்து வருவது என்ற திட்டத்தை தீட்டினானாம்.

நபிவழிக்கு மாற்றமாக இபாதத்துகளின் பெயர்களில் பித்அத்தை  மார்க்கமாக ஆக்க நினைப்பவர்கள் எந்த அளவுக்கு இந்த சமூத்திற்கு அபாயமானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தவ்ஹீதை அதன் தூய வடிவில் நிலைநாட்டி அன்று மக்கமா & மதினமா  நகரில் சூழ்ந்திருந்த சமாதி வழிபாடுகளை ஷிர்க்கான, பித்அதுகளான விடயங்களை தகர்த்தெறிந்து நபி அவர்கள் காலத்திலும் சஹாபாக்களின் காலத்திலும் எவ்வாறு இந்த புனித ஸ்தலங்கள் பாதுகாப்பாக முறையாக இருந்ததோ அவ்வாறே பாதுகாத்த இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அந்நஜ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வழிகாட்டுதலால் ஸவூத் குடும்பத்தினர் இன்றுவரை கஃபாவை சிறப்பாக கண்ணியப்படுத்தி வருகிறார்கள்.

இப்பொழுது மஸ்ஜித் நபவியில் நமது ஹபீப் இறைத்தூதர் ﷺ அவர்களின் மண்ணரைக்கு மேல் காணும் பச்சை குவிமாடம் எவ்வாறு இந்த நிறத்தை பெற்றது என்பதை பற்றி பார்ப்போமா ?

https://islamqa.info/amp/ar/answers/45643

தொடர்ந்து இறை இல்லமான கஃபத்துல்லாவின் மீது ஒவ்வொரு காலகட்டத்திலும் தாக்குதல்களும் மோதல்களும் தொடர்ந்தன என்பதை வரலாற்று புத்தகங்களின் ஊடாக நாம் கடந்த தொடரில் பார்த்தோம்.

மதினமா நகரில் மஸ்ஜித்  நபவியில் கட்டப்பட்டிருக்கும் பச்சை குவிமாடத்திற்கும் மக்கமா நகரில் உள்ள கஃபத்துல்லாஹ்வின் மீது தொடுக்கப்படும் மோதல்களுக்கும் பாரிய தொடர்பு இருக்கிறது.

தொடர்ந்து வாசியுங்கள் ,அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக

கடந்த 30/03/2021ம் செவ்வாய்க்கிழமை அன்று மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் பயங்கர ஆயுதத்துடன் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களை சப்தமாக முழங்கிக் கொண்டு அங்கு வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்களை அச்சுறுத்திய ஒருவர் இறுதியாக ஹரம் ஷரீஃப் பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டார் ,

இந்த செய்தி ஸஃஊதி அரசாங்கத்தால் அதிகாரபூர்வமான தகவல் தான் என்று கீழ்காணும் டிவிட்டர் சுட்டியை வைத்து தெரிந்து கொள்ள முடிகிறது,

https://twitter.com/security_gov/status/1378428426332336133?s=19

இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருவதை நாம் செய்தித்தாள்களிலும் டிவியிலும் கண்டு வருகிறோம்,

உடனே  வஹாபிகளின் கோட்டையான சவுதி அரேபியா ஆல ஸஃஊது அரசாங்க குடும்பத்தினர் புரியும் அட்டூழியங்களும் அநீதங்களும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கின்றது அதனால் அவர்கள் இறை அதிருப்தியை பெற்றுவிட்டனர் என்றெல்லாம் கூறி பொய்யான நபிமொழிகளையும் சொல்லி மக்களிடையே தவறான கருத்துக்களை சிலர் பரப்பும் முயற்சியை அப்பொழுது நாம் வலைதளங்களில் கண்டோம் ,

இதேபோன்று வரலாற்றிலே யாரும் மறக்க முடியாத ஒரு சம்பவம் மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் 1979ம் ஆண்டில் நடைபெற்றது,

ஸஊதி பிரஜை ஜுஹைமான் அல்உதைபி என்பவன் பயங்கரமான ஆயுதங்களுடன் ஹரம் ஷரீபில் நுழைந்து முற்றுகையிட்டது தான்.

ஜுஹைமான் அல்உதைபியை
பற்றி அறிவதற்கு முன், இவரை பற்றி - உலக அறிஞர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்கவும் .

The Meccan Rebellion 
By Thomas hegghammer  & 
Stephane Lacroix

https://youtu.be/Qysx_ku3plk

The Meccan Rebellion: The Story of Juhayman al-‘Utaybi Revisited (written by Thomas Hegghammer & Stephen Lacroix

Published by Amal Press

Few people are familiar with the event of the hijacking of the Kaaba in November 1979, but you may have heard the odd conversation that a group of Muslims hijacked the Kaaba, sealed the doors and held Muslims hostage for a period of time. This event, which sounds conspiratorial, has been shrouded in mystery and cover-ups, and when it did occur, there was a media blackout. In the book, “The Meccan Rebellion: The Story of Juhayman al-‘Utaybi Revisited” Thomas Hegghammer & Stephen Lacroix, investigate through interviews how this event came to pass.

https://muslimology.wordpress.com/2011/11/19/book-review-the-meccan-rebellion/

Amal press என்ற பதிப்பகம் "தி மெக்கன் ரெபில்லியன் "
மக்கத்து போராளி -என்ற புத்தகத்தை, மேற்கத்திய ஆய்வாளர்கள் Thomas Hegghammer & Stephen Lacroix எழுதியதை வெளியிட்டிருக்கிறது .

அதில் கிடைத்த சில தகவல்கள் :-

ஜுஹைமான் அல் உதைபி என்ற ஸவூதி பிரஜை, 18 வருடங்கள் சவூதி தேசிய பாதுகாப்பு படையில் பணி செய்தவர் .

இவர் மக்காவிலும் , மதீனாவிலும் இஸ்லாமிய ஷரீஆ கல்வியை முறையாக படித்தவர்.

தன் சகோதரியின் கணவர் முகம்மது பின் அப்துல்லாஹ் அல்கஹ்தானி உடன் சேர்ந்து, இரகசிய உடன்படிக்கை செய்கிறார்.

நடப்பில் இருக்கும் அரசாங்கம், 
குரைஷி வம்சத்தினர் இல்லை. எனவே, இந்த அரசு, அல்லாஹ்வின் ஷரீஅத்திற்கு மாற்றமானது. இவர்கள் காஃபிர்கள். நாம் இந்த அரபு உலகை அநீதியிலிருந்து விடுதலை பெறச்செய்து, நாம் ஆட்சி செய்வோம் என்று கூறி, தன் மைத்துனர் முகம்மது பின் அப்துல்லாஹ் அல்கஹ்தானி தான் எதிர் பார்க்கப்பட்ட "மஹதீ" என்றார்.

"இனி அவரைத்தான் அமீராக பையத்து செய்தாக வேண்டும்" என்று இரகசியமாக, பல ஆயிரக்கணக்கில் மக்களை அரசிற்கு எதிராக கிளர்ச்சி செய்ய தூண்டினார்.

எனவே, 1400 வது ஹிஜ்ரி
 1979 /11/20 ல் புனித காபாவை முற்றுகை இட்டு,  அங்கிருந்த பலரை பணயக்கைதியாக ஆக்கி, தவாப் இன்னும் தொழுகையையும் நடத்த விடாமல் தடுத்தனர். அரசாங்கம், பல நாட்கள் அமைதியாக பேச்சு வார்த்தை நடத்தியும் பயனில்லை. இறுதியாக, உள்ளிருந்த மக்களை மீட்பதற்காக, கமாண்டோ தாக்குதல் நடத்தி, பொய்யன் முகம்மது பின் அப்துல்லா அல் கஹ்தானி -(மஹதியை)
(?) கொலை செய்தனர். இதனால், இவர் எதிர்பார்க்கப்பட்ட மஹ்தி இல்லை என்ற உண்மை நிலையை அறிந்த ஜுஹைமான் அல்உதைபியும் அவரின் 61 சகாக்களும், சரண்டைந்து, பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.

ஆனால் இந்த பயங்கரவாத சதியை ஆதரித்து தவறாக எழுதி ஸஊதி அரசாங்கத்தை மக்கள் மன்றத்தில்
குற்றவாளியாக மாற்றுகின்றார்
, "மக்கா படுகொலை" என்ற புத்தகத்தின் ஆசிரியர் அறிஞர் ஷபர் பங்கஷ்,"ஷியாக்களை போன்று " நடந்தேறிய உண்மைகளை மறைத்திருக்கிறார் !!!

அறிஞர் ஷபர் பங்கஷ், பிரபல்யமான டொரன்டோவின் இஸ்லாமிய அறிஞரும், இன்னும் ஒரு பத்திரிகையாளரும் கூட. ஈரானிற்கு, தனது ஆதரவை தந்து வருபவர் என்பது, யாருக்கும் தெரியாத ஒன்று அல்ல. 

https://youtu.be/UOUUjlL51F4
ஈரானிய தொலைக்காட்சி press tv க்கு இவர் கொடுத்த பேட்டியை பாருங்கள்

அவர் "ஜுஹைமான் அல்உதைபியை - சவூதி அரசாங்கத்தின் தவறை சுட்டிகாட்டியவர்கள். அதனால் அவர்களின் மூதாதையர்கள் கொல்லப்பட்டனர். அவரும், அவர் கூட்டாளிகளும், ஹரமில் தஞ்சம் புகுந்தனர். இருந்தும், சவூதி அரசாங்கம் ஈவு இரக்கமின்றி அவர்களை கொலையும் ,சிறைவாசமும் அளித்தது" என்றெல்லாம் வரலாற்று இருட்டடிப்பு செய்து, மேலும் படிப்பவர்களுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தி, - "ஹரம் ஷரீஃபின் கண்ணியத்தை போக்கினார்" -   என்றெல்லாம் கூறியது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே ....!!!

இவரைப் பற்றி, மேலும் அறிய,  
******************
"Support for the Iranian Government "
*******************
Bangash is a staunch supporter of the 1979 Islamic revolution in Iran and has called for Islamic revolutions in other countries, stating that "Muslims must strive to overthrow the oppressive systems in their societies through Islamic revolutions, and not by participating in fraudulent elections organized by the elites operating through various political parties that actually divide the people. Tarek Fatah describes him as the "unofficial spokesperson" for the Iranian regime in Canada. However, Bangash has denied being an advocate of creating an Islamic theocracy telling the Toronto Star "I am suggesting not necessarily an Iranian-style theocracy but I am advocating that people in the Muslim world should get rid of their corrupt regimes in the same way as the people of Iran got rid of the corrupt regime of the shah, of course."
https://en.m.wikipedia.org/wiki/Zafar_Bangash

 மேலும் இவர் தனது புத்தகத்தில் 1987 ல் நடந்த படுகொலை சம்பவம் என்று பல வரலாற்று 
பின்னணியில் பொய்களை எழுதி இருக்கிறார், ஆனால், நடந்தது என்ன என்று தாங்களே கீழ்க் கண்ட தகவலை படித்துப் பாருங்களேன் .

"Los Angels times " என்ற பத்திரிகையில் வந்த தகவல் -  02/08/1987 அன்று 
CHARLES P. WALLACE | Times Staff Writer
என்ற பத்திரிகையாளர் எழுதி இருக்கிறார். 
அது என்ன ? 

"பல நூற்றுக்கணக்கான ஈரானியர்கள், இன்னும் பல மற்ற நாட்டவர்களும், அதிலும் பல சவூதி பிரஜைகளும் இந்த ஈரானிய ஹாஜிக்களின் கால்களுக்கு கீழ் உயிரிழந்தனர். ஆனால், ஒரு தோட்டா கூட சவூதி பாதுகாவலர்கள் இவர்கள் மீது பயன்படுத்தவில்லை".

The Riyadh government, as quoted on Saudi television, disputed the Iranians' version. The broadcast quoted Information Minister Ali Hassan Shaer as saying that "not a single bullet was fired" by police at the demonstrators. Rather, he said, "hundreds of Iranians and pilgrims of other nationalities, as well as Saudi citizens, died under the feet of the Iranian pilgrims."

Saudi television also showed a 15-minute film of the violence in which Iranians were seen throwing stones at Saudi security men equipped with riot shields separating the Iranians from other pilgrims, Reuters news service reported from Bahrain.

The Iranians then charged, and the cordon of security men broke, running into crowds of other pilgrims.
http://articles.latimes.com/1987-08-02/news/mn-971_1_saudi-arabia

மேலும், 1987 ல் ஹஜ்ஜில் ஸஃஊதி அரசாங்கத்தால் திட்டமிட்டு ஈரானியர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று  நடந்த இந்த விபத்தை படுகொலையாக சித்தரித்தவர்களின் உண்மைகளை தெரிய விரும்புவோர், கீழ்க்கண்ட தகவல்களையும் படியுங்கள். உண்மை நிலையை அறியுங்கள் .

1-Khamene’i’s message, Radio Tehran, 28 June 1990, quoted in FBIS, 2 July 1990.

" Khomeini’s message, Radio Tehran, 20 July 1988, quoted in FBIS, 21 July 1988. Abu Sufyan was a member of the Prophet Muhammad’s tribe who had originally opposed Muhammad. His son, Yazid, was responsible for the killing of the Imam Husayn. Another son, Mu’awiya, founded the Umayyad dynasty. The family and the dynasty are deemed usurpers in the Shi‘ite reading of early Islamic history."

2-On the bombing incident, see Reinhard Schulze, “The Forgotten Honor of Islam,” MECS 13 (1989): 182-84.

3-Al-Alam (London), 16 May 1992.

4-Sa‘ud al-Faysal quoted by Radio Tehran, 30 September 1990, quoted by FBIS, 1 October 1990.

5-Nateq-Nuri’s interview, Middle East Insight, July-August 1993.
இன்னும் பல.........

சமாதி வழிபாட்டை ஒழித்து பிதுஅத்துகளையும் அனாச்சாரங்களையும் அடியோடு துடைத்து எறிந்த இந்த ஸஃஊதி அரேபியா மீது இந்த ஷியா சிந்தனையாளர்கள் கக்கும் இந்த அபாயகரமான விஷங்களை முறியடிப்பதற்காக தான் இந்த செய்திகள் உங்களுக்கு தரப்படுகின்றன,

இந்தப் புத்தகத்தை, படித்த பிறகு, தயவு கூர்ந்து, இவரைப் பற்றிய தெளிவான பின்னணியையும், எதற்காக, இந்த புத்தகத்தை எழுதினார் என்பதனையும் படிக்க தவறாதீர்கள்.

இல்லையேல், ஷியாக்களின் நோக்கமாகிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் மக்களை இழிவு படுத்தவேண்டும் என்ற அந்த அபாய வலையில் - நீங்களும் விழுந்து பலியாகி விடுவீர்கள்.

அதிலும், ஸவூதி அரேபிய அரசாங்கம் இன்னும் அவர்களுக்கு இவர்கள் (ஷியாக்கள் ) வைத்த "வஹ்ஹாபிகள் " என்ற  பட்டத்தை, நாம் அறியாமலேயே, நம்மீது சுமத்தி - இந்த உம்மத்தின் பிரிவினைக்கு ஆளாகி விடுவோம்.

இப்பொழுது புரிந்திருப்பீர்கள் வரலாற்று ஓட்டத்தில் எத்தனை தாக்குதல்கள் எத்தனை அத்துமீறல்கள் தொடுத்து புனித ஸ்தலங்களுக்கு எதிராக நிகழ்ந்திருக்கின்றன அதனால் உம்மத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அழிவுகளும் ஏராளம்.

இப்பொழுது வாருங்கள் மதீனமா நகரத்திற்கு செல்வோம்......

புனித ஹரம் ஷரீபின் மீது தொடர்ந்து நிகழ்ந்த தாக்குதல்களும் வரலாற்று பின்னணிகளிலும் கூறியிருந்தேன் இப்பொழுது நேரடியாக தலைப்பிற்கு வருவது உகந்தது என்று கருதுகிறேன்.

இறைத்தூதர் ﷺ அவர்களின் மண்ணறைக்கு மேல் இருக்கும் பச்சை குவிமாடத்தை சற்று வரலாற்று பின்னணியில் பார்த்தால் ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டு வரை எந்த குவிமாடமும் நபியவர்களின் மண்ணரைக்கு மேல் இல்லை,

எகிப்திய மம்லூக்கிய சாம்ராஜ்ய ஸுல்தான் அல்மன்ஸூர் ஸெய்புஃத்தீன் அல்கலாவூன் என்பவர் தான் முதலில் குவிமாடத்தை கட்டினார், ஆரம்பத்தில் மரக்கட்டையின் நிறத்திலும், பிறகு வெள்ளை நிறத்திலும், ஊதா நிறத்திலும் இருந்து இறுதியாக இன்று வரை பச்சை நிறத்தில் இருக்கிறது.

இந்த வரலாற்று நிகழ்வை ஆதாரத்துடன் 
உஸ்தாத் அலி ஹாஃபில் தனது புத்தகமான " புஃஸூலு மின் தாரீகி அல்மதீனா அல்முனவ்வரா" 
 "فصول من تاريخ المدينة المنورة " 
علي حافظ ( ص 127، 128 ) .

பக்கம் 127 ,128 ல் இவ்வாறு குறிப்பிடுகிறார்.....

நபிமொழிகளின் பரிசுத்தமான ஹுஜ்ரா அறையில் எந்த குப்பாவும் (குவிமாடம்) இல்லை , செங்கலால் ஆன (மூன்று அடி உயரத்திற்கு ) முகடுகளாக போடப்பட்டிருந்தன ,அது நபி அவர்களின் ஹுஜராவை மற்ற கட்டிடங்களிருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காக அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது.

ஸுல்தான்  அல்கலாவூன் என்பவர் தான் முதன் முதலில்  ஹுஜ்ரா ஷரீபாஃவின் மீது குவிமாடத்தை கட்டினார் ,

ஹிஜ்ரி 678 ல் சதுர வடிவில் மரக் கட்டைகளால் குவிமாடத்தை கட்டினார்,
அதில் பல உயர்ந்த மர வேலைப்பாடுகளால் கட்டினார்,
அதற்குப் பின் ஸுல்தான் நஸ்ர் ஹசன் அல்கலாவூன் என்பவர் அதை புதுப்பித்தார்.

பிறகு மரக்கட்டைகளால் ஆன அந்த குவி மாடம் பழுதடைந்து போனதால் மீண்டும் அதை ஸுல்தான் அஷ்ரஃப் ஷஃபான் என்பவர் காலத்தில் ஹிஜ்ரி 765 ல் புதுப்பிக்கப்பட்டது ,ஹிஜ்ரி 881 ல் மீண்டும் ஸுல்தான் காய்தபாய் காலத்தில் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

ஹிஜ்ரி 886 ல்  மஸ்ஜித் நபவியில் நபி அவர்களின் அறையில் நடந்த தீ விபத்தில்
குவிமாடம் தீக்கிரையானதையொட்டி ஹிஜ்ரி 887 ல் ஸுல்தான் காய்தபாய் மஸ்ஜித் நபவியின் நிலத்திலிருந்து உயரமாகச் செல்லக்கூடிய மிகப்பெரிய தூண்களால் அமைத்து செங்கலால் சற்று உயரமாக குவிமாடத்தை கட்டினார்.

ஹிஜ்ரி 892 ல் இந்தக் குவி மாடத்தின் மீது ஆங்காங்கே கீரல்களும் பிளவுகளும் ஏற்பட்டதால் சுல்தான் உறுதியான கான்கிரீட் கட்டிடங்களால் வெள்ளை நிறத்தில் குவிமாடத்தை அமைத்தார்.

ஹிஜ்ரி 1253 ல் நாம் வாழும் இந்த காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 191 வருடங்களுக்கு முன் உஸ்மானிய பேரரசின் கலீஃபாவாக கருதப்பட்ட ஸுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் பச்சை நிறத்தில் குவிமடத்தை அமைக்கிறார் அதுதான் இன்று வரை நமக்கு பச்சை நிறமாக காட்சியளிக்கிறது.

இவ்வாறு குவி மாடம் கட்டுவதையும் அதற்கு வண்ணம் பூசுவதையும்  , மார்க்கத்தில் வன்மையாக கண்டிக்கப்பட்ட ஷிர்கான செயல்பாடுகள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதனால் அன்று பல மார்க்க அறிஞர்கள் கண்டித்தார்கள்.

எமன் நாட்டில் ஹிஜ்ரி 11ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது பின் அஸ்ஸன்ஆனி
ரஹிமஹுல்லாஹ் தனது புத்தகமான
தத்ஹீருல் இஃதிகாதில் -تطهير الإعتقاد

நபியவர்களின் மண்ணரையின் மீது குவிமாடம் எழுப்பி இருப்பது உண்மை நிலையை அறியாத அறியாமையே, 

நபியவர்களோ தனது தோழர்களோ அவர்களின் மாணவர்களோ சத்தியமான இமாம்களோ இதை அமைக்கவில்லை, ஏழாம் நூற்றாண்டில் எகிப்திய அரசர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இருக்கிறது இது முழுக்க முழுக்க அரசு ரீதியான நடவடிக்கையே தவிர மார்க்க ரீதியான எந்த பங்கும் இதற்க்கு இல்லை.

சவுதியில் உள்ள ஃபத்வா கமிட்டியில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலாக கீழ் வரும் விடயம் இருக்கிறது....

கேள்வி -நபியவர்களின் மண்ணறைக்கு மேல் இருக்கும் பச்சை நிற குவிமாடத்தை வைத்து பலர் இறை நேசர்கள் போன்றோரின் மண்ணறைகளில் குப்பாக்கல் எழுப்புகிறார்கள் இது கூடுமா ?

பதில் - மண்ணறைகள் மீது கட்டிடங்கள் எழுப்புவது குப்பாக்கல் கட்டுவது ஹராம் செய்பவர் பாவத்திற்குரியவர் ஆவார்.

காரணம் அபுல் ஹியாஜ் அல்அஸதி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஊடாக அங்கீகாரமான ஒரு அறிவிப்பு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுக்கு கட்டளையிட்டார்களாம் 
நபியவர்கள் எனக்கு ஏவிய ஒன்றை உமக்கு ஏவட்டுமா? சிலைகளை உடைத்தெறியுமாறும் , உயரமாக கட்டப்பட்டிருக்கும் மண்ணரைகளை சமப்படுத்துமாறும் எனக்கு கட்டளையிட்டார்கள்.

قالَ لي عَلِيُّ بنُ أَبِي طَالِبٍ: أَلَا أَبْعَثُكَ علَى ما بَعَثَنِي عليه رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ؟ أَنْ لا تَدَعَ تِمْثَالًا إلَّا طَمَسْتَهُ، وَلَا قَبْرًا مُشْرِفًا إلَّا سَوَّيْتَهُ. [وفي رواية]: وَقالَ: وَلَا صُورَةً إلَّا طَمَسْتَهَا.
الراوي : علي بن أبي طالب | المحدث : مسلم | المصدر : صحيح مسلم
الصفحة أو الرقم: 969 | خلاصة حكم المحدث : [صحيح]

முஸ்லிம் கிரந்தத்தில் வரும் அங்கீகாரமான நபிமொழி மண்ணறைகள் பூசப்படுவதும் .... அதன் மீது கட்டிடம் எழுப்பப்படுவதும் நபியவர்களால் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

نَهَى رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ القَبْرُ، وَأَنْ يُقْعَدَ عليه، وَأَنْ يُبْنَى عليه.
الراوي : جابر بن عبدالله | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 970 | خلاصة حكم المحدث : [صحيح]

ஆக நபி அவர்கள் சொன்ன பின்பு அவர்களின் வார்த்தைக்கு மாறுதலாக ஒரு சிலரின் செயலை ஆதாரமாக எடுத்து மண்ணரைக்கு மேல் குப்பாக்கல் கட்டுவதும் கட்டிடங்கள் எழுப்பவும் மார்க்கத்தில் அனுமதி கிடையாது.

நபி அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டும் இதற்கு எச்சரிக்கையும் திருக்குர்ஆனில் வந்திருக்கிறது.

وَمَآ ءَاتَكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْ وَٱتَّقُواْ ٱللَّهَ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
 நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும்   உங்களை தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன்.
(அல்குர்ஆன் : 59:7)

ஆக இது போன்ற பல வசனங்களும் நபி மொழிகளும் நமக்கு உணர்த்துவது மண்ணறை மீது கட்டிடம் எழுப்புவதும் குப்பாக்கள் கட்டுவதும் ஷிர்க்கான காரியங்களின் பக்கம் நம்மை கொண்டு சேர்க்கும், எனவே ஷிர்கை ஏற்படுத்தும் வழிமுறைகளை அடைத்தல் / தடுத்தல் என்ற சட்டப்படி கூடாது.

(பஃத்வா - மார்க்கத் தீர்ப்பு முற்றுப்பெற்று விட்டது)

*அஷ்ஷைக் அப்துல் அஜீஸ் பின் பாஸ்
*அஷ்ஷைக் அப்துர் ரஸ்ஸாக் அல்அபஈஃபஇ
* அஷ்ஷைக் அப்துல்லாஹ் பின் கழுத்து.

(உலமாக்களின் கையொப்பங்கள்)

பஃதாவா லஜ்னா அத்தாயிமா - 2/264,265

فتاوى اللجنة الدائمة " ( 2 / 264 ، 265 ) .

கூடுதலாக இந்த மார்க்கத் தீர்பில் இடம்பெற்றிருக்கும் சில விடயங்கள் உங்களின் பார்வைக்கு ....

நபி அவர்களின் மண்ணரைக்கு மேல் இருக்கும் இந்த குவிமாடத்தை காரணம் காட்டி இறை நேசர்களின் கபருக்கு மேல் கட்டிடம் எழுப்புவதையும் உயர்த்துவதையும் ஆகுமாக்க முடியாது இறைத்தூதர் ﷺ அவர்களின் வசியத்தோ, நபித்தோழர்கள் அல்லது நபியவர்களால் சிறப்பிக்கப்பட்ட மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த இமாம்களின் முயற்சியோ அல்ல, இதை பித்அத்வாதிகள் தான் கட்டினார்கள்.

இதை பின்வரும் நபிமொழி நமக்கு தெளிவு படுத்துகிறது.

நபி அவர்கள் கூறியதாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள் யார் நமது மார்க்கத்தில் இல்லாத நூதனமாக ஒரு விடயத்தை செய்வாரோ அது மறுக்கப்பட வேண்டியவை.

நூல் - முஸ்லிம்
எண்- 2697
தரம் - ஸஹீஹ் 

مَن أَحْدَثَ في أَمْرِنَا هذا ما ليسَ فِيهِ، فَهو رَدٌّ
الراوي : عائشة أم المؤمنين | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
الصفحة أو الرقم : 2697 | خلاصة حكم المحدث : [صحيح] |

الشيخ عبد العزيز بن باز ، الشيخ عبد الرزاق عفيفي ، الشيخ عبد الله بن غديان ، الشيخ عبد الله بن قعود .
" فتاوى اللجنة الدائمة " ( 2 / 264 ، 265 ) .

பஃதாவா கமிட்டி
பஃதாவா லஜ்னா அத்தாயிமா - 2/264,265

பிறகு ஏன் இந்த பச்சை குவிமாடம் அகற்றப்படவில்லை என்ற கேள்வி நம்மில் எழுவது இயல்பே இதற்குக் காரணம்.....

இந்த பச்சை குவிமாடத்தை அகற்றினால் மிகப்பெரிய குழப்பத்தை இது ஏற்படுத்தி விடும் என்ற அச்சமே , இதற்கு முன் நமது கட்டுரையின் தொடர்களில் காபத்துல்லாவின் புனர் நிர்மாணங்கள் இடிப்பதும் கட்டுவதுமாக இருந்தது பிறகு இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டு வருவது நபி அவர்களின் விருப்பம் மாற்றி அமைப்பதாக இருப்பினும் கஃபாவின் மீது உள்ள கண்ணியத்தின் காரணமாக விட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

பித்அத்வாதிகளை குழப்பம் செய்ய தூண்டும் அவர்களின் ஷேக்மார்களும் அவர்களின் உலமாக்களும் இரண்டு புனித ஹரம்களின் ஆட்சியாளர்கள் மீது இதையே காரணம் காட்டி பொதுமக்களால் குறை கூற வைப்பார்கள் இதனால் மிகப்பெரிய ஃபித்னா ஏற்பட்டு நாடும், நாட்டு மக்களும் சீர்கேடு அடைவார்கள் என்ற பயத்தினால் இன்று வரை பச்சை குவிமாடம் அகற்றப்படாமல் இருக்கிறது,

சவுதி உடைய சில அறிஞர்கள் கூறும் பொழுது மார்க்கத்தில் இவ்வாறு குவி மாடம் கட்டப்படுவது அனுமதி இல்லை இது உலமாக்களின் செயல்களும் அல்ல உலமாக்கள் உபதேசம் செய்யத்தான் முடியும் அதை ஆட்சியாளர்கள் தான் அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பொதுவாக அந்த காலங்களில் நபி அவர்களின் கண்ணியமிகு வீடுகள்  மஸ்ஜித் நபவியின் சுற்றுப்புறத்தில் இருந்தது குறிப்பாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் இறைத்தூதர் ﷺ அவர்கள் வஃபாதானதால் நபிமார்களின் மண்ணறைகள் அதே இடத்தில் அமைக்கப்படும் என்பதால் பொது மண்ணரையில் நபியவர்களை அடக்காமல் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் தஃபன் செய்யப்பட்டார்கள்.

பின்னர் மஸ்ஜித் நபவியின் விஸ்தீரத்தினால் நபி அவர்களின் சங்கைமிகு ஹுஜ்ரா மஸ்ஜிதுன் நபவியின் வளாகத்திற்குள் வந்துவிட்டது.

அல்லாஹு அஃலம்.


Previous Post Next Post