- எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey)
முன்னுரை
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. தூதர்களில் இறுதியானவராகிய மனித குல வழிகாட்டி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வழி நடக்கும் நல்லுள்ளங்கள், உலக சமாதான விரும்பிகள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக!
இஸ்லாம் இறை மார்க்கமாகும். அதனால் அதில் காணப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களும் தெய்வீகம் சார்ந்ததாகவும் மனித இனத்தின் நலனைக் கருத்தில் கொண்டதாகவுமே காணப்படுகின்றது.
மலசலம் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற சுத்தம் தொடர்பான சாதாரண விடயங்களைக் கூட இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தராமல் இந்த உலகை விட்டும் மரணமாகவில்லை என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.
இஸ்லாம் பேசிய பகுதியில் மிகவும் விரிவான அத்தியாயங்களில் ஒன்றாக சுத்தம் தொடர்பான பகுதியும் ஒன்றாகும். அதிலே, தண்ணீரும் வகைகளும், அசுத்தமான நீர், சூரிய வெளிச்சம் பட்ட நீர், மாதவிலக்கு, பிரசவத் தீட்டின் சட்டங்கள், கடமையான மற்றும் விரும்பத்தக்க குறிப்புகள், மலசலகூட கழிவறை ஒழுங்கு முறைகள் போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியதாக சுத்தம் தொடர்பான அதன் ஆய்வுப் பகுதி இருப்பதைப் பற்றி ஆய்வு செய்கின்ற போது இஸ்லாம் சுகாதாரத்துறையின் முன்னோடி மார்க்கம் என சான்று பகரமுடியும்.
கொடிய நோய்கள், தொற்றுக்கள் பற்றி :
கொடிய தொற்று நோய்கள், மற்றும் அது தொடர்பான அறிவுரைகள், வழிகாட்டல்கள், அவர்களோடு கலந்து வாழ்தல், உண்ணுதல், பருகுதல், அவர்கள் தொழுகைப் பொறுப்பேற்று நடத்தலாமா? போன்ற பல நூறு விடயங்களை பக்கம் பக்கமாக இஸ்லாமிய அறிஞர்கள் தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
அந்த அடிப்படையில் இஸ்லாமிய அறிஞர் பெருமக்களால் நோய், மருத்துவம் மற்றும் நிவாரணம் தொடர்பாக மிகவும் தெளிவாக விளக்கப்பட்டிருப்பது இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தன்மையை மேலும் உறுதி செய்கின்றது.
இறைத் தூதரின் போதனைத் துறையில் பிரசித்தி பெற்றவர்களாக விளங்கிய நபித்தோழர்கள் மூலம் உயர் கல்வியாளர்களான இமாம்கள் மற்றும் பல நூறு அறிஞர்கள் மருத்துவம், சிகிச்சை அளித்தல், கொடிய நோயின் போது நோயாளிகளைத் தனிமைப் படுத்தி சிகிச்சை அளித்தல் தொடர்பான இறைத் தூதரின் பல்வேறு பட்ட வழிகாட்டல்களை, தமது கிரந்தங்கள் ஊடாக உலகுக்கு அறிமுகம் செய்திருக்கின்றனர்.
உதாரணமாக இமாம் புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் தாவூன் என்ற கொடிய நோய் பற்றி பின் வரும் தலைப்புகளில் எடுத்தெழுதியுள்ளதைச் சுட்டிக் காட்ட முடியும்.
புகாரியில்
صحيح البخاري: كتاب الطب: باب ما يذكر في الطاعون.
தாவூன் பற்றி கூறப்படுவது என்றும்,
முஸ்லிம் கிரந்தத்தில்
صحيح مسلم: كتاب السلام: باب الطاعون والطيرة والكهانة ونحوها، رقم (٩٢ – ٩٧)
ஸலாம் உரைத்தல் என்ற அத்தியாயத்தின் கீழ் தாவூன் (கொள்ளை நோய்) மற்றும் பறவை சகுணம், ஜோதிடம் பற்றிய பாடம் என முஸ்லிம் கிரந்த விரிவுரையாளர் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தலைப்பிடப்பட்டிருப்பதையும் மற்றும் பல ஹதீஸ் துறை அறிஞர்கள் كتاب الطب மருத்துவம் எனத் தலைப்பிட்டு எழுதிய செய்திகளையும் உதாரணமாகக் கூற முடியும்.
கொரோனா (Corona) போன்ற கொடிய நோய் பற்றிய இறைத் தூதரின் முன்னறிவிப்பும் அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளும் :
இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மரணத்தின் பின்னால் மறுமை நாளின் அடையாளங்களாக நடை பெறுகின்ற பல நூறு நிகழ்வுகள் பற்றி அறிவித்ததில் பல்லாயிரம் உயிர்களைக் காவு கொள்ள விருந்த தாஊன் என்ற உயிர் கொல்லி நோயைப் பற்றியும் தனது தோழர்கள் மத்தியில் எடுத்துரைத்திருந்தார்கள்.
ஆச்சரியமாக இருக்கின்றதா. இதோ வாசியுங்கள்.
عن عوف بن مالك رضي الله عنه قال: أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ، فَقَالَ: «اعْدُدْ سِتًّا بَيْنَ يَدَيِ السَّاعَةِ: مَوْتِي، ثُمَّ فَتْحُ بَيْتِ الْمَقْدِسِ، ثُمَّ مُوتَانٌ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الْغَنَمِ، ثُمَّ اسْتِفَاضَةُ الْمَالِ حَتَّى يُعْطَى الرَّجُلُ مِئَةَ دِينَارٍ فَيَظَلُّ سَاخِطًا، ثُمَّ فِتْنَةٌ لَا يَبْقَى بَيْتٌ مِنَ الْعَرَبِ إِلَّا دَخَلَتْهُ، ثُمَّ هُدْنَةٌ تَكُونُ بَيْنَكُمْ وَبَيْنَ بَنِي الْأَصْفَرِ فَيَغْدِرُونَ، فَيَأْتُونَكُمْ تَحْتَ ثَمَانِينَ غَايَةً، تَحْتَ كُلِّ غَايَةٍ اثْنَا عَشَرَ أَلْفًا 》{رواه البخاري في صحيحه}
அவ்ஃப் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள். தபூக் போரின்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘இறுதி நாள் வருவதற்கு முன்பு நிகழவிருக்கும் ஆறு அடையாளங்களை நீ எண்ணிக் கொள் எனக் கூறி விட்டு :
என்னுடைய மரணம்,
பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல்.
ஆடுகளுக்கு (மூக்கில்) வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று நிகழும் கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போவது),
பிறகு செல்வம் பெரும் வழியும். எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார் (தங்க நாணயங்) கள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடன் இருப்பார்.
பிறகு அரபுகளின் எந்த ஒரு வீட்டிலும் நுழையாமல் இல்லை எனக் கூறும் அளவு குழப்பமானதொரு நிலை தோன்றும்.
பிறகு (ரோமர்களுக்கும்) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களுக்கு) மோசடி செய்து விடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் (ஒன்பது லெட்சத்தி அறுபதாயிரம்) போர் வீரர்கள் இருப்பார்கள் எனக் கூறினார்கள். (புகாரி- 3176)
இந்த முன்னறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணம் நிகழ்ந்த பின்னால் தாவூன் நோய் பரவுதல், பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல் ஆகிய இரண்டு முன்னறிவிப்புக்களும் இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் நடை பெற்ற நிகழ்வுகளாகும்.
உமர் (ரழி) அவர்களின் காலத்தில் தாவூன் அம்வாஸ்:
சுன்னத் ஜமாத் வழி நடக்கும் முஸ்லிம்களின் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் முதலாவது கலீஃபா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் மரணத்தின் பின்னர் ஹிஜ்ரி 13 பிற்காலப் பகுதியில் ஆட்சியில் இரண்டாவது கலீஃபாவாக அமர்த்தப்பட்டார்கள்.
அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 18 (கி.பி.639) ல் இறை அருள் பெற்ற பிரதேசமான ஷாம் தேச நகரங்கள் மற்றும் ஈராக்கிய நகரங்களிலும் தாவூன் என்ற கொடிய நோய் மக்களை மிகக் கொடூரமாகப் பாதிப்பிற்குள்ளாகி இறந்தார்கள்.
இந்த நோய் பாலஸ்தீன நகரமான அம்வாஸ் நகரில் ஆரம்பித்ததன் காரணமாக இஸ்லாமிய வரலாற்றில் தாவூன் அம்வாஸ் என இந்நோய் அழைக்கப்படுகின்றது.
இந்த நோய் பாலஸ்தீன அம்வாஸ் மண்ணில் தொடங்கி எகிப்து, சிரியா, கூஃபா, பஸரா எனப் பல பகுதிகளிலூம் அசுர வேகத்தில் பரவி, சுமார் 27 ஆயிரம் முஸ்லிம்களின் உயிர் போகக் காரணமாக இருந்தது.
ஒரு சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றின் படி மூன்று தினங்களில் மாத்திரம் எழுபதாயிரம் பேர் மரணித்தனர் என்றும்; அவர்களில் முஸ்லிம்கள்தாம் 27ஏழாயிரம் பேர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுகின்றது.
இதில் சிறந்த நபித்தோழர்கள் எனப் போற்றப்பட்ட அபூஉபைதா, பிலால் பின் ரபாஹ், மூஆத் பின் ஜபல், யஸீத் பின் அபீ சுஃப்யான் (ரழி), மற்றும் பல முக்கிய நபித்தோழர்கள், தாபியீன்கள் பலர் ஷஹீத்களாக மரணித்தார்கள்.
அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரழி) அவர்களின் மக்கள் நாற்பது பேரும், அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் பிள்ளைகள் எண்பது பேரும் இந்த தாஊனில் மரணமானார்கள் என இஸ்லாமிய வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
தற்போதைய கொரோனாவை விடப் பன்மடங்கு ஆபத்தான நோயே தாஊன் என்ற அந்தக்கொடிய நோய். தற்பொழுதுவரை கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் உயிர்களைக் காவு கொண்ட இந்த நோய்; முஸ்லிம் மக்களைப் பிடிக்காதாமே என்ற வாதம் பிழையான வாதமாகும்.
அது பொதுவாக ஒரு பிரதேசத்தில் வாழ்கின்ற ஆண்டி, அரசர், படித்தவர், பாமரர் என அனைத்து மக்களையும் பிடிக்கும் என்பதே இந்நோயின் இயல்பான தன்மையாகும். அதனால் கொரோனா (Corona) போன்ற வைரஸ் ஒரு முஸ்லிமைப் பீடித்தால் அல்லாஹ்வின் நாட்டத்தினால் அதன் மூலம் அவர் மரணமடையலாம் அல்லது 100% குணமடையலாம்.
ஹிஜ்ரி 87 ல் ஏற்பட்ட இந்நோய் இளம் யுவதிகள் அதிகமாக மரணித்ததன் காரணமாக طاعون الفتيات ‘யுவதிகள் தாஊன்’ என்றும் பெரும் தலைவர்கள் மரணித்ததைக் காரணமாகக் கொண்டு அதனை طاعون الأشراف ‘கண்ணியமிக்கவர்களின் தாஊன்’ என்றும் இஸ்லாமிய வரலாற்றில் அறியப்படுகின்றது.
இமாம் இப்னு குதைபா (ரஹி) அவர்கள் தாஊன் ஒரு முறை அல்ல. ஐந்து முறைகள் ஏற்பட்டதாக அதன் வருடங்களோடு விளக்கும் அதேவேளை, சில போது தினமும் ஆயிரம் ஜனாஸாக்கள் வரை தொழுகை நடத்தப்பட்டதாவும் குறிப்பிடுவதை அவதானிக்கின்ற போது தாவூன் என்பது கொரோனாவை 《Corona》 விட பாரதூரமாகப் பரவும் அபாயம் கொண்ட ஒரு கொடிய தொற்று நோய் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
மேலதிக வாசிப்பிற்காக:
الموسوعة التاريخية – الدرر السنية
موسوعة التراث
المعارف لابن قتيبة
அவசரகால அறிவித்தல் மூலம் வீடுகளுக்குள் முடங்கி இருத்தல். இதனை அரபியில் الحجر الصحي என அழைப்பார்கள்.
இது தற்காப்பு நடவடிக்கை தானே தவிர முழுமையான பாதுகாப்பு கிடையாது. ஏனெனில் அல்லாஹ் நாடினால் பலமான கோட்டைக்குள்ளும் அது நம்மை நெருங்கும் ஆற்றல் மிக்கது.
உமர் (ரழி) அவர்கள் ஷாம் தேசம் நோக்கிப் பயணித்து “ஸர்க்” என்ற இடத்தை அடைந்ததும் அங்குள்ள அறிஞர்கள், பெரிய மனிதர்கள், அன்ஸாரிகள், முஹாஜிர்கள் என அனைவரோடும் கலந்தாலோசனை செய்தார்கள். அவர்கள் மாறுபட்ட கருத்தைக் கூறினர். இருந்தும் கலீஃபா அவர்கள் மதீனா நகரம் திரும்ப முடிவெடுத்து வரும் வழியில் நபித்தோழர் அப்துர்ரஹ்மான் பின் அஃப் (ரழி) அவர்கள் :
فَأخْبَرَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ: أنَّ رَسُولَ اللَّهِ ﷺ قالَ: «إذا سَمِعْتُمْ بِهِ بِأرْضٍ فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وإذا وقَعَ بِأرْضٍ وأنْتُمْ بِها، فَلاَ تَخْرُجُوا فِرارًا مِنهُ» صحيح البخاري: كتاب الطب: باب ما يذكر في الطاعون.
நீங்கள் ஒரு பிரதேசத்தில் தாஊன் கொடிய நோய் பரவியதைக் கேள்விப்பட்டால் அங்கு செல்ல வேண்டாம். அவ்வாறே நீங்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில் அது நிகழ்ந்து விட்டால் அங்கிருந்து நீங்கள் வெளியேறிச் செல்லவும் வேண்டாம் என இறைத் தூதர் கூற தான் செவிமடுத்ததாகக் கூறியதும் அதற்காக அவர்கள் எடுத்த முடிவு சரியானது என்பதை நினைத்து) அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். (புகாரி- பாடம்: மருத்துவம்) .
«لاَ يُورِدَنَّ مُمْرِضٌ عَلى مُصِحٍّ»
தொழு நோய் ஏற்பட்ட ஒட்டகத்தினைத் ஆரோக்கியமான ஒட்டகத்தோடு சேர்க்கக் கூடாது (புகாரி) என்ற இறைத் தூதரின் கட்டளைக்கு அமைவாக வைரஸ் நோய்பட்ட ஒட்டகத்தைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறையை அரபு மக்கள் கையாண்டது போன்றதொரு நடை முறையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வைரஸ் பரவலின் போது மனிதர்கள் கடைபிடிடக்குமாறு கட்டளை இட்டிருப்பதை அவதானிக்கின்ற போது இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெளி அல்லது புறச் சான்றுகளில் காணப்படுகின்ற உடன்பாடுகள் ஷரீஆவின் தீர்வுப் பொதிகளில் அல்லது பொறிமுறைகளில் ஒன்றாக அங்கீகாரம் பெறும் என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த அடிப்படையில் தான் அகில இலங்கை ஜம்யிய்யத்துல் உலமா சபை பாங்கின் இறுதியில் கொட்டும் மழை காலங்களில் பாங்கில் இணைத்து கூறப்படுகின்ற
صلوا في رحالك
உங்கள் வீடுகளில், நீங்கள் தங்கி இருக்கும் இடங்களில் தொழுது கொள்ளுங்கள் என்ற ஃபத்வாவை அணுக வேண்டும்.
இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட பன்றியின் தோலை ஹலாலாக்கப்பட்ட செத்த ஆட்டின் தோலுக்கு ஒப்பிட்டு பீ.ஜே. தலைகீழாக ஆதாரம் எடுத்ததை விட உலமா சபையின் விளக்கம் சவூதி மற்றும் குவைத் நாடுகளின் அறிஞர்கள் சபையின் விளக்கத்தைச் சரி கண்டும் அறிவித்திருக்கலாம். எப்படியோ இந்த விஷயத்தில் உலமா சபையின் விளக்கம் சத்தியத்திற்கு மிகவும் நெருக்காமனதாகவே தெரிகின்றது. (والله أعلم)
இஸ்லாம் அறிமுகம் செய்துள்ள உணவுப்பழக்க வழக்கங்கள், சுத்தம் தொடர்பான வழிகாட்டல்கள் பற்றி ஆராய்ந்தால் கொரோனா போன்ற கொடிய வைரஸ் தொற்றுக்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடும் தெளிவானதாகும் என்பதை நடுநிலையோடு படிப்பவர்கள் முடிவு செய்வர்.
1500 ஆண்டுகளுக்கு முன்னால் இறைவனின் இறுதித் தூதராக வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலக மக்களுக்கு ஒரு அருட்கொடை என்ற கருத்தை இந்த வைரஸ் பரவலின் போது உலகம் உணரத் தொடங்கி இருக்க வேண்டும்.
அவ்வாறு தெளிவான வழிகாட்டல்களை அவர்கள் இந்த உலக மக்களுக்கு வழங்கி உள்ளார்கள்.
«تَرَكْتُكُمْ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لا يَزِيغُ بَعْدِي عَنْهَا إِلاَّ هَالِكٌ» (سنن ابن ماجه والحاكم )
பொருள் : “உங்களை நான் வெள்ளை நிறப் பாதையில் விட்டுச் செல்கின்றேன். அதன் இரவும் பகல் போன்றது. எனக்குப் பின் வழிதவறிச் செல்பவனைத் தவிர அந்த வழியை விட்டும் விலகி நடக்கமாட்டான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய செய்தி மூலம் இதனை உறுதி செய்து கொள்ள முடியும். (இப்னு மாஜா, அல்ஹாகிம்)
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ
“(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.” (அல்அன்பியா:107)
என்ற அல்குர்ஆனின் போதனைக்கு அமைவாக உலகில் மனித வழிகாட்டிகளாக தம்மை அறிமுகம் செய்து கொண்ட பலர் முஹம்மது நபியைப் போன்று முழு மனித சமூகத்தின் நலன்களையும் கருத்தில் கொண்டு வழிகாட்டவில்லை என்பதை நூறு பேர் என்ற நூலின் ஆசிரியர் மைக்கல் ஹெச். ஹாட் (Michael H. Hart) அவர்கள் கிரிஸ்தவராக இருந்தும் முஹம்மது நபியை முதல் இலக்கமாகத் தெரிவு செய்திருப்பது இதற்கு போதுமான சான்றாகும்.
இறைத் தூதராக, மக்களின் வழிகாட்டிகளாக மாறிய பலரது போதனைகள் முஹம்மது நபியின் போதனைகள் போன்று வாழ்வின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருப்பதில்லை. இருக்கப் போவதுமில்லை . காரணம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தீர்க்கதரிசிகளில் ஒருவர். அதனால் அவரது போதனையில் சாதாரண எறும்பு போன்ற ஊர்வனங்கள் பற்றிக் கூட இடம் பெற்றிருக்கின்றது. அதனால் மற்றவர்களின் போதனைகளை முஹம்மது நபி ஸல் அவர்கள் போதனையோடு ஒப்பிட்டுக் கூறவே முடியாது.
கழிவறை ஒழுங்குகள் மாத்திரம் அல்ல; சமையல் எரிவாயு பற்றிய வழிகாட்டல்களையும் அந்த இறைத்தூதர் காரண-காரியங்களோடு போதித்திருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம்.
பின் வரும் வழிகாட்டல்கள் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: “غَطُّوا الْإِنَاءَ، وَأَوْكُوا السِّقَاءَ، فَإِنَّ فِي السَّنَةِ لَيْلَةً يَنْزِلُ فِيهَا وَبَاءٌ، لَا يَمُرُّ بِإِنَاءٍ لَيْسَ عَلَيْهِ غِطَاءٌ، أَوْ سِقَاءٍ لَيْسَ عَلَيْهِ وِكَاءٌ، إِلَّا نَزَلَ فِيهِ مِنْ ذَلِكَ الْوَبَاءِ”. (رواه مسلم)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள். ஏனெனில், ஆண்டின் ஓர் இரவு உண்டு. அவ்விரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத தண்ணீர் பையையும் கடந்து செல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை.”
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்
(நூல்: முஸ்லிம் -4102)
قال أبو العباس القرطبي ، رحمه الله ، في “المفهم شرح صحيح مسلم” : ” قوله : ( غطُّوا الإناء ، وأوكُوا السقاء ) ؛ جميع أوامر هذا الباب من باب الإرشاد إلى المصلحة الدنيوية ،
பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள் என்ற வழிகாட்டல்கள் சமயம் சார்ந்தது அல்ல. மாறாக உலகியல் நலன்களைக் கருத்தில் கொண்டதாகும் (இமாம் குர்துபி)
மேற்படி நபிமொழியை விளக்குகின்ற இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த வழிமுறைகள் மூலம் ஷைத்தானில் இருந்தும் இரவு வேளைகளில் பாத்திரங்களில் இறங்குகின்ற கொடிய வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கின்றது.
அத்துடன், அசுத்தம் மற்றும் அசிங்கமான வஸ்துக்கள் எதுவும் அவற்றில் விழுவதில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கின்றது.
அத்தோடு ஊர்வனங்கள், விஷக் கிருமிகளைத் தாங்கிய பூச்சிகள் பாத்திரங்களில் விழுவதால் அவற்றில் இருந்தும் பாதுகாப்பு பெற வழியாகவும் இது அமைகின்றது எனக் குறிப்பிடுகின்றார்கள். (இமாம் நவவி -ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்)
ஆண்டின் ஓர் இரவு உண்டு. அவ்விரவில் கொள்ளை நோய் வானில் இருந்து இறங்குகிறது என்ற இது போன்ற உயரிய வழிகாட்டல்களை 1500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதனை செய்திருப்பது தினமும் நாம் அது பற்றி எச்சரிக்கையோடும் பாதுகாப்பாகவும் இருப்பதை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.
அதனால் வைரஸ்கள் பரவியதோ இல்லையோ நாம் நமது நபியின் போதனையில் கண்டிப்பானவர்களாக இருக்க வேண்டும் என்பதை ஒரு முஸ்லிம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
தாஊன் (corona நோய்) இறை நம்பிக்கையிளார்களுக்கு அருளாகும்:
உலக நிகழ்வுகள் அனைத்தும் இறைவிதியோடு தொடர்புடையதாகும்.
இது வரை பல வைரஸ்கள் உலகை அச்சுறுத்தி பல்லாயிரம் உயிர்கள் அதனால் பறிக்கப்பட்டதாக உலகம் பேசிக் கொண்டாலும் இறைவன் தனது நாட்டத்தில் தோற்பதில்லை என்பதே அதன் ரகசியமாகும்.
{وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ} [يوسف:21]
அல்லாஹ் தனது ஆற்றல், அதிகாரத்தில் மிகைத்தவனாவான். எனினும், மனிதர்கள் பெரும்பாலானோர் (அதை) அறியமாட்டார்கள். (யூசுஃப் : 21)
இதுவே இந்த உலக நிகழ்வுகளின் யதார்த்தமாகும்.
இறைவன் பற்றிய சரியான தெளிவு மனிதர்களிடம் காணப்படாததன் விளைவாகவே உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை இயற்கை சீற்றம், தோஷம், பேய், பிசாசு போன்ற வார்த்தைகள் மூலம் மனிதர்கள் விமர்சிக்கத் தலைப்படுகின்றனர்.
அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறு எதுவும் இங்கு நடப்பதில்லை.
அல்லாஹுத்தஆலா தம்தூதருக்கு கற்றுக்கொடுக்கின்றான்
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا [التوبة : ٥١]
(நபியே) நீர் கூறுவீராக ; “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது;
(அத்தௌபா : 51)
இது இஸ்லாத்தின் பலமான அடித்தளங்களில் ஒன்றாகும். இந்த நம்பிக்கை இல்லாத இன்றைய உலகம் கொரோனாவினால் எவ்வளவு அல்லோல கல்லோலமாகி விட்டது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
عن عَبْدِ الرَّحْمَنِ بْنِ أبِي لَيلى، عَنْ صُهَيبٍ(الرومي) قال: قال رَسُولُ اللهِ ﷺ: «عَجَبًا لأمْرِ المُؤْمِنِ. إن أمْرَهُ كُلَّهُ خَيرٌ. ولَيسَ ذاكَ لأحَدٍ إلّا لِلْمُؤْمِنِ. إنْ أصابَتْهُ سَرّاءُ شَكَرَ. فَكانَ خَيرًا لَهُ. وإنْ أصابَتْهُ ضَرّاءُ صَبَرَ، فَكانَ خَيرًا لَهُ» (رواهُ مُسْلِمٌ)
“இறைவிசுவாசியின் காரியம் அனைத்தும் ஆச்சரியம் நிறைந்தது. அது இறை விசுவாசியைத் தவிர வேறு யாருக்கும் நடப்பதில்லை. அவனுக்கு மகிழ்ச்சி தரும் ஏதும் நடக்கின்ற போது (அல்லாஹ்வுக்கு) நன்றி கூறுவான், அவனுக்கு அது நன்மையாகி விடுகின்றது. அவனுக்கு துன்பம் நிகழ்ந்தால் அதற்கு அவன் பொறுமை காக்கின்றான், அதுவும் அவனுக்கு நன்மையானதாகி விடுகின்றது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (முஸ்லிம்)
கொடிய நோயினால் மரணிப்போரின் நிலை:
இருந்தும் ஒரு இறை விசுவாசிக்கு நேர்கின்ற இவ்வாறான கொடிய நோய்கள் காரணமாக அவன் மரணிக்கின்ற போது அவனது மரணம் வீரமரணத்திற்கு ஒப்பானதாகும் என இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை அவன் ஒரு நற்செய்தியாகக் கொள்ள வேண்டுமே தவிர அதனை அபசகுணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
عن حَفْصَةُ بِنْتُ سِيرِينَ، قالَتْ: قالَ لِي أنَسُ بْنُ مالِكٍ رضي الله عنه: يَحْيى بِمَ ماتَ؟ قُلْتُ: مِنَ الطّاعُونِ، قالَ: قالَ رَسُولُ اللَّهِ ﷺ: «الطّاعُونُ شَهادَةٌ لِكُلِّ مُسْلِمٍ»
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“பிளேக் (போன்ற கொள்ளை) நோயால் இறக்கிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிர்த்தியாகியின் அந்தஸ்து கிடைக்கும்.”
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் (புஹாரி – 2830)
عَنْ عائِشَةَ، زَوْجِ النَّبِيِّ ﷺ، أنَّها أخْبَرَتْنا: أنَّها سَألَتْ رَسُولَ اللَّهِ ﷺ عَنِ الطّاعُونِ، فَأخْبَرَها نَبِيُّ اللَّهِ ﷺ: «أنَّهُ كانَ عَذابًا يَبْعَثُهُ اللَّهُ عَلى مَن يَشاءُ، فَجَعَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ، فَلَيْسَ مِن عَبْدٍ يَقَعُ الطّاعُونُ، فَيَمْكُثُ فِي بَلَدِهِ صابِرًا، يَعْلَمُ أنَّهُ لَنْ يُصِيبَهُ إلّا ما كَتَبَ اللَّهُ لَهُ، إلّا كانَ لَهُ مِثْلُ أجْرِ الشَّهِيدِ»
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரான அன்னை ஆயிஷா(ரலி) கூறுகின்றார்கள்:
நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது, அல்லாஹ்
தான் நாடியவர்களின் மீது அனுப்புகிற வேதனையாகும். (மற்றொரு அறிவிப்பில்- பனு இஸ்ரவேலர்கள் மீது அனுப்பிய வேதனை என இடம் பெற்றுள்ளது) அதை அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான் கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ளதைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் அவர் இறைவழியில் உயிர் தியாகம் செய்தவர் போன்ற நற்பலனுக்குரியவர் எனக் கூறினார்கள். (புஹாரி – 3474)
நோயால் பாதிக்கப்பட்டவர்;
பொறுமையோடும்,
அல்லாஹ்விடம் அதற்கான கூலியை எதிர்பார்த்தும் இருக்க வேண்டும்.
என்பதை நபி (ஸல்) அவர்கள் நிபந்தனையாக ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்கின்ற இறைநம்பியாளர்கள் இவ்வாறான நோயால் பீடிக்கப்பட்டாலும் அவர் மனஅழுத்தம் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவது நிச்சயமாகும்.
தாஊன் என்ற பிளேக் நோய் எப்போது?
ஏன் தோன்றியது?
தொற்று என்பது உண்டா?
அது தொடர்பாக இறைத் தூதர் அவர்களைத் தொட்டும் மாறுபட்ட கருத்துக்களாக விளங்கும் நபி மொழிகளை முரண்பாடின்றி அறிஞர்கள் எவ்வாறு அணுக வேண்டும் என அறிவுரை கூறியுள்ளனர்.
மேலும் சில ஒழுங்குகள் பற்றியும் இங்கு நாம் பார்க்கவிருக்கின்றோம்.
தொற்று நோய் இல்லை; அல்லது உண்டு என்ற இரு செய்திகளை எவ்வாறு புரிந்து கொள்வது?
இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய நபி மொழிகள் பலவீனமான காரணிகள் களையப்பட்டு முதல் தர ஆதாரத்தைக் கொண்டவை என்ற நபிமொழிகள் சிலதில் முரண்பாடு போன்ற வெளித் தோற்றப்பாடு காணப்படுவதாக உறுதி செய்யப்படும் போது அந்த துறை சார்ந்த அறிஞர்களின் தீர்ப்பே சமூகத்திற்கு முக்கியமானதாகும்.
கவனிக்க:
ஹதீஸ் அணுகுமுறை ஒழுங்குகளில் பாதையோர, அல்லது அங்காடி வியாபாரிகள், செவிவழிக் கல்வியாளர்கள், மற்றும் 100% பீ.ஜே. தக்லீது முகவர்கள் போன்றவர்களின் மனோ இச்சை அடிப்படையிலான கானல்நீர் ஆதாரங்கள் முழுமையாக உதாசீனம் செய்யப்படல் வேண்டும்.
இப்போது தொற்று நோய் உண்டு, அல்லது இல்லை என்ற பிரதான செய்திகளுக்கு வருவோம்.
தொற்று நோய் இல்லை என்ற பொருள் தரும் நபி மொழி:
عَنْ أبِي هُريْرَةَ، حِينَ قالَ رَسُولُ اللهِ ﷺ: «لا عَدْوى ولا صَفَرَ ولا هامَةَ» فَقالَ أعْرابِيٌّ: يا رَسُولَ اللهِ فَما بالُ الإبِلِ تَكُونُ فِي الرَّمْلِ كَأنَّها الظِّباءُ، فَيَجِيءُ البَعِيرُ الأجْرَبُ فَيَدْخُلُ فِيها فَيُجْرِبُها كُلَّها؟ قالَ: «فَمَن أعْدى الأوَّلَ؟»
“தொற்று நோய் கிடையாது; ஸஃபர் மாத பீடை, ( அல்லது ஒரு வகை நோயும் ) கிடையாது; (இறந்தவரின் எலும்பு ஆந்தையாக மாறிப் பறப்பதாகக் கருதும்) ஆந்தை பற்றிய நம்பிக்கையும் உண்மையுமில்லை’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியமாக) இருந்த ஒட்டகங்களுக்கிடையே சிரங்கு பிடித்த ஒட்டகம் ஒன்று கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே?’ என்று கேட்டதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ‘முதல் ஒட்டகத்திற்கு (அதை)த் தொற்றச் செய்தது யார்?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.”
இதனை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி : 5770, முஸ்லிம் ).
முஸ்னத் அஹ்மத் மற்றும் திர்மிதி போன்ற கிரந்தங்களில் இடம் பெறும் செய்தியில்
قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال : لا يًعْدِي شيء شيئا ، فقام أعرابي فقال : يا رسول الله…؟
எதுவும் எதையும் கடத்திச் செல்வதில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய போது கிராமப்புற மனிதர் ஒருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! ஆரோக்கியமான ஒட்டகம் நோய் பிடித்த ஒட்டகத்தோடு சேர்ந்தால் தொற்று நோய் ஏற்படுகின்றதே எனக் கேட்ட போது மேற்படி பதிலைக் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
அதனால்தான் பின் வருமாறு அறிவுரையும் கூறி உள்ளார்கள்.
عن أبِي هُرَيْرَةَ قالَ: قالَ رَسُولُ اللَّهِ ﷺ: («لا يُورِدَنَّ مُمْرِضٌ عَلى مُصِحٍّ»).
“ஆரோக்கியமான ஒட்டகத்தை வியாதி பிடித்த ஒட்டகத்துடன் கொண்டு வந்து சேர்க்க வேண்டாம்.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இதையும் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
தொற்று நோய் உண்டு என்பதை உணர்த்தும் நபி மொழி:
ورَوى البُخارِيُّ فِي «صَحِيحِهِ» تَعْلِيقًا مِن حَدِيثِ أبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ أنَّهُ قالَ: («فِرَّ مِنَ المَجْذُومِ كَما تَفِرُّ مِنَ الأسَدِ»).
“சிங்கத்தில் இருந்து வெருண்டோடுவது போன்று குஷ்டரோகம் பிடித்த மனிதனை விட்டும் வெருண்டோடு.” (புகாரி)
இரண்டாம் கலீஃபாவின் முடிவு:
ஹிஜ்ரி பதினெட்டாம் ஆண்டு இரண்டாவது கலீஃபா உமர் (ரழி) அவர்கள் காலத்தில் ஷாம் தேசத்தில் ஏற்பட்ட பாரிய பிளேக் நோயோடு எவ்வாறு நடந்து கொள்வது என்ற காரசாரமான ஆலோசனையின் பின்னால் பிளேக் நோய் ஏற்பட்ட ஊருக்கு செல்ல வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதனை நேரடியாகக் கிடைக்காத போதும் அங்கு நாம் சென்று நோயைத் தேடிக் கொள்ள வேண்டுமா? இறை விதி என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு போவது நல்லதா? என்ற கேள்வியின் பதிலாக அங்கு செல்லாது மதீனா திரும்ப முடிவெடுத்து திரும்பும் வழியில் ;
… فَجاءَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ – وكانَ مُتَغَيِّبًا فِي بَعْضِ حاجَتِهِ – فَقالَ: إنَّ عِنْدِي فِي هَذا عِلْمًا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: «إذا سَمِعْتُمْ بِهِ بِأرْضٍ فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وإذا وقَعَ بِأرْضٍ وأنْتُمْ بِها فَلاَ تَخْرُجُوا فِرارًا مِنهُ» قالَ: فَحَمِدَ اللَّهَ عُمَرُ ثُمَّ انْصَرَفَ .[أخرجه البخاري]
“…ஒரு தேவை நிமிர்த்தமாக வெளியில் சென்றிருந்த அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் (அங்கு) வந்தார்கள். அவர்கள், “இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது” எனக் கூறி; ‘ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டும்) வெளியேறாதீர்கள்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்ல கேட்டேன்’ என்று கூறியதும் கலீஃபா அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தனது முடிவில் தொடர்ந்தார்கள் என இடம் பெற்றுள்ளது.” (புகாரி)
எவ்வாறு அணுக வேண்டும்?
இறைத் தூதரின் பொன்மொழிகளைப் பகுப்பாய்வு செய்த முஸ்லிம் உம்மத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலை சிறந்த ஹதீஸ் துறை அறிஞர்கள் ஒருவர் கூட தொற்று உண்டு, இல்லை என இடம் பெறும் ஹதீஸ்கள் பலவீனமானவை என்றோ, அல்லது அவற்றில் ஒன்றை மற்றொன்று மாற்றிவிட்டது அதாவது
ناسخ الحديث ومنسوخه
என்றோ தீர்ப்பளிக்காது மாற்றமாக அவை ஸஹீஹ் தரத்தில் அமைந்தவையே எனக் குறிப்பிட்டுள்ளதோடு, அவை اختلاف الحديث ஹதீஸ்களில் காணப்படும் முரண்பாடுகள் வகை சார்ந்தவைகள் என்றும் வகைப்படுத்தி, அவ்வாறான ஹதீஸ்களை அணுகும் படித்தரங்களையும் தெளிவுபடுத்தி உள்ளனர்.
முதலாவது செய்தியை இரண்டாவது கூறப்பட்ட செய்தி மாற்றி உள்ளது.
அல்லது முரண்பாட்டில் உடன் பாடு காண்பது.
அல்லது அது பற்றிய முடிவுகளை இடை நிறுத்தி வைப்பது.
மேற்படி அடிப்படையில் இரு முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட இரு நபி மொழிகளில் ஒன்றை மாற்றக் கூடியது, மற்றது மாற்றப்பட்டது என்ற தெளிவான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அதனை இணைத்து விளங்க வேண்டும் என நபிமொழியியல் துறையில் தேர்ச்சி பெற்ற அறிஞர்கள் குறிப்பிடுவதை கவனத்தில் கொண்டு அதனை விளங்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.
அதற்கு மாறாக தொற்று நோயே இல்லை என்பதே சரி. மற்றது பலவீனமான செய்தி என்றோ,
அல்லது அதனை மாற்றி தொற்று நோய் உண்டு, தொற்று இல்லை என்பது பிழையான வாதம் என்பதோ, மற்றது பலவீனமான செய்தி என்றோ உளறக் கூடாது. ஹதீஸ் துறை வல்லுனர்கள் இவ்வாறு அணுகியதும் கிடையாது.
அந்த அணுகுமுறை அங்காடிகளின் அணுமுறை என்பதை நாம் முன்னர் சுட்டிக் காட்டி உள்ளோம்.
يقول الحافظ: أن قوله: (لا عدوى): نهي عن الاعتقاد بأنَّ العدوى لا تحدث بقدر الله سبحانه وتعالى. انظر: فتح الباري [ 10/ 158- 163الحافظ بن حجر ]
அல்லாஹ்வின் நாட்டத்திற்கு அப்பால் தொற்று ஏற்படுகின்றது என்ற தவறான நம்பிக்கை பிழையானது என்பதே
لا عدوى
“தொற்று நோய் கிடையாது” என்ற சொல்லாடல் வேண்டி நிற்கும் பொருளாகும்; என இமாம் இப்னு ஹஜர் (ரஹி) அவர்கள் சுட்டிக் காட்டும் விளக்கம் இங்கு கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
قال ابن عبد البر : أما قوله : ” لا عدوى ” فمعناه أنه لا يُعْدِي شيء شيئا ، ولا يُعْدِي سقيم صحيحا ، والله يفعل ما يشاء ، لا شيء إلا ما شاء .
இமாம் இப்னு அப்தில் பர் (ரஹி) அவர்கள்
لا عدوى
“தொற்று நோய் கிடையாது” என்பதன் விளக்கம் : ஒன்று மற்றொன்றைக் கடத்தவோ, அல்லது நோயாளி நோயற்றவருக்கு கடத்துவது என்பதோ பொருள் அல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்வான். அவன் நாடாமல் எந்த ஒரு விஷயமும் நடப்பதில்லை என்பதாகும். (இமாம் இப்னு அப்துல் பர்)
ஆம். தொற்று இல்லை என்றால் ஏன் பிளேக் போன்ற கொள்ளை நோயில் இருந்து வெருண்டோடச் சொன்னார்கள்? தொற்று நோய் இருப்பதால்தானே அவ்வாறு கூற முடியும் என்ற கேள்வி நவீன கால நடைமுறைக்கும் பகுத்தறிவிற்கும் பொருந்தும் நடைமுறையாக உள்ளது.
எனவே தொற்று இல்லை என்பதை ஏற்க முடியாது என்றும் ஒரு சாரார் வாதிடலாம்.
தொற்று நோய் இல்லை என்ற தொடக்க நபி மொழியின் இறுதியில் அந்த தொற்று கலப்பதால் அல்ல. இறைவனின் நாட்டத்தாலேயே அதுவும் இரண்டாவது மூன்றாவதாக எனப் பலரைத் தொற்றிக் கொள்கின்றது. இறை நாட்டம் இல்லாத போது அது தொற்றுவதில்லை என்பதை உணர்த்தவே நோயற்ற ஒட்டகத்தோடு நோய் உள்ளது சேர்ந்த பிறகு தானே நோய் ஏற்படுகின்றது என நபித்தோழர் கேட்ட போது
«فَمَن أعْدى الأوَّلَ؟»
“முதலாவது ஒட்டகத்திற்கு கடத்தியது யார்” என இறைத் தூதர் கேட்டார்கள்.
இது வஹியைப் புறம் தள்ளி பகுத்தறிவை முன்னிலைப் படுத்தி தீர்ப்பு வழங்குவோர் சிந்திக்க வேண்டிய பகுதியாகும்.
சரி தொற்று நோயே இல்லை என வைத்துக்கொண்டால் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் ஷாம் தேச மக்களை சந்திக்காது மதீனா திரும்பியது, பிளேக் நோய் ஏற்பட்ட போது அம்று பின் ஆஸ் (ரழி) அவர்கள் போன்ற பெரிய நபித்தோழர்கள் ஈராக்கிய நகரமான கூஃபா நகர தாஊனிலிருந்து தப்பிக்க குழந்தைகள், குடும்பங்களைக் கூட்டிச் சென்று மலை உச்சியில் ஒதுங்கியதாகக் கூறப்படுவது இறை விதிக்கு மாற்றமில்லையா? இறைவிதியை நம்பி தொற்று நோயை நம்பாமல் சிரியாவுக்கு வரலாமே என்ற தளபதி அபூஉபைதவின் கேள்வி நியாயமானதே!
இந்தக் கேள்வி முஸ்லிம்களின் தளபதி உபூ உபைதா (ரழி ) அவர்களால் உமர் (ரழி) அவர்கள் ஷாம் தேச ஸரஃக் நகரில் இருந்து திரும்பும் வேளை முன்வைக்கப்பட்டது என்பதை அது பற்றிய வரலாற்றில் கூறப்பட்டு அதற்கான பதிலும் கலீஃபாவால் பின்வருமாறு கூறப்பட்டது.
இங்கு கவனியுங்கள் ???
மக்களை இந்த நோயில் கொண்டு சேர்க்காமல் நீங்கள் மதீனா திரும்ப வேண்டும் என்ற மக்களின் கருத்தை செவிமடுத்த கலீஃபா அவர்கள்
فَقالوا: نَرى أنْ تَرْجِعَ بالنّاسِ ولا تُقْدِمَهُمْ على هذا الوَباءِ، فَنادى عُمَرُ في النّاسِ: إنِّي مُصَبِّحٌ على ظَهْرٍ فأصْبِحُوا عليه. قالَ أبُوعُبَيْدَةَ بنُ الجَرّاحِ: أفِرارًا مِن قَدَرِ اللَّهِ؟ فَقالَ عُمَرُ: لو غَيْرُكَ قالَها يا أبا عُبَيْدَةَ؟ نَعَمْ نَفِرُّ مِن قَدَرِ اللَّهِ إلى قَدَرِ اللَّهِ، أرَأَيْتَ لو كانَ لكَ إبِلٌ هَبَطَتْ وادِيًا له عُدْوَتانِ، إحْداهُما خَصِبَةٌ، والأُخْرى جَدْبَةٌ، أليسَ إنْ رَعَيْتَ الخَصْبَةَ رَعَيْتَها بقَدَرِ اللَّهِ، وإنْ رَعَيْتَ الجَدْبَةَ رَعَيْتَها بقَدَرِ اللَّهِ؟ قالَ: فَجاءَ عبدُ الرَّحْمَنِ بنُ عَوْفٍ – وكانَ مُتَغَيِّبًا في بَعْضِ حاجَتِهِ – فَقالَ: إنَّ عِندِي في هذا عِلْمًا، سَمِعْتُ رَسولَ اللَّهِ ﷺ يقولُ: إذا سَمِعْتُمْ به بأَرْضٍ فلا تَقْدَمُوا عليه، وإذا وقَعَ بأَرْضٍ وأَنْتُمْ بها فلا تَخْرُجُوا فِرارًا منه قالَ: فَحَمِدَ اللَّهَ عُمَرُ ثُمَّ انْصَرَفَ.
ஆகவே, உமர் (ரலி) அவர்கள் மக்களிடையே “நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படப்போகிறேன்; நீங்களும் காலையில் பயணத்திற்குத் தயாராகுங்கள்” என்று அறிவிப்புச் செய்தார்கள்.
அப்போது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?” என்று கேட்க, உமர் (ரலி) அவர்கள், “அபூ உபைதாவே! உங்களைத் தவிர வேறு எவரேனும் இவ்வாறு கூறியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். (உமர் (ரலி) அவர்கள், தமக்கு மாறாகக் கருத்துக் கூறுவதை வெறுப்பார்கள்.) ஆம். நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறு பக்கம் வறண்டதாகவும் உள்ள இருகரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?” என்று கேட்டார்கள்.
அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அங்கு) வந்து, “இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்த ஊருக்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து தப்புவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
உடனே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தமது முடிவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப அமையச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு (மதீனாவுக்கு)த் திரும்பிச் சென்றார்கள்.”
(முஸ்லிம் : 4461)
இந்தச் செய்தி பல உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றது.
(1) மக்களின் தலைவர் என்ற வகையில் மக்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்புக் கூறும் கடமை நாட்டுத் தலைவரின் கடமையாகும்.
(2) இவ்வாறான நிலைகளில் கலந்தாலோசனை செய்து தீர்க்கமான முடிவு எடுத்தல்.
(3) பேணுதல் அடிப்படையில் மக்களை வழிநடத்துல்.
(4) தற்காப்பு நடவடிக்கை எடுத்தல். இது தற்காப்புக்கான காரணிகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இல்லாத முக்கிய விஷயமாக இது இருப்பதால் அது பற்றிய அறிவும் அனுபவமும் உள்ள மக்களைக் கலந்தாலோசித்து முடிவிற்கு வருவதில் உள்ள சமூக நலன் போன்ற இன்னோறன்ன பல விளக்கங்கள் இதில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.
இதைத் தான் கலீஃபா அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்பதை மேற்படி வரலாற்றில் இருந்து புரிந்துக் கொள்ள முடியும்.
இருந்தாலும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்து அவன் எழுதியதே தனக்கு நிகழும் என்ற அசையாத நம்பிக்கையோடு அவ்வாறு நோய்ப்பட்ட மனிதர்களோடு கலந்து உண்ணுவதை மார்க்கம் தடை செய்யவில்லை.
ஏனெனில் பிளேக் நோய் ஏற்பட்ட ஒரு மனிதனோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு அருந்தினார்கள். அப்போது அவரிடம் :
كُل بِاسْمِ اللَّهِ ثِقَةً بِاللَّهِ وتَوَكُّلًا عَلى اللَّهِ
அல்லாஹ் மீது நம்பிக்கையும் உறுதியும் வைத்து அல்லாஹ்வின் திருநாமத்தால் உண்ணு. எனக் கூறினார்கள். ((அபூதாஊத்)).
قوله: (فر من المجذوم)، في مسند ابن عمر، وهذا على وجه الإباحة، فأما الفضيلة فهو مع أكله مع المجذوم ومقاربته، وقد كان عمر بن الخطاب رضي الله عنه يؤاكل المجذوم، وإنما قلنا: الفرار منه مباح؛ لئلا يظن ضعيف الإيمان إن عرض له أمر أن ذلك على وجه العدوى
இது குஷ்டரோக நோயால் பாதிக்கப்பட்டவனிடமிருந்து தூர வெருண்டோடு என்ற செய்தியில் காணப்படுகின்ற கட்டளை சார்ந்த பிரோயகத்தில் சற்று தளர்வை உணர்த்துகின்றது. அதாவது, தூர விலக நினைத்தால் விலகிக்கொள் என்ற விருப்பத் தெரிவை உணர்த்தும் சொற்பிரயோகம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
பலவீனமான இறை நம்பிக்கை உள்ளவர்கள் நான் நோய்பட்டவர்களோடு கலந்ததன் காரணமாகவே தமக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது என்று உணராமல் இருக்க இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
((والله أعلم ))
தாஊன் எப்போது உருவானது?
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைப்பதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னால் இறைவிதியில் எழுதப்பட்டவை அனைத்தும் உலகில் நிகழ்ந்தே தீரும்.
அவனது தீர்ப்பில் இருப்பதைத் தவிர வேறு எதுவும் இங்கு நடப்பதில்லை. ஒன்று தண்டனையாக, அல்லது சோதனையாகவோ அவை நிகழலாம்.
அவை நிகழும் காரணம், காலம், நிலைமை, சூழல், நாடு, பிரதேசம் என்பதைப் பொறுத்து மனிதர்கள் மத்தியில் அவற்றின் பெயர்களும் வேறுபடுகின்றன.
இறைவனை மறுத்து, இறைத் தூதர்களைக் கொலை செய்த இஸ்ரவேலர்கள் மீது அனுப்பப்பட்ட தண்டனையாக இருந்துள்ளதை நபி மொழிகள் இனம்காட்டுவதை உலகுக்கு அறியச் செய்வதன் மூலம் அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான், அடியார்கள் அவனுக்கு கீழ்படிந்து கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற செய்தியினை உலகுக்கு சொல்ல வேண்டும்.
وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْىِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِۚ (آل عمران : ٤٩)
“(மாலைக் கண்) குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்.” (3:49) என ஈஸா நபி (அலை) அவர்கள் பற்றி குர்ஆன் குறிப்பிடுகின்றது.
வெண்குஷ்டம் மற்றும் கருங்குஷ்டம் பிடித்த மனிதர்களையும் அல்லாஹ்வின் உத்தரவின்படி நபி ஈஸா (அலை) அவர்கள் நீக்குவார்கள் என்ற குர்ஆன் வசனத்தின் மூலம் இது இஸ்ரேலிய சமூகத்தில் காணப்பட்ட ஒரு நோயாக இருந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது .
இவை அவர்கள் பூமியில் இருந்து வானின் பக்கம் உயர்த்தப்படுவதற்கு முன்னால் நடை பெற்ற உண்மை நிகழ்வுகளாகும்.
அவ்வாறு இன்றும் நடப்பது போன்று ஈஸா நபி -ஏசுநாதர்- அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெயரில் மக்கள் ஏமாற்றப்படுவதை மேற்படி வசனங்கள் போதிக்கவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நோய் நபிமார்களையும் அவர்கள் வழிநடந்த அப்பாவி முஸ்லிம் மக்களையும் கொலை செய்த இஸ்ரவேலர்கள் மீது அல்லாஹ் அனுப்பிய தண்டனையாக இருந்துள்ளதை மறுக்க முடியாது.
عَنْ عائِشَةَ، زَوْجِ النَّبِيِّ ﷺ، أنَّها أخْبَرَتْنا: أنَّها سَألَتْ رَسُولَ اللَّهِ ﷺ عَنِ الطّاعُونِ، فَأخْبَرَها نَبِيُّ اللَّهِ ﷺ: «أنَّهُ كانَ عَذابًا يَبْعَثُهُ اللَّهُ عَلى مَن يَشاءُ، فَجَعَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ …»
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்க அது, அல்லாஹ் தான் நாடியவர்களின் மீது அனுப்புகிற வேதனையாகும்.” (புகாரி)
الطاعون رِجْزٌ أُرسِل على بني إسرائيلَ أو على مَن قبْلَكم {صحيح ابن حبان }
“காலரா (தாஊன்) நோயானது இஸ்ரேலின் சந்ததியினர் மீது அல்லது உங்களுக்கு முன்பிருந்தவர்கள் அனுப்பப்பட்ட தண்டையாகும்” என இடம் பெற்றுள்ளது.( இப்னு ஹிப்பான் )
மேற்படி செய்தியில் பிளேக், காலரா போன்ற கொடிய நோய் அக்காலத்தில் இருந்ததனாலேயே இவ்வாறான கேள்வியும் பிறந்திருக்கின்றது என்ற உண்மையை உணர முடிகிறது.
அவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மரணத்தின் பின்னால் நடைபெறும் என முன்னறிவிப்புச் செய்த செய்தியில்
… ثُمَّ مُوتَانٌ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الْغَنَمِ 》{رواه البخاري في صحيحه}
“…ஆடுகளுக்கு (மூக்கில்) வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று நிகழும் கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போவார்கள் ) எனக் கூறினார்கள்.” (புகாரி- 3176)
இந்த முன்னறிவிப்பில் பிளேக் போன்ற பலரைக் காவு கொள்கின்ற மரணம் என்று புரிந்து கொள்ள முடியும்.
இந்த முன்னறிவிப்பானது இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி: 18 (கி பி.639) ல் நடந்த மிகக் கொடூரமான நிகழ்வாகக் காணப்படுகின்றது.
இதனால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத மக்களும் இறந்து போனார்கள்.
அது பாலஸ்தீன நகரங்களில் ஒன்றான அம்வாஸில் முதலாவதாக நிகழ்ந்த காரணத்தினால் அது “طاعون عمواس” (தாஊன் அம்வாஸ்) “அம்வாஸ் பிளேக்” நோய் என வரலாற்றில் அடையாளப்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு பார்க்கின்ற போது அந்தக் கால மக்கள் மத்தியில் தற்போதைய வைரஸ் குடும்பப் பெயர் போன்ற பெயரில் நோய்கள் ஏற்பட்டு பல லெட்சம் மக்கள் மரணித்துள்ளனர்.
அது ஒரு சாராருக்கு அருளாகவும் மற்றொரு சாராருக்கு இறை தண்டனையாகவும் இருந்துள்ளது என்பது இறைத் தூதர் அவர்களின் போதனையாகும்.
மேலதிக தேடலுக்காக: ?
கொரோனாவாகிப் போன இறைத் தண்டனை:
உலகின் உரிமையாளனும் ஆட்சியாளனும் அதிபதியும் அல்லாஹ் ஒருவனே. அவனது உலகில் அவன் விதித்த கட்டளைகளை மாறு செய்வோர் மீது அவன் பல்வேறுபட்ட வழிகளில் தண்டனைகளை அமுல் செய்வான்.
உலகச் (சண்டியனாகவும்) ரவுடியாகவும், போலீஸ்காரனாகவும் செயல்படும் வீட்டோ பவர் என்று சொல்லப்படும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜேர்மனி போன்ற நாடுகளின் தலைவர்கள் தாம் விரும்பியவாறு செயல்பட முடியுமாக இருந்தால் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ்வால் ஏன் தனது வீட்டோபவரைக் காண்பிக்க முடியாது!!!
அது பற்றிய தெளிவு கீழே தரப்படுகின்றது.
உலகில் வந்த இறைத் தூதர்கள் அனைவர்களும் மனித குலத்திற்குரிய உலகியல் நலனைக் கொண்டும், மரணத்தின் பின்னால் உள்ள நிரந்தர சுவனவாழ்வு, நரகவாழ்வு பற்றிய அடிப்படையான இறைச் செய்திகளைக் கொண்டும் இறைத் தூதர்களாக அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்கள் இறைக் கட்டளைகளை தமது சமூகத்தினர் மத்தியில் எத்திவைக்கின்ற போது அவற்றைத் தமது குறுகிய அறிவுகளால் மறுத்து பரிகாசம் செய்தனர், அல்லது அவர்களை நிராகரித்ததுடன், நாட்டின் – சமூகத்தின் அபசகுணமாகவும் பிரகடனப்படுத்தி அவர்களைக் கொலையும் செய்தனர்.
சில போது தமது அதிகாரத்தால் அவர்களை அப்பிரதேசங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
புவியின் முதல் இறைத் தூதர் நூஹ் (நோவா) முதல், இறுதி இறைத்தூதரான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை இந்த அணுகுமுறையைத்தான் இறைவனின் எதிரிகள் கடைப்படித்தார்கள்.
இறைத் தூதர் நூஹ் (அலை) அவர்களின் சமூகம் ராட்சத வெள்ளப்பிரளயத்தால் அழிய, அவரோ தான் தயாரித்த கப்பலில் தன்னை நம்பிய மக்களோடு பாதுகாப்பாக ஜூதி மலையில் இறங்கியது உண்மை என நவீன காலத்தில் அவரது கப்பல் கூறும் நிரந்தர அத்தாட்சிக் கதையாக மாறிய நிகழ்வே; அல்லாஹ், இஸ்லாம், இறைச் செய்தி, தூதுத்துவம், மறுமை வாழ்வு போன்ற அனைத்தும் உண்மை என நம்பிக்கை கொள்வதற்கு போதுமான ஆதாரங்களாகும்.
இறைத் தூதர் மூஸா (அலை) அவர்கள்; ஈருலகிலும் வல்லமை மிக்க ஆட்சியாளன், அர்ஷின் இரட்சகன் அல்லாஹ்வைப் பற்றி; கொடிய இறைமறுப்பாளன் ஃபிர்அவ்னிடம் அறிமுகம் செய்த போது அவன் அவரைக் கேலி செய்து, கிண்டல் அடித்து ;
وَقَالَ فِرْعَوْنُ يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ مَا عَلِمْتُ لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرِى فَأَوْقِدْ لِى يَٰهَٰمَٰنُ عَلَى ٱلطِّينِ فَٱجْعَل لِّى صَرْحًا لَّعَلِّىٓ أَطَّلِعُ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّى لَأَظُنُّهُۥ مِنَ ٱلْكَٰذِبِينَ
(القصص – 38)
“ஃபிர்அவ்ன் பிரமுகர்களே! உங்களுக்கு என்னை அன்றி வேறொரு தெய்வத்தை உங்களுக்கு நான் அறியமாட்டேன். ஹாமானே! எனக்காக களிமண்ணால் ஒரு கோபுரத்தைக் கட்டு. நான் மெஸூவின் கடவுளை எட்டிப் பார்க்க வேண்டும். அவரைப் பொய்யய்களில் ஒருவராகவே நான் நம்புகிறேன்.”
(அல்கஸஸ் : 38)
எனக் கேவலமாகக் கூறி இஸ்ரவேலின் சந்ததிகளை வழிகெடுத்த அவனே ;
أَنَا۠ خَيْرٌ مِّنْ هَٰذَا ٱلَّذِى هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ يُبِينُ. (الزخرف : 52)
“இந்தக் கேவலமானவரை விட நானே சிறந்தவன். அவருக்கு நாவு கூட திருத்தம் இல்லையே” (அஸ்ஸுக்ருஃப் : 52)
என்றும் பரிகாசமாகப் பேசினான்.
இறுதி முடிவு:
இவனது இறுதி முடிவு நைல் நதியில் அவன் தனது பட்டாளத்தோடு மூழ்கடிக்கப்பட்டான்.
وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَ فَاَتْبـَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْيًا وَّعَدْوًا ؕ حَتّٰۤى اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِىْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِيْلَ وَ اَنَا مِنَ الْمُسْلِمِيْنَ [يونس / ٩٠]
“மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனது இறுதி நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயனை ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
آٰلْــٰٔنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِيْنَ [يونس / ٩١]
“இந்த நேரத்தில்தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.”
فَالْيَوْمَ نُـنَجِّيْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰيَةً ؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰيٰتِنَا لَغٰفِلُوْنَ [يونس / ٩٢]
“எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக நீ இருப்பதற்காக இன்றைய தினம் நாம் உனது உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்றும் கூறப்பட்டது). (அத்தியாயம் : யூனுஸ், வசனங்கள் : 90-92)
இவன் அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வை எப்படி எல்லாம் பரிகாசம் செய்யலாமோ அப்படி எல்லாம் பரிகாசம் செய்த ஃபிர்அவ்னைப் போன்றே மற்றவர்கள் ஏதோ வகையில் தண்டிக்கப்படுவது நிச்சயமே.
அல்லாஹ்வை நேரடியாக காட்டலாமா?
அல்லாஹ்வை பார்த்தீர்களா? இல்லை தானே! அப்படியானால் அவனை எவ்வாறு நம்பிக்கை கொள்வது? என்ற கேள்விக்கு புலனுக்குப் புலப்படாத கொரோனா வைரஸ் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றது. (அல்ஹம்துலில்லாஹ்)
வேதம் கொடுக்கப்பட்டோர் நேரடியாக வானத்தில் இருந்து ஒரு வேத நூலை வேண்டிக் கொண்டது போன்று, மூஸா அலை அவர்களின் சமூக காஃபிர்களும் அல்லாஹ்வை நேரடியாகக் கண்டால் நம்பிக்கை கொள்வோம் என்றும் விதண்டாவாதம் செய்தனர். அதற்குப்பதில் பேரிடியே தீர்வாக மாறியது.
يَسْـَٔلُكَ أَهْلُ ٱلْكِتَٰبِ أَن تُنَزِّلَ عَلَيْهِمْ كِتَٰبًا مِّنَ ٱلسَّمَآءِ ۚ فَقَدْ سَأَلُواْ مُوسَىٰٓ أَكْبَرَ مِن ذَٰلِكَ فَقَالُوٓاْ أَرِنَا ٱللَّهَ جَهْرَةً فَأَخَذَتْهُمُ ٱلصَّٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ [النساء / ١٥٣]
“(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது;” (அந்நிஸா : 153)
அவ்வாறுதான் மக்காவாழ் இறைமறுப்பாளர்களும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு மிக மோசமாக நடந்து கொண்டனர்.
அவர்களிடம் குர்ஆன் இறைவேதம். நான் இறைவனின் தூதர், எனவே எனது போதனைகளை எடுத்து நடவுங்கள்,
மரணத்தின் பின்னால் மறுமை நாள் என்ற மற்றொரு நாள் உண்டு,
மீண்டும் எழுப்பப்பட்டு கேள்வி கேட்கப்பட்டு; சொர்க்கம் – நரகம் என்ற இரு வேறு நிரந்தர இடங்களில் மனிதர்கள் வாழவைக்கப்படுவார்கள்.
அந்த ஒரு நாள்; இவ்வுலகில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு ஈடான நாள் என இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதனை செய்த போது;
புதுமையாகப் பேசுகின்றாரே!,
பகுத்தறிவுக்குப் பொருந்தாத சிந்தனையைக் கூறி மக்கள் மத்தியில் குழப்பம் செய்கின்றாரே,
இந்த முஹம்மது அவர்கள் எனக் கூறி அவர்கள் இறைமறுப்பாளர்களாக மாறினர்.
وَلَئِنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْۢ بَعْدِ الْمَوْتِ لَيَـقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ [ هود/ ٠٧ ]
இன்னும் நபியே! “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு) காஃபிர்கள், “இது நிச்சயமாக தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்றும் கூறுவார்கள். (ஹூத்-07)
وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ.[الجاثية :٢٤]
“(மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் மரணிக்கின்றோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய எதுவித அறிவும் கிடையாது – அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.” (அல்ஜாஸியா : 24)
அதாவது உலகில் நாம் கால் நடைகள் போன்று இலச்சியம் இல்லாத மனித மிருகங்கள் என்பது இந்தக் கூற்றின் விளக்கமாகும்.
முஹம்மது நபியவர்கள் கொண்டு வந்த சத்திய வாழ்வை எதிர்ப்பதில் உச்சகட்டமாக:
وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَـقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَ لِيْمٍ .
(الأنفال – 32)
“(இன்னும் மக்காவின் நிராகரிப்போர்:) “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பொழியச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!” என்றும் கூறினர்.” (அல்-அன்ஃபால் : 32 )
இவர்களின் பிரார்த்தனை மறுக்கப்பட இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிருடன் வாழ்ந்து வந்ததும் அவர்கள் பாமன்னிப்பு வேண்டியதும் ஒரு பாதுகாப்புக் கவசமாகிப் போனதாக அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்றது.
وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ .
(الأنفال : 32)
“ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.” (அல்அன்ஃபால் : 32-33)
இறை மறுப்பாளர்களின் பொதுப் புத்தி :
இறை தண்டனை நெருங்கி வரும் வரை உலகின் அதிபதிகளாகவும், சக்திவாய்ந்தவர்களாகவும் தம்மைக் காட்டிக் கொள்ளும் காஃபிர்கள் இறை தண்டனை வந்ததும் விழி பிதுங்கி நிலைகுலைந்து விடுவது எல்லாக் காலத்திற்கும் பொதுவான நடைமுறையாகிப் போனது. இதற்கு கொரோனாவும் விதிவிலக்கல்ல.
وَلَٮِٕنْ اَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ اِلٰٓى اُمَّةٍ مَّعْدُوْدَةٍ لَّيَـقُوْلُنَّ مَا يَحْبِسُهٗؕ اَلَا يَوْمَ يَاْتِيْهِمْ لَـيْسَ مَصْرُوْفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ (هود/ ٨)
“(கொடிய இறைமறுப்பின் காரணமாக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய) வேதனையை ஒரு குறித்தகாலம் வரை நாம் பிற்படுத்தினால் “அதைத் தடுத்தது யாது?” என்று அவர்கள் நிச்சயமாக (ஏளனமாகக்) கேட்பார்கள்; அவர்களுக்கு வேதனை வரும் நாளில் அவர்களை விட்டும் (அது) தடுக்கப்படாது என்பதையும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?” (ஹூத் : 08)
என அல்லாஹ் கேள்வி எழுப்புவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
இறை மறுப்பாளர்கள் தட்டித் தடுமாறும் கொரோனாவை ஒரு சவாலாகவே அல்லாஹ் அனுப்பி உள்ளான் என்றே கூற வேண்டியுள்ளது. இது பற்றி அல்குர்ஆன் ;
اِنْ نَّشَاْ نُنَزِّلْ عَلَيْهِمْ مِّنَ السَّمَآءِ اٰيَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خٰضِعِيْنَ (الشعراء:٤)
“நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குணிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறைக்கிவிடுவோம்.” (அஷ்ஷூஅரா : 04)
என 1500 வருடங்களுக்கு முன்னர் அறிவித்து, அதனை சவாலுக்கும் உட்படுத்திவிட்டது.
நடுநிலையோடு சிந்திப்போருக்கு குர்ஆனின் போதனைகளில் நிறைய படிப்பினைகள் உண்டு.
இறை சோதனை மற்றும் தண்டனைகளின் பெயர் எப்படி வைரஸ் ஆகியது?
மனிதன் எப்படித்தான் தலையைச் சுற்றிக் குட்டிக்கரணம் அடித்தாலும் அல்லாஹ்தான் இந்த உலகின் அதிபதி, அவன் நாட்டமின்றி அணுவும் அசைவதில்லை என்பதை மனித உயிர்களைக் கைப்பற்றும் போது அவன் நிச்சயம் காண்பித்தே தீருவான்.
இருந்தும் அவன் கருணையாளன் என்பதையும் நிரூபித்த பின்பே மனிதர்களைத் தண்டிக்கவும் அழிக்கவும் செய்கின்றான் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.
உலகில் மனிதர்கள் கடக்கக் கூடாது என அல்லாஹ் நிர்ணயித்த எல்லைகளை மீறுகின்ற போது மீறியோரை அவன் தண்டிப்பேன் என அறிவுரை கூறி அவற்றை மீறிய பின்பே அவன் அவர்களை அழிக்கின்றான்.
வேதனைகளின் முறைகள்
கல்மாரி பொழியச் செய்வது,
பூமியில் சுரிவாங்குவது,
குரங்குகளாக உருமாற்றப்படுவது, ,
திடீர் சப்தம்,
நிலநடுக்கம்,
பாரிய அழிவை ஏற்படுத்துவது,
நீர், வெள்ளம் போன்ற இடர்களால் முழுமையாக அழிப்பது,
காற்று மூலம் அழிப்பது,
…போன்ற பல் வேறு வழிமுறைகள் மூலம் இறைமறுப்பாளர்கள் தண்டிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர் என குர்ஆன் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் ஒரு தண்டனை முறையாகவே கொரோனாவையும் வைரஸ் பரவல்களையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஏனெனில், இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியர்களில் ஒருவரான அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தாஊன் என்ற பிளேக் பற்றி கேட்ட போது :
فَأخْبَرَها نَبِيُّ اللَّهِ ﷺ: «أنَّهُ كانَ عَذابًا يَبْعَثُهُ اللَّهُ عَلى مَن يَشاءُ، فَجَعَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ … رواه البخاري »
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ; “(பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் ; அதனை, அல்லாஹுத்தஆலா தான் நாடியவர்களின் மீது அனுப்புகின்ற வேதனையாகும். மேலும், அதனை முஃமீன்களுக்கு அருளாகவும் ஆக்கியுள்ளான்.” எனக் கூறினார்கள். (புகாரி)
الطاعون رِجْزٌ أُرسِل على بني إسرائيلَ أو على مَن قبْلَكم {صحيح ابن حبان }
“காலரா (தாஊன்) நோயானது இஸ்ரேலின் சந்ததியினர் மீது அல்லது உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது அனுப்பப்பட்ட தண்டையாகும்” எனக் கூறியதாக இடம் பெற்றுள்ளது. (இப்னு ஹிப்பான் )
மேற்படி செய்தியை அவதானிக்கின்ற போது இது இறை தண்டனைகளில் ஒன்று என்பது இறைத் தூதரின் போதனையாகும்.
உலகம் கூறும் பெயர் என்ன?
உலகை அல்லாஹ் இயக்குவதை நிராகரிக்கின்ற இயற்பிலாளர்களின் செல்வாக்கு உலக சீரழிவில் பாரிய பங்காற்றுகின்றது.
அவர்களே இந்த உலக அழிவிலும், மனிதர்களை வழிகெடுப்பதிலும் பின்னணியில் இருந்து காத்திரமாக செல்வாக்குச் செலுத்துகின்றனர்.
இவர்களே உலக மக்களை அழிவுக்கும், இறை தண்டனைக்கும் வழிவெட்டிக் கொடுப்போராகத் திகழ்கின்றனர்.
சுருக்கமாகச் சொன்னால் மனிதர்களை மிருக வாழ்விற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு இறை தண்டனையைப் பெற்றுக் கொடுக்கின்றனர்.
أُوْلَٰٓئِكَ يَدْعُونَ إِلَى ٱلنَّارِ ۖ وَٱللَّهُ يَدْعُوٓاْ إِلَى ٱلْجَنَّةِ وَٱلْمَغْفِرَةِ بِإِذْنِهِۦ ۖ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
(البقرة : 221)
“அவர்கள் நரகின் பக்கமாக (மக்களை) அழைக்கின்றனர். அல்லாஹ்வோ சுவனத்தின் பக்கமும் அவனது உத்தரவின்படி மன்னிப்பின் பக்கமும் (அவர்களை) அழைக்கின்றான். மேலும் அவர்கள் படிப்பினை பெறும் பொருட்டு அவன் தனது வசனங்கள் பற்றி தெளிவுபடுத்துகின்றான்.” (அல்பகரா : 221)
அல்லாஹ் அப்படிப்பட்ட வழிகாட்டல்களை மனிதனுக்கு வழங்கவில்லை. மாற்றமாக:
وَٱللَّهُ يَدْعُوٓاْ إِلَىٰ دَارِ ٱلسَّلَٰمِ .
(يونس – 25)
“அல்லாஹ் சமாதானம் நிறைந்த வீட்டின் (சொர்க்கத்தின்) பக்கம் அழைக்கின்றான்.” (யூனுஸ் : 25)
அல்லாஹ்வின் அன்பான இந்த அழைப்பை மனித சமூகம் முழுமனதோடு ஏற்றுக் கொண்டால் அவர்கள் சுவன வெற்றி பெறுவர் என்பது அனைத்தும் பற்றி அறிந்த அல்லாஹ்வின் வாக்காகும். அவன் வாக்குமீறுவதில்லை.
வைரஸ்கள் பற்றிய உலகப் பார்வை:
அடியார்களை சோதிப்பதற்காக அல்லாஹ் சில நோய்களை உலகில் இறைக்கி வைக்கின்றான். அதற்கு மருந்துகளும் இல்லாமல் இல்லை.
பல மில்லியன் மக்களின் உயிர்களை இல்லாது செய்யக்கூடியதாக அறியப்பட்ட நோயாக தாஊன் (பிளேக், கொளரா) போன்ற நோய்கள் காணப்பட்டன. மரணமே அதன் முடிவுத் தீர்ப்பாக இருந்துள்ளதை உலக வரலாற்றைப் படிக்கின்ற போது அறிந்துகொள்ள முடிகின்றது.
இது பற்றிய நபியின் மனைவியரான அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் கேள்விக்கு அது இஸ்ரேலிய சமூகத்தினர் மீது அல்லாஹ் அனுப்பிய தண்டனையாக இருந்தது என இறைத் தூதர் கூறியதை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் மறைப்பதற்காகக் கூட இதற்கு வைரஸ் எனப் பெயரிட்டுக் கொண்டாலும் அல்லாஹ்வின் தண்டனை என்பதையே ஒரு முஃமின் நம்பிக்கை வேண்டும்.
உலகில் பரவிய வைரஸ் பற்றிய சுருக்கம்:
கி.பி. 1347_1352 வரையிலான காலப் பகுதியில் ஐரோப்பாவை ஒரு நோய் தாக்கியதில் 40 மில்லியன் மக்கள் மடிந்து போனார்கள். அதற்கு
black plague (or death , the Great or Black Death ), “கருப்பு மரணம்” அல்லது “கருப்பு பிளேக்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதே நோய் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவிலும் சமகாலத்தில் பரவி மனித இனத்தின் மூன்றில் ஒரு பகுதியை காவுகொண்டது .
(பார்க்க:https://ar.m.wikipedia.org/wiki/)
கி.பி.1720 ல் பிரான்ஸின் மர்ஸலீனா நகரில் ஏற்பட்ட தொற்றால் ஒரு லெட்சம் பேர் வரை இறந்தனர்.
அதன் பின் சரியாக ஒராண்டு கழித்து (1820) இந்தோனேஸியா, பிலிப்பீன், தாய்லாந்து ஆகிய நாடுகளை பாரிய கொளரா நோய் பீடித்தது. அதில் ஒரு லெட்சத்திற்கும் அதிகமான மக்கள் மரணமானார்கள்.
“Spanish flu”
மனிதர்கள் மத்தியில் முதலாம் உலகமகா யுத்தம் முடிந்த கையோடு (1918 – 1920)ல் இஸ்பைன் நாட்டில் தொற்றிய ஒரு வகை வைரஸாகும் . அதற்கு “Spanish flu” எனப் பெயரிடப்பட்டது.
இந்நோய் பற்றி விபரிக்கின்ற வரலாற்று ஆசிரியர்கள்:
ويتفق المؤرخون على أن الإنفلونزا الإسبانية لم تفرق بين البشر، إذ أصابت الكبار والشباب والمرضى والأصحاء، وكانت شديدة للغاية على الشباب الذين تتراوح أعمارهم بين 20-30 عاما، الذين كانوا أصحاء قبل الوباء.
இஸ்பைன் தொற்றானது மனிதர்கள் மத்தியில் வேறுபடுத்தி அவர்களை பீடிக்கவில்லை. மாறாக பெரியவர், சிறியவர், இளைஞர்கள், நோயாளிகள், ஆரோக்கியமானவர்கள் என அனைத்து தரப்பாரையும் அது பலி எடுத்தது.
20-30 வரையான வயதில் உள்ள இளைஞர்களை அது கடுமையாகப் பாதித்தது, அவர்கள் அனைவரும் அதற்கு முன்னர் தேகஆரோக்கியமானவர்களாகவே இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றனர்.
Spanish flu என்ற இந்த வைரஸ் மூலம் 500 மில்லியன் மக்கள் பாதிக்இப்பட்டனர், அவர்களில் 50 மில்லியன் மக்கள் இறந்து போனார்கள் என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.
நவீன கால வைரஸ் தொற்றுக்கள் :
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் தற்பொழுதைய 21ஆம் நூற்றாண்டுவரை ஒரு சில வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிகுந்த கவனம் பெற்று, பல உயிர்களை கொன்ற வைரஸ்கள் குறித்து பார்க்கலாம்.
(1) இபோலா வைரஸ் (Ebola Virus) :
குரங்குகள், பழந்தின்னி வௌவால்கள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கும் வேகமாக பரவக்கூடியது இபோலா வைரஸ்.
1976ஆம் ஆண்டு முதன்முதலில் தற்போதைய தென் சூடான் பகுதியிலும், காங்கோ குடியரசு நாட்டிலும் இபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. காங்கோ குடியரசில் இபோலா என்ற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் தாக்கியதால், இதற்கு இபோலா வைரஸ் (Ebola Virus) என்று பெயரிடப்பட்டது.
லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனில் 2013 – 2016 வரை பரவிய இபோலா வைரஸ் தொற்றால் 11,300 பேர் கொல்லப்பட்டனர்.
https://www-bbc-com.cdn.ampproject.org/v/s/www.bbc.com/tamil/amp/global-
(2) சார்ஸ் (SARS)
21ஆம் நூற்றாண்டின் மோசமான நோயாகவும், உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டது சார்ஸ்.
சார்ஸ் என்பதன் பொருள்; தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்று அர்த்தம்.
சார்ஸ் வைரஸால் சீனாவில் மட்டும் 774 பேர் உயிரிழந்தனர். இதில் மருத்துவர்களும் அடங்குவர்.
இதனை கட்டுப்படுத்த தவறியதாக சீனாவை ஜ.நா விமர்சித்தது.
?தற்போது வரை இதற்கு எந்த சிகிச்சையும் கிடையாது.
(3) ஜிகா வைரஸ் (Zika virus) :
கொசு வகை கடிப்பால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படும். இந்த கொசு, பகல் நேரத்தில் கடிக்கக் கூடியது.
முதன் முதலில் உகாண்டாவில் 1947ல் குரங்குகளிடம் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் 1952ல் உகாண்டா மற்றும் தான்சானியாசில் மனிதர்களிடம் இந்த தொற்று கண்டறியப்பட்டது.
பின்னர் 2007ஆம் ஆண்டுதான் மைக்ரொனீசியாவில் உள்ள யாப் எனும் தீவில் இந்த வைரஸ் தொற்று பதிவாகியது. அதனை தொடர்ந்து 2013ல் பிரெஞ்சு பாலினீசியா மற்றும் பசிபிக் எல்லையில் உள்ள மற்ற நாடுகளில் ஜிகா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை தாக்கியது.
ஜிகா வைரஸிற்கு இதுவரை எந்த சிகிச்சையும் கிடையாது.
(4) நிபா வைரஸ் (Nipah virus) :
நிபா தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரஸாகும். இதன் பிறப்பிடம் Fruit bats எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.
1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது.
வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது.
2004ஆம் ஆண்டு வங்க தேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பன்றியை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதும் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் தொற்றால் கடுமையான சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படலாம்.
?நிபா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை.
https://www-bbc-com.cdn.ampproject.org/v/s/www.bbc.com/tamil/amp/global
(5) கொரோனா (covid-19)
இது சீனாவின் ஓஹான் மாகாணத்தில் முதலாவது ஆரம்பாகப் பரவியது. பின்னர் உலகில் 64 நாடுகளுக்கும் அதிகமான நாடுகளில் பரவி இது வரை … உயிர்களை எடுத்துள்ளது.
ஆனால் விஞ்ஞானமே கடவுள் என மார்தட்டிக் கொள்ளும் இந்த உலகில் ஏனைய வைரஸ்கள் போல இதற்கும் இதுவரை நிரந்தர மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே, இது இறைவனின் தண்டனைகளில் ஒன்று என்பதை உள்ளார்ந்த அடிப்படையில் நமக்கு உணர்த்துகின்றது.
கொடிய வைரஸ்கள் வரக்காரணமான மனித செயற்பாடுகள்…
கொரோனா போன்ற கொடிய நோய்கள் அடிப்படையில் இறை நாட்டமாக இருந்தாலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவது போன்று இஸ்ரவேலர்கள் மீது இறங்கிய கொளரா மற்றும் பிளேக் போன்று (corona)வும் ஒத்ததாக இருப்பதால் அது இறை தண்டனையின் வரிசையில் பார்க்கப்பட்டு, அதற்கான காரணமும் கண்டறியப்படல் வேண்டும்.
ஈருலக இரட்சகனும் ஆட்சியாளானுமாகிய கண்ணியம் நிறைந்த அல்லாஹ்வை மனிதர்கள் மறுத்து, அவன் ஏற்படுத்திய மரணத்தின் பின்னால் உள்ள நிரந்தர வாழ்வை நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பின் உச்சத்தில் வாழ்வதும் இது போன்ற தண்டனைகள் வர 100% காரணமாக இருக்கலாம் போன்ற கருத்தாடல்கள் முன்னைய தொடர்களில் முன்வைக்கப்பட்டன. அந்த அடிப்படையில் பின்வரும் காரணங்கள் என நாம் காண்கின்ற முக்கிய சில காரணிகள் பற்றி இங்கு எடுத்தெழுதப்படுகின்றன.
((1)) மனிதன் இலக்குத் தவறும் போது :
மனிதர்கள் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட பலவீனமான அடியார்களாகும். அவர்கள் தாம் படைக்கப்பட்ட நோக்கத்தை மறந்து, முரண்பாடுகளின் மொத்த வடிவமான மத சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் போன்ற மனித சிந்தனைகளின் வெளிப்படாகக் காணப்படுகின்ற வெற்றுக் கோஷங்களால் மனித மிருகங்களாக மாற்றப்பட்டு, மறுமை வாழ்வில் இலட்சியம் அற்ற கால்நடைகளாக அவர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இறை கோபத்திற்கு மீண்டும் மீண்டும் இலக்காகும் போது எதிர் காலங்களில் இதைவிடவும் கொடிய வைரஸ் தொற்றுக்கள் ஏற்பட 100% வாய்ப்புக்கள் அதிகம் என்பதே இறைவேதமான புனித குர்ஆனும் இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையாகும்.
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَٰكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ. (المؤمنون – 115).
“நீங்கள் வீணுக்காப் படைக்கப்பட்டதாகவும், நீங்கள் நம் பக்கம் (மறுமை நாளில்) மீளமாட்டீர்கள் என்றும் எண்ணிக்கொண்டீர்களா?”
(அல்முஃமினூன் : 115)
என அல்லாஹ் கேட்பதன் இரகசியமும் இதுவாகும்.
எனவே, மனிதன் இங்கு வீணாகப் படைக்கப்படவே இல்லை என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்.
((2)) அல்லாஹ்வின் பூமியில் அழிச்சாட்டியம் புரிவது
சூரியக் குடும்பத்தின் முக்கிய கோளான பூமியில் மாத்திரமே உயிரினங்கள் வாழ முடியும். வேறு கிரகங்களில் வாழ்வதற்கான எந்த வசதிகளையும் பூமியின் இரட்சகனாகிய அல்லாஹ் வைக்கவில்லை.
இந்த பூமியில் மனிதன் வாழ்வதை நிரந்தர உரிமைச் சொத்தாக்கவும் முடியாது. இதில் பல சந்ததிகள் தோன்றி மரணித்தது போன்று மனிதர்களாகிய நாமும் வாழ்ந்த பின் மரணிக்க வேண்டும். மரணத்தின் பின் அனைவரும் அல்லாஹ்வின் விசாரணை மன்றில் ஒரு நாள் ஆஜர்படுத்தப்படுவோம். எனவே அதற்கு தயாராகவே இங்கு சில காலங்கள் வாழ வழி செய்து தரப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி, பூமி பல்லாயிரம் ஜீவிராசிகளின் சரணாலயமாகும். பூமியைப் படைத்த அல்லாஹ் அதனை அவ்வாறுதான் ஆக்கி வைத்துள்ளான்.
எனவே இங்கு வாழக் கூடிய அனைத்து உயிரனங்களுக்கும் இதில் சுதந்திரமாக வாழும் உரிமை பெற்றுள்ளன. ஏனெனில் அவை எதுவும் அல்லாஹ்வால் வீணாகப் படைக்கப்படவில்லை.
காடுகளை எரிப்பதும் புவியை வெப்படமடையச் செய்வதும் பறவைகள் மற்றும் ஏனைய மிருகங்களின் வாழ்வதற்கான உரிமைகளை பறிப்பதும் உலகில் எவ்வாறு குற்றமாக நோக்கப்படுமோ அதை விடப் பன்மடங்கு குற்றமாக அல்லாஹ்வின் பூமியில் செய்யப்படுகின்ற இறை நிராகரிப்பும் அதனோடு தொடர்புடைய அவனுக்கு நிகராக செய்யப்படுகின்ற இணைவைப்புக்கள் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் இறைவனால் பார்க்கப்படுகின்றன.
لِلهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ (البقرة / ٢٨٤)
“வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அல்லாஹ்வுக்குரியவையாகும்.” (அல்பகரா : 284)
அதாவது இந்த உலகின் அதிபதி அல்லாஹ்வே, அவனை அன்றி வணங்கி வழிபடத் தகுதியானவர்கள் இந்த பூமியில் கிடையவே கிடையாது. அவன் இவ்வுலகில் மனித மேம்பாட்டிற்காக பல நூறு தூதர்களை அனுப்பி இது பற்றி தெளிவு படுத்தியது போன்று இறுதி இறைத் தூதராக எழுதவோ, வாசிக்கவோ தெரியாத சிறந்த முன்மாதிரி, நம்பிக்கையாளர் என மக்காவாழ் மக்களால் போற்றப்பட்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குர்ஆன் என்ற புனித வேதத்தைக் கொடுத்து வழிகாட்டினான்.
குர்ஆனில் என்ன இருக்கின்றது?
குர்ஆனைப் படியுங்கள், குர்ஆனைப் படியுங்கள், என்கிறீர்களே! அதில் அப்படி என்னதான் இருக்கின்றது? என கேட்போருக்கு அதைப் படியுங்கள் என்பதே முதலாவது பதிலாகும்.
ஏனெனில் அல்லாஹ் அதில் மனித சமூகத்திற்கு அடிப்படையான அனைத்து விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தி இருப்பதுடன், அதன் சட்டமே எல்லாக் காலத்திற்கும் மனித குலத்திற்கு 100% வீதம் உகந்தது என்றும், அது உலக மக்களின் பொதுமறை என்றும் அறிவித்துள்ளான்.
الم (1) ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ (البقرة/ 2)
“அலிஃப், லாம், மீம். இவ்வேதத்தில் எவ்வித சந்தேகமும் கிடையாது. (அது) இறையச்சமுள்ளோருக்கு நேர் வழிகாட்டியாகும்.” (அல்பகரா : 1-2)
எனக் கூறி மனிதர்கள் சந்தேகப்பட வேண்டியதில்லை என்றும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட ஒரு வேத நூல் இருக்குமானால் புனித குர்ஆன் மாத்திரமே உண்டு.
அது முதலாவதாக இறங்கிய போதே,
هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ[البقرة/ ١٨٥]
“(இவ்வேதம்), மனிதர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடியதாவும் நேர்வழி மற்றும் சத்தியத்தை வேறுபடுத்திக் காட்டும் அத்தாட்சிகளும் (இதில்) உண்டு.” (அல்பகரா : 57)
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى ٱلصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ. (يونس – 57)
“மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு உபதேசமும், உள்ளங்களில் உள(நோய்களுக்கு) நிவாரணியும் இறை நம்பிக்கையாளர்களுக்கு அருளும் நிச்சயமாக வந்து விட்டது.” (யூனுஸ் : 57).
ஆம். இது மனிதர்களை நல்வழிக்கே கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் நூல்:
இவ்வேதம் இறை வேதமாகும். இது முஹம்மது நபி அவர்கள் தனது சுய சிந்தனையில் இருந்து எழுதிய வேத நூல் கிடையாது. மாறாக மனிதர்களைப் படைத்த அல்லாஹ் ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் கால, நேர, சந்தர்ப்ப சூழல்களுக்கு அமைவாக சிறுகச் சிறுக இறக்கி வைத்த போதனைகளாகும்.
பொதுவாக இஸ்லாம் அல்லாத மதக் கோட்பாட்டு நூல்களில் காணப்படுகின்ற மூடநம்பிக்கைகளை மனித பகுத்தறிவு ஏற்க மறுப்பதை அடிப்படையாகக் கொண்டு புனித குர்ஆனும் – இஸ்லாம் மதம் சார்ந்ததாக இருப்பதால் அதைப் பற்றிய எவ்வித அறிவுப் பின்னணியும் இன்றி மறுப்பதே மனிதர்கள் விடுகின்ற முதலாவது தவறாகும்.
பூமி தட்டையானது என்ற பைபிளின் கருத்துக்கு நேர்மாறாக பூமி உருண்டை வடிவமானது என்ற கருத்தை இத்தாலிய விஞ்ஞானி கலீலியோ கலிலி (Galileo Galilei) அவர்கள் ” சூரியனை மையமாகக் கொண்டு புவியும் மற்ற கிரகங்களும் சுற்றுகிறது” என்ற கிறித்தவ சமய நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மையை மக்களிடையே வெளிப்படுத்தியமைக்காக 1642 முதல் இறக்கும் வரை கத்தோலிக்க திருச்சபையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ஆய்வின் அடிப்படையில் முதலாவதாக தெரிவித்த அறிவியல் சார்ந்த கருத்தை கிரிஸ்தவ மதகுருக்கள் தமது புனித வேதத்திற்கு எதிரான கருத்தாகப் பிரச்சாரம் செய்ததன் விளைவு கலிலியோவும் அவரது நண்பர்களும் கொதித்த எண்ணையில் உருக வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள் என சிலர் குறிப்பிடுகின்றனர். அதன் எதிர் திசையில் “மதம் என்பது விஞ்ஞானத்தின் முதல் எதிரி” என விஞ்ஞானிகளால் பார்க்கப்பட்டது போன்று குர்ஆனும், இஸ்லாமும் பார்க்கப்படுவது பெரும் தவறான பார்வையாகும்.
ஏனெனில் குர்ஆன் பல இடங்களில் விஞ்ஞானம் பற்றிப் பேசி இருக்கின்றது. அதனால் அது விஞ்ஞானம் வேண்டாம் எனக் கூறவில்லை. மாறாக அல்லாஹ்வின் இடத்திற்கு விஞ்ஞானிகள் கடவுளர்களாக மாற்றப்பட முடியாது என்கிறது.
பூமிப் பந்தானது முட்டை வடிவத்தை ஒத்தது என்ற கோட்பாட்டை 1500 களுக்கு முன்னரே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த குர்ஆன் குறிப்பிடுகின்றது என்பதைப் பிற்காலத்தில் அறிந்து கொண்ட விஞ்ஞானிகள் குர்ஆன் பக்கம் நெருங்கத் தொடங்கி இன்று அதன் போதனைகளைச் சரி காண்கின்றனர்.
அதனால்தான் விஞ்ஞானம் கடவுளைக் கண்டு கொண்டது, நாஸ்தீகத்தின் தந்தை இஸ்லாத்தை ஏற்றார், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிரபலங்கள் போன்ற செய்திகளை அடிக்கடி நம்மால் வாசிக்க முடிகின்றது.- அல்லாஹ்வே மிகப் பெரியவன்-
ஆமாம்!!! இஸ்லாம் மதம் அல்ல. அது ஒரு வாழ்வியல் நெறி. அது மனிதர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு தரப்பட்ட அல்லாஹ்வின் உயரிய வழிகாட்டல்களை உள்ளடக்கிய மார்க்கமாகும்.
அதன் கோட்பாடுகளைச் சுமந்த நூலான குர்ஆனைப் போன்றதொரு வேதம் யாரிடமும் இல்லை. அது போன்ற ஒரு நூலை எவராலும் தொகுக்கவே முடியாது. காரணம் அது அல்லாஹ்வின் பேச்சு என்பதனாலாகும்.
قُل لَّئِنِ ٱجْتَمَعَتِ ٱلْإِنسُ وَٱلْجِنُّ عَلَىٰٓ أَن يَأْتُواْ بِمِثْلِ هَٰذَا ٱلْقُرْءَانِ لَا يَأْتُونَ بِمِثْلِهِۦ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍۢ ظَهِيرًا
(الإسراء – 88)
“மனித மற்றும் ஜின் இனங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த குர்ஆன் போன்ற ஒன்றைக் கொண்டு வர ஒன்றுகூடி, அவர்கள் ஒருவர் மற்றவருக்கு துணையாக நின்றாலும் இதுபோன்ற ஒன்றை கொண்டு வரமுடியாது.” (அல்இஸ்ரா : 88)
என்பது இறை சவாலாகும்.
உலகில் சாதாரண மனிதர்கள் சிலரின் சவாலையே முறியடிக்க முடியாது பின்வாங்கும் மனிதன் இறைவனின் இந்த சவாலை ஒரு போதும் முறியடிக்கவே முடியாது என்பதே உண்மையாகும்.
لَّا يَأْتِيهِ ٱلْبَٰطِلُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِۦ ۖ تَنزِيلٌ مِّنْ حَكِيمٍ حَمِيدٍۢ. (فصلت – 42)
“இந்த குர்ஆனின் முன்னரோ, அதன் பின்னரோ எதிலும் தவறுகள் வரவேமாட்டாது. (அது) யாவற்றையும் நன்கு அறிந்த புகழுக்குரிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாகும்.” (ஃபுஸ்ஸிலத் : 42)
وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ .(القلم – 52)
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ (التكوير/ ٢٧ )
“அது உலக மக்களுக்கான நினைவூட்டலே அன்றி வேறில்லை.” (அல்கலம் : 52) மற்றும் (அத்தக்வீர் : 27)
وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ. (الحاقة – 48)
“இது இறையச்சமுள்ளோருக்கான நினைவூட்டலே அன்றி வேறில்லை.” (அல்ஹாக்கா : 48)
كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ ﴿٥٤ المدثر﴾
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ ﴿١١ عبس}
“அவ்வாறன்று, அது நினைவூட்டலாகும்.” (அல்முத்தஸ்ஸிர் : 54) , (அபஸ : 11)
إِنَّ هَٰذِهِ تَذْكِرَةٌ فَمَنْ شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ سَبِيلًا ﴿٢٩ الانسان﴾
“நிச்சயமாக இது நினைவூட்டலாகும். யார் (சத்தியத்தில்) நாட்டமுள்ளவரோ அவர் அவரது வழியை எடுத்துக் கொள்வார்.” (அல்இன்ஸான் : 29)
மேற்படி இணையதளங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், மற்றும் நாஸ்திகர்களின் விபரங்களைக் காரண காரியத்தோடு அறிந்து கொள்ள முடியும்.
((3)) பெருமைக்காரர்களுக்கான சவால் :
இறைவேதத்தைச் சுமந்து வந்த இறைத் தூதர்கள் அனைவரும் தமது சமுதாயத்தால் விடுக்கப்படுகின்ற சவால்களை முறியடித்து தமது தூதுத்துவத்தை சந்தேகமின்றி, நிலை நிறுத்துவோராகவே அல்லாஹ் அனுப்பி வைத்தான்.
மூஸா (நபி) அவர்களின் காலத்தில் சூனியத்தில் பெயர் போனவர்கள் இருந்தனர். அதனை முறியடிப்பவராகவே அல்லாஹ் அவர்களை அனுப்பினான்.
ஈஸா (அலை) அவர்களின் காலத்தில் வெண்குஷ்டம் பரவலாகக் காணப்பட்டும் வைத்தியத் துறையில் முன்னோடிகள் இருந்தும் அதனைக் குணப்படுத்த முடியாதோராகவே இருந்தனர்.
அல்லாஹ் ஈஸா நபி (அலை) அவர்களுக்கு அவனுடைய உத்தரவின் பெயரில் நடாத்தக் கூடிய சில அற்புதங்களை வழங்கினான்.
ஆனால் அதனை துறைபோகக் கற்றோராக கூறப்படுகின்ற வைத்தியர்களுக்கு அதை இயலாமல் செய்து அல்லாஹ் அவர்களை தோற்கடித்தான்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழந்த காலம் இஸ்லாமியப் பண்பாடுகள் காணல் நீராகிப்போன, இணைவைப்பே மூதாதையோர் வழி என்று முத்திரை குத்தி, மடமையின் உச்சத்தில் மக்கள் தமது வாழ்வைத் தொலைத்ததனால் இஸ்லாமிய வரலாற்றில் (الأيام الجاهلية) “அறியாமைக் காலம்” என வர்ணிக்கப்படுகின்றது.
இருந்தும் , அங்கு சிறந்த கல்விமான்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், புலவர்கள், சரித்திரவியலாளர்கள், போர் வீரர்கள், வர்த்தகர்கள் என பல தரப்பினரும் வாழாமல் இல்லை.
இவர்களில் உள்ள அரேபிய கவிஞர்கள், இலக்கியவாதிகள் அனைவரும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறையியல் போதனைகளுக்கு முன்னால் வாயடைத்து, மலைத்துப் போனார்கள். குலத்திற்கு தலைவர்களாக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோர் செய்வதறியாது திகைத்தனர்.
பின்வரும் சரித்திரத்தை சற்று சிந்தியுங்கள் ….
“அஸ்து ஷனூஆ” எனும் குலத்தைச் சேர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்றுகறுப்புக்காக ஓதிப்பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில அறிவிலிகள் “முஹம்மத் ஒரு மனநோயாளி” என்று கூறுவதை அவர் செவியுற்றார். “நான் அந்த மனிதரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்” என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, “முஹம்மதே! காக்கை வலிப்பிற்காக நான் ஓதிப்பார்த்துவருகிறேன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் நிவாரணமளிக்கிறான். உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நாங்கள் அவனைப் போற்றுகிறோம்; அவனிடமே உதவி கோருகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்திவிட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என்றும் நான் சாட்டியம் கூறுகிறேன். என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) ளிமாத்,
فقال رسولُ اللهِ ﷺ: (إنَّ الحمدَ للهِ نحمَدُه ونستعينُه، مَن يَهدِه اللهُ فلا مُضِلَّ له ومَن يُضلِلْ فلا هاديَ له وأشهَدُ أنْ لا إلهَ إلّا اللهُ وحدَه لا شريكَ له وأنَّ محمَّدًا عبدُه ورسولُه: أمّا بعدُ) فقال: أعِدْ علَيَّ كلماتِك هذه فأعادها عليه رسولُ اللهِ ﷺ ثلاثَ مرّاتٍ فقال: لقد سمِعْتُ قولَ الكَهنةِ وقولَ السَّحَرةِ وقولَ الشُّعراءِ فما سمِعْتُ مِثْلَ كلماتِك هؤلاءِ هاتِ يدَك أُبايِعْك على الإسلامِ…. [صحيح مسلم ]
“நீங்கள் (இப்போது) சொன்ன இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த வார்த்தைகளை முன்பு போன்றே மூன்று முறை கூறினார்கள். இதைக் கேட்ட ளிமாத், “நான் சோதிடர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் போன்று நான் கேட்டதேயில்லை. இவ்வார்த்தைகள் ஆழ்கடலையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள். அப்போது “உம்முடைய சமூக மக்களுக்காகவும் (அவர்கள் சார்பாக) உறுதிமொழி அளிப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு ளிமாத் “என் சமூகத்தாருக்காகவும் (உறுதி அளிக்கிறேன்)” என்று கூறினார் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.”” ((நூல்: முஸ்லிம்- 1576)).
அறியாமைக் கால மற்றொரு சரித்திரம்…
அபூதர் (ரலி) அவர்கள் கூறுகின்ற மற்றொரு சரித்திரத் தொடரில் :
என்னிடம் எனது சகோதரர் உனைஸ், “நான் ஓர் அலுவல் நிமித்தம் மக்காவுக்குச் செல்கிறேன். ஆகவே, நீர் (என் பணிகள் எல்லாவற்றையும்) கவனித்துக்கொள்வீராக” என்று கூறிவிட்டு, மக்காவுக்குச் சென்றார். பின்னர் தாமதமாகவே உனைஸ் என்னிடம் திரும்பிவந்தார். அப்போது அவரிடம் நான், “(இத்தனை நாட்கள்) என்ன செய்தாய்?” என்று கேட்டேன். அதற்கு உனைஸ் (ரழி) அவர்கள்,
.. لَقِيتُ رَجُلًا بمَكَّةَ علَى دِينِكَ، يَزْعُمُ أنَّ اللَّهَ أَرْسَلَهُ، قُلتُ: فَما يقولُ النَّاسُ؟ قالَ: يقولونَ: شَاعِرٌ، كَاهِنٌ، سَاحِرٌ، وَكانَ أُنَيْسٌ أَحَدَ الشُّعَرَاءِ.
“நீர் கடைப்பிடிக்கும் மார்க்கத்தில் இருக்கும் ஒரு மனிதரை மக்காவில் சந்தித்தேன். அவர் “அல்லாஹ்தான் தம்மைத் தூதராக அனுப்பியுள்ளான்” என்று கூறுகிறார்” என்று சொன்னார். நான், “மக்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு உனைஸ், “(அவர் ஒரு) கவிஞர், சோதிடர், சூனியக்காரர் என்று சொல்கிறார்கள்” என்றார். ஆனால், கவிஞர்களில் ஒருவராக இருந்த உனைஸ் கூறினார்:
قالَ أُنَيْسٌ: لقَدْ سَمِعْتُ قَوْلَ الكَهَنَةِ، فَما هو بقَوْلِهِمْ، وَلقَدْ وَضَعْتُ قَوْلَهُ علَى أَقْرَاءِ الشِّعْرِ، فَما يَلْتَئِمُ علَى لِسَانِ أَحَدٍ بَعْدِي، أنَّهُ شِعْرٌ، وَاللَّهِ إنَّه لَصَادِقٌ، وإنَّهُمْ لَكَاذِبُونَ [صحيح مسلم ٢٤٧٣ ]
நான் சோதிடர்களின் சொற்களைச் செவியுற்றுள்ளேன். ஆனால், இவரது சொல் சோதிடர்களின் சொற்களைப் போன்றில்லை. அனைத்து வகையான கவிதைகளோடும் அவருடைய சொற்களை நான் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டேன். (நான் மட்டுமல்ல) வேறு எந்தக் கவிஞரின் நாவும் அந்த மனிதரின் சொற்களைக் கவிதை என ஏற்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக அவர் ஓர் உண்மையாளர். அந்த மக்கள்தான் பொய்யர்கள் எனக் கூறினார். (முஸ்லிம் – 4878)
قالَ أُنَيْسٌ: لقَدْ سَمِعْتُ قَوْلَ الكَهَنَةِ، فَما هو بقَوْلِهِمْ، وَلقَدْ وَضَعْتُ قَوْلَهُ علَى أَقْرَاءِ الشِّعْرِ، فَما يَلْتَئِمُ علَى لِسَانِ أَحَدٍ بَعْدِي، أنَّهُ شِعْرٌ، وَاللَّهِ إنَّه لَصَادِقٌ، وإنَّهُمْ لَكَاذِبُونَ [صحيح مسلم ٢٤٧٣ ]
நான் சோதிடர்களின் சொற்களைச் செவியுற்றுள்ளேன். ஆனால், இவரது சொல் சோதிடர்களின் சொற்களைப் போன்றில்லை. அனைத்து வகையான கவிதைகளோடும் அவருடைய சொற்களை நான் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டேன். (நான் மட்டுமல்ல) வேறு எந்தக் கவிஞரின் நாவும் அந்த மனிதரின் சொற்களைக் கவிதை என ஏற்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக அவர் ஓர் உண்மையாளர். அந்த மக்கள்தான் பொய்யர்கள் எனக் கூறினார். (முஸ்லிம் – 4878)
அறியாமைக் காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள் நவீகால அறிஞர்கள் தரத்தில் மதிக்கப்பட்டவர்கள்.
அவர்களே முஹம்மது நபியின் போதனைகளுக்கு முன்னால் சரண்டராகி இஸ்லாம் மார்க்கத்தை அங்கீகரித்துள்ளனர்; என்றால் அவர்களை விட மொழியில், அறிவில் பன்மடங்கு பின் தங்கிய தற்கால மக்கள் இஸ்லாம் பற்றி ஆய்வு செய்வதற்கு முன்னதாகவே இஸ்லாம் சத்திய பார்க்கம் என்பதை முடிவு செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.
பிற நாடுகளை அடிமைப்படுத்தி, பூமியின் ஜாம்பவான்களாக தம்மைப் பற்றி மார்தட்டிக் கொள்கின்ற அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற கொடிய வல்லரசுகள் , விஞ்ஞான தொழில் நுட்பவியலில் முன்னோடியாக இருக்கும் ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகள் மனித கண்களால் பார்க்க முடியாத ( Corona) கொரோனாவுக்கு முன்னால் விழி பிதுங்கி, செய்வதறியாது கதிகலங்கி நிற்பது எதைச் சொல்கின்றது என நாம் சிந்திக்கவேண்டும்.
உண்மையில் விஞ்ஞானிகள் நிறைந்த காலத்தில் வாழும் இவர்கள் அல்லாஹ்வின் ஆற்றலுக்கு முன்னால் எம்மாத்திரம் என நாம் சிந்திக்க வேண்டும்.
இவர்கள் பலவீனமானவர்கள், அறிவில்லாதவர்கள் என்பதைக் கூட குரோனா நம்மிடம் பாடம் சொல்லி விட்டதாகவே முஸ்லிம்களாகிய நாம் முடிவு செய்து விட்டோம்.
((4)) ஹதீஸில் தெளிவாக கூறப்பட்டது போன்று நமது படைப்பிடனைக்காக இஸ்ரவேலின் சந்ததிகள் மீது அல்லாஹ் அனுப்பியது போன்று தற்கால இறை மறுப்பாளர்கள் மீது தண்டனையாக அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகவும் இருக்கலாம். (والله أعلم)
((5)) அல்லது வட்டி, விபச்சாரம் போன்ற மானக் கேடான காரியங்கள் உலகில் பகிரங்கமாக நிகழ்கின்ற போது அவற்றை எதிர்ப்பதற்குப் பதிலாக தனி மனித சுதந்திரம், ஜனநாயகம் என்ற பெயரில் அதற்கு சுதந்திரம் அளிப்பதைக் கூறலாம்.
வட்டி எடுப்பது, வட்டிப் பொருளாதார முறை இஸ்லாத்தில் மட்டும் அல்ல யூத, கிரிஸ்தவ மதங்களிலும் தடை செய்யப்பட்ட முறையாகும். இருந்தும் அதனை முன் நின்று நடத்துவோர்களாக யூதர்களளும் கிரிஸ்தவர்களளுமே இருக்கின்றனர்.
அல்லாஹ்வோடு ஒரு அடியான் போரிடுவதற்கு சமமான பொருளீட்டல் முறையே வட்டிக் கொடுக்கல் வாங்கல் முறை என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
நவீன உலகில் வட்டிப் பொருளாதாரம் இன்றி வர்த்தகம் இல்லை எனக் கூறப்படும் அளவிற்கு; வட்டி வங்கிகள் பன்றி குட்டியிடுவதைப் போன்று வங்கிக் கிளைகள் குட்டி போட்டுக் காணப்படுகின்றன.
خِصالٌ خَمْسٌ إذا ابتُلِيتُمْ بهِنَّ ، وأعوذُ باللهِ أن تُدْرِكُوهُنَّ : لم تَظْهَرِ الفاحشةُ في قومٍ قَطُّ ؛ حتى يُعْلِنُوا بها ؛ إلا فَشَا فيهِمُ الطاعونُ والأوجاعُ التي لم تَكُنْ مَضَتْ في أسلافِهِم الذين مَضَوْا {الألباني/ صحيح }
“ஐந்து பண்புகள். அவற்றை நீங்கள் அடைவதையிட்டு அல்லாஹ்விடம் பாதுகாக்க வேண்டுகின்றேன் . எந்த சமூகத்தில் விபச்சாரம் வெளிப்படையாகி விட்டதோ அவர்கள் மத்தியில் தாஊன் (கொடிய நோய்) பரவும், அவர்களின் முன்னோர்கள் மத்தியில் இல்லாத பசி பஞ்சம் இவர்கள் மத்தியில் தலைவிரித்தாடும் என இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அல்பானி- ஸஹீஹுல் ஜாமிஃ) என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெறும் செய்தி.
இன்று மனிதர்கள் ஜனநாயகம், உலகமயமாக்கல், கருத்துச் சுதந்திரம், தனிமனித உரிமை போன்ற வழிமுறைகளால் மனித மிருகங்களாக மாறிவிட்டனர்.
மிருகங்களிடம் காணப்படுகின்ற கருச் சுதந்திரமானது; வெட்கம் கெட்ட மனித மிருகங்களிடம் கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் ஒருவர் தனது மனைவியை மற்றவரோடு பரிமாறிக் கொள்ளுதல் என்ற பெயரில் அறிமுகமான இக்காலத்தில் கொரோனா வைரஸோடு அல்லாஹ் நிறுத்துவது அவன் அன்பாளன் என்பதை இன்னும் எடுத்துக் காட்டுகின்றது.
குர்ஆனையும் அதன் சட்டங்களையும் குறைகாண்பது, அல்லாஹ்வைப் பரிகாசம் செய்வது, அவனுக்கு இணைவைப்பது, இறை நிராகரிப்பு, மறுமை வாழ்வை மறுப்பது, பிற நாடுகளை ஆக்கிரிமிப்பது, அவற்றின் மீது வீணாகப் போர் தொடுப்பது, சுதந்திரமாக வாழும் அப்பாவிகளை பட்டினி போடுவது போன்ற கொடிய பாவங்கள், மற்றும் குடிப்பது, வெறிப்பது, சூதாட்டம் என அல்லாஹ் விரும்பாத, கோபமடைகின்ற செயல்களை தனி மனித சுதந்திரத்தின் பேரில் அனுமதிப்பது போன்ற கொடுமைகள் அரங்கேற அவனது பூமியில் நடைபெற அவன் விரும்புவானா? எத்தனை நாட்களுக்குத்தான் அவன் அவகாசம் அளிப்பான் என நாம் சிந்திக்க வேண்டும்.
((6)) பூமியில் நடை பெறுகின்ற பாரிய அநீதி
இதுவும் கொடிய நோய்கள் பரவக் காரணமாக அமைகின்றன.
மனிதர்கள் மனிதர்களுக்கு அநீதி செய்வது ஒரு புறம் இருக்க, அவர்களைப் படைத்த இரட்சகனுக்கு அவர்கள் இழைக்கின்ற அநீதிகளில் மிகப் பெரிய அநீதி அவனுக்கு இணைவைப்பதில் தங்கி இருக்கின்றது.
ஆம்! அந்த நன்றி கெட்ட மனிதனை பல கோடி பெறுமதியான அழகிய உறுப்புக்களைக் கொண்டு அல்லாஹ் வடிவமைத்திருக்க , இவனோ; இல்லை – இல்லை, நானே தானாக உருவாகிக் கோண்டேன் என்றோ, அல்லது குரங்கில் இருந்துதான் மனித இனம் பிறந்தது என்றோ கூறுவதை விடப் பெரிய கொடுமை ஒன்று இந்த உலகில் இருக்கவே முடியாது.
وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ (الذاريات/ ٢١)
“நீங்கள் உங்களை பற்றி சிந்திக்க வேண்டாமா? என அல்லாஹ் கேட்கின்றான்.” (அத்தாரியாத் : 21)
என அல்லாஹ் கேட்பது பற்றி நோயில் பாதிக்கப்பட்ட போது சரி சிந்தித்தானா?
உலகில் மனிதன் உயரிய நோக்கத்துடன் படைக்கப் பட்டிருக்கின்றான். அந்த இலக்கு மாறாது வாழ வேண்டுமானால் அவன் தனது செயற்பாடுகள் தொடர்பாகவும், தான் மரணித்தின் பின்னர் செல்லப்போகின்ற இடம் பற்றியும், தனது இறுதி முடிவு பற்றியும் தினமும் சுய பரிசோதனை செய்வது அவசியமாகும்.
يٰۤاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ
(٦) الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ (٧) فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ (الإنفطار/٦- ٨)
“மனிதனே! (கொடையாளனாகிய) சங்கைமிக்க உன் இரட்சகனுக்கு மாறு செய்யும்படி உன்னை ஏமாற்றத்தில் தள்ளியதுதான் என்ன? அவன் எத்தகையவன் என்றால் அவனே உன்னைப் படைத்து, உன்னை அவனே சீராக்கி, உன்னை அவனே செப்பனிட்டான். அவன் தான் நாடிய உருவத்தில் உன்னை (இறுக்கமாகப்) பிணைத்தான்.” (அல்இன்ஃபிதார் : 6 – 8)
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ» قَالَ: ثُمَّ قَرَأَ: {وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ القُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ} [هود: ١٠٢ )
“அல்லாஹ் அநியாயக்காரனுக்கு சில காலம் அவகாசம் வழங்கி நேரம் வரும் போது அவனைப் பிடித்தால் அவனது பிடியில் இருந்து அவனைத் தப்பிக்க சந்தர்ப்பம் அளிக்கவே மாட்டான் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு, [“உமது இரட்சகன் ஒரு கிராமத்தில் உள்ள அநியாயக்காரர்களை பிடித்தால் அவனது பிடி அவ்வாறுதான். நிச்சயமாக அவனது பிடி கடுமையானதே”] (ஹூத் : 102) என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். (புகாரி – 4686)
وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ . [ آل عمران /١٧٨]
இன்னும், இறைமறுப்பாளர்களை நாம் (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) – நிராகரிப்பவர்களுக்கு – நல்லது என்று அவர்கள் எண்ண வேண்டாம்; பாவத்தை அவர்கள் அதிகமாக்கவே (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துகின்றோம். அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 3:178)
அநீதி இழைத்தோர் அழிக்கப்பட்டது தொடர்பாக நபிமார்கள் தொடர்பான சரித்திர வசனங்களில் அல்குர்ஆன் மிகத் தெளிவாக விளக்கி இருப்பதை அறிந்து முடியும்.
((7))உண்பதற்கு தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும் பூச்சி புழுக்களை உண்ணுதல் :
அல்லாஹ் உலகில் படைத்த பல நூறு படைப்புக்கள் மனித நன்மைக்காவே அன்றி, அது உண்பதற்காகப் படைக்கப்படவில்லை.
ويُحِلٌ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ ) (الأعراف/ 157.)
“அவர் (முஹம்மது நபி) உடல் நலனுக்கு உகந்தவைகள் அனைத்தையும் (ஹலால்) ஆகுமாக்குவார். அவ்வாறே, உடல் நலனுக்கு கேடு விழைவிப்பவைகள் அனைத்தையும் அவர் தடை செய்வார்.” ( அஃராஃப்- 157 )
“கோரைப் பற்கள் உள்ள ஒவ்வொரு வனமிருகங்களையும் இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள்.” (புகாரி, முஸ்லிம்)
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி மனிதர்கள் உண்ணும் உணவு பற்றியும் தெளிவூட்டி இருப்பதை அவதானிக்கின்ற போது இஸ்லாம் மனிதர்களுக்கான மார்க்கம்தான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ள முடியும்.
: ( يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ … ) المائدة/ 4)
“நபியே! தமக்கு (உணவில்) எவை (எல்லாம்) ஆகுமாக்கப்பட்டுள்ளது என அவர்கள் கேட்கின்றனர். உடலுக்கு உகந்தவைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள என்று கூறுவீராக” (அல்மாயிதா : 04)
என அல்லாஹ் கூறுவதை மாத்திரம் சிந்தித்தால் பன்றி, பாம்பு, எலி, வெளவால் போன்ற இஸ்லாம் உண்ணத் தடை செய்த பிராணிகள், பறவைகள் மூலமான உணவுப் பழக்க வழக்கத்தால் பரவுகின்ற கிருமிகளைத் தாராளமாகக் கட்டுப் படுத்த முடியும்.
قال بعض العلماء : ” كل ما أحل الله تعالى ، فهو طيب نافع في البدن والدين، وكل ما حرمه، فهو خبيث ضار في البدن والدين ” انتهى من “تفسير ابن كثير” (3 /488) .
மேற்படி வசனத்தை விளக்கும் இமாம் இப்னு கஸீர் (ரஹி) அவர்கள் : அல்லாஹ் அனுமதித்த ஒவ்வொன்றும் உடலுக்கும் மார்க்கத்திற்கும் பயனுள்ளதாகும், அல்லாஹ் தடைவிதித்த ஒவ்வொன்றும் உடலுக்கும் மார்க்கத்திற்கும் கேடுதரவல்லதாகும்
(தஃப்ஸீர் இப்னு கஸீர்)
என விளக்கி இருப்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.
மனிதர்கள் இழைக்கிற இது போன்ற கொடுமைகளுக்காவும் அல்லாஹ் இவ்வாறான கொடிய வைரஸ்களை அனுப்பி மனிதர்களை சோதிக்கவோ தண்டிக்கவோ அவன் ஆற்றல் மிக்கவன்.
எனவே மனிதர்களின் கரங்களில்தான் அவர்களின் அழிவுக்கான தெரிவின் முடிவுகள் தரப்பட்டுள்ளன.