அஷ் ஷெய்க் முஹம்மது இப்னு இப்ராஹிம் ஆலு ஷெய்க் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்பொழுது தப்லீக் ஜமாஅத் -ஐ வழிகேடு மற்றும் பித்அத் செய்யக்கூடியவர்களாகவும்; கப்ருகளை வணங்குவது மற்றும் ஷிர்க்கின் பால் அழைக்க கூடியவர்களாகவும் நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.
நூல்: فتاوى الشيخ محمد بن إبراهيم في جماعة التبليغ
தப்லீக் ஜமாஅத் -ன் நிறுவனர் முஹம்மது இல்யாஸ் ஒரு ஸூஃபி, குபூரி (கப்ரு வணங்கி), குராஃபி ஆவார். அவர் வாரம்தோறும் தொடர்ச்சியாக, வஹ்ததுல் வுஜூது என்ற ஷிர்க்கான அகீதாவில் இருந்த அப்துல் குத்தூஸ் அல் கன்கூஹீ என்பவரின் கப்ரில் கஷ்ஃப் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முகத்தை மூடிக் கொண்டு தியானம் செய்யக்கூடியவராக இருந்துள்ளார். இது வெளிப்படையான ஷிர்க் ஆக இருக்கின்றது என்று அஷ் ஷெய்க் அஹ்மத் அந் நஜ்மீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.
நூல்: الفتاوى الجلية عن المناهج الدعوية ٥٤-٥٦
அஷ் ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுமல்லாஹ் அவர்களிடத்தில், 'முஹம்மது நபி ﷺ அவர்களது கப்ருக்கு அருகில் நின்று கவிதை படித்தவுடன் நபி ﷺ அவர்களின் கை கப்ரில் இருந்து வெளியில் வந்தது' (மற்றோரு அறிவிப்பில் ரொட்டி கிடைத்தது) என்று தப்லீக் ஜமாஅத்தின் சபைகளில் படிக்கப்படுகின்றது இதனுடைய சட்டம் என்ன என்று கேட்ட பொழுது ஷெய்க் அவர்கள், இத்தகைய கதைகளை நம்பிக்கை கொள்பவரின் பின்னால் நின்று தொழக்கூடாது; மேலும் இத்தகைய கதைகள் அடங்கிய புத்தகங்களை பள்ளிவாசலில் படிக்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.
நூல்: فتاوى اللجنة الدائمة ١/٢٤/٢٨٢-٢٨٤
அஷ் ஷெய்க் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் தப்லீக் ஜமாஅத்தை பற்றி கேட்ட போது, தப்லீக் ஜமாஅத்திடம் ஷிர்க் மற்றும் ஸூஃபிஸ செயல்பாடுகள் உள்ளது என்பதை ஹமூது அத் துவைஜிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய القول البليغ في التحذير من جماعة التبليغ என்ற புத்தகம் உட்பட நிறைய புத்தகங்கள் தெளிவுபடுத்துகின்றது என்று கூறினார்கள்.
நூல்: تحفة المجيب 74ص
அஷ் ஷெய்க் ஹமூது அத் துவைஜிரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் القول البليغ في التحذير من جماعة التبليغ என்ற புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்கள்,
நபி ﷺ அவர்களின் காலத்தில் இருந்த அஹ்லுல் ஜாஹிலிய்யா எந்த அகீதாவில் இருந்தார்களோ அதற்கும் தப்லீக் ஜமாஅத்துடைய அகீதாவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று ஜமாஅதுத் தப்லீக் பற்றி அறிந்த உலமாக்கள் கூறியுள்ளார்கள். (இதனுடைய விளக்கம் தவ்ஹீது அல் உலூஹிய்யாவில் அவர்களிடத்தில் ஷிர்க் உள்ளது என்பதாகும்.)
தப்லீக் ஜமாஅத் தலைவர்களில் இருவர் இன்ஆமுல் ஹஸன், உமர் அல் பால்னபூரி ஆகியோர் தங்களுக்கு சூனியம் இருப்பதாக கருதி அதை நீக்குவதற்காக சூனியக்காரர்களிடத்தில் சென்று உதவி தேடியுள்ளார்கள்.
ஜமாஅதுத் தப்லீக் -ஐ விட்டு விலகிய ஏழு முக்கியமான நபர்கள் தப்லீக் ஜமாஅத்தில் ஷிர்க் இருக்கிறது என்று சாட்சி கூறியுள்ளார்கள்.
தப்லீக் ஜமாஅத்தின் மூத்த தலைவர்கள் நபி ﷺ அவர்களின் சபைகளில் கனவில் அல்லாமல் விழித்திருக்கும் நிலையில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நபி ﷺ அவர்களோடு தொடர்பு இருக்கின்றது என்று அல் உஸ்தாத் ஸைஃபுர் ரஹ்மான் இப்னு அஹ்மது அத் தெஹ்லவி அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்
நூல்: نظرة عابرة اعتبارية حول الجماعة التبليغية
அல் உஸ்தாத் ஸைஃபுர் ரஹ்மான் இப்னு அஹ்மது அத் தெஹ்லவி மேலும் கூறினார்கள், தப்லீக் ஜமாஅத்தின் தலைவர்கள் கப்ருகளிடத்தில் அமர்ந்து கஷ்பை (ஞானத்தை) எதிர்பார்க்கக் கூடியவர்களாக இருந்தார்கள்
நூல்: نظرة عابرة اعتبارية حول الجماعة التبليغية
அல்லாஹ்வை அன்றி மற்றவர்களும் இந்த உலகத்தில் கராமாத் என்ற அடிப்படையில் தஸர்ருஃப் (எந்த நிபந்தனையும் இன்றி விரும்பியவாறு) செய்ய முடியும் என்று நம்பிக்கையில் தப்லீக் ஜமாஅத்தினர் இருக்கிறார்கள் என்று அல் உஸ்தாத் ஸைஃபுர் ரஹ்மான் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
நூல்: نظرة عابرة اعتبارية حول الجماعة التبليغية
நபி ﷺ அவர்களின் கப்ருக்கு சென்று நபியவர்களுக்கு சலாம் கூறிய பிறகு; நபி ﷺ அவர்களிடத்தில் நபியை அழைத்து ஷஃபாஅத்தை கேட்டு துஆ செய்ய வேண்டும் என்று தப்லீக் ஜமாஅத்தின் தலைவர்களில் ஒருவரான முஹம்மது ஜகரிய்யா கூறியுள்ளார்கள்.
நூல்: فضائل الحج لمحمد زكريا
"ஜமாஅதுத் தப்லீக் உடைய தலைவர்கள் கப்ருகளிடத்தில் பரக்கத் மற்றும் உதவிகளை தேட ஆர்வமூட்டுகின்றார்கள். மேலும் அவர்களது தலைவரான முஹம்மது இலியாஸ் அவருடைய முரீதுகளுக்கு வானத்தில் இருந்து வரக்கூடிய ஒளியை பங்கிட்டு கொடுப்பார்கள்" என நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
நூல்: جماعة التبليغ: عقيدتها وأفكارها ومشائخها (ص ٢٧)
ثلاثون مجلسا (ص ٢١١)
தில்லியில் உள்ள தப்லீக் மர்கஸிற்கு உள்ளே நான்கு கப்ருகள் இருக்கின்றது. இது யூத கிறிஸ்தவர்களை நபி ﷺ அவர்கள் சபிப்பதற்கு காரணமாக இருந்த ஒரு செயலாகும். மேலும் இது தவ்ஹீத் அல் உலூஹிய்யாவில் ஷிர்க் வைப்பதற்கு வழிவகுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
அஷ் ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ் அவர்களிடத்தில் தப்லீக் ஜமாஅத் பற்றி கேட்கப்பட்ட போது, தப்லீக் ஜமாஅத் -ஐ எச்சரிக்கை செய்யும் விதமாக பல புத்தகங்கள் வந்துள்ளது அதில் அஷ் ஷெய்க் ஹமூது அத் துவைஜிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய புத்தகம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது; மேலும் அதில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் ஸஹீஹ் ஆக இருக்கின்றது என்று கூறியுள்ளார்கள்.
நூல்: تحذير العلماء من جماعة التبليغ
நபி ﷺ அவர்களின் கப்ரின் அருகில் நின்று கொண்டு நபி ﷺ அவர்களிடத்தில் துஆ கேட்கலாம் என்று தேவ்பந்த் ஃபத்வா வழங்கியுள்ளது.
ஆதாரம்: darulifta-deoband.com/en, Answer Id 48365
நபி ﷺ அவர்களிடத்தில் துஆ கேட்பதற்காக நபி ﷺ அவர்களை அவர்களின் கப்ரில் அழைப்பது முஸ்தஹப் (விரும்பத்தக்கது) என்று தேவ்பந்த் ஃபத்வா வழங்கியுள்ளது.
ஆதாரம்: darulifta-deoband.com/en, Answer Id 37557
அல்லாஹ் அல்லாதவரிடம் துஆ கேட்பது ஷிர்க்குல் அக்பர் என்பதில் முஸ்லிம்களுடைய இஜ்மா இருக்கிறது என ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, இப்னுல் கய்யிம், இப்னு அப்துல் ஹாதி ஆகிய ஸலஃப் உலமாக்கள் இதை அறிவித்துள்ளார்கள்.
மேற்கண்ட அனைத்து விஷயங்களும், "தேவ்பந்தி மற்றும் தப்லீக் ஜமாஅத்தினர் தவ்ஹீத் அல் உலூஹிய்யாவில் ஷிர்க் செய்ய மாட்டார்கள்" என்ற ஜம்யிய்யத்து அஹ்லே ஹதீஸ் அமைப்பின் தாயீ ஹஸன் அலி உமரி அவர்களின் கூற்று பிழையானது என்பதை தெளிவுபடுத்துவதற்காக தேவ்பந்திகள் மற்றும் தப்லீக் ஜமாஅத்தினர் தவ்ஹீத் அல் உலூஹிய்யாவில் ஷிர்க் செய்துள்ளார்கள் என்பதற்கான சில ஆதாரங்கள் மட்டுமே ஆகும்.
மேலும் பரேள்விகள் என்ற கப்ரு வணங்கிகள் தப்லீக் ஜமாஅத்தினர் மற்றும் தேவ்பந்திகளை வஹ்ஹாபிகள் (தவ்ஹீதுவாதிகளை குறிப்பிடுவதற்காக கப்ரு வணங்கிகள் பயன்படுத்தக்கூடிய வார்த்தை) என்று கூறிய ஒரு காரணத்தினால் அவர்கள் உண்மையான தவ்ஹீத்வாதிகளாக ஆகிவிட மாட்டார்கள்.
தேவ்பந்தி மற்றும் தப்லீக் ஜமாஅத்தினரிடம் இவை அல்லாத தவ்ஹீத் அல் உலூஹிய்யாவில் ஏற்பட்ட ஷிர்க், தவ்ஹீத் அல் அஸ்மா வஸ் ஸிஃபாத் -ல் ஏற்பட்ட ஷிர்க், மேலும் ஷிர்க்கிற்கு வழி வகுக்கக் கூடிய செயல்களும், அவை அல்லாத பித்அத்துகளும், வழிகேடுகளும் ஏராளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தப்லீக் ஜமாஅத்திடம் தவ்ஹீத் அல் உலூஹிய்யாவில் ஷிர்க் இருப்பதை அஷ் ஷெய்க் முஹம்மது இப்னு இப்ராஹிம் ஆலு ஷெய்க், அஷ் ஷெய்க் இப்னு பாஸ், அஷ் ஷெய்க் அஹ்மத் அந் நஜ்மீ, அஷ் ஷெய்க் முக்பில், அஷ் ஷெய்க் அத் துவைஜிரி, அஷ் ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் போன்ற அஹ்லுஸ் ஸுன்னாவுடைய பெரும் உலமாக்கள் தெளிவாக பேசி இருக்க; மேலும் தேவ்பந்திகளிடத்தில் தவ்ஹீத் அல் உலூஹிய்யாவில் ஷிர்க் இருப்பதை அவர்களுடைய ஃபத்வாக்களிலிருந்தே தெளிவாக விளங்கி கொள்ள முடியும் என்ற நிலை இருக்க ஹஸன் அலி உமரி அவர்களின் கூற்று இத்தகைய உண்மைக்கு நேர் முரணான பிழையான கூற்றாக இருக்கின்றது. எனவே மேற்கண்ட அவருடைய கருத்தை அவர் பகிரங்கமாக வாபஸ் பெற வேண்டும். ஏனெனில் இத்தகைய தவறான கூற்றுகளால் வழிகேட்டில் செல்லக் கூடியவர்கள் அதே வழிகேட்டில் நிலைத்து நிற்கவும்; சத்தியத்தில் இருக்கக் கூடியவர்கள் குழம்புவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. இத்தகைய செயலானது மறுமையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயலாகும்.
அல்லாஹ் ஸுபஹானஹு வதஆலா கூறுகிறான்
لِيَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً يَّوْمَ الْقِيٰمَةِۙ وَمِنْ اَوْزَارِ الَّذِيْنَ يُضِلُّوْنَهُمْ بِغَيْرِ عِلْمٍ اَلَا سَآءَ مَا يَزِرُوْنَ
மறுமை நாளில் தங்கள் பாவச் சுமைகளை இவர்கள் பூரணமாகச் சுமப்பதற்காக மற்றும் அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமைகளை இவர்களே சுமப்பதற்காக வேண்டி (இவ்வாறு கூறுகிறார்கள். இருவரின் பாவச்சுமைகளை) அவர்கள் சுமப்பது மிகக் கெட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 16:25)
{ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَقُولُواْ قَوۡلٗا سَدِيدٗا }
[سُورَةُ الأَحۡزَابِ: ٧٠]
(ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள்.
மேலும் ,ஸலஃபியாவை பின்பற்றக்கூடிய சகோதரர்கள், ஒருவர் தன்னை ஸலஃபி என்று கூறிக்கொண்ட ஒரே காரணத்தால் அவர் சொல்லக்கூடிய செய்திகளை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வது கூடாது. மாறாக அதற்கான ஆதாரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ் ஸுபஹானஹு வதஆலா கூறுகிறான்,
وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا
நீர் அறியாத ஒரு விஷயத்தை பின் தொடராதீர்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.
(அல்குர்ஆன் : 17:36)
அதேபோன்று ,வழிகேட்டில் இருக்கக்கூடிய சிலரை மட்டும் கடுமையாக எதிர்ப்பதும் மற்றும் சிலரை பெரிதாக எதிர்க்காமல் இருப்பதும் அல்லது ஆதரிப்பதும் தமைய்யுஃ போக்கில் உள்ளடங்கக் கூடிய ஒன்றாகும் என்பதையும்; அதேபோன்று தான் சார்ந்து இருக்கக்கூடிய கூட்டத்தை சார்ந்தவர் அல்லது ஆதரவாளர் என்பதனால் ஒருவருடைய தவறுகளை நியாயம் கற்பிப்பது ஹிஸ்பிய்யத்தில் உள்ளடங்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் ஸுபஹானஹு வதஆலா கூறுகிறான்,
وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ
மேலும், நன்மைக்கும் அல்லாஹ்வுடைய இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
(அல்குர்ஆன் : 5:2)
وَلَا تَلْبِسُوا الْحَـقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَـقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ
நீங்கள் உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை நீங்கள் நன்கறிந்துக் கொண்டே அதை மறைக்கவும் செய்யாதீர்கள்.
(அல்குர்ஆன் : 2:42)
எனவே, சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாக பிரித்து அறிந்து கொள்ள தக்வாவை சரிசெய்து கொள்ள வேண்டும். அல்லாஹ் ஸுபஹானஹு வதஆலா கூறுகிறான்,
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تَتَّقُواْ ٱللَّهَ يَجۡعَل لَّكُمۡ فُرۡقَانٗا
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் ஃபுர்கானை (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறியக் கூடிய அறிவை) வழங்குவான்.
(அல்குர்ஆன் 8: 29)
தீனில் உறுதியாக இருப்பதற்காக மன்ஹஜ்ஜில் உறுதியாக இருக்கக்கூடிய உலமாக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும்.
أسأل الله العافية والسلامة والهدى والتقوى
தொகுப்பு: அபூ முஆது அப்துல்லாஹ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்