ஸலபுகளிடமிருந்து.. பகுதி 04

ஸலபு & ஸலபிகளின் வாழ்வு/கூற்றுகளிலிருந்து..

தொகுப்பு & தமிழாக்கம்: 
அ(z)ஸ்ஹான் ஹனீபா (மதனி)


1. ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவை வெறுப்போரின் நிலை
================================
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் : "ஒரு மனிதர் உங்களை, நீங்கள் அவரது தாய் இல்லை என்றுகூறுகிறார் எனக் கூறப்பட்டது , அப்பொழுது
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்: அவர் உண்மை தான் கூறியுள்ளார்! ஏனெனில் நான் முஃமின்களின்தாய், முனாஃபிகீன்களின் ( நயவஞ்சகர்களது ) தாய் அல்ல" என்று விடையளித்தார்கள். 

நூல்: அஷ்ஷரீஅது லில் ஆஜுரீ 5/3394


2. ஜமாஅத்கள்(குழுக்கள்), கட்சிகள், இயக்கங்கள், தனிப்பட்டவர்கள் போன்ற எவற்றுடனும் சாராதுமார்க்கத்துடன் மாத்திரம் சார்ந்திரு!
==================================
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களிடம், நீர் அலீ (ரலி) அவர்களது மார்க்கத்தில்உள்ளீரா அல்லது உஸ்மான் (ரலி) அவர்களது மார்க்கத்தில் உள்ளீரா? என்று வினவப்பட்டது

அப்பொழுது அவர்கள் " நான் அலீ (ரலி) அவர்களது மார்க்கதிலுமில்லை, உஸ்மான் (ரலி) அவர்களதுமார்க்கதிலுமில்லை, மாறாக நான் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மார்க்கத்தில்மாத்திரம் இருக்கிறேன்" என்று விடையளித்தார்கள்.

நூற்கள்: அல் இபானா: (1/251), மஜ்மூஉல் பதாவா:( 3/415)


3. ஸூபிய்யாக்களின் விபரீதங்கள் பற்றி இமாம் ஷாபிஈ-ரஹிமஹுல்லாஹ்- அவர்களது கூற்றுக்கள்
===============================
1) யூனுஸ் இப்னு அப்தில் அஃலா -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் ஷாபிஈ-ரஹிமஹுல்லாஹ்-அவர்கள் கூற தாம்கேட்டதாக கூறுகிறார்கள்: 

"நிச்சயமாக ஒரு மனிதன் பகலின் ஆரம்ப வேளையில் ஸூபியாக மாறினால் (ஸூபியானால்), ளுஹ்ர்நேரமானதும் முட்டாளாக அவனை நீ கண்டுகொள்வாய்."

நூல்: இமாம் அல் பைஹகீ அவர்களது மனாகிபுஷ் ஷாபிஈ (2/2017)
(உறுதியான அறிவிப்பாளர் வரிசை கொண்டது)

2) மேலும் இமாம் ஷாபிஈ -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: 

"யார் ஒருவர் நாற்பது நாட்களுக்கு ஸூபிய்யாக்களுடன் சேர்ந்துகொள்கிறாரோ, அவரது மூளை (சுய சிந்தனை) ஒருபோதும் அவருக்கு மீண்டு வரமாட்டாது."

நூல்: தல்பீஸு இப்லீஸ் (பக்கம்: 327)


4. அழைப்புப் பணி மட்டும் போதும் அரசியல் வேண்டாம்
============================
அல்லாமா அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
 ‍‍‍‍‍‍ ‍‍
“எனது உபதேசம் யாதெனில் நீங்கள் மார்க்கத்தின் பால் மக்களை அழைக்கும் பணியை தொடர்ந்துமேற்கொள்வதோடு அரசியலை விட்டும் தூரமாக இருப்பதாகும்; ஏனெனில் இத்தகைய முறை தான் சிறந்ததும்நிலையானதுமாகும்.”
 ‍‍‍‍‍‍ ‍‍
நூல்: ஸில்ஸிலதுல் ஹுதா வன்னூர் (1/94)
 ‍‍‍‍‍‍ ‍‍

5. என் தவறை என்னிடம் சுட்டிக்காட்டுங்கள்
=============================
அல்லாமா முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

என்னைப் பற்றி நீங்கள் வெறுப்பவற்றை செவியுற்றால் என்னை அணுகுங்கள், ஏனெனில் நானும் சிலவேளைதவறிழைக்கக்கூடியவன், ஆதலால் அல்லாஹ் உங்களது கரங்களின் மூலம் எனக்கு நேர்வழியைநல்கியிருப்பான். 

லிகாவுல் பாபில் மப்தூஹ் (68)


5. ஆலிம்களைப் புறக்கணிப்பதே அனைத்து சோதனைகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் காரணமாகும்
============================
அல்லாமா முக்பில் இப்னு ஹாதீ அல்வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
 ‍‍‍‍‍‍ ‍‍
"அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் காரணம் கற்றறிந்த ஆலிம்களைப் புறக்கணித்தமையாகும்."
(இஜாபதுஸ் ஸாஇல் 18)
 ‍‍‍‍‍‍ ‍‍

6. ஸுன்னாக்களை அறிந்துகொண்டால் பித்அத்களை அடையாளம் காணலாம்..
==================================
அல்லாமா முஹம்மத் நாஸிருத்தீன் அல் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 

" நீ (முதலில்) ஸுன்னாவை அறிந்துகொள் ( அவ்வேளையில்) மக்களால் மார்க்கத்தில் இல்லாதவற்றைஉள்ளதாக கொண்டுவரபட்டவற்றை ( பித்அத்தை) அறிந்துகொள்வாய், ஆனால் நீ பித்அத்தை மாத்திரம்அறிந்துகொண்டால் ஒருக்காலும் ஸுன்னாவை அறிந்துகொள்ளமுடியாது."   

அல்ஹுதா வன்னூர்: (715)


7. பிரச்சினைகள் தோன்றுவதற்கான காரணம்
============================
இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 

"அனைத்து பிரச்சினைகளும் தோன்றுவதற்கான அடிப்படைக் காரணம், மார்க்கத்தை விட சுய கருத்தையும், பகுத்தறிவை விட மனோஇச்சையையும் முற்படுத்துவதாகும்."

நூல்: இகாததுல் லஹ்ஃபான் (2/165)


8. மார்க்கத்தில் நலவு என்று மக்களால் புதிதாக ஏற்படுத்தப்படுகின்றவற்றின் நிலை என்ன? 
==================================
இமாம் இப்னுல் மாஜிஷூன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ்  அவர்கள் கூறத் தாம்கேட்டதாகக் கூறுகிறார்கள்: 

" யார் மார்க்கத்தில் இல்லாதவற்றை (பித்அத்களை) மார்க்கமாக ஏற்படுத்தி , அவற்றை நலவாகக்கருதுகிறாரோ, அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதுத்துவத்திற்கு மோசடி செய்துவிட்டார்கள்என்று எண்ணிவிட்டார்; ஏனெனில் அல்லாஹு தஆலா கூறுகிறான் " இன்றைய தினம் நான் உங்களுக்குஉங்களது மார்க்கத்தை பூர்த்தியாக்கிக் கொடுத்துள்ளேன்"
எனவே அந்நாளில் எதுவெல்லாம் மார்க்கமாக இல்லையோ, இன்றும் அவை மார்க்கமாக கருதப்படமாட்டா"

நூல்: அல் இஃதிஸாம் லிஷ் ஷாதிபிய் (பாகம் :1/ பக்:49)
பதிப்பகம்: தாருன் நஷ்ர்- அல் மக்தபதுத் திஜாரிய்யதுல் குப்ரா- எகிப்து

قال ابن الماجشون سمعت مالكا يقول من ابتدع في الاسلام بدعه يراها حسنه فقد زعم ان محمدا ( صلى الله عليه وسلم ) خان الرسالة لانالله يقول ( اليوم أكملت لكم دينكم ) فما لم يكن يومئذ دينا فلا يكون اليوم دينا .

الاعتصام ـ للشاطبى : ج 1 / ص 49 .
دار النشر : المكتبة التجارية الكبرى - مصر .


9. தகுதியிருந்தும் திருமணத்தை பிற்போடுவதன் நிலை 
=================================
அல்லாமா முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 
“ ஒரு மனிதனுக்கு திருமணம் முடிப்பதற்கான உடல் மற்றும் செல்வ சக்தியிருந்தும் திருமணத்தைபிற்போடுவதானது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது வழிகாட்டலுக்கு முரணானதாகும்”

நூல்: பதாவா நூரின் அலத்தர்ப் (பாகம் 10, பக்கம் 08)


10. பெருநாள் தினத்தில் சந்தோசங்களைப் பரிமாறுவதும் மார்க்கத்தில் விரும்பக்கதொன்றாகும்
=================================
இமாம் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்:

" பெருநாள் தினங்களில் சந்தோசத்தை வெளிப்படுத்துவது மார்க்க சின்னங்களில் உள்ளதாகவும்."

நூல: ஃபத்ஹுல் பாரி 2/443


11. சத்திய இஸ்லாத்தின் அளவுகோல் மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்ட வழிமுறையே அன்றிமகான்களோ, மாமேதைகளோ இமாம்களோ அல்லர்
=================================
அல்லாமா இப்னு உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: 

அல்லாஹ் திருமறையில்: " أُولَٰئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ ۖ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ ۗ " (பொறுப்பாக்கப்பட்ட) அவர்கள்எத்தகையோரெனில், அல்லாஹ் அவர்களை நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், அவர்களுடையநேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக " என்று கூறுகிறான்.

அல்லாஹ்: பிb ஹுதாஹும் " அவர்களது நேர்வழியை" என்று குறிப்பிடுகின்றானே தவிர  பிb ஹிம் " அவர்களைப்(பின்பற்றுவீராக)" என்று குறிப்பிடவில்லை; ஏனெனில் ஏற்கத்தக்கதான அளவுகோல் (சரியான அடிப்படைகளக்கொண்ட) வழிமுறையே அன்றி ஆட்கள் அல்ல, ஓர் சீர்திருத்தவாதி அல்லது ஓர் இஸ்லாமிய அழைப்பாளர்சத்தியத்தை (உண்மையை) விட்டும் தடம்புரண்டால்   நீர் ஒருபோதும் அவர்களில் தங்கி பிடிவாதம் பிடிக்காதே! ; ஏனெனில் சத்தியம் (உண்மை) அதிகமான எண்ணிக்கையினரைக் கொண்டு எடைபோடப்படுவதல்ல (மாறாக) சத்தியம்  என்பது இறை வேதத்திற்கும் அஸ்ஸுன்னாவிற்கும் உடண்பாடாக ஒத்திருப்பதைக் கொண்டேகணிக்கப்படுவதாகும்."

நூல்: அஷ்ஷர்ஹுல் மும்திஃ (4/379)


12. எனது வார்த்தையை விட இஸ்லாத்தின் ஆதாரங்களே முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்-இமாம் ஷாபிஈ (ரஹ்)
=================================
இஸ்லாமிய சட்டத்துறையில் மாபெரும் நான்கு இமாம்களுள் ஒருவரான இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ்அவர்கள் தன்னைப் பின்பற்றுவதை தவிர்த்து ஆதாரங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி பின்வரும் தமதுஅழகிய வார்த்தையை பதிவுசெய்துள்ளார்கள்: 

" எனது நூலில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸுன்னாவுக்கு மாற்றமானஒன்றை நீங்கள் கண்டு கொண்டால், ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களதுஸுன்னாவை மாத்திரம் கூறுங்கள்(ஸுன்னாவை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள்), அத்தோடு நான்கூறியவற்றை விட்டுவிடுங்கள்"  

( இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மஜ்மூஉ எனும் நூலில் 1ம் பாகத்தில் 62ம் பக்கத்தில்பதிவுசெய்துள்ளார்கள்)


13. தாடி ஆண் வர்க்கத்தினரின் அழகின் இரகசியம்
=============================
தாடியைப் பற்றி இமாம் ஸஃதி -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுவதை அவதானியுங்கள்

*"நிச்சயமாக அல்லாஹ் ஆண்களை தாடிகளைக்கொண்டு கண்ணியப்படுத்தி அவற்றை அவர்களுக்குஅழகாகவும் கண்ணியம் பொருந்தியதாகவும் ஆக்கியுள்ளான், அத்தாடிகளை மழித்து அவற்றை கேவலப்படுத்திநபியவர்களுக்கு பகிரங்கமாக மாற்றம் செய்பவர்களுக்கு அந்தோ பரிதாபம் (அந்தோ நாசமடைந்துவிட்டனர்)."*

நூல்: அல்ஃபவாகிஹுஷ் ஷஹிய்யஹ் (73)

قال ابن سعدي رحمه الله تعالى :

*"لقد أكرم الله الرّجال باللّحى وجعلها لهم جمالاً ووقاراً*
*فيا ويح من حلقها وأهانها وعصى نبيّه جهارا !" ً*

الفواكه الشهية(٧٣).


14. அறிவை முற்படுத்தி இறைச் செய்தியை (வஹியை) மறுப்போரின் நிலை 
==============================
இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : 
"ஒருவர் தமது அறிவின் மூலம் வஹியை மறுத்தால் , அவரை அறிவாளிகள் பார்த்து சிரிக்கின்றனர் என்று கூறும்அளவுக்கு அவரது மூளையை அல்லாஹ் கெட ( சீர்குலைய) வைத்துவிடுவான்."

( முக்தஸருஸ் ஸவாஇக் : 2/376)


15. பாவம் நடைபெறும் சபைகளில் அமர்வதன் மார்க்கத் தீர்ப்பு 
================================
▪قال الامام القرطبي رحمه الله -:
” كل من جلس في مجلس معصية ولم ينكر عليهم يكون معهم في الوزر سواء “ .
[ أحكام القران ٥/ ٤١٨] .

இமாம்  அல் குர்துபீ ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :

" பாவம் செய்பவர்களைத் தடுக்காது அப்பாவம் நடைபெறும் சபையில் அமரும் அனைவருக்கும் சமமான குற்றம்உண்டு ( பாவத்தில் அனைவரும் சமமானவர்கள் ) " 

( அஹ்காமுல் குர்ஆன் : 5/418) 

இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வருமாறு ஒரு கேள்வி வினவப்படுகின்றது : 

வினா : மக்கள் புறம் பேசும் ஒரு சபையில் அமர வேண்டி ஏற்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும் ?

பதில் : பாவம் செய்பவரைத் தடுத்து புறக்கணிக்கவில்லையாயின் உனக்கு பாவம் கிடைக்கும் , அவ்வாறுஇல்லையாயின் அவர்களைப் பிரிந்து  செல்வதோடு , அவர்களுடன் சேர்ந்து உட்காராமல் இருப்பதுகடமையாகும் ."

( மஜ்மூஊ பதாவீஹ் : 8/283)


16. எவ்வாறான கருத்துகள் மதிக்கப்பட வேண்டும்?
===============================
அல்லாமா ஸாலிஹ் இப்னு பௌஸான் அல் பௌஸான் -ஹபிழஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: 

“சிலர் கருத்துகளும், வார்த்தைகளும் மதிக்கப்பட வேண்டுமென கூறுகின்றனர், இக்கருத்து முற்றிலும்தவறாகும் ஏனெனில் உண்மை (சத்திய) வார்த்தை மாத்திரமே மதிக்கப்படும், முரணான (பாதிலான) கருத்துமதிக்கப்படமாட்டாது மாறாக அத்தவறான கருத்து தெளிவுபடுத்தப்பட்டு, ஆதாரங்களுடன் தவறு எனநிறுவப்படுவதோடு மக்களை அதிலிருந்து விழிப்பூட்டி எச்சரிக்கை செய்வது அவசியமாகும், இல்லையேல்ஒவ்வொருவரும் தவறில் இருந்துவிட்டால் அத்தவறுகள் சமுதாயத்தை சீர்குலைத்து அழித்து நாசமாக்கிவிடும்.”  
நூல்: அல்இஜாபாதுல் பாஸிலா பக்: 43


17. திருடப்பட்ட பொருள் என்று தெரிந்தும் அதனை கொள்வனவு செய்வதன் விபரீதம்!
============================
அல்லாமா அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 

“ஒரு மனிதன் ஒரு பொருளை திருடியுள்ளான் என்று தெரிந்தும் அப்பொருளை அவனிடமிருந்து கொள்வனவுசெய்பவன், திருட்டிலும் பங்காளராவான்.”

அல்பகவீ(681)


18. அசத்தியத்திற்கு மறுப்பளிப்பதன் அவசியம்
============================
அல்லாமா ஸைத் இப்னு முஹம்மத் அல்மத்கலீ -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்:

"அசத்தியத்திற்கு மறுப்பளிப்பது கடமையாகும், அவ்வாறு மறுப்பளிக்கும்படி அல்குர்ஆன் மற்றும்அஸ்ஸுன்னாவிலும் வலியுறுத்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன, அதன் பிரகாரமே முன்சென்ற, பின்வந்தஇமாம்களும் நடந்துள்ளார்கள், இவ்வாறு மறுப்பளிப்பது ஒரு பொதும் ஹராமான தடைசெய்யப்படகுத்திக்காட்டலாக கனிக்கப்படமாட்டாது, (மாறாக) இது சத்தியத்தை தெளிவுபடுத்துவதற்கான முறையாகும்."

நூல்: அவ்லஹுல் மஆனீ ஷர்ஹு முகத்திமதி ரிஸாலதி அபீ ஸைத் அல்கைரவானீ (81)


19. வரலாற்றில் மிக அவசரமாக முடிவுற்ற விவாதம் 
==============================
ஒருவன்  இமாம் அல்பானி ரஹ்மதுல்லாஹி அவர்களிடம் வந்து  தமக்கு மறைவானவற்றை அறியும் சக்தி, ஆற்றல் இருப்பதாக வாதிட்டான் (இவ்வாற்றல் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது) 

அப்பொழுது ஷைக் அவர்கள்: "ஒரு நிபந்தனை"...

அவ்வேளையில் வாதிட்டவன்: "உங்களது நிபந்தனை என்ன" என்று வினவினான்.

ஷைக்: "எனது நிபந்தனையை அறியாத உனக்கு எவ்வாறு மறைவான விடயங்கள் தெரியும்" என வினவினார்.

உடனே விவாதம் நிறைவுற்றது.

•அல்லாஹ் இமாம் அல்பானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது கப்ரை விசாலமாக்கி சுவனத்தை வெகுமதியாகக் கொடுத்தருள்வானாக!


20. மார்க்கத்தில் இல்லாத இடைச்செருகல்களை (பித்அத்களை) செய்பவர்களுடன் அமர்பவர் யார்?
================================
இமாம் அல் அவ்ஸாஈ -ரஹிமஹுல்லாஹ்- அவர்களிடம் "நான் நேர்வழிபெற்ற அஹ்லுஸ் ஸுன்னாக்களோடும்மார்க்கத்தில் இல்லாத நூதன அனுஷ்டானங்களை செய்பவர்களோடும் (பித்அத்வாதிகளோடும்) அமர்கிறேன்" என்று கூறும் ஒரு மனிதரைப் பற்றி வினவப்பட்டது. அப்பொழுது இமாம் அல் அவ்ஸாஈ ரஹிமஹுல்லாஹ்அவர்கள் "இவர் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் சமப்பாட்டை விரும்பும் மனிதராவார். (முரணானஇரண்டையும் ஒன்றாக சமப்படுத்த விரும்புகிறார் போலும்" என்று பதிலளித்தார்கள்.

நூல்: அல் இபானஹ் (2/456)


21. இஸ்லாம் பெண்ணுக்கு நீதம் செலுத்தியுள்ளது
==============================
அல்லாமா இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 

 “ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி வலியுறுத்தும் ஓர் எழுத்துக் கூட அல்குர்ஆனில் ஒரு போதும்இடம்பெறவில்லை, மாறாக அது வலியுறுத்துவதெல்லாம் பெண்ணுக்குரிய நீதத்தைத் தான்”

நூல்: ஷர்ஹுல் அகீதா அல் வாஸிதிய்யா (1/ 180-181)


22. மனித ஓநாய்களினால் பாழாகும் ஸாலிஹான பெண்கள்
===============================
அஷ் ஷைக் அப்துர் ர(z)ஸ்ஸாக் அல் பத்ர் -ஹஃபிழஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்:

"எத்தனையோ கண்ணியமான, பத்தினியான, ஸாலிஹான இறை விசுவாமுள்ள பெண்கள் தமது குடம்பத்தில்ஈமான்,இறையச்சம்,மற்றும் நற்பண்புடன் வாழ்கிறார்கள், திடீரென அவர்களிடம் ஓர் ஓநாய் குறுக்கிட்டு தனதுநாவினால் அவர்களை சீர்குலைத்து பாழாக்கிவிடுகின்றது, அத்தோடு அவ்வோநாய் தொலைபேசி அல்லதுஏனையவற்றின் வாயிலாக மென்மையான பேச்சாலும் ஏமாற்றும் வார்த்தைகளாலும் அவர்களுடன் பேசஆரம்பித்து ஈற்றில் அப்பெண்களது பத்தினித்தன்மை,சிறப்பு, கண்ணியம் என்பனவற்றையும் நாசாமாக்கிபாழ்படுத்திவிடுகின்றது."

நூல்: மவ்இளதுன் நிஸா (பக்கம் 42)


23. அறிஞர்கள் மரணிக்கும் முன் அவர்களை அணுகி கல்வி கற்பதன் அவசியம் 
================================
அபுத் தர்தா -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் கூறியதாக இப்னு அப்தில் பர் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள்அறிவிக்கிறார்கள்: 

"நான் உங்களது அறிஞர்கள் மரணித்துச் செல்வதையும் உங்களிலுள்ள அறிவிலிகள் கற்காமல் இருப்பதையும்காண்கிறேன், அறிவு உயர்த்தப்படுவதற்கு முன் அதனை கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் அறிவுஉயர்த்தப்படுவது என்பது அறிஞர்கள் மரணிப்பதாகும்."

நூல்: அல் ஜாமிஃ (1/156)


24. திருமணம் செய்துகொள்
================
தாபிஊன்களில் ஒருவரான இமாம் இப்ராஹீம் அன்னகஈ -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: 

"நீ திருமணம் செய்துகொள், ஏனெனில் நீ திருமணம் முடிக்கப்போகும் பெண்ணுக்கு அவளது வீட்டில்இருக்கும்பொழுது வாழ்வாதாரத்தை அளித்தவனே,உனது வீட்டில் இருக்கும் வேளையில் உனக்கும்அவளுக்குமுரிய வாழ்வாதாரத்தை அளிக்கின்றான்."

நூல்: தாரீகு இப்னு முக்ரிஸ் (501)


25. மனைவிக்கு உதவி செய்வதும் ஸுன்னாவிலுள்ளதே
====================================
அல்லாமா இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

“ஒரு மனிதன் தனது வீட்டில் இருக்கும் வேளையில், தனக்குத் தானே தேநீர் தயாரிப்பதும், உணவுசமைப்பதற்குத் தெரியும் பட்சத்தில் உணவு சமைப்பதும், கழுவுவதற்குத் தேவையான ஆடைகளை கழுவிக்கொள்வது போன்ற அனைத்தும் ஸுன்னாவில் உள்ளவையாகும்.
ஏனெனில் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி, அல்லாஹ்வுக்காகபணிவுடன் நடக்கும் பொருட்டு மேற்குறித்தவற்றை நீ செய்யும் பொழுது உனக்கு ஸுன்னாவின் கூலிவழங்கப்படும்.”

நூல்: ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன் (பாகம்:03, பக்கம்: 529)


26. சிறந்த தோழமையைத் தேர்ந்தெடுப்பதன் அவசியம்
================================
இமாம் ஷாஃபிஈ -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்:

"தனது அடமானப் பொருளைப் பாதுகாப்பதற்காக நம்பிக்கையானவர்களையும் அமானிதமுள்ளவர்களையும்தேடுவது எவ்வாறு ஒரு மனிதனுக்கு அவசியமோ, அவ்வாறே தனது (சிறந்த) தோழமைக்காகவிசுவாசமுள்ளவர்களையும் நேர்மையானவர்களையும் தேடுவது மிக அவசியமாகும்."

நூல்: அல் இன்திகாஃ லிப்னி அப்தில் பர் (157)

▪قال الإمام الشافعي:

ينبغي للرجل أن يتوخّى لصحبته أهل الوفاء والصدق كما يتوخّى لوديعته أهل الثقة والأمانة .

[الانتقاء لابن عبد البر (١٥٧)]


27. மார்க்கத்தில் நூதன அனுஷ்டானங்களை ஏற்படுத்தி இடைச் செருகல் செய்பவர் எவ்வாறானவர்?
================================
அல்லாமா ரபீஃ அல் மத்கலீ -ஹஃபிழஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: 

" மார்க்கத்தில் நூதன அனுஷ்டானங்களை ஏற்படுத்தி இடைச் செருகல் செய்பவன் (யாரேனில்) வீட்டின்உற்பகுதியை இடித்து மட்டமாக்கிவிட்டு பின்பு எதிரிக்கு அவ்வீட்டின் வாயிலைத் திறந்து கொடுத்து நீ உள்ளேநுழை என்று கூறுபவனாவான்."

நூல்:  மஜ்மூஉ குதுபி வரஸாஇலி வஃபதாவா பழீலதிஷ் ஷைக் அல்அல்லாமா ரபீஃ இப்னி ஹாதீ உமைர்அல்மத்கலீ (14/408)


28. இஸ்லாமிய அழைப்பாளர் முன்மாதிரியாக திகழவேண்டும்
===============================
அல்லாமா இப்னு உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்:

"அல்லாஹ்வின் பால் அழைக்கும் ஓர் அழைப்பாளர், எதனை மற்றவர்களுக்கு ஏவுகின்றாரோ அதனை அவர் முதலாவது செய்பவராகவும், அத்தோடு எதனை மற்றவர்களை விட்டும் தடுக்கின்றாரோ அதனை அவர் முதலாவது தடுத்துக்கொள்பவராகவும் இருப்பது வாஜிபாகும்."

நூல்: (ஃபதாவா நூரின் அலத் தர்ப்/ ஒலிநாடா 323/ அல் இல்ம் வத்தஃவஹ்)


29. இசைகளைக் கேட்பது உள்ளத்தையும் ஈமானையும் பாழ்படுத்திவிடும்
================================
அல்லாமா இப்னு உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: 

" இசைகளைக் கேட்பதானது உள்ளத்தில் ஊடுருவிச்சென்று அதனை நாசமாக்கிவிடும்,அத்தோடு நஞ்சு உடற்களில் ஊடுருவிச்சென்று அவற்றை நாசாமாக்கிவிடுவது போல் இவ்விசை ஈமானில் நுழைந்து அதனை பாழ்படுத்தி நாசத்திற்கு இட்டுச்சென்றுவிடும்."

நூல்: ஷர்ஹுல் காஃபியதிஷ் ஷாஃபியஹ் (4/348)


30. யாரை நண்பர்களாக தெரிவுசெய்ய வேண்டும்
=============================
அல்லாமா முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்:

“சில நல்ல மக்களுடன் நட்புப் பாராட்டுவதில் அதிகம் ஆசை கொள், அவர்கள் நீ நெறி பிறழும் போது உன்னை நல்வழிப்படுத்துவார்கள், நீ வழிதவறும் போது உன்னை நேர்வழிப்படுத்துவார்கள், உனக்கு ஏதும் மறக்கும் பட்சத்தில் உனக்கு நினைவூட்டுவார்கள், உனக்கு ஏதும் தெரியாத போது கற்றுத் தருவார்கள்.”

நூல்: ஷர்ஹு ஸஹீஹில் புகாரீ (62/1)


31. சந்தோசமான திருமண வாழ்க்கை 
=======================
அல்லாமா இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

"சந்தோசமான திருமண வாழ்க்கை, வன்முறை மற்றும் ஆதிக்கம் செலுத்துவதனால் உண்டாகமாட்டாது, ஏனெனில் இத்தகைய அணுகுமுறைகள் முற்றிலும் தவறானவை, எனினும் ஒரு கணவன் தனது மனைவி தனது உற்ற நண்பி, தனது பிள்ளைகளது தாய், மற்றும் வீட்டை முறையாக பராமரிப்பவர் எனும் கண்ணோட்டத்தில் அவளைப்
பார்ப்பது கடமையாக இருக்கும் அதேவேளை தனக்கு மனைவி எவ்வாறு மரியாதை செலுத்த வேண்டுமென விரும்புகிறாரோ அவ்வாறே தன் மனைவிக்கு மரியாதை செலுத்துவது கடமையாகும்."

நூல்: நூருன் அலத் Dதர்ப் (19/13)


32. நபியவர்களை விரும்புவதற்கான அடையாளம்
==============================
அல்லாமா இப்னு உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: 

" உனது ஆத்மாவை விட உனக்கு ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் விருப்பமானவர்கள் என்பதற்கான மிகப்பெரிய அடையாளம், நீ உனது மனோஇச்சையை விட நபியவர்களது கட்டளையை முற்படுத்துவதாகும்."

நூல்: ஷர்ஹுல் புகாரீ (1/63)


33. பெரும்பான்மை சத்தியத்தின் அளவுகோலா?
=============================
(01) பின்பற்றுபவர்கள் அதிகரிப்பதும், குறைவதும் ஒருக்காலும் சத்தியத்தின் அளவுகோலாக கருதப்படமாட்டாது

இமாம் அல் அல்பானீ -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: 

"பின்பற்றுபவர்கள் அதிகரிப்பது மற்றும் குறைவதானது, ஓர் இஸ்லாமிய அழைப்பாளர் சத்தியத்தில் அல்லது அசத்தியத்தில் இருக்கின்றார் என்பதை அறிவதற்கான அளவுகோலாக கருதப்படமாட்டாது."

நூல்: அஸ்ஸில்ஸிலதுஸ் ஸஹீஹஹ் (1/755)

(02) பெரும்பான்மை சத்தியத்தின் அளவுகோலல்ல

அல்லாமா இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

"சத்தியத்தை விட்டும் நெறிபிறண்ட ஓர் இஸ்லாமிய அழைப்பாளனுக்காக, மற்றும் ஓர் சீர்திருத்தவாதிக்காக பிடிவாதம் பிடிக்காதே!, ஏனெனில் சத்தியம் ஒரு போதும் பெரும்பான்மையான மக்களைக் கொண்டமையாது மாறாக சத்தியமென்பது அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவிற்கு உடன்பாடானதாக அமைவதாகும்."

(03) சத்தியத்தின் உதவியாளர்கள் குறைவாகவும் உனக்கெதிரானவர்கள் அதிகமாகவும் இருப்பதையிட்டு ஒருக்காலும் பயப்படாதே!

அல்லாமா இப்னு உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: 

: நீ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியவற்றை பயப்படாது பகிரங்கமாக (மக்களுக்கு) வெளிப்படுத்து, (சத்தியத்தின்) உதவியாளர்கள் குறைவாக இருப்பதையிட்டு பயப்படாதே, மாறாக உனக்கெதிராக அதிகமானோர் நிற்பதையிட்டும் பயப்படாதே."

நூல்: ஷர்ஹுல் காஃபியதிஷ் ஷாபியஹ் (1/175)


34. குறைவாக செய்தாலும் முறையாக செய்வோம்... பித்அத் பற்றி இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் எச்சரிக்கை...
======================================
இமாம் நாஸிருத்தீன் அல்அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

''அதிகமாக வணக்க வழிபாடுகள் செய்வது ஒரு பொருட்டல்ல,
 மாறாக அவை இதர மனிதர்களால் வணக்க வழிபாடுகள் எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்படாது (பித்அத்திலிருந்து நீங்கி) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய முறைப்படி இருப்பதே அவசியமாகும்.''

தமது இக்கருத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது பின்வரும் கருத்தை சுட்டிக்காட்டுகிறார்கள்...

 ''ஸுன்னாவை கடைப்பிடிப்பதில் நடுநிலை பேணுவது மார்க்கத்தில் இல்லாத நூதன அனுஷ்டங்களை வணக்கமாக செய்வதில் அதீத முயற்சி செய்வதை விட மிகச் சிறந்ததாகும்.''

நூல்: அஸ்ஸில்ஸிலத்துஸ் ஸஹீஹா (14/5)


35. அஸ்ருக்குப் பின் தூங்குவது கூடுமா?
========================
"அஸ்ருக்குப் பின் தூங்கும் செயலானது, சில மக்கள் வழமையாக ஏற்படுத்திக்கொண்ட ஒன்றாகும், அவ்வாறு தூங்குவது தவறல்ல, அஸ்ருக்குப் பின் தூங்குவது தடை என்று கூறிநிற்கும் ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரபூர்வமற்றவை (ஸஹீஹானவை அல்ல)."

வெளியீடு: இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களது தலைமையிலான, மார்க்கத் தீர்ப்பு மற்றும் அறிவு சார் ஆய்வுகளுக்கான நிரந்தர அமைப்பு (26-147)


36. மார்க்கத்தில் தெளிவுள்ள ஆலிம்களை கண்டறிவது அவசியம்
=================================
அல்லாமா அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 

“இன்று முஸ்லிம் உலகில் மார்க்கத்தில் தெளிவுள்ள ஆலிம்கள் குறைவாக காணப்படுகின்றனர். 
தவறான ஆலிம்கள் மற்றும் தம்மை அறிவுள்ள ஆலிம்களாக வாதிடுபவர்கள் உண்மையில் மார்க்கத்தில் தெளிவுள்ள ஆலிம்களல்லர்,
 அத்தோடு தம்மிடம் அறிவுள்ளதாக பொய்யாகவும் வீணாகவும் காண்பிப்போர் அதிகரித்து வருகின்றனர்,
 எனினும் அவர்களை கருத்திற்கொள்ள முடியாது மேலும் சத்தியத்தைப் பற்றிய அறிவின்மையாலும் அதற்கான ஒத்துழைப்பு இல்லாமையாலும் அவர்களுக்கு எவ்வித பெறுமதியும் கிடையாது, 
மார்க்கத்திற்கு முரணாக நடந்து அதில் இல்லாதவற்றை நடைமுறைப்படுத்தும் வழி தவறிய இத்தகையோரது ஆதாரம் சந்தேகத்திற்குரிய பலவீனமாகும்.”

நூல்: மஜ்மூவுல் பதாவா பாகம்: 03, பக்கம்: 134


37. மார்க்கத்தில் இல்லாதவற்றை மார்க்கம் எனும் பெயரில் அரங்கேற்றும் "பித்அத்" வாதிகளிடம் கல்வி கற்பது கூடுமா?
===============================
இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வரும் வினா வினவப்பட்டது:

வினா: 

" மார்க்கத்தில் இல்லாதவற்றை மார்க்கம் எனும் பெயரில் செய்யும் "பித்அத்"வாதிகளிடம் கல்வி கற்பதைப் பற்றி சில மாணவர்கள் வினவுகின்றனர், 
அதாவது பித்அத்களில் ஒரு பித்அத்தில் அறிமுகமான ஓர் ஆலிமிடம் கல்வி கற்பதைப் பற்றியதாகும்...
எனினும் அவர் அரபு இலக்கணம், வாரிசுரிமைச் சட்டம் போன்ற கலைகளில் சிறப்பாக கை தேர்ந்தவர், 
இவ்வாறானவரிடம் கல்வி கற்பதன் சட்டம் யாது ?

பதில் :

"இவர்கள் மற்றும் இவர்களைப் போன்றோரிடம் கல்வி கற்பதில் இரண்டு விடயங்கள் பயப்பட வேண்டியுள்ளன:

முதலாவது:  மார்க்கத்தில் இல்லாவற்றை மார்க்கம் என்ற போர்வையில் செய்யும் இந்த பித்அத்வாதிகளிடம் விவேகமும், அறிவு நுணுக்கமும் இருக்கின்றன,

அத்தோடு அவர்கள் உதாரணங்கள் கூறப்படுவதற்கு குறைவாக இருப்பினும், அவர்களில் பெரும்பாலானோரிடம் தெளிவுபடுத்தும் " பயான்" எனும் ஆற்றல் இருக்கின்றமையால் மக்களை "பித்அத்" களின் பால் இழுத்துச் செல்கின்றனர் -

எடுத்துக்காட்டாக அவர்கள் அரபு இலக்கணத்தைக் கற்பிக்கக் கூடியவர்களாக இருப்பதைப் போன்றதாகும் -

இரண்டாவது:  ஓர் நம்பிக்கையான உறுதியான ஓர் மனிதர் அவர்களைப் பார்த்து திகைத்துப் போனால்,  மக்கள் அவர்கள் "ஹக்" உண்மையில் தான் இருப்பதாக எண்ணி ஏமாந்து விடுகின்றனர்.

இதனால் இயன்றளவு அவர்களிடமிருந்தும் அவர்களிடம் கற்பதிலிருந்தும் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியமாகும் - அல்ஹம்துலில்லாஹ்- (ஏனெனில்) அவர்கள் அல்லாத நேர்வழியில் இருக்கும் அஹ்லுஸ் ஸுன்னாக்களிடம் அவ்வறிவைப் பெற்றுக்கொள்ள முடியும்" 
 
(அத் தஃலீக் அலா ஸஹீஹி முஸ்லிம்: 1/39)


38. பெண் இஸ்லாமிய வாழ்வியலாக வாழ்க்கையை கொண்டிருந்தால்...
===============================
அஷ்ஷைக் அப்துர் ரஸ்ஸாக் அல்பத்ர் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

"பெண் இஸ்லாத்தின் அறிவுறுத்தல்களை வாழ்வில் கடைப்பிடிக்கும் போது அவள் கண்ணியம், பரிபூரணம், அழகு, கற்பொழுக்கம் ஆகியவை நிறைந்த வாழ்க்கை வாழ்வாள்."

நூல்: மௌயிலதுன் நிஸா, பக்கம் 36


39. அல்லாஹ் வறுமையை கொண்டு பயமுறுத்தவில்லை!
===============================
இமாம் ஹாதிம் அல்அஸம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
"நிச்சயமாக நீ வறுமையைப் பயப்பட வேண்டாம், ஏனெனில் அல்லாஹ் நரகைக் கொண்டே உன்னை பயமுறுத்தியுள்ளான் மாறாக ஏழ்மையைக் கொண்டு உன்னை பயமுறுத்தவில்லை."

நூல்: அல்பவாயித் வல்அக்பார், பக்கம் 152


40. வேலைப் பளுக்களிலும் கற்றலுக்கு முக்கியத்துவம் அளித்த இமாம்!
===============================
அல்லாமா அதா இப்னு அபீ ரபாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மக்காவில் வாழ்ந்த தாபிஊன்களில் அறிவுச் சிகரமாக திகழ்ந் மாபெரும் இமாம்.

இவர் மக்கத்து பெண் ஒருவரிடம் அடிமையாக வாழ்ந்துவந்தார். இக்காலகட்டத்தில் தமது நேரத்தை திட்டமிட்டு பின்வருமாறு மூன்றாக வகைப்படுத்தி பயனுள்ளதாக ஆக்கிக்கொண்டார்.

முதற் பகுதி: தனது எஜமாட்டியின் கடமைகளை இயன்றளவு நிறேவேற்றுவதும் நல்லமுறையில் பணிவிடை செய்வதும்

இரண்டாம் பகுதி: தனது ரப்பின் கடமைகளை செவ்வனே இக்லாஸுடன் நிறைவேற்றுதல்

மூன்றாம் பகுதி: கல்வி கற்றல், மிக முக்கியமாக அக்காலத்தில் வாழ்ந்த அபூ ஹுரைரா,  அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு உமர், அப்துல்லாஹ் இப்னுஸ் ஸுபைர் -ரலியல்லாஹு அன்ஹும்- போன்ற பெரும்பெரும் ஸஹாபாக்களிடம் சென்று அவர்களது அறிவுக்கடலிலிருந்து பெருவாரியான அறிவுகளை கற்றல்

இவ்வாறு நேர்த்தியாக நெறிப்படுத்திய வாழ்க்கையை வாழ்ந்து கற்றலுக்கு முக்கியத்துவமளித்து கற்று அறிவுச்சிகரமாக திகழும் இமாமவர்களை தனது எஜமாட்டி கண்டதும் உடனே அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரப் பறவையாக சென்று மக்களுக்கு பயன்மிக்கவவராக செயற்படும் பொருட்டு உரிமைவிட்டுவிட்டார்.

அடிமையாக இருக்கும் காலப்பகுதியில் பல கடமைகள், பொறுப்புகள் நிறைவேற்றப் பணிக்கப்பட்டிருக்கும் வேளையிலும் நேரம் ஒதுக்கி விடா முயற்சியுடன் கற்று பெரும் அறிஞராக வரலாறு போற்றுமளவு மாறியிருப்பதானது கற்றலுக்கு நேரமில்லை என்று கூறும் எமக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

நாம் மேற்குறித்த இமாமின் வாழ்விலிருந்து படிப்பினை பெற்று, கற்று, கல்வியால் உயர்ந்த மேன்மக்களாக வாழ முயல்வோம்.

நூல்: ஸுவருன் மின் ஹயாதித் தாபிஈன், பக்கம் 13


41. மாணவர்கள் ஆசிரியர்களுடன் பணிவுடன் நடந்துகொண்ட முறைகளில் சில
===============================
1. இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் ஷாபிஈ (இமாம் ஷாபிஈ) ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “எனது ஆசிரியர் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களது முன்னிலையில் நான் இருக்கும் போது புத்தகத்தின் தாள் சத்தம் கூட அவர்களுக்கு கேட்காமலிருக்க மிகவும் மிருதுவாக தாளை புரட்டுவேன்.”

2. இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களது மாணவர் அர்ரபீஃ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் நான் தண்ணீர் அருந்துவதற்குக் கூட துணிவு பெற்றதில்லை.”

3. இமாம் அபூஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “நான் எனது உஸ்தாத் ஹம்மாத் ரஹிமஹுல்லாஹ் அவர்களை கண்ணியப்படுத்தும் முகமாக அவர்களது வீட்டின் பக்கம் எனது கால்களை நீட்டியதில்லை, இருவரது வீடுகளுக்குமிடையில் ஏழு சிறிய வீதிகள் உள்ளன, ஹம்மாத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மரணித்தது முதல் நான் தொழும் ஒவ்வொரு தொழுகையிலும் எனது பெற்றோருடன் சேர்த்து அவர்களுக்கும் இஸ்திக்பார் செய்வேன்.”

நூல்: அபீருஸ் ஸமான் பீ பழாஇலி வஅதாபி வஅஹ்காமி ரமழான், அஹ்மத் ஸய்யித் அபுல் அமாஇம், பக்கம் 58-59


42. இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களது பக்குவமும், பணிவும்!
===============================
இமாம் யஹ்யா இப்னு மஈன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். 

"இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிமல்லாஹ் அவர்களைப் போன்ற ஒருவரை நான் (வாழ்நாளில்) காணவில்லை, நாம் ஐம்பது வருடங்கள் இமாமுடன் ஒன்றாக இருந்துள்ளோம், எம்மோடு ஒரு விடயத்தைக் கூட பெருமை பாராட்டி பேசியதில்லை, மேலும் அவர்கள் பின்வருமாறு கூறுபவர்களாக இருந்தார்கள் "நாம் ஓர் ஏழை சமூகத்தார், அல்லாஹ் எமது குற்றம், குறைகளை மறைக்காவிடில் நாம் கேவலமடைந்திருப்போம்."

நூல்: ஹில்யதுல் அவ்லியா (181)


43. பெற்றோர் ஸாலிஹானவர்களாக இருப்பதன் அவசியம்!
==============================
பேராசிரியர் அஷ்ஷைக் அஹ்மத் ஈஸா அல்மஃஸராவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

 "அவ்விருவரது பெற்றோர் ஸாலிஹானவர்களாக இருந்தனர்" எனும் அல்குர்ஆனிய வசனதுக்கமைய பின்வருமாறு விளக்கம் கொடுக்கிறார்.

"உனது சந்ததியினருக்கு மனமான (நல்ல) வாழ்க்கையை நீ விரும்பினால், உன்னுள் நீ ஸாலிஹானவனாக இரு, நீ அவர்களோடு (சந்ததியினருடன்) இல்லாவிடினும், அல்லாஹ் அவர்களை கவனித்து பராமரிப்பதை பொறுப்பெடுப்பான்.

இத்தகைய உனது நிலையான உறுதிப்பாடு, அவர்களுக்கான சிறந்த வாழ்வாதாரமாக அமைந்துவிடும்.


44. அல்குர்ஆனை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதானது மறுமையில் ஈடேற்றத்துக்கு வழி வகுக்கும்!
==============================
நான் செவியுற்றதில் அழகிய வார்த்தை: "உனது பிள்ளைகளுக்கு உலகத்தின் பொக்கிஷங்களை அள்ளி செலவழித்தால் அவர்கள் மறுமையில் உன்னை விட்டும் விரண்டோடுவர், எனினும் நீ அல்குர்ஆனை அவர்களுக்கு முறையாக கற்றுக்கொடுத்தால் மறுமையில் கண்ணியத்தின் கிரீடத்தை உனக்கு அணிவிப்பதற்காக உன்னைத் தேடுவர்."

எகிப்து பொறியியலாளர்: ஸலாஹ் அப்துல் மஃபூத் 


45. குழந்தையின் தவறை உணர்த்தி திருத்துவதும்  அழகிய தர்பியா தான்!
==============================
"உன் முதுகுக்குப் பின்னால் உன்னைப் பற்றி ஒருவர் பேசுவதை செவியுற்று உன்னிடம் வந்து சொல்வதற்கு உன் குழந்தையை அனுமதிக்காதே, ஏனெனில் இத்தகைய செயல் அக்குழந்தையை உலவு பார்த்தல், ரகசியங்களை பகிர்தல் மற்றும் கோல் சொல்லுதல் போன்றவற்றின் பால் ஊக்குவிப்பதுடன் அவற்றில் பழக்கப்படுத்திவிடும்...அக்குழந்தை வளர்ந்து பெரியவராக ஆகிவிட்டால் மக்களில் வெறுப்புக்குள்ளான ஒருவராகிவிடுவார்"

-பேராசிரியர் அஷ்ஷைக் அஹ்மத் ஈஸா அல்மிஃஸராவீ-


46. இன்று நீ விரட்டும் சிறுவனின் நாளைய நிலை!
==============================
நீங்கள் பள்ளிவாயலில் சிறுவர்களது சத்தத்தை கேட்கவில்லையாயின் அடுத்துவரும் தலைமுறையினரையிட்டு எச்சரிக்கையாக இருங்கள்.!

தொந்தரவு செய்கின்ற காரணத்தினால் பள்ளிவாயலை விட்டும் நீங்கள் விரட்டும் அச்சிறுவன்,  எதிர்காலத்தில் பள்ளிவாயலில் தொழுவதை நீங்கள் அவா கொள்வீர்கள்!

அச்சிறுவர்களது தொந்தரவைப் பொறுத்துக்கொண்டு, அவர்களுக்கு கற்பித்து, மென்மையான முறையில் அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

-ஒரு பள்ளிவாயலில் ஒட்டப்பட்டிருந்த அழகிய விழிப்புணர்வுக்கான அறிவித்தல்-


47. கொடையின் போது பெருமிதம் கொள்ளாதே!
==============================
நீ ஓர் ஏழைக்கு ஸதகா செய்யும் போது, நீ ஒரு பரோபகாரி தேவையுள்ளவரோடு நடந்துகொள்வது போன்று உன்னை நீ காண்பிக்க நினைக்க வேண்டாம், மாறாக நீயும் "தேவையுள்ளவரோடு நடந்துகொள்ளும் தேவையுள்ளவர் தான்", அவரது தேவை உன்னிடத்தில் உள்ளது, உனது தேவை அல்லாஹ்விடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் உலா வரும் செய்தி 


48. நோயின்றி சுகமாக தூங்கி எழுவதும் சாப்பிடுவதும் இறைவனளித்த பாக்கியம்
==============================
அஷ்ஷைக் கலாநி முஹம்மத் பிஸ்யூனீ-ஹபிழஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: 

"நீ எவ்வித மருந்து, துயர் மற்றும் வலியின்றி தூங்கி விழித்தெழுந்து, அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிடும் போதெல்லாம் நீ தான் உலகில் மிகப் பெரிய செல்வந்தன்"

குறிப்பு: இவ்வாரோக்கிய நிலை உண்மையில் விலை மதிக்க முடியாத செல்வமாகும். இப்பாக்கியம் பெற்றவர்கள் அல்லாஹ்வுக்கு  அதிகமதிகம் நன்றி கூற கடமைப்பட்டவர்கள்.


49. அல்லாஹ் வறுமையை கொண்டு பயமுறுத்தவில்லை!
==============================
இமாம் ஹாதிம் அல்அஸம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
"நிச்சயமாக நீ வறுமையைப் பயப்பட வேண்டாம், ஏனெனில் அல்லாஹ் நரகைக் கொண்டே உன்னை பயமுறுத்தியுள்ளான் மாறாக ஏழ்மையைக் கொண்டு உன்னை பயமுறுத்தவில்லை."

நூல்: அல்பவாயித் வல்அக்பார், பக்கம் 152


 50. நான்கு இமாம்களும் யாரைப் பின்பற்றினர்?
============================
"இமாம் அபூ ஹனீபா ஓர் ஹனபியாக இருக்கவில்லை
இமாம் ஷாபிஈ ஓர் ஷாபிஈயாக இருக்கவில்லை
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ஓர் ஹம்பலியாக இருக்கவில்லை
இமாம் மாலிக் ஓர் மாலிகியாக இருக்கவில்லை 

மாறாக அவர்கள் அனைவரும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையே பின்பற்றினர்"

அஷ்ஷைக் Dr.Bilal Philips 


51. பணம் ஆட்களை வேரறுக்கும் பிரிகோடு!
==============================
செல்வந்தன் தவறாக பேசினால், நீ உண்மை உரைத்தாய், சரியானதை கூறினாய் என்று மக்கள் கூறுவர்.
அதே வேளை ஏழை உண்மை கூறினால், நீ பொய்யுரைத்தாய் என்று கூறி அவர் சொல்வதை அவர்கள் பொய்யாக்கிவிடுவர்.
திர்கங்கள் (பணம்) அனைத்து இடங்களிலும் உரிய ஆட்களுக்கு கம்பீர கண்ணியம், அழகு ஆகியவற்றை ஆடைகளாக அணிவிக்கின்றன.
பேச்சாற்றலை விரும்புவோருக்கு இப்பணம் ஒரு நாக்கு, போராட நினைப்போருக்கு இது ஓர் ஆயுதம்.

கவிஞர்: அபுல் அய்னா 


52. பணியாட்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுதல்!
==============================
எழுத்தாளரும் சிந்தனையாளருமாகிய முஹம்மத் அல் பிலாதீ அவர்கள் தனது டுவிட்டரில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

"நீ தொழிலாளர்களுடன் நடந்துகொள்வதில் உனக்கு முன்னிலையில் உள்ள நபருக்கு பின், அவர் உணவளிக்க வேண்டிய ஒரு குடும்பம், சிகிச்சையளிக்க வேண்டிய ஒரு நோயாளி, அல்லாஹ்வுக்கு அடுத்ததாக அவரை ஆவலோடு எதிர்பார்க்கும் அவரது சிறிய ஆண்,பெண் குழந்தைகளுக்குரிய இறுக்கமான பிணைப்பு ஆகியவை உள்ளன என்பதை நீ நினைவில் நிறுத்திக்கொள், ஆதலால் அவரை உடைத்துவிடாதே!

அல்லாஹ்வின் மீது சத்தியமாக, வீட்டில் அனைவரும் அவரது புன்னகையை எதிர்பார்த்திருக்கும் வேளையில் அவர் கவலை எனும் போர்வையுடன் வீட்டுக்கு மீள்வது கொடுமையானதாகும்."

 
53. பெற்றோர்/பாதுகாவலர் பிள்ளைகளோடு உள்ள உறவை பலப்படுத்த வேண்டிய அவசியம்
==============================
ஏனையோர் உனது பிள்ளைகளுடன் அமராமல் இருப்பதற்காக நீ அவர்களுடன் அமர்!
ஏனையோர் உனது பிள்ளைகள் கூறுவதை செவிமடுக்காமல் இருப்பதற்காக நீ அவர்கள் கூறுவதை செவிமடு!
ஏனையோர் உனது பிள்ளைகளுடன் உரையாடாமல் இருப்பதற்காக நீ அவர்களுடன் உரையாடு!

-எழுத்தாளர் ஜாஸிம் அல் முதவ்வஃ-

 
54. கருத்து முரண்பாட்டின் போது உண்மை முகம் தெரிய வரும்!
==============================
பேராசிரியர் அஷ்ஷைக் ஸஃத் அல் கத்லான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

 "ஒரு மனிதனின் பெறுமதி, அவனது குணங்களது தரம் அவனோடு நீ முரண்படும் போது தெரியவரும், மரியாதையானவர் சர்ச்சையில் மரியாதையாக நடந்துகொள்வார், இழிவானவர் அச்சர்சையில் மோசமாக நடந்துகொள்வார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "நயவஞ்சகன் தர்க்கம் புரியும் போது தகாத வார்த்தைகளால் ஏசி மோசமாக நடந்துகொள்வான்."


55. ஆடையில் பெண்கள்!
==============================
கலாநிதி அஷ்ஷைக் ஹஸன் அல்ஹுஸைனீ -ஹபிழஹுல்லாஹ்- அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

"பெண்களில் சிலர் வெட்கத்தின் காரணமாக அங்கங்கள் வெளிப்படாத வண்ணம் தமது ஆடையின் கிழிந்த பகுதியை தைத்து அணிபவர்களும் உள்ளனர், மற்றும் சிலர் தமது அங்கங்கள் வெளிப்படுவதற்காக (அரைகுறை நிர்வாணிகளாக சுற்றுவதற்காக) தைக்கப்பட்ட பகுதியை கிழித்து அணிபவர்களும் உள்ளனர்.

இரு சாராருக்குமிடையில் எவ்வளவு வித்தியாசம்!"


56. ஓட்டைப் பை!
==============================
ஒருவர் பகலில் உணவைத் தவிர்த்து நோன்பிருக்கிறார் ஆனாலும் மக்களது மாமிசத்தை சாப்பிடுகிறார் 
தொழுகைக்காக வுழூ செய்கிறார் ஆனாலும் நீரை வீண்விரயம் செய்கிறார் 
ஏழைகளுக்கு தர்மங்கள் வழங்கி உதவுகிறார் ஆனாலும் அவர்களுக்கு வழங்கியவற்றை சொல்லிக்காட்டுகிறார்

ஆதலால் நீ ஓட்டைப் பையில் உனது நன்மைகளை சேமிக்காதே!

தகவல்: கனாது ஸௌகனதிஸ் ஸலபிய்யா முகநூல் பக்கம்


57. முன்னோர்களது அழகிய நடைமுறை!
==============================
"முன்சென்ற ஸலப் மக்களில் சிலர் தனது சகோதரன் மரணித்த பின்பு அவரது குடும்பத்தை நாற்பது வருடங்களாக கவனித்து வந்ததோடு, அவர்களது தேவைகளையும் நிவர்த்திசெய்து வந்துள்ளனர்"

நூல்: மின்ஹாஜுல் காஸிதீன்
தகவல்: அஷ்ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்  -حفظه الله- 


58. மனைவிக்காக மாத்திரம் நேசி
==========================
"உண்மையான நேசம் யாதெனில் உனது மனைவி என்பதற்காக மாத்திரம் உனது மனைவியை நேசிப்பதாகும், அவள் இன்னாருடைய மகள் அல்லது ஓர் அழகி அல்லது ஓர் உத்தியோகத்தர் அல்லது சொத்து செல்வமுள்ளவள் என்பவற்றிற்காக நேசிப்பதல்ல, மனைவியை நேசிப்பதானது ஏதேனுமொரு காரணத்துடன் இணையுமாக இருப்பின் அக்காரணம் நீங்கும் பட்சத்தில் குறித்த நேசமும் நீங்கிவிடும்." 

-ஹாபிழ் உமர் ஹாபிழ்-


59. கேவலமான மனிதன்!
==================
"யாருடையை தொழுகை குறைந்து, தர்மம் செய்வதில் கருமித்தனம் செய்து, அதிகமாக (வீணாக) பேசும் பழக்கத்தைக் கொண்டு, தனது தாய் மற்றும் சகோதரிகளுக்கு மேலால் சத்தத்தை உயர்த்தி, அவர்கள் விடயத்தில் அத்துமீறி செயற்பட்டு, தனது குடும்பத்தின் முன்னிலையில் மனைவியை இழிவுபடுத்துவாரோ, அவர் அழகாகவும் பணக்காரராகவும் இருந்தாலும் அவரே மனிதரில் மிகவும் கேவலமானவர்." 

-ஹாபிழ் உமர் ஹாபிழ்-


60. எது உனது பணம்!
==============================
நீ உனது சட்டைப்பையில் வைத்திருக்கும் பணம் உனக்குரியதல்ல மாறாக சில்லறைக்கடைக்காரன், எரிபொருள் நிலையங்கள், உனது மரணத்திற்குப் பின்னுள்ள உனது அனந்தக்காரர்கள் ஆகியோருக்குரியது.

உனது பணம் யாதெனில் 
ஓர் ஏழை மற்றும் தேவையுள்ளவருக்கு கொடுத்ததும் அல்லாஹ்வுக்காக இறைப்பாதையில் வக்ப் செய்ததுமாகும் 
இப்பணம் தான் அல்லாஹ்விடத்தில் உனக்கான சேமிப்பாகும்.

ஆதலால் உடலில் உயிர் இருக்கும் காலமெல்லாம் இறைவனுக்காக “ஸதகா” செய் 


70. கற்பதை எழுதுவது அவசியம்!
==============================
"அறிவு என்பது ஒரு வேட்டைப் பிராணியைப் போன்றது, கற்கும் அறிவை எழுதுவதானது அதனை விலங்கிடுவதாகும்;
ஆதலால் உனது வேட்டைப் பிராணிகளை உறுதியான கயிறுகளால் கட்டி விலங்கிடுவாயாக!

மடத்தனம் யாதெனில் நீ ஒரு மானை வேட்டையாடி, அதனை விலங்கிடாது ஏனைய படைப்பினங்களுக்கிடையில் சுற்றித்திரிய விடுவதாகும்! " 

-இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ்-


71. ஒருவரிடம் இரண்டு விடுத்தம் ஏமாறுவது மடத்தனம்
================================
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“ஓர் இறைவிசுவாசி ஒரே பொந்தில் இருண்டு விடுத்தம் தீண்டப்படமாட்டான்”

நூற்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவுத், இப்னு மாஜா

விளக்கம்: ஓர் முஃமின் மற்றொருவரிடம் இரண்டு தடவை ஏமாறமாட்டான்

குறிப்பு: இதனை தமிழில் வேறு வார்த்தையில் கூறுவதாயின் “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்”


72. கண்டும் காணாமலிருத்தல்
=======================
"திருமண வாழ்வில் ஏற்படும் சில சாதாரண பிரச்சினைகளுக்கான தீர்வு, அவற்றை கண்டும் காணாமலிருப்பதிலே தங்கியுள்ளது. இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:" நற்பண்புகளில் பத்தில் ஒன்பது கண்டும் காணாமலிருப்பதில் உள்ளடங்கியுள்ளது."

-ஹாபிழ் உமர் ஹாபிழ்-


73. மௌனம் எப்பொழுதும் சம்மதமல்ல 
==============================
"மௌனமாக இருப்பது என்பது எப்பொழுதும் சம்மதம் என்று அர்த்தமல்ல, சிலவேளை சில புரிந்துகொள்ளாத மனிதருக்கு விபரிக்க முடியாமல் களைப்படைந்து அமைதியாக இருப்பதையும் குறிக்கும்."

-கஸ்ஸான் கனபானீ/ பலஸ்தீனின் பிரபல எழுத்தாளர்-


74. இமாம் தாபித் இப்னு குர்ரா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
==============================
"உடலின் ஆரோக்கியம் குறைவாக  உணவு உட்கொள்வதில் தங்கியுள்ளது, ஆண்மாவின் ஆரோக்கியம் குறைவாக பாவங்கள் செய்வதில் தங்கியுள்ளது, நாவின் ஆரோக்கியம் குறைவாக பேசுவதில் தங்கியுள்ளது."

நூல்: ஸாதுல் மஆத் (4/186)


75. அல்லாமா இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களது பணிவும், அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களை பற்றிய நன்மதிப்பும்!
==============================
அல்லாமா முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அல்லாமா நாஸிருத்தீன் அல்அல்பானீ  ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் பற்றி வினவப்பட்ட போது "என்னைப் போன்றோர் அவரைப் பற்றி பேசமாட்டார்; ஏனெனில் அவர் என்னை விட மிகவும் நன்கறிவுள்ளவர், என்னை விட சமுதாயத்திற்கு பயன்மிக்கவர், மேலும் அவரை நேசிப்பதற்காக அல்லாஹ்வை நாம் சாட்சியாக வைக்கிறோம், அத்தோடு ஹதீஸ் துறையில் ஆய்வுக்கான வாயிலை திறந்தவர்களில் முதலாமவர், அல்லாஹ் மென்மேலும் அவர் மூலம் இச்சமுதாயத்திற்கு பயனளிப்பானாக! என்று பதிலளித்தார்கள்.

நூல்: அத்துர்ருஸ் ஸமீன் பீ தர்ஜமதி பகீஹில் உம்மத் அல்அல்லாமஹ் இப்னு உஸைமீன், பக்கம் 240


76. ஸதகாவைப் பற்றி ஒரு பலகையில் எழுதப்பட்டுள்ள அழகிய வார்த்தை!
==============================
"நீ உனது பணத்தை உன்னுடன் மறுமைக்கு கொண்டு செல்ல முடியாது, எனினும் அப்பணம் மறுமையில் உன்னை வரவேற்கும் வண்ணம் செய்வதற்கு உனக்கு முடியும்."


77. நிய்யத்தின் முக்கியத்துவம்!
==========================
இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

"எத்தனையோ சிறிய அமலை நிய்யத் அதிகப்படுத்திவிடுகிறது, (ஆனால்) எத்தனையோ அதிக அமலை நிய்யத் சிறுமைப்படுத்திவிடுகிறது (குறைத்துவிடுகிறது)"  

நூல்: ஸியரு அஃலாமின் நுபலா (400/8)


78. இக்காலம் வந்துவிட்டால் தனிமையே வழி
===============================
அல்லாமா முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உதைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 

"குழப்பமான காலம் வந்து, நீ மக்களோடு கலந்து வாழ்வது மேலும் கெடுதியை (தீமையை) ஏற்படுத்துவதோடு அல்லாஹ்வை விட்டும் தூரப்படுத்தும் என நீ காணும் பட்சத்தில், நீ தனிமையை கடைப்பிடித்துகொள்" 

நூல்: ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன் (5/354)


79. "ஒரு மனிதன் ரிஸ்க் இலிருந்து விரண்டோடுவதற்காக காற்றில் பயணித்தாலும் குறித்த ரிஸ்க் மின்னலில் பயணித்து வந்தேனும் அவரை அடைந்துகொள்ளும்"

‏" لو ركب الإنسانُ الريح هرباً من رزقه، لركب الرزقُ البرق ليلحقه "








Previous Post Next Post