வெள்ளி மேடைகள் சிறக்க, இதோ சில கருத்துக்கள்....!!!

குர்ஆன், சுன்னாவிலிருந்து ஆதாரங்களை முறையாகவும், தெளிவாகவும், முதலில் எடுங்கள். 

கிடைக்கும் அரை மணி நேரத்தை, அமானிதமாக கருதி, சமூகம் எழுச்சி பெறும் தலைப்புகளை, தெரிவு செய்யவும்.

பிறரின் ஆதாரமற்ற பயான்களில் இருந்தும், சமூக வலைத்தள செய்திகளிலிருந்தும்,  காப்பி பேஸ்ட் பண்ணி பிரசங்கங்கள் செய்யாதீர்கள்.

புத்தக வாசிப்பை, உங்களுடைய சுவாசங்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

அரபு மொழியில் மூலாதாரங்களை புரட்டவும்.

தூய்மையான தமிழில் உரையாற்றுகிறேன்' என்று அமர்ந்திருப்பவர்களை, களைப்படையச் செய்து விட வேண்டாம்.

உங்களின் பிரசங்கங்களில் உள்ள குறைகளை, யாரும் சுட்டிக்காட்டினால் அதை மதிக்கவும்.

சொற்பொழிவு நிகழ்த்தும்பொழுது, நீங்கள் குறிப்பிடும் இறை வசனங்கள், நபிமொழிகளை, ஒரு நினைவூட்டலாக -  அமர்ந்திருப்பவர்களிடத்தில் சற்று கேள்விகளாக கேட்கவும். அவர்கள் இடத்தில் இருந்து, பதில்களை எதிர்பார்க்க வேண்டாம். அது, அவர்களின் தூக்கத்தையும், கவனமற்ற சிந்தனையையும் தட்டி எழுப்பும்.

பயான்  செய்வதற்கு முன்பு, 'மக்களுக்கு பிரயோஜனம் அளிக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் இறைவனிடத்தில் பிரார்த்தனைகளை செய்து கொள்ளுங்கள். அதுவே, அவர்களை சிந்திக்கத் தூண்டுமளவிற்கு, உங்கள் உரைகள் அமைய உதவும்.

கட்டுக்கதைகள், ஆதாரமற்ற செய்திகளை, தயவு செய்து கூறாதீர்கள். மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அது, உங்களின் தரத்தை அவர்களிடத்தில் குறைத்துவிடும்.

தனிநபர்களையோ, இயக்கங்களையோ, தரம் தாழ்ந்து விமர்சிக்காதீர்கள். அது, உங்களுக்கே அழிவை தேடித் தரும் .

சமூகத்தைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை தவிர்க்கவும்.

அல்குர்ஆன் கூறும் இறைத்தூதர்களின் அழைப்புப் பணியில், முக்கியமான அம்சமான அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதை மறந்துவிடாதீர்கள் .

நிகழ்கால பிரச்சனைகளை முன்வைத்து விமர்சித்துவிட்டு மட்டும் போகாமல், இஸ்லாம் கூறும் தீர்வுகளையும் சேர்த்து கூறவும்.

தயவு கூர்ந்து, காது கிழிய சத்தம் போட்டு உரை நிகழ்த்தாதீர்கள்.

- உஸ்தாத் SM இஸ்மாயில் நத்வி
+919345245731
Previous Post Next Post