ஸலபுகளிடமிருந்து.. பகுதி 05

ஸலபு & ஸலபிகளின் வாழ்வு/கூற்றுகளிலிருந்து..


மொழிபெயர்ப்பு: உண்மையான மேற்கோள்கள்



01. இமாம் அஷ்-ஷாஃபிஈ (அல்லாஹ் அவருக்கு கருணை காட்டட்டும்) கூறினார்கள்:


"அறிவு என்பது (அதன் மூலம் பிற மக்களுக்கும், சமூகத்திற்கும், மார்க்கத்திற்கும்) நன்மை பயக்கக்கூடியதே, (மாறாக) அறிவு என்பது மனப்பாடம் செய்யப்படுவது அல்ல."


 சியர் அலம் அன்-நுபாலா, 10/89 |  இமாம் அத்-தஹபி (அல்லாஹ் அவருக்கு கருணை காட்டட்டும்)


قال الإِمَام الشافعي رَحِمَهُ الله


الْعِلْمَ مَا نَفَعَ، لَيْسَ الْعِلْمَ مَا حُفِظَ. 


سير أعلام النبلاء ٨٩/١٠ | الإمام الذهبي رحمه الله



02. ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டுவானாக) கூறினார்கள்:


 "நோக்கம் சரியானதாக(வும், இறைவனுக்காகவும் மட்டுமே) இருந்தால் அறிவைத் தேடுவதை விட நல்ல செயல் (வேறு) எதுவும் இல்லை.


 ஜாமி பயானுல்-இல்ம் வா ஃபழ்லிஹி, 1/123 |  அல்-ஹாபிழ் இப்னு அப்தில்-பர்ர் (அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டுவானாக)



03. இமாம் இப்னு ஹிப்பான் (அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டட்டும்) கூறினார்கள்:


"சொர்க்கத்தின் பழங்களை எதிர்பார்க்கும் நீங்கள்  நரக நெருப்பின் விதைகளை விதைக்கின்றீர்கள் என்பதுதான் மாயைகளிலேயே மிகவும் மோசமானது."


 ரவ்ததுல்-உகாலா, 1/283 |  அபு ஹாத்திம், இப்னு ஹிப்பான் (அல்லா அவருக்கு இரக்கம் காட்டட்டும்)



قال علي بن أبي طالب رضي الله عنه:


لا تكثر العتاب، فإن العتاب يورث الضغينة والبغضة، وكثرته من سوء الأدب


روضة العقلاء ص١٨٢


04. அலி இப்னு அபிதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்:


 "[மக்களை] அதிகமாக கண்டிக்கவோ, (அடிக்கடி) அறிவுரை கூறவோ வேண்டாம், ஏனென்றால் நிச்சயமாக [அடிக்கடி] அறிவுறுத்துவது மனக்கசப்பைப் ஏற்படுத்துகிறது, வெறுப்பைக் உண்டாக்குகிறது, மேலும் அதிகமாக அறிவுரை கூறுவதென்பது மோசமான நடத்தைகளிலிருந்து வந்தவையாகும்."


 ரவ்ததுல்-‘உகாலா |  பக்கம் 182 |  அபு ஹாதிம் இப்னு ஹிப்பான் அல்-புஸ்டி (ரஹ்)



05. ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா (அல்லாஹ் அவரிடம் கருணை காட்டட்டும்) கூறினார்கள்:


“(உன்) உள்ளம் மட்டும் இறைவழிபாட்டின் இனிமையும், இறைவனை வணங்குதில் (இஃக்லாஸ் எனும்) தூய்மையான எண்ணத்தையும் ருசிக்குமானால்; (இவ்வுலகில்) இதைத் தவிர வேறு எதுவும் (உன் உள்ளத்திற்கு) மிகவும் விரும்பத்தக்கதாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்காது. ”


 மஜ்மா அல்-ஃபத்தவா, 10/187 |  ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா (அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டட்டும்)



06. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம்.


 ஷெய்க் இப்னு ‘உஸைமீன் (ரஹ்) கூறினார்கள்:


“குர்ஆனில் ஒரு வார்த்தை கூட (ஆண், பெண்) சமத்துவத்தை கட்டளையிடவில்லை.  மாறாக, அது (அவரவருக்குரிய உரிமையையும்,) நீதியையும் கட்டளையிடுகிறது. ”


 ஷர்ஹுல்-‘அகீததுல்-வாசிதிய்யா, 1 / 180-181 |  


ஷெய்க் இப்னு ‘உதய்மீன் (அல்லாஹ் அவரிடம் கருணை காட்டட்டும்)



07. ஷெய்க் சுலைமான் பின் ‘அப்துல்லாஹ் ஷேக் (ரஹ்) கூறினார்கள்:


 "நிச்சயமாக  உண்மையை மறுக்கின்ற (அதாவது இஸ்லாத்திற்கு எதிரான) மக்களில் பலர் உண்மையை கைவிடுவதற்கான காரணம் அவர்களின் உலக வாழ்க்கையை இழக்க நேரிடும் என்ற அச்சம் தான்."


 துர்ர் அஸ்-சன்னியா, 8/125 |  ஷெய்க் அப்துர்-ரஹ்மான் பின் முஹம்மது பின் காசிம் அல்-‘அசமி அன்-நஜ்தி (அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டட்டும்)



08. இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) கூறினார்கள்:


 “உலக வாழ்க்கையை விரும்பும் ஒரு நபரின் உதாரணம் கடலில் இருந்து (உப்பு) தண்ணீரைக் குடிக்கும் ஒருவரின் உதாரணம் போன்றது.  அவர் எவ்வளவு அதிகமாக குடிக்கிறாரோ, அந்த அளவிற்கு அதன் தாகத்தில் மூழ்குவார், (அந்த தாகத்தால்) அவர் மரணிக்கும் வரையில்!’”


 முக்தசர் மின்ஹஜ் அல்-காசிதீன் |  பக்கம் 193 |  இமாம் இப்னு குதாமா அல்-மக்திசி [அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டட்டும்]



قال ابن رجب الحنبلي رحمه الله:


إخواني! إن حبستم العام عن الحج، فارجعوا إلى جهاد النفس فهو الجهاد الأكبر.


لطائف المعارف |  ص ٥٥٧ | لابن رجب الحنبلي رحمه الله


09. அல்-ஹாபிழ் இப்னு ரஜப் (ரஹ்) கூறினார்கள்:


 “என் [அன்பான] சகோதரர்களே!  இந்த ஆண்டு நீங்கள் ஹஜ் செய்வதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டு, தடைசெய்யப்பட்டிருந்தால், (மனம் தளராமல் உங்கள் இறைவனிடம்) திரும்பிச் செல்லுங்கள், உங்கள் உள்ளத்தின் (தீய) ஆசைகள் (மற்றும் சுயவிருப்பங்களுக்கு) எதிராக சுய கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள். ஏனெனில் உள்ளத்திற்கு (அதாவது தீய ஆன்மாவிற்கு)  எதிராக போராடுவதே மிகப் பெரிய போராட்டமாகும்.


 லத்தீஃப் அல்-ம ஆரிஃப் |  பக்கம் 557 |  இமாம் இப்னு ரஜப் அல்-ஹம்பலி (ரஹ்)



10. நுஃமான் இப்னு பஷீர் (ரலி) கூறினார்கள்:


 "உங்களில்  ஒருவர் பாவம் செய்தால், (நான் செய்த இந்த பாவத்திற்கு) எனக்கு  பாவமன்னிப்பே கிடையாது என்று தனக்கு தானே சொல்லிக் கொள்ளவேண்டாம்: மாறாக, அவர் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரட்டும், (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையாளனாகவும் இருக்கிறான்.”


 ஷுஅபுல்-ஈமான், 6690 | இமாம் அல்-பைஹகி  (ரஹ்)



11. இமாம் இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரி (ரஹ்) கூறினார்கள்


“எவர் அறிவை ஒரே நேரத்தில் பெற விரும்புகிறாரோ, அவருடைய அறிவு அவரைவிட்டு ஒரே நேரத்தில் சென்றுவிடும்.  (மாறாக) அறிவு என்பது (பல) இரவு பகல்களை (தியாகம் செய்து)  பெற வேண்டிய ஒன்றாகும்."


 அல்-ஜாமி ’லில்-அக்லாக் அர்-ராவி லில்-கதீப் அல்-பாக்தாதி, 1/232



12. "இவ்வுலகில் மரணிக்கும் நபர் கீழ்கானும் இரண்டில் ஒருவராக மட்டுமே இருக்க முடியும்:


‘ஒன்று மரணம் அவருக்கு (இவ்வுலகின் துன்பங்களிலிருந்து) நிவாரணமாக அமையும்.


(அல்லது) இவ்வுலகில் உள்ளவர்கள் அவரி(ன் துன்பத்திலிருந்து) நிம்மதி அடைகிறார்கள்! "



‏قال الشيخ صالح بن فوزان الفوزان حفظه الله:


من كان مفرطا في الأيام الماضية،


فليحسن في بقية هذا الشهر والأعمال بالخواتيم.


لقاء رمضاني 19 - رمضان - 1437


13. ஷெய்க் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ரஹ்) கூறினார்கள்:


“புனிதமிக்க ரமலான் மாதத்தின் கடந்தவிட்ட நாட்களில் எவர் அலட்சியமாக இருந்தாரோ, அவர் இப்புனிதமிக்க மாதத்தின் மீதமுள்ள (நாட்களில்) அதிகமாக நன்மைகள் செய்யட்டும்.  ஏனெனில் செயல்கள் அவற்றின் முடிவுகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன. ”


 Liqā’a Ramadāni |  19 ரமளான் 1437 |  ஷெய்க் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ரஹ்)



14. இமாம் இப்னுல் கைய்யூம் (ரஹ்) கூறினார்கள்:


 “(கல்வி) அறிவையும்,  அறிவுடைய மக்களையும் நேசிப்பவன்;  நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்ற ஒன்றையே நேசிக்கின்றான். ”


 Miftāh Dār is-Sa’ādah, 1/435 |  இமாம் இப்னுல் கைய்யூம் (ரஹ்)



15. ஃபுழைல் இப்னு இயால் (ரஹ்) கூறினார்கள்:


"(இறப்புகளை ஏற்படுத்துவதற்காக நோய்கள் ஏற்படுத்தப் படவில்லை மாறாக,)மனிதனை ஒழுங்குபடுத்துவதற்காக அல்லாஹ்தான் நோய்களை  ஏற்படுத்தினான். மேலும், நோய்வாய்ப்பட்ட அனைவரும் இறப்பதில்லை. ”


ஹிலியதுல்-அவ்லியா, 8/109 |  அபு நு அய்ம்  அல்-அஸ்பஹானி (ரஹ்)



16. இமாம் -ஷாஃபி (ரஹ்) கூறினார்கள்:


"(இவ்வுலகளிலுள்ள அனைவராலும் நேசிக்கப்படக்கூடிய எவரும் இப்பிரபஞ்சத்தில் இல்லை மாறாக) ஒரு வரை நேசிக்கும் சிலரும் இருப்பார்கள், அவரை வெறுக்கும் சிலரும் இருப்பார்கள். எனவே, ஒருவர் சர்வவல்லமையும், மாட்சிமையும் மிக்க அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்த மக்களுடன் இருக்கட்டும் (அதாவது அல்லாஹ்விற்கு கீழ் படிந்த மக்களில் நேசத்திற்குரியவர்களாக இருப்பதே அவருக்கு மிகச் சிறந்ததாகும்) .


 Bustān ul-‘Ārifeen |  பக்கம் 42 |  இமாம் அன்-நவவி (ரஹ்)



17. இமாம் இப்னுல் கைய்யூம் (ரஹ்) கூறினார்கள்:


 "ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தேவையுள்ள மக்களை கண்டுபிடித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய (மிகவும் கடுமையாக) முயற்சி செய்வார்.  ஏனென்றால், ஒவ்வொரு முறையும் அவர் ஒருவருக்கு உதவி செய்யும்பொழுதோ, அல்லது ஒருவரது தேவைகளை பூர்த்தி செய்யும் பொழுதோ  அல்லாஹ் அவருடைய தேவையை (நிச்சயம்) பூர்த்தி செய்வான் என்பதை அவர் அறிந்திருந்தார். ”


 ராவததுல்-முஹிப்பீன் |  தொகுதி 1, பக்கம் 168 |  இமாம் இப்னுல் கைய்யீம் (ரஹ்)



18. ஷெய்க் ஸாலிஹ் அல்-ஃfபவ்ஸான் (حفظه لله) கூறினார்கள்:


"(வாழ்வில் ஏற்படும்) தீமையோ (அல்லது சோதனையோ என்றென்றும்) நிலைத்திருக்காது, (எனவே) ஒரு முஃமின்  உயர்ந்தோனாகிய அல்லாஹ்விடமிருந்து நிவாரணத்திற்காகவும்  அடைக்கலத்திற்காகவும் காத்திருப்பான்"


ஷர்ஹ் ஹதீத் இன்னா குன்னா ஃபீ  ஜாஹிலிய்யா வ ஷர்ரின் |  பக்கம் 16



19. ஷெய்க் இப்னு ‘உஸைமீன் (ரஹ்) கூறினார்கள்:


“என் அன்பிற்குரிய சகோதர, (சசோதரிகளே. இவ்வாழ்க்கையில்) முக்கியமானது என்னவென்றால், நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் இறைவனின் புத்தகமான (அல்குர்ஆனின் வழியிலும்) மற்றும் அவனின் தூதரின் வழிகாட்டுதல் மற்றும் சுன்னாவின்படியும் பயணிக்கிறீர்கள் என்றால், (நீங்கள்) யாரைப் பற்றியும், கவலைப்பட வேண்டாம்.  


(ஏனெனில்) உலக வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. இன்று இறக்காதவன் (நிச்சயமாக) நாளை (அல்லது ஒருநாள்) இறந்துவிடுவான்.””


 அல்-லிக்கா அதுஷ்-ஷஹ்ரிய்யா 71 | 



{ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلْفَسَادَ }


20. அல்லாஹ் குழப்பத்தை  விரும்புவதில்லை.

(சூரா அல்-பகரா, வசனம் 205)


 ஷெய்க் இப்னு ‘உஸைமீன் (ரஹ்) கூறினார்கள்:


 “ அல்லாஹ் குழப்பத்தை விரும்பவில்லை என்றால், அதனை வகைப்படுத்தப்படுபவனை (அதாவது குழப்பம் செய்பவனையும்) அவன் விரும்பவே மாட்டான். ”


 தப்சீருல்-குர்ஆன், 2/446 |  ஷெய்க் இப்னு ‘உஸைமீன் (ரஹ்)



21. ஐந்து (விடயங்களில்) தவிர மற்ற விடயங்களில் அவசரம் காட்டுவது ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும்:


 1. விருந்தினருக்கு உணவளித்தல் 


 2. இறந்தவரை (அடக்குவதற்கு) தயார் செய்தல்,


 3. கன்னிப் பெண்ணை (அவள் பொருத்தமான வயதை அடைந்தவுடன்) திருமணம் செய்துகொள்வது


 4. வாங்கிய கடனை (சிறந்த முறையில்) அடைப்பது,


 5. ஒரு பாவம் செய்தவுடன் அதிலிருந்து மனந்திரும்புவது (அதாவது தவ்பா செய்வது).


 ஹிலியதுல்-அவ்லியா, 8/82 |  அபு நுஅய்ம் அல்-அஸ்fபஹானி (ரஹ்)



22. ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறினார்கள்:


" தொழுகையை கைவிடுபவன் *திருடன், விபச்சாரம் செய்பவன், மது அருந்துபவன் மற்றும் கஞ்சாவை உட்கொள்பவன் ஆகியோரை விட (மிகவும்) தீயவனாவான்* ."


 மஜ்மா அல்-ஃபத்தவா, 22/50 |  ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்)



23. ஹசன் பின் அலீ (ரலி) கூறினார்கள்:


"( ஒருவன்) என்னுடைய ஒரு காதில் என்னை சபித்துவிட்டு, என் மற்றொரு காதில் வந்து மன்னிப்பு கேட்டால், நான் அவனுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வேன்."


அல்-அதப் அஷ்-ஷரிய்யா, 1/319 |  இமாம் இப்னு முஃப் fலிஹ் அல்-ஹம்பலி (ரஹ்)



‏ﻗﺎﻝ ﺃﺣﺪ ﺍﻟﺼﺎﻟﺤﻴﻦ: 


ﻛﻨﺎ ﻧﻄﻠﺐ ﺍﻟﻌﻠﻢ ﻓﻲ ﺍﻟﻤﺴﺎﺟﺪ ﺛﻢ ﻓﺘﺤﺖ ﺍﻟﻤﺪﺍﺭﺱ، ﻓﺬﻫﺒﺖ ﺍﻟﺒﺮﻛﺔ؛ فوُﺿﻌﺖ ﺍﻟﻜﺮﺍﺳﻲ ﻓﺬﻫﺐ ﺍﻟﺘﻮﺍﺿﻊ؛ ثم ﻭُﺿﻌﺖ ﺍﻟﺸﻬﺎﺩﺍﺕ ﻓﺬﻫﺐ ﺍﻹﺧﻼﺹ


24. ஸாலிஹீன்களில்  ஒருவர் கூறினார் :


 "நாங்கள் பள்ளிவாசல்களில் அறிவைத் தேடிக்கொண்டிருந்தோம், பின்னர் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன, இதன் விளைவாக பரக்கத் குறைந்தது. பின்னர் வழக்கமான நடைமுறை, (அதாவது தரையில் உட்கார்ந்து கற்பதற்கு) மாறாக (வகுப்பறைகளில்) நாற்காலிகள் அமைக்கப்பட்டன , எனவே பணிவு குறைந்தது. பின்னர் அவர்கள் பட்டங்களையும், சான்றிதல்களையும் வழங்கினர், நேர்மையும் குறைந்தது. ”



25. ஷெய்க் சாலிஹ் அல்-ஃfபல்ஸான் ( لله حفله ) கூறினார்கள்:


“உலக மக்களில் பலர் வெறுத்தபோதிலும், நாங்கள் உண்மையை பேசுவதை (ஒருபோதும்) கைவிட்டதில்லை. "


 தாவதுத்-தவ்ஹீத் வ சிஹாமுல்-முக்ரிதீன் | பக்கம் 19 |  ஷெய்க் ஸாலிஹ் அல்-ஃfபவ்ஸான் (حفظه  لله)



26. உண்மையான வெற்றி 


 ஷெய்க் முஹம்மது பின் சாலிஹ் அல்-உஸைமீன் (ரஹ்) கூறினார்கள்:


 "உலக வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களில் வெற்றி பெறுவது என்பது உண்மையான வெற்றி இல்லை.  மாறாக, வெற்றி என்பது நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு சொர்க்கத்தில் நுழைவதே. ”


 ஷர்ஹ் சஹீஹுல் புகாரி, 8/289 |  ஷெய்க் முஹம்மது பின் சாலிஹுல்-உஸைமீன் (ரஹ்)



27. ஷெய்க் முக்பில் பின் ஹாதி அல்-வாதி (அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டட்டும்) கூறினார்கள்:


 அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டப்பின், இந்த உலகத்தில் (அல்லாஹ்வின் அடியான்) ஆறுதலும் நிம்மதியும் பெறக்கூடிய மிகச் சிறந்த விஷயங்கள்:


 “அறிவையும், ஸாலிஹான மனைவியையும் தேடுவது.”


 இமாம் அல்-அல்மா’இ |  பக்கம் 253



28. மனிதகுலம் சந்திக்கக்கூடிய மிகவும் கடினமான மூன்று நாட்கள்.


 சுஃபியான் பின் ‘உயைனாஹ் (ரஹ்) கூறினார்கள்:


 "ஆதாமின் மகன் அனுபவிக்கும் மிகவும் (மோசமான மற்றும் தனிமையான) நேரம் மூன்று சூழ்நிலைகளில் உள்ளது:


 1.  அவன் பிறந்து இந்த உலகத்திற்குள் நுழைந்த நாள்.


 2. (ஓர்) இரவு அவன் இறந்தவர்களுடன் தங்குவான்;  அது அவன் ஒருபோதும் விரும்பிடாத அண்டை வீட்டாரோடு இருப்பான் (அதாவது கப்ரில் வசிப்பவர்களோடு).


 3.  அவர் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரனை செய்யப்படும் நாள், (அது) அவன் இதற்கு முன்பு கற்பனையே செய்திருக்காத  நாளாகும் !!


(இத்தகைய) மூன்று சூழ்நிலைகளைப் பற்றி அல்லாஹ், யஹ்யா (அலை) அவர்களிடம் பின்வருமாறு கூறுகின்றான்:


وَسَلٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا‏ 

அவர்மீது சாந்தி உண்டாகட்டும் அவர் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளிலும்!

 (சூரா மர்யம், வசனம் 15)


 அல்-ஜாமி ’லி- அஹ்கமில்-குர்ஆன், 13/127 |  இமாம் அல்-குர்துபி (ரஹ்)



29. யாரும் நமக்கு பயனளிக்காத சூழ்நிலைகள்.


 இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) கூறினார்கள்:


 “நான் (ஒரு காலத்தில் என்னை என்னவென்றே சொல்ல முடியாத ஒரு படைப்பாக, ஒன்றும் அறியாதவனாக) என் தாயின் வயிற்றில் தனியாக இருந்தேன், பின்பு இந்த உலகத்தில் தனியாக நுழைந்தேன், நான் தனியாகவே இறந்தும் விடுவேன்.  நான் என் மண்ணறைக்குள்ளும் தனியாகவே நுழைவேன், (என் கல்லறையில்) தனியாகவே கேள்வியும் கேட்கப்படுவேன், என் கப்ரிலிருந்து நான் மட்டுமே தனியாக உயிர்த்தெழுப்பப்படுவேன்.  நான் மட்டுமே தனியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவேன்.  நான் சொர்க்கத்தில் நுழைந்தாலும் தனியாகவே நுழைவேன். (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) நான் நரக நெருப்பில் நுழைந்தாலும் தனியாகவே நுழைவேன்.  இந்த சூழ்நிலைகளில் யாரும் எனக்கு பயனளிக்க மாட்டார்கள்.  எனவே, எனக்கு (இறைவனின் அடிமையாகிய இந்த உலக) மக்கள் மீது எப்படி ஆர்வம் இருக்க முடியும்?!


 ஈகாழுல்-ஹிமாம் ஃபீ ஷர்ஹூல்-ஹிகாம், 1/176 |  இமாம் இப்னு அஜீபாஹ் (ரஹ்).



30. ஃபஜ்ர் தொழாமால் தூங்குதல்


 ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) கூறினார்கள்:


 “(ஃபஜ்ர் தொழாமால் தூங்குவதென்பது) மிகப்பெரிய பேரழிவாகும் மற்றும் (இது மார்கத்தாலும், முக்கிய அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத என்றாலும்) இன்று அதிகமான முஸ்லிம்களால் செய்யப்படும் மிகப் பெரிய அட்டூழியங்களில் ஒன்றாகும். மேலும் (நாங்கள்) இதுபோன்ற (சந்தர்பத்திலிருந்தும், இத்தகைய நபர்களிடமிருந்தும்) அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுகிறோம். 


இத்தகையவர்கள் தமது உலகத் தேவைகளுக்காகவும், படைப்பினங்களின் அழைப்பிற்காகவோ அல்லது அவர்களின் வேலை நிமித்தமாகவோ (அந்த நேரத்தில்) எழுந்திரிப்பார்கள், ஆனால், உயர்ந்தோனான அல்லாஹ்விற்காக எழுந்திருப்பது கிடையாது.


 மஜ்மா ஃபத்தவா 29/179 |  ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்)



31. ஷெய்க் இப்னு ‘உஸைமீன் (அல்லாஹ் அவரிடம் கருணை காட்டட்டும்) கூறினார்கள்:


 "ஒரு நபர் தனது தந்தை, அவரது தாய் மற்றும் அவரது சகோதரர் சார்பாக [தர்மத்தை] நன்கொடையாக வழங்குவது (மார்க்கத்தில்)  அனுமதிக்கப்பட்டுள்ளது.


 ஃபத்தவா ஃபி அஸ்-ஸகாஹ்-சியாம் |  பக்கம் 390 |  ஷெய்க் இப்னு ‘உஸைமீன் (அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டட்டும்)



32. அர்-ரபீ பின் அனஸ் [அல்லாஹ் அவரிடம் கருணை காட்டட்டும்] கூறினார்கள்:


 "அல்லாஹ்வை (அதிகமாக) நேசிப்பதன் அடையாளம்: அவனைப் பற்றி அதிகம், அதிகம் நினைவுகூருவதாகும், ஏனெனில் நீங்கள் ஒருவரை அதிகமாக  நேசிப்பதில்லை (என்றுதான் அர்த்தம்) அவரை நீங்கள் பெரிதும் நினைவில் வைத்திருக்காதவரை 


(நாம் இறைவனை அதிகம் நினைவு கூறவில்லையெனில் நாம் அவனை நேசிக்கவில்லை என்று தானே அர்த்தம்)."


 மஆரிஜ் அஸ்-சாலிஹுன், 2/163 |  இமாம் இப்னுல் கைய்யூம் [அல்லாஹ் அவரிடம் கருணை காட்டட்டும்]



يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ يَجْعَلْ لَّـكُمْ فُرْقَانًا وَّيُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ وَ اللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏ 

33. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.

(அல்குர்ஆன் : 8:29)


اَلَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰى لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ‏ 

எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.

(அல்குர்ஆன் : 13:29)


இமாம் இப்னுல் கைய்யூம் (ரஹ்) கூறினார்கள்:


" தூபா என்பது யாருடைய சிந்தனையில் மக்களின் குறைகளுக்கு மேலாக தனது சொந்த குறைகள் அதிகமாக ஆக்கிரமித்துள்ளதோ அவருக்கே ஆகும்.  


தனது சொந்த குறைகளை மறந்து, மக்களின் குறைகளை கண்டு மகிழ்கிபவருக்கு கேடு உண்டாகட்டும். 


இவற்றில் முதலாவது தன்மை மகிழ்ச்சியின் அடையாளமாகும், மேலும் இரண்டாவது தன்மை துயரத்தின் அடையாளமாகும். ”


 தரீக் அல்-ஹிஜ்ரதைன் |  பக்கம் 176 |  இமாம் இப்னுல் கைய்யூம் (ரஹ்)


TN: طوبى- விற்கு பல அர்த்தங்கள் உள்ளன.  இது சொர்க்கம் என்றும், ஒரு ஹதீதில் சொர்க்கத்தில் உள்ள ஒரு மரம் என்றும் குறிப்பிடப்படுகிறது. (சில்சிலா-சஹீஹா, 4/639)

மேலும் ‘இக்ரிமா (ரஹ்) طوبى என்பதன் அர்த்தம்,“ "அவர்கள் சம்பாதித்தவை எவ்வளவு சிறந்தது" ”என்றும்

 அத் தஹ்ஹாக் (ரஹ்) “ அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. ”  என்றும், இப்ராஹீம் அன்-நக்ஹீ (ரஹ்), தூபா என்றால் "அவர்களுக்கு நல்லது" என்றும் கூறினார், அதே நேரத்தில் கத்தாதா (ரஹ்) இது ஒரு அரபு வார்த்தையாகும், அதாவது 'நீங்கள் ஒரு நல்ல காரியத்தை சம்பாதித்துள்ளீர்கள்' என்று கூறினார்கள்.  மற்றொரு விவரிப்பில், கத்தாதா (ரஹ்), `அவர்கள் طوبى 'என்பதன் பொருள்," இது அவர்களுக்கு சிறந்தது, " என்றும் கூறுகிறார்கள்



34. அல்லாமா அஸ்-ஸஅதி (ரஹ்) கூறினார்கள்:


 " (உயர்ந்தோனாகிய) அல்லாஹ்வுக்கு(ம் அவனது கட்டளைகளுக்கும்) கீழ்ப்படியாமல் இருப்பது ஒருவரின் பண்புகள், தன்மைகள்,  நற்செயல்கள் மற்றும் (அவருடைய) விதியையும் சிதைத்துவிடுகின்றது(corrupts)."


 தஃப்ஸீர் அஸ்-சஅதி |  பக்கம் 318 | அல்லாமா அஸ்-ச’தி [அல்லாஹ் அவரிடம் கருணை காட்டட்டும்]


TN: மேலே உள்ள அறிக்கையில் சிதைத்தல் (corruption) என்பது இழப்பு (அல்லது பற்றாக்குறை) என்று பொருள்;  இது ஒருவர் நல்ல குணத்தையும் நல்ல நடத்தையையும் கொண்டிருப்பதை இழக்கவைக்கும்.  இது ஒருவரை நல்ல செயல்கள் செய்வதிலிருந்தும் தடுக்கிறது மற்றும் ஒருவரது வருமானத்தின் மூலத்தையும் (source of income) பறிக்கும் ( அதாவது வருமானம் வரக்கூடிய வழிகளை தடுக்கும்).



35. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


 “நிச்சயமாக (நமது தீய செயல்களை பதிவுசெய்யும்) இடது தோள்புஜத்தில் உள்ள வானவர், ஒரு முஸ்லிம் அடியான் பாவம் செய்தபின் ஆறு மணி நேரம் முடியும் வரை எதையும் பதிவு செய்யமாட்டார்.  அவர் தனது செயலுக்கு வருந்தி, அல்லாஹின் மன்னிப்பை நாடினால், அந்த தீய செயலை பதிவு செய்யாமல் புறக்கணித்து ஒதுக்கிவிடுவார்.  (அவ்வாறு அவர் பாவமன்னிப்பு கேட்கவில்லையெனில்), அது ஒரு கெட்ட செயலாக பதிவு செய்யப்படும். ”


 சஹீஹ் அல்-ஜாமி ’2097 |  ஷேக் அல்பானி رحمه الله |  ஹசன்



36. ஷெய்க் இப்னு ‘உஸைமீன் (ரஹ்)  கூறினார்கள்:


 அல்லாஹ்வின் தூதருடைய சுன்னாக்களையும் வழிகாட்டுதலையும் (மக்கள்) முன்வைக்ககூடிய (அதாவது அமல்படுத்தக்கூடிய)  வாய்ப்பு வழங்கப்படும்போதெல்லாம் (அதனை தவறவிடாமல்) அவ்வாறு செய்யுங்கள். (அதன் காரணமாக) அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல் மற்றும் சுன்னாவை அமல்படுத்திய வெகுமதியும், மறுமை நாள் வரையிலும் அதைச் செய்பவரின் வெகுமதியும் உங்களுக்கு கிடைக்கும். ”


 ஷர்ஹ் ரியாளுஸ்-ஸாலிஹீன், 4/215 |  ஷெய்க் இப்னு ‘உஸைமீன் (ரஹ்)


37. ஷேய்க் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்....


பிரயோஜனமான கல்விகளை விட்டும் என்றைக்கு உள்ளங்கள் காலியாக இருக்கின்றதோ, அப்போதெல்லாம் தேவையற்ற அனைத்து அசத்தியக் கருத்துக்களையும் அவ்வுள்ளம் ஏற்றுக்கொண்டு விடும்..

( مجموع الفتاوى) 



38. இப்னு மஸ்ஊத் (ரஹ்)  கூறினார்கள்:


 "நீங்கள் பிராத்திக்கும் காலமெல்லாம், நீங்கள் உண்மையான அரசனாகிய (அல்லாஹ்வின்) கதவைத் தட்டுகிறீர்கள் (அவன் அரசர்களுக்கெல்லாம் அரசன், உங்கள் தேவைகளை நிறைவேற்றித் தரக்கூடியவன்)


(எனவே, எவர் இத்தகைய) அரசனின் கதவைத் தட்டுகிறாரோ அவருக்கு அக்கதவு (நிச்சயமாக) திறக்கப்படும்."


 சிஃபாத்துஸ்-சஃப்வா, 1/190 |  இமாம் இப்னுல்-ஜவ்ஸி (ரஹ்)



39. அபு தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்:


 "மண்ணறையின் *இருளின்* கடுமையிலிருந்து (உங்களை) பாதுகாத்துக் கொள்ள, இவ்வுலக இரவின் *இருளில்* இரண்டு ரக்அத் தொழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்."


 ஜாமி ’உல்-உலும் வல்-ஹிகம் |  பக்கம் 264 |  இமாம் இப்னு ரஜப் அல்-ஹம்பலி (ரஹ்)



40. ஷெய்க் முஹம்மது பின் ரம்ஸான் அல்-ஹஜரி 

(அல்லாஹ் அவரைப் பாதுகாக்கட்டும்) கூறினார்கள்:


 "உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான தொடர்பை சரிசெய்து கொள்ளுங்கள், 


அல்லாஹ் அவனுடைய படைப்பினங்களின்  தீமையிலிருந்தும், கெடுதிகளிலிருந்தும் அவனது அனுமதியுடன் உங்களை பாதுகாக்க போதுமானவன்."


 ஷர்ஹ் அத்-தஹாவிய்யா வ புலூகுல்-மராம் |  யானுல்-ஜும்ஆ |  17 ஜமாதுல்-ஆகிரா 1440



41. இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்) கூறினார்கள்:


 "உங்களைப் பற்றிய எதிர்மறையான (தீய) எண்ணங்களும், அல்லது நீங்கள் செய்த (எண்ணிலடங்காத) பாவங்களும், (உங்கள்) இறைவனை அழைப்பதை விட்டும் உங்களை தடுத்திட வேண்டாம்.  (ஏனென்றால்), அல்லாஹ் இப்லீஸின்  அழைப்பிற்கே  பதிலளிதுள்ளான்:


 “இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான்." 

(அல்குர்ஆன் : 38:79)


 பத்ஹுல்-பாரி, 11/168 | இமாம் இப்னு ஹஜ்ர் அல்-அஸ்கலானி [அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டட்டும்]



42. இமாம் ஷாஃfபியி (ரஹ்) கூறினார்கள்:


“எவன் ஒருவன் (இம்மையிலும் மறுமையிலும் பயன்தரக்கூடிய கல்வி) அறிவை நேசிக்கவில்லையோ (மேலும், அதனை கற்க முயற்சியும் செய்யவில்லையோ), அவனிடம் எத்தகைய நன்மையும் இல்லை.  


ஆகவே, உங்களுக்கும் அவருக்கும் இடையில் எவ்வித அறிமுகமோ, தோழமையோ இருக்க வேண்டாம். ”


 தவாலி அத்-தானீஸ் |  பக்கம் 167 | இமாம் இப்னு ஹஜ்ர் அல்-அஸ்கலானி (ரஹ்)


 Tāreekh Dimashq, 51/408 | இமாம் இப்னு அசகிர் [அல்லாஹ் அவரிடம் கருணை காட்டட்டும்]



43. அபுதர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்:


 "மரணத்தை அதிகமாக நினைவுகூரும் ஒருவருக்கு 

(உலக விடயங்களில் மற்றவர்கள் மீது ஏற்படும்) பொறாமையும், (உலகத்தின் மீதான அவரது ஆசையும், அதன் மூலம் அவர் அடையும்) மகிழ்ச்சியும் மிகக் குறைவாகவே இருக்கும்."


 முசன்னஃfப் இப்னு அபி ஷைய்பா, 7/110 |  இமாம் இப்னு அபி ஷைய்பா (ரஹ்)



44. ஷெய்க் இப்னு ‘உஸைமீன் (ரஹ்) கூறினார்கள்:


 "இந்த உலக வாழ்க்கையில் நாம் மேய்ச்சல் விலங்குகளைப் போல சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் வரவில்லை.  


மாறாக, மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கான தயாரிப்புகளை செய்வதற்காகவே நாங்கள் (இவ்வுலகிற்கு) வந்துள்ளோம். ”


ஷர்ஹ் அல்-கஃfபிய்யா அஷ்-ஷஃfப்fபிய்யா, 4/379 |  ஷெய்க் இப்னு ‘உஸைமீன் (ரஹ்)



45. அல்-ஃபுழைல் இப்னு இயாழ் (அல்லாஹ் அவருக்கு கருணை காட்டுவானாக) கூறினார்கள்


"மக்களின் கூலி (கிடைக்க வேண்டும் என்பதற்காக) ஒரு அமலை கைவிடுவது முகஸ்துதியாகும் (அதாவது பிறர்க்கு காண்பிப்பதற்காக செய்யபடக்கூடிய செயல்), மேலும் (இறைவனுக்காக இல்லாமல்) மக்களுக்காக ஒரு செயலைச் செய்வது ஷிர்க் ஆகும், மேலும் இவை இரண்டிலிருந்தும் அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பதே இஃக்லாஸ் ஆகும் ."


 ஷுஅப் அல்-இமான், 6469 |  அல்-இமாம் அல்-பைஹாகி [அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டுவானாக]



46. இமாம் இப்னுல்-கைய்யூம் (அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டட்டும்) கூறினார்கள்:


 " (நிச்சயமாக) பாவம் மற்றும் ஊழல் செய்வது கவலை, துன்பம், பயம், சோகம், உள்ளம் இருகுதல் மற்றும் உளநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும் இவைகளுக்கான மருந்து மனம்வருந்தி (தவ்பா) செய்வதையும், (பாவ) மன்னிப்பு கேட்பதையும் தவிர வேறில்லை."


 Zād al-Ma'ād, 4/191 |  இமாம் இப்னுல்-கைய்யூம் (அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டுவானாக)



47. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) இவ்வாறு கூறினார்கள்:  


 "எவரேனும் (ஒருவர் தான்) அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்றோமா (இல்லையா) என்று அறிய விரும்பினால் : அவர் தாம் குர்ஆனை (ஓதுவதிலும், அதனை வாழ்வில் செயல்படுத்துவதையும்) விரும்புகிறாரா என்று பார்க்ககட்டும், (குர்ஆனை ஓதுவதையும் அதன்படி வாழ்வதையும் அவர் விரும்பினால்) நிச்சயமாக அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் (என்றே அர்த்தம்).   


முஜம் அல்-கபீர், 8657 இமாம்-தபரானி (ரஹ்)



48. சுஃப்யான் அஸ் ஸவ்ரி (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தனக்கு அறிவுரை கூறுங்கள் என்று கூறினார், (அதற்கு) சுஃப்யான் அஸ் ஸவ்ரி பதிலளித்தார்கள்:


"இந்த உலகத்தில் நீங்கள் வாழப் போகின்ற (காலம், அது எவ்வளவு குறைவு என்று உணர்ந்து அந்த) காலத்திற்கு ஏற்ப உழைப்பு செய்யுங்கள். (மேலும்) மரணத்திற்குப் பிந்தைய (வாழ்க்கை எத்தகைய முடிவில்லாத, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை என்பதை உணர்ந்து அந்த) வாழ்கைக்கு ஏற்ப உழைப்பு செய்யுங்கள் (வெற்றியடைவீர்கள்).


ஹில்யதுல் அவ்லியா, 7/56 | அபு நுதய்ம் அல்-அஸ்ஃபஹானி (ரஹ்)



49. முசானி (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது, "இந்த (குறிபிட்ட நபர்)  உங்களை வெறுக்கிறார் (என்று),

(அதற்கு) அவர் பதிலளித்தார்: ‘அவர் (என்) அருகில் (இருந்து புகழ்ந்து கொண்டு) இருப்பதினால் (எனக்கு) இன்பமும் இல்லை, (அவர் என்னை குறைகூறிக்கொண்டு வெறுத்து ஒதுக்கி) தூரத்தில் (இருப்பதனால் எனக்கு எந்த) தனிமையும் இ(ருக்கப் போவதி)ல்லை.’


அல்-அதப் அஷ்-ஷரிய்யா, 3/375 |  இமாம் இப்னு முப்லிஹ் அல்-ஹம்பலி (ரஹ்)



50. ஹசன் அல்-பஸ்ரி (ரஹ்) கூறினார்கள்:


"மரணம் இந்த உலக வாழ்க்கையின் யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது, அது (புத்திசாலித்தனமான நபருக்கு) அதில் மகிழ்ச்சியைக் காணும் வாய்ப்பை விட்டுவிடவில்லை."


ஹம் வல் ஹுஸ்ன் | பக்கம் 92| இமாம் இப்னு அபி துன்யா (ரஹ்)


கிதாப் அஸ்-ஸுஹ்த் | பக்கம் 209 | இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்)



51. இமாம் நவவி (ரஹ்) கூறினார்கள்:


"இறையச்சமுள்ள முன்னோர்கள் மற்றும் அவர்களை பின்பற்றியவர்களில் சிலர் தங்களுக்கு ஏற்பட்ட தேவைளுக்காக (இறைவனிடம்) துஆ செய்யும்போது; அவர்கள் தங்கள் முஸ்லிம் சகோதரனுக்காகவும் (அதே) பிரார்த்தனையை செய்வார்கள், ஏனெனில் (பிற சகோதரருக்காக செய்த துஆ) பதிலளிக்கப்படும் (என்பது தூதரின் மொழி); எனவே (இதன் காரணமாக) அவர்களும் தங்கள் துஆவிற்கான பலனை அடைந்து கொள்வார்கள்."


ஷர்ஹுன்-நவவி 'அலா முஸ்லிம், 4/17 | இமாம் நவவி (ரஹ்)



52. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:


 "அல்லாஹ்வின் தூதர் மரணமடைந்த நாளை விடக் கேவலமான அல்லது இருண்ட நாளை நான் கண்டதே இல்லை."


தக்ரீஜ் மிஷ்காதுல் மசாபீஹ், 5907 |  ஷேக் அல்பானி (ரஹ்) |  இதன் சங்கிலி தொடர் உண்மையானது



53. இமாம் இப்னுல் கைய்யூம் (ரஹ்) கூறினார்கள்:


"இறையச்சமுள்ள முன்னோர்கள் மற்றும் அவர்களை பின்பற்றி வந்தவர்களில் சிலர் கூறினார்கள்:


"இந்த உலக வாழ்க்கையில் சோதனைகள் (மட்டும்) இல்லையென்றால், தீர்ப்பு நாளில் நாம் திவாலாகி விடுவோம்."


ஸாத் அல்-மாத், 4/176| இமாம் இப்னுல் கைய்யூம் (ரஹ்)



54. இமாம் இப்னுல்-கைய்யூம் (ரஹ்) கூறினார்கள்:


 "(இறையச்சமும், இறை தியானமும் இல்லாத) கவனமற்ற (பொடுபோக்கான) இதயம்; ஷைத்தானின் சரணாலயம் ஆகும்,"


 தார் மிப்தாஹ் அஸ்-ஸதகா, 1/112 |  இமாம் இப்னுல்-கைய்யூம் (ரஹ்)



55. ஃபுழைல் இப்னு இயாழ் (ரஹ்) கூறினார்கள்:


"நாவை சிறைவைப்பதை விட கடுமையான ஹஜ்ஜோ அல்லது ஜிஹாதோ வேறில்லை."


சியார் அலாம் அன்-நுபாலா, 8/436 | இமாம் அத்-தஹபி சியர் (ரஹ்)



56. அபூஹாசிம், சலாமா பின் தீனார் (ரஹ்) அவர்களிடம்  கேட்கப்பட்டது:


 "யா! 'அபாஹாசிம், (இன்றைய காலத்தின்) விலைவாசிகள் எப்படி உயர்ந்துள்ளன என்பதை நீங்கள் கவனித்தீர்களா?" என்று.


(அதற்கு) அவர்கள் பதிலளித்தார்கள், ‘(விலைவாசி உயர்வு) உங்களைத் எந்த விதத்தில் தொல்லை செய்கிறது? (ஏனெனில்) விலைகள் மலிவாக இருந்த போது நமக்கு வாழ்வாதாரம் வழங்கிய, அதே இறைவன் (தானே) விலைவாசி  உயர்வாக இருக்கும் இப்பொழுதும்  வழங்குகிறான். (மேலும் வழங்குவான்). ”


 ஹில்யதில் அவ்லியா, 3/239 |  அபுநுஅய்ம் அல்-அஸ்ஃபஹானி (ரஹ்)



57. 'உவேஸ் அல்-கர்னி [அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டட்டும்] இவ்வாறு கூறினார்:


 "நீங்கள் [தொழுகைக்கு] எழுந்து நிற்கும்போது, ​​உங்களுக்காகச் சரிசெய்ய அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்;  உங்கள் இதயம் மற்றும் நோக்கம்.  இந்த இரண்டை விட அதிக சிரமமான எதையும் நீங்கள் காண மாட்டீர்கள்.


 Sifwat us-Safwah, 2/31 |  அல்-இமாம் இப்னு உல்-ஜவ்ஸி [அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டுவானாக]



58. அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ கூறினார்கள்:


 "சொர்க்கத்தில் இருந்து (ஹஜருல் அஸ்வத் எனும்) கருப்பு கல் இறங்கியபோது, ​​அது பாலை விட வெண்மையாக இருந்தது, ஆனால் ஆதம் (அலை) அவர்களின் குழந்தைகளின் பாவங்கள் அதை கருப்பு நிறமாக்கிவிட்டது."


 ஸஹீஹ் திர்மிதி, 877 |  ஷேக் அல்பானி (ரஹ்) |  ஸஹீஹ்


 அல்-முஹிப் அத்-தபரி (ரஹ்) இவ்வாறு கூறினார்கள்:


 "இந்த கருப்பு கல் என்பது நுண்ணறிவு உள்ளவர்களுக்கு ஒரு பாடம் ஆகும்.  பாவங்கள் ஒரு உயிரற்ற பாறையில் கூட இந்த விளைவை ஏற்படுத்தும் என்றால், அவை இதயத்தில் ஏற்படுத்தும் விளைவு (எவ்வளவு) அதிகம்! (என்பதை சிந்திக்க வேண்டும்) "


 ஃபத்ஹுல்-பாரி, 3/463 |  இமாம் இப்னு ஹஜ்ர் அல்-அஸ்கலானி (ரஹ்)



‏قال الحسن البصري رحمه الله:


يا ابن آدم بع دنياك بآخرتك تربحهما جميعا، ولا تبيعن آخرتك بدنياك فتخسرهما جميعا


حلية الأولياء ٢/١٤٣ | أبي نعيم الأصفهاني رحمه الله


59. ஹசன் அல்-பஸ்ரி (ரஹ்) கூறினார்கள்:


“ஆதமின் மகனே, உன் உலக வாழ்க்கையை மறுமை வாழ்வுக்காக விற்று(விட்டு)விடு, நீ (உலக வாழ்க்கை மற்றும் மறுமை வாழ்க்கை) இரண்டிலும் லாபம் அடைவாய். (ஆனால்) உன் மறுமை வாழ்க்கையை உங்கள் உலக வாழ்க்கைக்காக விற்று(விட்டு) விடாதே, ஏனெனில் அவ்வாறு செய்தால் நீ (உலகம் மற்றும் மறுமை வாழ்க்கை) இரண்டையும் இழந்துவிடுவாய். ”


ஹிலியதுல்-அவ்லியா, 2/143 |  அபி நுஅய்ம் அல்-அஸ்பஹானி (ரஹ்)



60. ஷெய்க் இப்னு உஸைமீன் [அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டுவானாக] கூறினார்கள்


"ஒரு நபர் பாவம் செய்வதைப் பார்க்கும்போது பல சகோதரர்கள்; அவரின் பாவத்தை வெறுக்கிறார்கள், இது ஏதோ நல்லது (மற்றும் சரியானது) தான். ஆனால் அவர்கள் அந்த பாவத்தை செய்தவரையும் சேர்த்து வெறுக்கிறார்கள். அவர்கள் பழிவாங்க நினைக்கும் ஒருவரை வெறுப்பதைப் போல கடுமையான முறையில் (அதே வழியில்) அந்த நபரை நடந்துகிறார்கள்.  இது ஒரு பெரிய தவறாகும். ஒரு காயத்தை குணமாக்குவதற்கு ஒரு சிறந்த மருத்துவர் எவ்வாறு சிகிச்சை அளிப்பாரோ, அதே போன்று நாமும் அந்த பாவியிடம் நடந்து கொள்வது கடமையாகும். அந்த மருத்துவர் காயத்தை  குணப்படுத்தவே சிகிச்சை அளிப்பாரே தவிர காயத்தை மோசமாக்க அல்ல. எனவே, (பாவத்தை மட்டுமே சரிசெய்ய வேண்டும் என்ற அக்கறையோடு) பாவம் செய்த நபரை  மென்மையாகவும் கருணையுடனும் நடத்த வேண்டும்.


மஜ்முல் ஃபதவா வ ரசயில், 27/311 | ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்)



61. இமாம் இப்னுல்-கைய்யூம் (அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டட்டும்) கூறினார்கள்:


 " (நிச்சயமாக) பாவம் மற்றும் ஊழல் செய்வது கவலை, துன்பம், பயம், சோகம், உள்ளம் இருகுதல் மற்றும் உளநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும் இவைகளுக்கான மருந்து மனம்வருந்தி (தவ்பா) செய்வதையும், (பாவ) மன்னிப்பு கேட்பதையும் தவிர வேறில்லை."


 Zād al-Ma'ād, 4/191 |  இமாம் இப்னுல்-கைய்யூம் (அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டுவானாக)



62. ஹாதிம் அல்-அஸ்ஸாம் (ரஹ்) கூறினார்கள்:


 "நான் மனித படைப்பைப் பார்த்தேன், (அதில்) ஒவ்வொரு நபருக்கும் அவருக்குப் (மிகவும்) பிரியமான ஒன்று இருப்பதை உணர்ந்தேன், ஆனால், அந்த (விருப்பமான) ஒன்று (அவர்) அவரது மண்ணறையை அடைந்ததும், அது அவரிடமிருந்து பிரிக்கபடுகிறது.  ஆகையால், (நான்) எனக்கு மிகவும் பிரியமானதாக என்  நற்செயல்களை ஆக்கிக் கொண்டேன், ஏனெனில், அவை என் மண்ணறையிலும் (பிரியாமல்) என்னுடன் இருக்கும்.


 முக்தசர் மின்ஹாஜீல்-காசிதீன் |  பக்கம் 28 | இமாம் இப்னு அல்-ஜவ்ஸி (ரஹ்)



63. இமாம் ஷாபியீ (ரஹ்) கூறினார்கள்:


"உங்களிடம் யார் (பிறரைப் பற்றி) புறம் பேசுகிறாரோ அவர் உங்களைப் பற்றி (யும் பிறரிடம்) புறம் பேசுவார்."


சியர் அலம் அன்-நுபாலா, 4/550 | இமாம் அத்-தஹபி (ரஹ்)



64. ஹாதிம் அல்-அஸ்ஸாம் (ரஹ்) கூறினார்கள்:


"மக்கள் ஒருவருக்கொருவர் பொறாமைப்படுவதை நான் கவனித்தேன், (பிறகு திருமறையான குர்ஆனில்) உயர்ந்தோன் அல்லாஹ்வின் கூற்றைப் பற்றி நான் சிந்தித்தேன்,


இவ்வுலகத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை அவர்களுக்கிடையில் நாமே பங்கிட்டு, அவர்களில் சிலருடைய பதவியை சிலரைவிட நாம்தான் உயர்த்தினோம். (அல்குர்ஆன்: 43:32)


எனவே நான் பொறாமையை விட்டுவிட்டேன், ஏனென்றால் அது அல்லாஹ்வின் பங்கிற்கு எதிரானதாகும்.


முக்தசர் மின்ஹாஜ் அல்-காசிதீன், பக்கம் 28, இமாம் இப்னு குதாமா அல்-மக்திஸி (ரஹ்)



65. இமாம் இப்னு ரஜப் அல்-ஹம்பலி (ரஹ்)  கூறினார்கள்:


இறையச்சமுள்ளவர்களில் சிலர், தங்கள் சட்டைப் பையில் ஒரு துண்டு காகிதத்தை வைத்துக்கொண்டு, காகிதத்தைத் திறந்து, ஒவ்வொரு மணி நேரமும் அதைப் பார்ப்பார்கள், (அந்த) காகிதத்தில் எழுதியிருந்தவை (இவைதான்)


உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இருப்பீராக! நீர் எம் கண்காணிப்பில் இருக்கின்றீர் (ஆகவே, அவர்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்து விட முடியாது.)


தஃப்ஸீர் இப்னு ரஜப் | பக்கம் 135 | இமாம் இப்னு ரஜப் அல்-ஹம்பலி (ரஹ்)



66. அமாஷ் (ரஹ்) கூறினார்கள்:


"நாங்கள் இறந்தவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வோம், (ஆனால் அந்த சபையில்) யாருக்கு ஆறுதல் கூறுவது என்று எங்களுக்குத் தெரியாது, ஏனென்றால் சபையிலுள்ள அனைவரும் மிக அதிகமாக அழுவார்கள். (ஆனால்) நிச்சயமாக அவர்கள் தங்கள் சொந்த ஆன்மாக்களுக்காக (அதாவது மறுமையில் தனது நிலமை என்னவாகும் என்று நினைத்தே) அழுவார்கள். இறந்தவருக்காக அல்ல."


அல்-அகிபா ஃபி திக்ர் ​​அல்-மவ்த் வல்-அகிரா | பக்கம் 154 | இமாம் அபி முஹம்மது அல்-இஷ்பீலி (ரஹ்)



67. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்:


اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا‏ 

“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).

(அல்குர்ஆன் : 76:9)


இதைப் பற்றி ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறினார்கள்:


" (தர்மம் செய்வதன் மூலம்) எவர் ஏழைகளிடமிருந்து துஆவையோ அல்லது புகழையோ தேடுகிறாரோ அவர் இந்த குர்ஆன் வசனத்தை மீறி விட்டார். (அதாவது, தன்னைத்தானே விலக்கிக் கொண்டார்)."


மஜ்மஉல் ஃபதவா, 11/111 | ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்)



68. குளிர்காலத்தில் நோன்பு நோற்பது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


"குளிர்காலத்தில் நோன்பு நோற்பதென்பது ஒரு குளிர் (கால) கொள்ளையாகும் (அதாவது வெகுமதியை எளிதில் பெறக்கூடியதாகும்)."


சில்சிலதுஸ்-ஸஹீஹா, 1922 | ஷேக் அல்பானி (ரஹ்)l ஹசன்



69. இமாம் இப்னுல்-கைய்யூம் (ரஹ்) கூறினார்கள்:


"ஒன்றை அடைய வேண்டிய விடயத்தில் யார் அல்லாஹ்வின் மீது (உண்மையான) நம்பிக்கை வைக்கிறாரோ அவர் அதனை (நிச்சயம்) அடைவார்."


மதாரிஜ் அஸ்-ஸாலிஹீன், 2/114 | இமாம் இப்னுல்-கைய்யூம் (ரஹ்)



70. இப்னு அதா (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டட்டும்) கூறினார்கள்:


"ஒரு பெண்ணின் அழகு (அவளுடைய) வெட்கமாகும், மேலும் ஒரு (சிறந்த) ஞானியின் அழகு (அவருடைய) மௌனமாகும்."


கிதாப் உஸ்-சம்த் | பக்கம் 213 இமாம் இப்னு அபி அத்-துன்யா (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டுவானாக)



71. உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

" (மக்களுக்கு) அறிவுரை கூறாதவர்களிடம் நன்மையில்லை, (மேலும் தனக்கு) அறிவுரை கூறப்படுவதை விரும்பாதவர்களிடமும் நன்மை இல்லை."

அல்-இஸ்திகாமா பீ மிய ஹதீஸ் நபவீ | பக்கம் 148


72. அஹ்மத் இப்னு அபி அல்-ஹவாரி (ரஹ்) கூறினார்கள்:

"நான் சுஃப்யான் இப்னு 'உயைனா (ரஹ்) அவர்களிடம்  கேட்டேன்: 'உலக வாழ்வில் ஸுஹ்த் (துறவறம்) என்றால் என்ன?' என்று.

(அதற்கு) அவர் பதிலளித்தார்: 'நீங்கள் (இறைவனால்) உதவி செய்யப்படும் போது நன்றியுடையவராகவும், சோதனையின் போது பொறுமையாகவும் இருந்தால், அதுவே ஸுஹ்த் (சந்நியாசம்) ஆகும்."

சியர் அலம் அன்-நுபாலா, 8/468 | இமாம் அத்-தஹபி (ரஹ்)


73. இமாம் அல்-அவ்ஸாயி (ரஹ்) ஒரு மனிதரிடம் கூறினார்கள்:

"(என்னை பற்றி) புறம் பேசாத, (என் மீது) பொறாமை கொள்ளாத, (என் மீது) வெறுப்பு இல்லாத ஒருவனுடைய வீட்டின்  பக்கத்தில் எனக்கு வீடு வேண்டும் என்றேன், (அதற்கு) அவர் என்னை மண்ணறைக்கு அழைத்துச் சென்று, 'இதோ (இதுதான் நீங்கள் விரும்பும் வீடு)" என்று கூறினார்.

ஜாமிஉல்-உலூம் அல்-ஹிகம், 2/182 | இமாம் இப்னு ரஜப் அல்-ஹம்பலி (ரஹ்)


74. இமாம் மஸ்ரூக் பின் அல்-அஜ்தா' (ரஹ்) கூறினார்கள்:

"தனிமையில்  அமர்ந்து, தனது பாவங்களை நினைவுகூர்ந்து, (அல்லாஹ்வின்) மன்னிப்பை (தனக்காக) தேடும் நேரங்கள், ஒரு நபரின் (வாழ்க்கையில் கட்டாயமாக) இருக்க வேண்டும்."

அல்-உஸ்லா | பக்கம் 35 | இமாம் அல்-கத்தாபி (ரஹ்)


75. அபுல்-உலா, ஹிலால் பின் கப்பாப் கூறினார்கள்: 

"நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன்:

'மறுமை நாளின் அடையாளம் என்ன, (மேலும்) மக்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டதற்கான அடையாளம் என்ன?' என்று.

அவர் பதிலளித்தார்கள்: ' *அவர்களுடைய அறிஞர்கள்* (மரணத்தின் வழியாக அவர்களை விட்டும்) *பிரிந்து செல்வது.* (ஏனெனில், அவர்களின் பிரிவின் காரணமாக , மக்கள் மார்க்க விடயங்களில் கவனக்குறைவாகவும் வழிகெட்டவர்களாகவும் ஆகிவிடுவார்கள்."

ஜாமி' பயானுல்-'இல்ம் வ ஃபத்லிஹி, 202 | அல்-ஹாபிழ் இப்னு அப்தில்-பர்ர் (ரஹ்)


76. அல்லாஹ் கூறுகின்றான்:

“وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏ 
அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 25:72)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"இந்த குர்ஆன் வசனம் சிலை வழிபாட்டாளர்களின் (அதாவது, ஏக இறைவனாகிய அல்லாஹ்வை நம்ப மறுப்பவர்களின்) பண்டிகைகளைக் குறிக்கிறது."

தஃப்ஸீர் அல் குர்துபி, 15/484 | இமாம் அல்-குர்துபி (ரஹ்)


77. ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறினார்கள்:

"தீங்கு விளைவிக்கும் (பொருள்) ஒன்றைத் தெருவில் இருந்து அகற்றுவது தர்மம் என்றால், தீங்கு விளைவிக்கும் (பொருள்) ஒன்றைத் தெருவில் வீசுவதும் தீமை (அதாவது பாவம்) தான். இந்த (பாவச் செயல்) தங்கள் குப்பைகளை நடுத்தெருவில் வீசுபவர்களையும் உள்ளடக்கும்!"

ஷர்ஹுர் ரியாளுஸ் - ஸாலிஹீன், 3/37 | ஷேக் இப்னு உஸைமீன் (ரஹ்)


78. இமாம் இப்னு அல்-ஜவ்ஸி (ரஹ்)  கூறினார்கள்:

"மாண்பும் மகத்துவமுமிக்க, உயர்ந்தோனாகிய அல்லாஹ்வுக்காக நேர்மையான நோக்கத்துடன் (இக்லாஸோடு) செயல்களைச் செய்பவர்கள் எவ்வளவு குறைவாக இருக்கிறார்கள்!!!!. (ஆனால் அதற்கு பதிலாக) பெரும்பான்மையான மனிதர்கள் தங்கள் வழிபாட்டுச் செயல்களை விளம்பரப்படுத்தவே விரும்புகிறார்கள்."

சயீதுல்-காதிர் | பக்கம் 251 | இமாம் இப்னுல்-ஜவ்ஸி (ரஹ்)


79. ஷமய்த் பின் அஜ்லான் (ரஹ்) கூறினார்கள்:

"ஓ' ஆதமின் மகனே, நீ ( தேவையற்ற பேச்சுகளை பேசாமல்) அமைதியாக இருக்கும் வரை, நீ பாதுகாப்பாகவே இருக்கிறாய். (ஆனால்) நீ பேச ஆரம்பித்தால் (உனது பேச்சில் நீ) கவனமாகவே இருந்துக் கொள், (ஏனென்றால் ஒன்று) அது உனக்கு ஆதரவாக (உன்னை உயர்த்துவதாக இருக்கும்) அல்லது உனக்கு எதிராக உன்னை (தாழ்த்திவிடுவதாய் அது) இருக்கும்!"

ஜாமிஉல்-உலூம் வல்-ஹிகம் | பக்கம் 249 | அல்-ஹாபிழ் இப்னு ரஜப் அல்-ஹம்பலி (ரஹ்)


80. இமாம் அஸ்-ஸஅதி (ரஹ்) கூறினார்கள்:

"உண்மையில் வறுமை என்பது நிரந்தரமாக (தொடர்ந்து) செய்யகூடிய ஸாலிஹான  அமல்களை  செய்வதிலிருந்து (தடுக்கப்பட்டு) திவாலாகி நிற்பதே."

(ஸாலிஹான நற்செயல்கள் என்பது, அல்லாஹ்வுக்குப் பிரியமான அனைத்து  செயல்களுமாகும், அத்தகைய செயல்கள் நிறைய இருக்கின்றன. ஐவேளைத் தொழுகை, அல்லாஹ்வை நினைவு கூர்தல், தர்மம் செய்தல் போன்றவை அவற்றில் உள்ள செயல்களாகும்.)

மஜ்மு' மு'அல்லஃபதிஹி, 6/178 | இமாம் அஸ்-ஸஅதி (ரஹ்)


81. ஷேக் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறினார்:

"அறிவுள்ளவர்கள் மக்களை எச்சரிப்பது  மிகவும் அவசியமாகும், ஆனால் கருணையுடன் (நல்ல வார்த்தைகளை கொண்டு எச்சரிக்கை செய்ய வேண்டும்), ஏனென்றால் மக்களை (கடின வார்த்தைகளை கொண்டு) கண்டித்தால் அவர்கள் (உங்களிடமிருந்து) ஓடிவிடுவார்கள், ஆனால் அவர்களை ஞானத்துடனும் மென்மையுடனும் அணுகினால் அவர்கள் (உங்கள் ஆலோசனையை) ஏற்பார்கள் "

அஷ்-ஷர்ஹ் அல்-மும்தி' அலா ஸாத் அல்-முஸ்தக்னி', 3/204 | ஷேக் முஹம்மது பின் சாலிஹ் அல்-உஸைமீன் (ரஹ்)


82. இமாம் இப்னு குதாமா (ரஹ்) கூறினார்கள்:

"மற்றவர்களை  திருத்துவதற்கு முன் உங்களை நீங்களே திருத்துவதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வெளிப்புறத் தோற்றத்தைத் திருத்தி (அழகாக்குவதற்கு முன், உங்கள் உள்(ளத்தின்)நிலையை பேராசை, பொறாமை, ஆடம்பரம் மற்றும் சுய-பெருமை போன்ற பழிக்குப் பாத்திரமான பண்புகளிலிருந்து அதைத் தூய்மைப்படுத்துவதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்."

முஹ்க்தசர் மின்ஹாஜ் அல்-காசிதீன் | பக்கம் 22 | இமாம் இப்னு குதாமா அல்-மக்திஸி (ரஹ்) 


83. இமாம் இப்னு குதாமா (ரஹ்) கூறினார்கள்:

"மற்றவர்களை  திருத்துவதற்கு முன் உங்களை நீங்களே திருத்துவதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வெளிப்புறத் தோற்றத்தைத் திருத்தி (அழகாக்குவதற்கு முன், உங்கள் உள்(ளத்தின்)நிலையை பேராசை, பொறாமை, ஆடம்பரம் மற்றும் சுய-பெருமை போன்ற பழிக்குப் பாத்திரமான பண்புகளிலிருந்து அதைத் தூய்மைப்படுத்துவதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்."

முஹ்க்தசர் மின்ஹாஜ் அல்-காசிதீன் | பக்கம் 22 | இமாம் இப்னு குதாமா அல்-மக்திஸி (ரஹ்) 


84. இமாம் அல் - பாகவி (ரஹ்) கூறினார்கள்:

"ஒரு மனிதர் யஹ்யா பின் முஆத் (ரஹ்)  அவர்களிடம் வந்து அவர் முன்னிலையில் ஓர் வசனத்தை ஓதினார்:

فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى‏ 
“நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.”
(அல்குர்ஆன் : 20:44)

(இதை கேட்டவுடன்)  யஹ்யா அழ ஆரம்பித்தார். அப்போது அவர் கூறியதாவது:

'என் இறைவா, *'நானே உன்னுடைய மகத்துவமிக்க இறைவன் (أنا ربكم الاعلى )!"* என்று சொன்ன (பிர்அவ்னுக்கு) இதுவே உமது இரக்கமும் மென்மையும் என்றால்.  *'அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து, என் இறைவன் மிகத்தூய்மையானவன், மகத்துவமிக்கவன் (سبحان ربي الاعلى)* என்று சொல்லகூடியவனுக்கு உன் கருணையும் இரக்கமும் எப்படி இருக்கும் !!!!!! (سبحان لله)  "

(ஃபிர்வ்ன் தான் தான் அகிலத்தாரின் இறைவன் என உரிமை கோரினான்)

தஃப்ஸீர் அல்-பாகவி, 1/274 | இமாம் அல்-பகவி [அல்லாஹ் அவருக்கு கருணை புரிவானாக]


85. கஅப் (ரஹ்) கூறினார்கள்:

"(ஒருவரைப் மற்றவர்களிடம்) கிசுகிசுப்பதை அஞ்சிக் கொள்ளுங்கள், (ஏனெனில் அவ்வாறு) கிசுகிசுப்பவர், நிச்சயமாக  மண்ணறையின் வேதனையிலிருந்து தப்பிக்கவே முடியாது."

Mawsu'ah ibn Abi Dunyah | தொகுதி 4, பக்கம் 405 | இமாம் இப்னு அபி துன்யா (ரஹ்)

(கிசுகிசு (النميمة) என்பது (உறவுகளை அழிக்க தீங்கிழைக்கும் வதந்திகளை பரப்புதல். அதாவது சிலருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்காக மற்றவர்கள் அவர்களைப் பற்றி என்ன சொன்னார்கள் என்று கூறுவது).

இறைவன், நம்மை கப்ரின் வேதனையிலிருந்து  பாதுகாப்பானாக.


86. அல்-லஹ்ஹாக் இப்னு முஸாஹிம் (ரஹ்) அவர்கள் மாலையில் அழுது கொண்டிருந்தார்கள்.

அவரிடம், 'உங்களை அழ வைப்பது எது?' என்று கேட்கப்பட்டது

(அதற்கு) அவர் பதிலளித்தார்: '(நான் அழுவதற்குக் காரணம்; நான் செய்த) எனது செயல்களில் எது இன்று ஒப்புக்கொள்ளப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை." என்பதே.

அர்-ரிக்கா வல்-புக்கா | பக்கம் 176| இமாம் இப்னு அபி துன்யா (ரஹ்)


87. இமாம் இப்னுல் கைய்யூம் (ரஹ்) கூறினார்கள்:

“(பேசப்படுவதற்கு முன் உங்களுடைய அனைத்து ) பேச்சு(க்களும்) உங்களுடைய கைதியாகும், ஆனால் அது உங்கள் வாயை விட்டு வெளியேறும் தருணம் நீங்கள் அதன் கைதியாகின்றீர்கள்.  (மேலும்) அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ஒவ்வொரு பேச்சாளருக்கும் ஒரு நாக்கு இருக்கிறது. ”

 அல்-ஜவாப் அல்-கஃபி |  பக்கம் 249 |  இமாம் இப்னுல் கய்யூம் (ரஹ்)
 
(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.)
(அல்குர்ஆன் : 50:18)


88.  உமர் பின் ‘அப்துல்-அஜீஸ் (ரஹ்) கூறினார்கள்:

 "பொய் சொல்வது பொய் சொன்னவரை மோசமாக பாதிக்கும் என்பதை அறிந்ததிலிருந்து நான் ஒருபோதும் பொய் சொன்னதில்லை."

சியார் அலம் அன்-நுபாலா, 5/121 |  இமாம் அத்-தஹபி (ரஹ்)


89. உண்மையான இறையன்பு

யஹ்யா பின் முஆத் (ரஹ்) கூறினார்கள்:

"இறைவன் விதித்த வரம்புகளை பாதுகாக்காமல் (மீறி கொண்டு, நான்) அல்லாஹ்வை நேசிக்கிறேன் என்று கூறுபவர் உண்மையற்றவர் ."

 ஜமி ’உல்-உலும் வல்-ஹிகம் |  பக்கம் 86 |  இமாம் இப்னு ரஜப் அல்-ஹம்பலி (ரஹ்) 


90. ஃபுழைல் இப்னு இயாழ் (ரஹ்) கூறினார்கள்:

இரண்டு பண்புகள் உள்ளத்தை கடினமாக்குகின்றன:

"அதிகமாக பேசுவது மற்றும் அதிகமாக உண்பது."

சியர் அலம் அன்-நுபாலா, 8/440 | இமாம் அத்-தஹபி (ரஹ்)


91. இமாம் இப்னுல்-கைய்யூம் (ரஹ்) கூறினார்கள்:

" (கற்பதின் மூலம் பெறப்படும்) அறிவும், அதன்படி செயல்(படுத)லும் (ஒன்றாய் ஒட்டிப் பிறந்த) இரட்டையர்களை போன்றவை. மன உறுதி (இந்த இரட்டையர்களின்) தாய் ஆகும்."

பதயில்-ஃபவாயித் 3/727 | இமாம் இப்னுல் கைய்யூம் (ரஹ்)


‏قال شيخ الإسلام ابن تيمية رحمه الله:

المنازلُ العاليةُ لا تنالُ إلَّا بالبلاء.

مجموعة الفتاوىٰ لشيخ الإسلام ابن تيمية ٣٠٢/٢٥ 

92. ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறினார்கள்:

"சோதனைகளின் மூலமே தவிர உயர்ந்த பதவிகளை அடைய முடியாது."

மஜ்முல் ஃபதவா, 25/302 | ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்)


93. ஷேக் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறினார்கள்:

" நாட்கள் (வேகமாக) ஓடிகொண்டிருக்கின்றன, ஆனால் நான் அல்லாஹ்வின் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறேனா அல்லது என்னை அவனைவிட்டு விலக்கிக் கொண்டிருக்கின்றேனா என்று தெரியவில்லை?

(இதே போன்று என்றாவது) இந்த விஷயத்தில் நம்மை நாமே சுயபரிசோதனை செய்துல்லோமா?!"

அல்-கவ்ல் உல்-முஃபீத், 1/150 | ஷேக் இப்னு உதைமீன் [அல்லாஹ் அவர் மீது கருணை காட்டுவானாக]


94. சயீத் பின் முஸய்யீப், (ரஹ்) கூறினார்கள்:

"யார் ஐந்து நேர கடமையான தொழுகைகளை ஜமாஅத்தாகக் கடைப்பிடிக்கின்றாரோ, அவர் நிச்சயமாக நிலத்தையும் கடலையும் வணக்கத்தால் நிரப்பிவிட்டார்."

ஹிலியதுல்-அவ்லியா, 2/160 | அபு நுஐம் அல்-அஸ்பஹானி (ரஹ்)


95. சுஃப்யான் அஸ் ஸவ்ரி (ரஹ்) கூறினார்கள்:

"உனக்கு செய்த உபகாரத்தை எண்ணுகிறவனோடு (அதாவது சொல்லிக் காட்டுகின்றவனோடு) நீ உறவு வைக்காதே ."

ஷுஅபுல்-ஈமான், 8882 | இமாம் அல்-பைஹகீ (ரஹ்)


96. ஷேக் முஹம்மது அல்-அமீன் அஷ்-ஷிந்தகி (ரஹ்)  கூறினார்கள்:

"அறிவு கூர்மைய உடையவர்கள், தூரநோக்கு சிந்தனையுடையவர்கள் மற்றும் மதிநுட்பமுடையவர்கள் முட்டாள்களின் விமர்சனத்தில் கவனம் செலுத்துவதே இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்."

அத்வா அல்-பயான், 1/7 | ஷேக் முஹம்மது அல்-அமீன் அஸ் ஸிந்தகி (ரஹ்)


97. ஷேக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (அல்லாஹ் அவரைப் பாதுகாக்கட்டும்) கூறினார்கள்:

" (உண்மையான) நம்பிக்கையாளர், நேரான வழி (எது என்பதை) அறிந்திருந்தாலும், (அதன்படி) செயல்பட்டாலும், அதை உறுதியாக நம்பினாலும், (எல்லா நேரங்களிலும்) அந்த நேரான பாதையில் உறுதியையே அல்லாஹ்விடம் கேட்பார்."

தலீக் 'அலா ஷர்ஹுஸ்-சுன்னா, 1/48 | ஷேக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (அல்லாஹ் அவரைக் பாதுகாப்பானாக)


98. முஹம்மது இப்னு சீரீன் (அல்லாஹ் அவருக்கு கருணை புரிவானாக) கூறினார்கள்:

" (மக்களிலே) அதிகம் தவறு செய்யக்கூடியவர்கள்,  மற்றவர்களின் தவறுகளை நினைவுகூறுபவர்களே."

அல்-முஜாலசஹ் வ-ஜவாஹிருல்-இல்ம், 6/86 2406 | அபுபக்கர் அத்-தயினூரி (ரஹ்)


99. தாபியி ஒருவர் கூறினார்:

"லைலத்துல் கத்ர் இரவு (365 நாட்களை கொண்ட ஒரு) ஆண்டில் ஒரு இரவாக (இருக்கலாம் என அறிவிக்கப்பட்டு) இருந்தால், அதை
அடைந்து கொள்வதற்காக(வும் மற்றும் அதன் நன்மையை அடையவும்) நான் ஆண்டு முழுவதும் இரவுத் தொழுகையில் நிற்பேன். எனவே (இலகுவாக அறிவிக்கப்பட்டிக்கும் வெறும்) பத்து இரவுகளில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்!"


100. ஷேக் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறினார்கள்

"(இறையச்சமுள்ள அடியானின் அழகிய) அமல்கள் (நோன்பின் மாதம் அல்லது சிறப்பித்து கூறப்பட்ட) அதன் பருவங்களோடு மட்டும் முடிவடையாது. 

நிச்சயமாக (இறையச்சத்தால் செய்த) அமல்கள் குறிக்கப்பட்ட நேரம் (அதாவது மரணம்) வந்தால்தான் நிறைவடையும்."

லிகா அல்-பாபுல்-மஃப்துஹ், 51 | ஷேக் இப்னு உஸைமீன் (ரஹ்)


101. இமாம் இப்னுல் கய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"இதயத்தை மூன்று இடங்களில் தேடுங்கள். (அதாவது மூன்று இடங்கள் நம் உள்ளத்திற்கு விருப்பமானதாக இருக்க வேண்டும்):

 1. குர்ஆன் ஓதப்படும் இடங்கள்.

2. அல்லாஹ்வை பற்றி  நினைவுகூறப்படும் கூட்டங்கள்.

3. (இறையுணர்வோடு கூடிய) தனிமை. 

இந்த இடங்களில் நீங்கள் அதைக் காணவில்லை எனில்,

நல்ல  மனதை கொண்டு (அருள் செய்வதற்கு) அல்லாஹ்விடம் மன்றாடுங்கள். 

 ஏனென்றால் உங்களுக்கு இதயமே இல்லை!

 Al-Fawaid  1/149 |  இமாம் இப்னுல் கய்யூம் (ரஹ்)


102. நடிகர் நடிகைகளையும், விளையாட்டு வீரர்களையும் தன் நேசனாகவும் முன்மாதிரியாகவும் எடுத்துக்கொண்டோர்களே!!

ஃபுழைல் இப்னு இயால் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான கொள்கைகளையுடைய ஒருவனை எவன் தன் நேசனாக (அல்லது முன் மாதிரியாக) ஆக்கிக் கொள்கின்றானோ, அல்லாஹ் அவனுடைய நல் அமல்களை அழித்து விடுவான், மேலும் இஸ்லாத்தின் ஒளியை அவன் இதயத்திலிருந்து அகற்றுவான்.” 

 அல்-இபனா அல்-குப்ரா, 2/459, 440 |  இமாம் இப்னு பத்தா (ரஹ்)

Sharh usul l'tiqad Ahlus sunnah wal- jamaah, 1/155, 263 |  Imam al- Lalikaee (ரஹ்)

 ஹிலியதுல்-அவ்லியா, 8/103 |  இமாம் அபூ நுஅய்ம் அல்-அஸ்பஹானி (ரஹ்)


103. உள்ளம் கடினமாக உள்ளதா?

இமாம் ஹஸனுல் பஸரீ (رحمه الله) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து கூறியதாவது:

"அபூ ஸயீத் அவர்களே, உள்ளத்தின் கடினத்தன்மை பற்றி உங்களிடம் கேட்கிறேன் என்று கூறினார். 

இமாம் அவர்களின் பதில் :

"அல்லாஹ்வை நினைவுபடுத்துவதன் (الذكر) மூலம் அதனை (உள்ளத்தை) சீர்படுத்திக்கொள்..!"

நூல்: த(ذ)ம் அல்-ஹவா  69 | இமாம் இப்னுல் ஜவ்ஸி (رحمه الله)


104. ஹஸன் அல்-பஸ்ரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் முதர்ரஃப் இப்னு அப்தில்லாஹ்விடம் கூறினார்கள் 

"உங்கள் தோழர்களுக்கு அறிவுரை கூறுங்கள்!" என்று. (அதற்கு) அவர்கள் பதிலளித்தார்கள்

“நான் செய்யாத ஒன்றை அவர்களிடம் சொல்ல நான் பயப்படுகிறேன்”. என்று

ஹஸன் (ரஹிமஹுல்லாஹ்) பதிலளித்தார்கள் 

“அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவானாக! சொல்வதையெல்லாம் செய்பவர் நம்மில் யார்(தான்) இருக்கின்றார்கள்?

இப்படித்தான் ஷைத்தான் தனது இலக்கை அடைகிறான், 

(இவ்வாறு எண்ணுவதன் மூலம்) யாரும் நன்மையை ஏவவும், தீமையைத் தடுக்கவும் மாட்டார்கள்

(தஃப்சீர் அல்-குர்துபி (ரஹிமஹுல்லா), 13677


Previous Post Next Post