ஓரினச்சேர்க்கை

இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது, இதற்க்கு கடுமையான் தண்டனையும் உள்ளது. கிழ்கண்ட வசனத்தை சிந்தித்தால் விளங்கும்.
7:80   وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَالَمِينَ
7:81   إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاءِ ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ
7:82   وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَن قَالُوا أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ ۖ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ
7:83   فَأَنجَيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ
7:84   وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ

லூத்தையும் (தூதராக அனுப்பினோம்). "உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?'' என்று தமது சமுதாயத்திடம் கேட்டார்.
"நீங்கள் பெண்களை விட்டு விட்டு  இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' (என்றும் கூறினார்.)
"இவர்களை உங்கள் ஊரை விட்டும்  வெளியேற்றுங்கள்! இவர்கள் சுத்தமான மனிதர்களாக உள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.
எனவே அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும், அவரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருந்தாள்.அவர்களுக்கு பெருமழையைப் பொழிவித்தோம். குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு இருந்தது?' என்பதைக் கவனிப்பீராக!அல்குர்ஆன் 7:80-84
அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; 15:74
காலத்தில் அவர்களின் சமூகத்தார்களின் மீது அல்லாஹ் எவ்வாறு கோபம் கொண்டு அவ்வூரை தலை கீழாக புரட்டினான் என்பதை சுருக்கமாப் பார்ப்போம்

 லூத் (அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராக தேர்வு செய்யப்பட்டார்கள் அவர்களுடைய சமுதாயத்து மக்களிடம் தான் நபியாக தேர்வு செய்யப்பட்ட செய்தியை கூறினார்கள். அல்லாஹ் கூறுகிறான் : ''நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.''ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள். 26:160, 163

அந்த மக்களும் இதற்கு முந்தைய மக்கள் போன்றே அல்லாஹ்வுடைய வேதத்தை பொய்ப்பித்தனர், அவனுடைய தூதரை நபியாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர், . .லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர். : 54: 33

அத்துடன் அவர்களுக்கு முந்தைய எந்த சமுதாயத்தவர்களும் செய்திடாத செய்யத் துனியாத, மனித சமுதாயம் வெட்கி தலைகுணியக் கூடிய செயலைச் செய்தனர். ...உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?'',

 ''மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள்- நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.'' அல்குர்ஆன் 7:80 லிருந்து 81 வரை
எவ்வளவோ அச்சமுதாயத்தை நோக்கி எச்சரிக்கை செய்தும் அவவர்கள் திருந்தவில்லை, தங்களது இழி செயலுக்காக வருந்தவுமில்லை தொடர்நது அவைகளை நாகரீகமெனக் கருதி செய்து கொண்டிருந்தார்கள் இறைத்தூதர் அவர்கள் அருவெருக்கத்தக்க அச்செயலைக் கண்டு மிகவும் சஞ்சலப்பட்டார்கள். நம் தூதர்கள் (வானவர்கள்) லுத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக் ''இது நெருக்கடி மிக்க நாளாகும்'' என்று கூறினார். 11:77

இப்படியாக காலங்கள் ஓடிக்கொண்டிருந்தன அவர்களுக்கும் அல்லாஹ்விடமிருந்து எச்சரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன, ஆனாலும் அந்த அநாகரீகச் செயலை செய்யும் அநியாயக் காரர்களுக்கு அச்செயலை ஷைத்தான் அழகாக்கி காட்டியும், அச்செயல் ஒரு நாகரீகம் வாய்ந்தவை போல் ஆக்கியும் காட்டினான். அச்செயலை செய்பவர்கள் தங்களை நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் வீற்றிருந்ததாக பறைசாட்டிக் கொண்டனர். இன்றைய மேற்கத்திய நாகரீக ? கள் போன்று என்றால் மிகையாகாது .

 ஒரு நாள் சோகமே உருவாக லூத் (அலை) அவர்கள் தங்களுடைய இல்லத்தில் அமர்ந்திருக்கும் போது வான தூதர்கள் இளைஞர் தோற்றத்தில் அவர்களுடைய இல்லத்திற்கு வருகை தருகிறார்கள் அவர்களிடத்தில் இவர்கள் வரம்பு மீறுவார்கள் என்று அல்லாஹ் அறிந்திருந்ததால் அவ்வாறு மலக்குகளை இளைஞர் தோற்றத்தில் அனுப்பி வைத்தான்.(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது. 15:61 

(அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்'' என்று (லூத்) சொன்னார், 15:62 (அதற்கு அவர்கள்,) ''அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;.15:63 (உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம். 15:64

இறைத் தூதர் அவர்களுடைய வீட்டில் ஊருக்குப் பரிச்சயமில்லாத இளைஞர்கள் வந்திருக்கிற செய்தி நகருக்குள் பரவவே இறைத்தூதருடைய வீட்டை சேடிஸ்டுகள் சூழ்ந்து கொள்கிறார்கள் (லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள். 15:67
அவர்களைக் கண்ட இறைத்தூதர் செய்வதறியாது திகைத்துப் போய் அவர்களை எச்சரித்து ஙெ;கிருந்த வெளியேற்ந முயற்சி செய்கிறார்கள் (லூத் வந்தவர்களை நோக்கி;) ''நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;' ''அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்'' என்றும் கூறினார். 15:69

 இறைத் தூதருடைய எச்சரிக்கையை பொருட்படுத்தாத அந்த சேடிஸ்டுகள் அவர்கள் விரும்பாத மற்ற விஷயங்கள் எதைப் பற்றியும் எங்களிடம் பேச வேண்டாம் என்று ஏளனமான பதிலை நக்கலுடன் கூறுகிறார்கள். அதற்கவர்கள், ''உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?'' என்று கேட்டார்கள். 15:70 

செய்வதறியாது திகைத்துப்போன லூத்(அலை) இறுதியில் என்னுடைய மகள்களையேனும் திருமணம் செய்து கொள்ளுங்கள் இவர்களை விட்டு விடுங்கள் எனக் கெஞ்சத் தொடங்குகிறார்கள். ''இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்'' என்று கூறினார். 15:71

ஆனாலும் அவர்கள் நபியுடைய மகள்கள் தேவையில்லை அவர்களுடைய வீட்டிற்கு வருகை தந்திருந்த இளைஞர்களை தங்களது துர்ச்செயலுக்குட்படுத்துவதில் தீவிரமடைகிறார்கள் அல்லாஹ் அவர்களுடைய பார்வையைப் பறித்து விடுகிறான். அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். 54:37

அல்லாஹ்வுடைய கோபம் மனிதர்கள் மீது இறங்கத் தொடங்கினால் இவ்வாறே படிப்படியாக இறங்கத் தொடங்கும், ஒவ்வொன்றும் பலமான அடியாக விழத்தொடங்கும், அத்துடன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வசுவாசம் கொண்டவர்களை அக்கொடியவர்களின் வேதனையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதால் அவர்களின் பார்வையைப் பறித்து அவ்விடத்திலேயே அவர்களை குருடர்களாக்கியும் அந்த மலக்குகள் மூலமே நபிக்கு தனது தண்டனை இறங்கவிருப்பதையும், அதனால் நபியையும் அவரது குடும்பத்தாரையும் இடம் பெயரச் சொல்கிறான். மேலும்,'இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்'. 15:66 

இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள். 15:65

ஆகவே இறைத்தூதரும் அவர்களுடன் ஈமான் கொண்ட முஸ்லீம் குடும்பத்தினரும் இடம் பெயரத் தொடங்குகிறார்கள், அல்லாஹ்வுடைய பேரிடி முழக்கம் ஒன்று அம்மக்களைப் பிடித்துக் கொள்கிறது. ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. 15:73

 இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக. 7:84

பயங்கர இடிமுழக்கத்துடன் கூடிய கொடுங்காற்று சுடப்பட்ட கற்களை அவ்ஊர் மக்கள் மீது வீசி எறிந்து அனைத்து அநியாயக்கார வரம்பு மீறிய மக்களையும் அழித்து அவ்வூரை அல்லாஹ் தலைகீழாக புரட்டி விடுகிறான் . பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். 15:74
இவ்வாறு அல்லாஹ்வுடைய வேதனை அம்மக்கள் மீது இறங்கியது, அல்லாஹ் தன்னுடைய வேதனையை ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இறக்கி அழித்திருந்தாலும் இச்சமுதாயத்து மக்களை அழித்து அவர்கள் வசித்த ஊரையும் புரட்டியதன் நோக்கம் யாதெனில் , அல்லாஹ் மனிதனுக்கு உருவாக்கி கொடுத்த இயற்கை அமைப்பை சிர் குலைத்து தலை கீழாக மாற்றி தேவையுள்ளதை விட்டு தேவையில்லாதை எடுத்து இயற்கை சித்தாந்தத்தை புரட்டினார்கள் . 

அதனால் அந்த மக்கள் வசித்த ஊரையே அல்லாஹ் புரட்டி விட்டதுடன் அதை பின் வரும் மக்களுக்காக அத்தாட்சியாக்கினான் (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். 15:72 .நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 15:75 நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது. 15:76 திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது. 15:77

புரட்டப் பட்ட ஊர் அரேபியப் பிரதேசத்தில் ஜோர்தான் கடல் கரையில் அமந்துள்ளது.

அதன் மீது கடல் சூழ்ந்திருக்கிறது கடல் தண்ணீர் தேங்கி நிற்கும் குறிப்பிட்ட அவ்விடத்தில் யாரும் கால் பதித்தால் அவர்களை கடல் நீர் உள் வாங்குவதில்லை. அவர்களை மிதக்கச் செய்து விடும் பலகை மிதப்பது போல் மிதப்பார்கள். காரணம் அதன் கீழ் புரட்டப்பட்ட அந்நகரம் இருப்பதாலேயாகும்

( இது சமீபத்தில் கேரளா குழுவினர் உலகம் முழுவதும் சுற்றுலா மேற்கொண்டு குர்ஆன் கூறும் அதிசய இடங்களை ஆய்வு செய்து அவ்விடங்களை வீடியோ கேமராவில் பதிவு செய்து பல்லாயிரம் பிரதிகள் எடுத்து மக்களிடம் அனுப்பியுள்ளனர். இவர்கள் அந்நகரங்களுக்கு சென்று அங்கு வாழும் மக்களிடமும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஒன்றுக்கு பலமுறை கேட்டறிந்து ஊர்ஜிதமானப் பிறகே வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது )

 லூத் நபி காலத்தில் நடந்த அருவெருக்கத்தக்க செயலை அல்லாஹ் தொடர்ந்து லூத் (அலை) அவர்கள் மூலம் எச்சரித்துக் கொண்டேயிருந்தும் அவர்கள் அதை ஏற்று நடக்காததால் இறுதியில் கல்மாறியை பொழியச் செய்து அவ்வூரை தலைகீழாகப் புரட்டியது இறைவனின் கோபத்தின் தெளிவான வெளிப்பாடு தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

 குர்ஆனின் கூற்றிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்வதுடன் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய விதத்தில் அஞ்சி நடப்பதுடன் , அவனுடைய சட்டங்களை நமது வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
أحدث أقدم