இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்)

இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள்நான்கு பெரும் இமாம்களில்இறுதியானவர் அவர்களின் முழுப்பெயர்அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹன்பல்அஷ்ஷய்பானி என்பதாகும். இவர்களின்கூற்றுகளும் கருத்துகளுமே ஹன்பலிமத்ஹப் என்று சொல்லப்படுகிறது . 

                இமாம் அவர்கள் ஹிஜ்ரி 164 வது வருடம் பக்தாத் நகரில்பிறந்தார்கள். பாக்தாத் நகரம்அக்காலத்தில் இஸ்லாமிய உலகின்முதன்மையான பெருநகரமாக இருந்தது.

                இமாமவர்கள் சிறுவராகஇருக்கும்போதே அவர்களின் தந்தைமரணம் அடைந்து விட்டார்கள். எனவேஇமாமவர்களின் தாயார் அவர்களைபராமரித்து வளர்த்து வந்தார்.

                கல்வி : இமாமவர்கள் பிறந்துவளர்ந்த பக்தாத் நகரம் அக்காலத்தில்எல்லா வகை கல்விகளுக்கும் முக்கியகேந்திரமாக விளங்கியது குறிப்பாகஹதீஸ் (நபி மொழி) ஃபிக்ஹ் (மார்க்கசட்டம்) உள்ளிட்ட இஸ்லாமிய கல்விபயில தேடி வரப்படும் நகரமாகஇருந்தது. இவ்விரு துறைகளின்அறிஞர்களும் ஆசிரியர்களும்

                ஃபிக்ஹில் துவக்கம் : இமாம்அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்தபோதுதுவக்கமாக ஃபிக்ஹ் கல்விபயின்றார்கள். இமாம் அபூ ஹனிஃபாஅவர்களின் பிரபலமான மாணவர் அபூயூசுஃப் அவர்களிடம் இக்கல்வியைபயின்றார்கள். ஆனால் நீண்ட காலம்அவர்களுடன் இருக்கவில்லை. குறிப்பிட்ட காலம் வரை அவர்களுடன்இருந்தார்கள். அவர்களின் நாட்டம்ஹதீஸ் கல்வியை நோக்கியே சென்றது.

                ஹதீஸ் கல்வியில் : ஹிஜ்ரி179வது வருடம் இமாமவர்களின் 16வதுவயதில் அக்காலத்தில் ஹதீஸ் கலையில்மிகச் சிறந்த அறிஞராக இருந்தஹூஷைம் பின் பஷீர் அவர்களிடம்ஹதீஸ் கல்வி பயின்றார்கள். ஹுஷைம்அவர்களின் மரணம் வரை ஏறத்தாழநான்கு ஆண்டுகள் அவர்களுடன்இருந்தார்கள்.

                அதே காலகட்டத்தில் உமைர்பின் அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான்பின் மஹ்தி போன்ற ஹதீஸ்அறிஞர்களின் கல்வி சபையிலும்பங்கெடுத்துக் கொள்வார்கள். 

                இளமையில் ஹதீஸ்கல்வியைத் தேடுவதில் ஆர்வத்துடன்சிரமமெடுத்துக் கொண்டு ஈடுபட்டார்கள்.

                கல்வி தேடி பயணம் : இமாம்அஹ்மத் (ரஹ்) அவர்கள் ஹதீஸ்கல்வியைக் கற்பதற்காக ஹிஜ்ரி 186வதுவருடத்தில் முதலாவது பயணம்மேற்கொண்டார்கள். ஒவ்வொருகட்டத்திலும் ஒவ்வொரு பகுதி என்றுஹதீஸ்  ஆசிரியர்கள் பயின்றார்கள்.

                ஈராக்கின் பல பகுதிகள்ஹிஜாஸ்  (மக்கா மதினாவைஉள்ளடக்கிய பகுதி), எமன் உள்ளிட்டபல பகுதிகளுக்கு சென்று கல்விகற்றார்கள். ஹிஜ்ரி 187 ஆம் வருடம்ஹஜ் செய்வதற்காக சென்றதோடுமக்காவில்  ஆசிரியராக இருந்த இமாம்ஷாஃபிஈ(ரஹ்) அவர்களிடம் ஹதீஸ்கல்வியும் பெற்றார்கள். அத்துடன்அவர்களிடம் ஃபிக்ஹ் கல்வியையும்கற்றார்கள். இவ்வாறு பல வேறுபயணங்களை மேற்கொண்டுஆயிரக்கணக்கான நபிமொழிகளைசேகரித்து வைத்திருந்தார்கள்.

                ஆசிரியராக முஃப்தி : இமாம் அவர்கள் இளவயதிலேயே தேர்த்தஅறிஞர் என்ற நிலையை அடைந்திருந்தாலும் பாடம் நடத்தும் ஆசிரியராக தன்னை முன்னிறுத்திக்கொள்ளவில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது தான் ஆசிரியராக மஸ்ஜிதில் அமர்ந்து பாடம் நடத்தஆரம்பித்தார்கள். மக்களுக்கு மார்க்கத்தீர்ப்புகள் வழங்கும் பணியும்செய்யலானார்கள்.

                மிக அதிகஎண்ணிக்கையிலான மாணவர்களும், பொதுமக்களும் நிறைந்திருக்கும் கல்விசபையாக இமாமவர்களின் சபைதிகழ்ந்தது.

                அவர்களின் கல்வி சபை கம்பீரமும். அமைதியும் கொண்டசபையாக இருக்கும். சலசலப்பு, கேலிப்பேச்சு உள்ளிட்டவை அறவே இருக்காது என்று கூறப்படுகிறது . 

                இருவகை பாடங்கள் : இமாம்அஹ்மத்(ரஹ்) அவர்களின் கல்விசபையில் இரண்டு பாடங்கள்நடத்தப்படும். ஒன்று ஹதீஸ், அதாவதுஅக்கால முறைப்படி அறிவிப்பாளர்தொடருடன் மாணவர்களுக்கு ஹதீஸைசொல்ல மாணவர்கள் அப்படியே பதிவுசெய்து கொள்வார்கள். 

                மற்றொரு பாடம் ஃபிக்ஹ்எனும் மார்க்கச் சட்டங்கள் பற்றியபாடம். அதாவது மாணவர்களும்பொதுமக்களும் கேட்கம்கேள்விகளுக்கு இமாம் வழங்கும்மார்க்கத் தீர்ப்புகள். ஆதாரங்கள்வாயிலாக அவர்கள் எடுத்துச் சொல்லும்சட்டங்கள்.

                இமாமவர்கள் ஹதீஸ்அறிஞராக இருந்ததுடன் மார்க்கச் சட்டமேதையாகவும் இருந்ததால் அவர்கள்கூறிய சட்டங்களும் அவர்களின்மாணவர்களால் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னர் அவை ஹன்பலி மதஹப்சட்டங்கள் ஆயின.

                சோதனைகள் : அல்லாஹ்வின்மார்க்கக் கல்வியை பரப்பும் சேவையில்சிறப்பான முறையில் ஈடுபட்டிருந்தஇமாமவர்களின் வாழ்க்கையில் கடும்சோதனைகள் ஏற்பட்டன. அதாவதுஅக்காலத்தில் வளர்ந்து கொண்டிருந்தமுஃதஸிலா கூட்டத்தினர் திருக்குர்ஆன்படைக்கப்பட்டது என்ற தவறானகருத்தை பரப்பிக் கொண்டிருந்தனர். அப்போதைய கலீஃபா அல்மஅமூன்என்பவரும் அந்த தவறான கருத்தைகொண்டவராக இருந்தார்.

                குர்ஆன் படைக்கப்பட்டதுஎன்ற தவறான கருத்தை மக்கள் மீதுதிணிக்கும் வேலையில் ஈடுபட்டார்கலிஃபா மஅமூன் அதன்படி பெரியமார்க்க அறிஞர்களை கூட்டி இந்தகருத்தை ஏற்குமாறு தனது ஆட்கள்மூலம் நிர்ப்பந்தித்தார். பலரும்கொடுமைகளுக்கு பயந்து வாயளவில்இந்த கருத்தை பெரும்பாலானஅறிஞர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால்மிகச் சிலர் மட்டுமே ஏற்க மறுத்தனர்.

                அவர்களில் மிகமுக்கியமானவராக இருந்த இமாம்அஹ்மத் விலங்கிடப்பட்டு கலீஃபாவிடம்அழைத்து வரப்பட்ட நிலையில் கலீஃபாமஅமூன் மரணமடைந்தார்.

                ஆனாலும் அவருக்கு பின்ஆட்சிக்கு வந்த முஅத்தஸியின்ஆட்சியின் இந்த கொள்கையைஏற்குமாறு வற்புறுத்தி இமாமவர்களுக்குதொடர்ச்சியாக சாட்டையடிகொடுக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டார்கள். உடலெல்லாம்புண்ணாக்கப்பட்டுகொடுமைப்படுத்தப்பட்டார்கள். ஆனாலும் இமாமவர்கள் தமது சத்தியகருத்திலிருந்து பின்வாங்கவில்லை.

                முஅத்தஸிமுக்கு பின்ஆட்சிக்கு வந்த அல் வாஸிக் என்றகலீஃபாவும் அதே தவறான கொள்கைகொண்டவர் தான். ஆனால் இமாமவர்கள்தண்டனைகளை தாங்கிக் கொண்டுகொள்கை உறுதியோடு இருப்பதால்மக்கள் மத்தியில் அவர்களின் மதிப்புஉயர்வதை கண்டதனால் சிறைதண்டனையோ, சாட்டையடியையோகொடுக்காமல் வீட்டுச் சிறையில்வைத்தார். பாடம் நடத்தக் கூடாதுஎன்றும், மக்களை சந்திக்க கூடாதுஎன்றும் தடை விதித்தார்.

                இவ்வாறு ஏறத்தாழ் 14 ஆண்டுகள் கடந்த நிலையில் ஹிஜ்ரி232 ஆம் ஆண்டு முத்தவக்கில்கலிஃபாவானார். இவர் நல்லவராகவும்அஹ்லுஸ்ஸுன்னாவின் சத்தியக்கொள்கை கொண்டவராகவும் இருந்ததாக இமாமவர்கள்தண்டனையில் இருந்து விடுவித்துகண்ணியப்படுத்தினார்.

                 (நபியே!) நீர் உம்முடையமுகத்தை மார்க்கத்தின்பால் (முற்றிலும்) "திருப்பியவராக நிலைநிறுத்திவிடுவீராக! அல்லாஹ் மனிதர்களை எ(ந்தமார்க்கத்) தில் படைத்தானோஅத்தகைய இயற்கை மார்க்க(மாகியஇஸ்லா)த்தை (பற்றிப்பிடித்துநிலைத்திருப்பீராக) அல்லாஹ்வின்படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை, இதுவே (சரியான) நிலையானமார்க்கமாகும். எனினும், மனிதர்களில்பெரும்பாலோர் (இதனை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.

                (விசுவாசிகளே!) அவன் பக்கமே திரும்பியவர்களாக (இயற்கைமார்க்கமான இஸ்லாத்தில்நிலைத்திருங்கள்), இன்னும் அவனைபயந்து கொள்ளுங்கள், தொழுகையையும் நிறைவேற்றுங்கள், மேலும் இணைவைத்துக்கொண்டிருப்போரில் நீங்கள்ஆகிவிடாதீர்கள்.

                தங்கள் மார்க்கத்தை(பலவாறாக)ப் பிரிந்து, (பல) பிரிவினர்களாக ஆகிவிட்டனரே, அத்தகையோரில் (நீங்கள் ஆகிவிடவேண்டாம் அவ்வாறு பிரிந்த) ஒவ்வொருபிரிவோரும் தங்களிடமுள்ள(தவறான)தைக் கொண்டுசந்தோஷப்படுபவர்களாகஇருக்கின்றனர்.''

                (அல்குர்ஆன் : 30 : 30 - 32)


                வணக்கவழிபாடுகள் : இமாம்அவர்கள் ஃபர்லான வணக்கங்கள்தவிர்த்து உபரியான வணக்கவழிபாடுகளில் அதிகமாக ஈடுபடுவார்கள். அதிகமாகன நஃபில் நோன்புகள்நோற்பார்கள். எந்த அளவிற்கென்றால்அவர்கள் சிறையிலடைக்கப்பட்டுசங்கிலிகளால் பிணைக்கப்பட்டுசாட்டையடி தண்டனை கொடுக்கப்பட்டநாட்களில் கூட நஃபிலான நோன்புகள்வைத்திருப்பார்கள், பொதுவாக ஒருவாரத்தில் ஒரு தடவை குர்ஆனைமுழுமையாக ஒதி முடிப்பார்கள் என்றும்அன்னாரின் வாழ்க்கை வரலாற்றில்கூறப்படுகிறது .

                உலகப் பற்றின்மையும்பேனுதலும் : இமாம் அவர்கள்உலகப்பற்று இல்லாதவராகவும்உலகத்தை அனுபவிப்பதில் பேனுதல்உள்ளவராகவும் இருந்தார்கள்.அவர்களுக்கிருந்த சிறு கடைகளின்வாடகையாக மிக சொற்பமான தொகைவந்தது. அது மட்டுமே அவர்களின்வருவாயாக இருந்தது .

                அவர்களின் தேவைக்கும்குடும்பத் தேவைக்கும் அதுபோதுமானதாக இருக்கவில்லை.சிரமத்துடனேயே வாழ்ந்தார்கள். 

                அதிக சிரமம் ஏற்படும்போதுசில சாதாரண வேலைகள் செய்துவருவாய் ஈட்டுவார்கள்.

                இவ்வாறு சிரமத்துடன் தமதுவாழ்க்கையை ஒட்டினாலும் அவர்களைதேடி வரும் உதவித்தொகை மற்றும்சன்மானங்களை விரும்ப மாட்டார்கள். குறிப்பாக கலீஃபாக்களிடமிருந்து வரும்சன்மானங்களை ஏற்க மாட்டார்கள்.

                இமாம் அவர்களின் இறுதிகாலத்தில் கலீபா முத்தவக்கில் தனதுநெருக்கமான அதிகாரி யஅகூப் என்பவர்வழியாக இமாமவர்களுக்கு பத்தாயிரம்திர்ஹம்கள் வழங்கினார். வாங்கமாட்டேன் என்று கூற முடியாததால்அவற்றை பெற்றுக் கொண்டார்கள். ஆனால் அந்த முழுத்தொகையையும்முஹாஜிர் மற்றும் அன்சாரிநபித்தோழர்களின் சந்ததிகளுக்கும்மற்ற தேவையுள்ள மக்களுக்கும் ஒரேநாளில் பிரித்து வழங்கி விட்டார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் இமாம்அவர்களின் தூய பண்புக்குஆதாரங்களாக உள்ளன.

                வளமான கல்வி : இமாமவர்கள்மிகச் சிறந்த கல்விமானாகதிகழ்ந்தார்கள். அவர்கள்ஆசிரியர்களிடம் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் வாலிபராக இருந்துநாட்களிலேயே ஹதீஸ்களையில்அவர்களுக்கிருந்த திறன் மூலம்இஸ்லாமிய உலகின் பல பாகங்களிலும்பிரபலமாகியிருந்தார்கள்.

                இமாம் அஹ்மதின்ஆசிரியரான அமாம் ஷாஃபிஈ அவர்கள்ஒரு முறை இமாம் அஹ்மதை நோக்கி, "எம்மை விட ஆதாரம் பூர்வமானஹதீஸ்கள் குறித்து நன்கறிந்தவராகஇருக்கின்றீர். ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக இருந்தால் அது குறித்துஎனக்கு அறிவுறுத்துவீராக, நானும்அதனை எடுத்துக்கொள்வேன்'' என்றுகூறினார்கள்.

                இமாம் அஹ்மத் அவர்களின்சமகால அறிஞரான அபூ ஸுர்ஆஅவர்களிடம், நீங்கள் பார்த்த மார்க்கப்பெரியோர்களிலும் ஹதீஸ்அறிஞர்களிலும் அதிக மனன சக்திகொண்டவர் யார்? என்று கேள்விகேட்கப்பட்டது அதற்கவர்கள், "அஹ்மத்பின் ஹன்பல்'' என்று பதிலனித்தார்கள்.

                இவ்வாறு கல்வியிலும்ஹதீஸ்கலைக்கு மிக முக்கியமான மனனசக்தியிலும் மிக உயர்ந்த நிலையைஅடைந்தவராக இமாமவர்கள்இருந்தார்கள்.

                பொறுமைசாலி : இமாமாவர்கள் பொறுமை மற்றும் நிலைகுலையாமை ஆகிய நற்பண்புகளைநிறைவாக கொண்டிருந்தார்கள். எந்தசிரமங்களையும் தாங்கிக் கொண்டுநிதானத்துடன் இருக்கும் அவர்களின்உயர் தன்மைதான் அவர்கள் மக்களுக்குமத்தியில் பிரபலமாவதற்கு காரணமாகஅமைந்தது.  

                மார்க்கத்தில் தவறானகருத்தை கூற வேண்டுமென்றுவற்புறுத்தி அதிகார வர்க்கத்தினர் இமாம்அவர்களை தொடர்ச்சியாக அடித்துத்துன்புறுத்தினார்கள். துன்புறுத்தியவர்கள்தான் சோர்ந்து போனார்கள். நிலைக்குலையாமல் நிதானத்துடன்இருந்தார்கள்.

                எத்தனை பெரியகொடுமையான சூல்நிலையிலும்நடுக்கமோ பதட்டமோ இல்லமால்நிதானத்துடன் இருப்பார்கள் என்பதற்குஆதாரமாக அமைந்த ஒரு நிகழ்வு  அதிகார வர்க்கத்தினர்இமாமவர்களையும் வேறு சிலரையும்தவறான கருத்தை ஏற்கும்படிதுன்புறுத்திக் கொண்டிருக்கையில்இமாமவர்களின் முன்னிலையிலேயேஇரண்டு பேரை கழுத்தை வெட்டிகொலை செய்தார்கள். திகில் நிறைந்தஇந்த சூழலில் இமாமவர்களின் பார்வைஅங்கு ஒரு பகுதியிலிருந்த இமாம்ஷாஃபிஈ அவர்களின் மாணவர்களில்ஒருவர் மீது பட்டது. உடனேஇமாமவர்கள் அவரிடம், "காலுறை மீதுமஸ்ஹு செய்வது தொடர்பாக இமாம்ஷாஃபிஈ அவர்களிடமிருந்து எந்தவிஷயத்தை நீங்கள் மனனம்செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள்.

                இந்த இக்கட்டானசூழ்நிலையிலும் இமாமவர்கள்சலனமுமின்றி மார்க்கச் சட்ட ஆதாரம்பற்றி பேசியது அங்கிருந்தவர்களுக்குஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும்ஏற்படுத்தியது.

                இப்படி எந்த சூழ்நிலையிலும்நிதானமும் பொறுமையும்கொண்டவர்களாக இமாம் அஹ்மத்இருந்தார்கள், அத்துடன் பணிவுவறுமையிலும் வள்ளல் தன்மை, பெருந்தன்மை உள்ளிட்ட உயர்கொண்டவராகவும் வாழ்ந்தார்கள். 

                இறப்பு : மார்க்கக் கல்வியைபரப்புவதற்காகவும் சத்தியத்தை நிலைநாட்டுவதற்காகவும் தன். வாழ்நாளைஅர்ப்பணித்த இமாம் அவர்கள், ஹிஜ்ரி241 ஆம் வருடம் ரபீஉல் அவ்வல் மாதம்துவக்கத்தில் கடுமையாகநோய்வாய்ப்பட்டார்கள். அதே மாதத்தின்பன்னிரெண்டாம் நாளில்மரணமடைந்தார்கள். அல்லாஹ்அவர்களுக்கு அருள் புரிவானாக.

                முஸ்னது அஹ்மத் : இமாம்அஹ்மத் அவர்கள் தொகுத்த முஸ்னதுஅஹ்மத் என்ற இந்த நூல் ஹதீஸ் மூலஆதார நூல்களில் முக்கியமானஒன்றாகும். இது இருபத்திஏழாயிரத்துக்கும் அதிகமானஹதீஸ்களை உள்ளடக்கியுள்ளது.

                 இது மட்டுமின்றி ஹதீஸ்அறிவிப்பாளர்கள் பற்றிய விவரங்கள்அடங்கிய சில நூல்களும் மார்க்கத்தின்சரியான நம்பிக்கையை விளக்கும் சிலநூல்களும் இமாமவர்களால்எழுதப்பட்டுள்ளது. அவர்கள் கூறியமார்க்கச் சட்டங்கள் அன்னாரின்மாணவர்கள் சிலரால் நூல்களாகதொகுக்கப்பட்டுள்ளன.

                அறிஞர்களின் பாராட்டு : இமாம் அஹ்மத் அவர்கள் குறித்துமுற்கால அறிஞர்கள் பலரும் புகழ்ந்துபேசியிருக்கிறார்கள். இமாம் ஷாஃபியீஅவர்கள் கூறியதாவது : "நான்பக்தாதிலிருந்து புறப்பட்டு வந்தேன். அங்கே அஹ்மத் பின் ஹன்பலை விடமிகுந்த பேணுதலும், மிகுந்தஇறையச்சமும். மிகுந்த மார்க்க அறிவும்கொண்ட எவரும் இல்லை''.

                இமாமவர்களின் நண்பராகவும்சமகாலத்தவராகவும் இருந்த அல்காசிம்பின் சலாம் அவர்கள் கூறியதாவது : கல்வி என்பது நான்கு பேரிடம்நிறைவடைகிறது. அவர்கள் அஹ்மத் பின்ஹன்பல், அலிபின் அல்மதீனி யஹ்யாபின் மயீன், அபூ பக்ர் பின் ஷைபாஆகியோராவர், இவர்களில் அஹ்மத்அவர்கள் தான் மார்க்கச் சட்டங்களைமிக நன்கறிந்தவர்.

                சுன்னாவை குறித்து அஹ்மத்விட நன்கறிந்த எவரையும் நான்பார்த்ததில்லை என்றும் இந்த அல்காசிம்கூறியிருக்கிறார்.

                இமாம்களின் வரலாற்றைசுருக்கமாக பார்த்தோம். எல்லாம் வல்லஅல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்கிஅருள் புரிவானாக ! முற்றும்.

 - மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil 
Previous Post Next Post