கல்வியின் சிறப்பு சம்பந்தமாக இடம்பெற்றுள்ள நபிமொழிகள் உலகக் கல்வியையும் உள்ளடக்குமா?

கேள்வி : கல்வியின் சிறப்பு தொடர்பில் இடம்பெற்றுள்ள திருமறை வசனங்கள், நபிமொழிகள் மார்க்கக் கல்வியையே குறிக்கின்றன என்ற மார்க்க அறிஞர்களின் கருத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என நான் கருதுகிறேன். ஏனெனில் ஒரு மனிதன் மார்க்கத்தைப் பற்றியோ, உலகத்தைப் பற்றியோ  அதிகமாக கற்றுக் கொள்ளும் போதெல்லாம் படைப்பாளனைப் பற்றிய அவனது அறிவு மற்றும் நம்பிக்கை மேலும் அதிகரிக்கின்றது. உதாரணமாக மருத்துவக் கல்வி மனிதனுக்கு படைப்பாளனின் வல்லமை மீது மேலும் நம்பிக்கையூட்டுகின்றது. அது மனிதனது உடலுடன் தொடர்புடைய துள்ளிய விவரங்கள் குறித்து கவனம் செலுத்தும் ஒரு கல்வியறிவாகும். இது ஒரு முஸ்லிமின் ஈமானை அதிகப்படுத்துகின்றது. மார்க்கக் கல்வி தான் சிறந்தது என நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இறைவனின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவது அது மாத்திரமல்ல. நான் எனது தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றி பேசுகின்றேன். ஏனெனில் நான் மருத்துவத்தைக் கற்றதற்கான காரணம், மேலும் அதனூடாக மனிதனைப் படைக்கின்ற விடயத்தில் அல்லாஹ்வின் வல்லைமை பற்றி நான் அறிந்ததனால் மருத்துவக் கல்வியில் நான் படித்தவற்றையும், மார்க்கக் கல்வியாக நான் படித்தவற்றையும் ஒப்பிடுவதற்கு ஆரம்பித்துள்ளேன். எனவே இந்த விவாகரத்தை மேலும் ஆய்வு செய்வதை நான் எதிர்பார்க்கின்றேன்.

பதில் : 

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

குர்ஆனும், சுன்னாவும் புகழ்ந்துரைத்துள்ள, அதனைக் கற்றவர்களுக்கு உயர் அந்தஸ்த்தை வாக்களித்துள்ள, நபித்துவத்தின் அனந்தரம் எனும் சிறப்புப் பெற்ற கல்வியறிவு மார்க்க  அறிவாகும் என்பதே அடிப்படையாகும். 

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யாராவது அறிவைத் தேடி ஒரு பாதையில் நுழைகின்றாரோ அல்லாஹ் அவரை சுவனத்திற்கான ஒரு பாதையில் நுழைவிக்கின்றான். மேலும் நிச்சியமாக வானவர்கள் அறிவைத் தேடுபவனின் பொருத்தத்திற்காக தங்களது இறக்கைகளை விரித்து வைக்கின்றனர். மேலும் நிச்சியமாக ஒரு அறிஞருக்காக வானங்கள், பூமியிலுள்ள யாவும் பாவமன்னிப்புக் கோருகின்றன. ஏனைய நட்சத்திரங்களை விடவும் சந்திரன் சிறப்புற்று விளங்குவது  போன்று  அறிஞன் வணக்கசாலியை விட சிறந்தவனாவான். நிச்சயமாக அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகளாவர். நிச்சியமாக இறைத்தூதர்கள் திர்ஹமையோ, தீனாரையே அனந்தரமாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் அனந்தரமாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவைத் தான். யார் அதனை எடுத்துக் கொள்கின்றாரோ அவர் நிரப்பமான பங்கை எடுத்துக் கொண்டு விட்டார்." (ஆதாரம் : திர்மிதீ -2682, அபூ தாவூத் - 3641, இப்னு மாஜா - 223 ஃ  இந்நபிமொழி ஆதாரபூர்வமானது என அறிஞர் அல்பானி ரஹ் அவர்கள் தனது 'ஸஹீஹ{த் திர்மிதீ” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.) 

நபிகளாரது இந்தக் கூற்றின் மூலம் நாடப்படுவது மார்க்க அறிவாகும். அதனையே இறைத்தூதர்கள் அனந்தரமாக விட்டுச் சென்றனர். அவர்கள் மருத்துவம், பொறியியல், விவசாயவியல் போன்றவற்றை அனந்தரமாக விட்டுச் செல்லவில்லை. 

அறிஞர் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகையில் “அறிவு எனும் வார்த்தை பலதரப்பட்ட விடயங்களுக்கு உபயோகிக்கப்படும். ஆயினும் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் அறிவு என்பதன் மூலம் நாடப்படுவது மார்க்க அறிவாகும். பொதுப்படையாக அதுவே அல்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் அறிவு என்பதன் மூலம் நாடப்படுகின்றது." (பார்க்க : மஜ்மூஉ பதாவா இப்னு பாஸ் - 2ஃ302)

இவ்வாறு கூறுவதனால் மருத்துவம் போன்ற பயனுள்ள கல்வியறிவுகள் மனிதனது ஈமானை அதிகரிக்கமாட்டாது என்றோ, குறித்த மனிதனது எண்ணம் சீராக இருந்தால் அவனுக்கு நன்மை கிடைக்கமாட்டாது என்றோ அர்த்தம் அல்ல. மாற்றமாக மருத்துவம் போன்ற சில கல்வியறிவுகள் 'பர்ளுல் கிபாயா” எனும் பகுதிக்குள் உள்ளடங்குகின்றன. யார் மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதனைக் கற்கின்றாரோ அதற்காக அவருக்கு கூலி வழங்கப்படும். 

'பதாவல் லஜ்னதித் தாஇமா” எனும் தொகுப்பில் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. “மதம்சார் ஒவ்வொரு அறிவும், அதை அறிந்து கொள்ள உதவும் அதன் வழிமுறைகளுடன், அல்லாஹ் மறுமையில் அந்தஸ்தை உயர்த்தும் அம்சங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. யார் அதை அறிந்து உண்மையாக செயல்படுபவரோ அவருக்கு மறுமையில் உயர்ந்த அந்தஸ்த்துக்கள் உள்ளன, அதுவே முதலாவதும், பிரதானமானதுமான நோக்கமாகும்.

மேலும் உலகசார் அறிவுகளில் கூட சமுதாயத்திற்குத் தேவையான, சமுதாயத்தின் வாழ்வுக்கு அத்தியவசியமான மருத்துவம், விவசாயம், கைத்தொழில் போன்றன கூட அதனைக் கற்கும் போது எண்ணம் சரியாக இருந்தால், அதனைக் கற்பவரும், செயல்படுத்துபவரும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு நலன் புரிய வேண்டும்; அதனை எழுச்சிக்கு உள்ளாக்க வேண்டும்; அந்நிய நாடுகளிடத்தில் அதற்குத் தேவை இருக்கக் கூடாது என்று எண்ணுவாராக இருந்தால் துணை நோக்கம் என்ற அடிப்படையில் மார்க்கக் கல்வியைப் போன்று மறுமையில் அந்தஸ்துகளை உயர்த்துவதற்குக் காரணமான கல்வியறிவுகளில் உள்ளடங்கும். ஆனால் ஒவ்வொன்றினதும் மறுமை அந்தஸ்த்துக்கள் மார்க்கத்துடனான அதனுடைய தொடர்பு, அந்தஸ்த்து, சமுதாயத்துக்கு அதனூடாக கிடைக்கும் பலன் என்பன அடிப்படையில் ஏற்றத்தாழ்வு உடையதாகும். (பார்க்க : பதாவல் லஜ்னதித் தாஇமா - 12ஃ77) 

இரண்டாவது அல்லாஹ்வுடைய படைப்பினங்கள் பற்றிச் சிந்திப்பது இயல்பாகவே ஈமானை அதிகரிக்கும். மேற்கூறப்பட்ட உலக அறிவுகளில் மனிதன், பூமி, தாவரங்கள் மற்றும் உயிரனங்களது படைகோலம் தொடர்பிலான துள்ளிய தரவுகள் குறித்து அறிவதன் பொருட்டு சிந்தனை வட்டம் வலுப்பெறுகின்றது.

அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :
“உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன் (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?" (அத்தியாயம் : அத்தாரியாத் - வசனம் : 21)
“(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும், இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும், இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)" (அத்தியாயம் : அல்கா~pயாத் - வசனங்கள் : 17-20)
“நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?" (அத்தியாயம் : ஹாமீம் அஸ்ஸஜ்தா - வசனம் : 53)

ஆனால் நாம் நேர்மையாவும், யதார்த்தமாகவும் இருக்க வேண்டும்.  ஏனெனில் இந்த அறிவுகளைக் கற்று, தொழில் புரிவோரில் அதிகமானவர்கள் தங்களது தொழிலையும், அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள், தேவைகள் விடயத்தில் கவனம் செலுத்துகிறார்களே தவிர அறிவின் யதார்த்தத்தைப் பற்றியோ, அதனூடாக அறிய முடியுமான ஈமானிய அறிவுகள் பற்றியோ கவனிப்பதில்லை. எந்தளவுக்கெனில் இவர்களுக்கு சிந்தனை செய்வதற்குப் பொருத்தமான நேரத்தையோ, நிலைமைகளையோ பெற முடியாமல் இருக்கின்றது. 

மூன்றாவது மருத்துவம் என்பது சிறந்த கல்வியறிவுகளில் ஒன்றாகும். 
 
மார்க்கக் கல்விக்கு அடுத்தபடியாக மருத்துவம் சிறந்த, கண்ணியம் வாய்ந்த  அறிவுகளில் ஒன்றாகும். ஏனெனில் அது மனித உடம்புகளைப் பாதுகாப்பதற்கு துணை புரிகின்றது. 

ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறியதைத் தான் செவிமடுத்ததாக ரபீஃ இப்னு ஸ{லைமான்  (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : “அறிவு என்றால் இரண்டு வகை தான். அவை மார்க்க அறிவு மற்றும் உலக அறிவாகும். மார்க்க அறிவு என்பது 'பிக்ஹ்” எனும் மார்க்க விளக்க அறிவாகும். உலக அறிவு என்பது மருத்துவ அறிவாகும். இது அல்லாமல் கவிதை போன்ற ஏனைய அறிவுகள் யாவும் சுமையும், குறையுமுள்ளதாகும்." (இந்தச் செய்தியை அறிஞர் இப்னு ஹாதம் அர்ராஸி (ரஹ்) தனது “ஆதாப~; ஷாபிஈ வமனாகிபுஹ{”  எனும் புத்தகத்தின் 244வது பக்கத்தில் பதிவு செய்கின்றார்கள். 

மேலும் கீழ்வரும் கூற்றையும் பதிவு செய்துள்ளார்கள். “உனது மார்க்க விவகாரங்கள் குறித்து தீர்ப்பு வழங்கக் கூடிய அறிஞரும், உனது உடம்பின் ஆரோக்கியம் பற்றி அறியத்தரும் வைத்தியருமில்லாத ஓர் ஊரில் நீ வசித்து விடாதே." 

மேலும் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறியதாக தஹபி (ரஹ்) அவர்கள் தனது 'ஸியரு அஃலாமின் நுபலா” எனும் கிரந்தத்தில் பின்வருமாறு பதிவு செய்கின்றார்கள் : “ஹலால், ஹராமுக்கு அடுத்தபடியாக மருத்துவத்தை விடவும் உன்னதமான ஒரு அறிவு இருப்பதாக எனக்குத் தெரியாது. ஆனாலும் அதில் வேதம் கொடுக்கப்பட்ட யஹ_தி, நஸாராக்கள் நம்மை மிகைத்து விட்டனர்.  (பார்க்க : ஸியரு அஃலாமின் நுபலா - 10ஃ57)

ஹர்மலஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : “முஸ்லிம்கள் மருத்துவத்தை அறியாததனால் இழந்ததை எண்ணி ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கைசேதப்படுவார். அறிவில் மூன்றில் ஒன்றையே தொலைத்துவிட்டு அதனை வேதம் கொடுக்கப்பட்ட யஹ_தி,  நஸாராக்களுக்கு ஒப்படைத்து விட்டார்களே." என்று கூறுவார். 

வைத்தியரைப் பொருத்தவரையில் அவரது எண்ணம் சீராக இருக்குமானால் அதற்காக மகத்தான கூலியைப் பெற்றுக் கொள்வார். ஏனெனில் அவரது பணியில் பொறுமையுடன், நேரத்தை செலவழித்து  பிறருக்கு நலவு செய்தல், பிறரது துன்பங்களை நீக்குதல், மக்களுக்கு நன்மை பயத்தல் ஆகியன உள்ளடங்கியுள்ளன.  

அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வரும் கூறுகின்றான் : 
“அல்லாஹ்வோ நன்மை செய்வோரை நேசிக்கின்றான்." (அத்தியாயம் : ஆலு இம்ரான் - வசனம் : 134)
“நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?" (அத்தியாயம் : அர்ரஹ்மான் - வசனம் : 60)

மேலும் நபிகளார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : “யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான். யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்." (ஸஹீஹ் முஸ்லிம் - 2699)

மேலும் சொன்னார்கள் : “அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவர், அவர்களில் தனது குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளவரே." (அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் (ரஹ்) ‘தவாஇதுத் துஹ்த்’ எனும் கிரந்தத்தில் பதிவு செய்துள்ள இந்நபிமொழியை அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் ‘ஹஸன்’ என்று ‘ஸஹீஹ_ல் ஜாமிஃ’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். 

மேலும் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “மக்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவர் பிற மக்களுக்கு அதிகம் நன்மை பயப்பவரே. அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது நீர் ஒரு முஸ்லிமுடைய கஷ்டத்தை நீக்கி அல்லது அவனது கடனை அடைத்து, அல்லது  அவனது பசியை நீக்கி அவனது உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடிய சந்தோசம் ஆகும். நான் ஒரு சகோதரனுடன் அவனது தேவையை நிறைவேற்றுவதற்காக நடந்து செல்வது நான் இந்தப் பள்ளிவாயலில் -மஸ்ஜிதுந் நபவியில்- ஒரு மாதகாலம் இஃதிகாப் இருப்பதை விடவும் எனக்கு விருப்பமானதாகும். யாரொருவன் அவனது கோபத்தை அவன் விரும்பினால் வெளிக்காட்ட முடியுமாக இருந்தும் அடக்கிக் கொள்கிறானோ மறுமை நாளில் அல்லாஹ் அவனது உள்ளத்தை திருப்தியால் நிரப்புவான். யார் தனது சகோதரனுடன், அவனது தேவையை நிறைவேற்றி வைக்கும் வரை நடந்து செல்கிறானோ பாதங்கள் நிலை குலையும் நாளில் அவனது பாதங்களை அல்லாஹ் நிலைப்படுத்துவான்." (இப்னு அபித் துன்யா (ரஹ்) அவர்கள் ‘கழாஉல் ஹவாஇஜ்’ எனும் நூலில் பதிவுசெய்துள்ள இந்நபிமொழியை அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் தனது ‘ஸஹீ{ஹல் ஜாமிஃ’ எனும் நூலில் ‘ஹஸன்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். 

இதன்படி, ஒரு வைத்தியர் தனது தொழிலில்; முழுமையாக பிஸியாகி மருத்துவத்தின் துள்ளிய தரவுகள் மற்றும் உடல் பகுப்பாய்வு குறித்து சிந்திப்பதற்கு, அதன் மூலம் ஈமானியப் படிப்பினைகளை பெற்றுக் கொள்வதற்கு அவருக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை என்றிருந்தாலும் அவர் தனது தொழிலின் போது ஸாலிஹான எண்ணத்துடன், அல்லாஹ் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற சிந்தனையுடன், அதில் தனக்குக் கடமையானதை, அமானிதத்தை சரியான முறையில் நிறைவேற்றி, மக்களுக்கு  பணரீதியாகவோ, உடல் ரீதியாகவோ சிரமங்களை ஏற்படுத்தாமல் அவர்களுடன் மென்மையான முறையில் நடந்து  கொள்வாராயின் அவரைப் பொருத்தவரை அவர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு கௌரவமான தொழிலை செய்திருக்கின்றார். நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் : “இரக்கம் காட்டுபவர்களுக்கு ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) இரக்கம் காட்டுவான். பூமியில் இருப்பவற்றுக்கு நீங்கள் இரக்கம் காட்டுங்கள். வானில் இருப்பவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்." (ஆதாரம் : திர்மிதீ - 1924)

அல்லாஹ் மிக அறிந்தவன்.

இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம் 381092

மொழிபெயர்ப்பு: அஷ்ஷெய்க் ஸஃத் முஆத் (அப்பாஸீ)
Previous Post Next Post