இரவுத் தொழுகையில் அல்குர்ஆனை பார்த்து ஓத முடியுமா?

-உஸ்தாதா அஸ்மா பிந்த் ஷமீம்


கேள்வி:

எனக்கு சின்ன ஸூராக்கள் தான் தெரியும். நான் எப்படி குர்ஆனில் அதிகமாக ‌ஓத முடியும்?

நாம் மஸ்ஜிதுக்கு செல்லவில்லை மேலும் இமாமின் பின் நின்று தொழுகவில்லை என்பதால் நம்மால் குர்ஆனின் பெரிய ஸூராக்களை நம்முடைய தராவீஹ் தொழுகையில் தொழுக முடியாது என்று பொருளில்லை.

அல்ஹம்துலில்லாஹ் நம் விருப்பத்திற்கு ஏற்ப எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குர்ஆனை நம்முடைய தராவீஹ் தொழுகையில் ஓதி தொழுவதற்கு ஓர் அழகான வழியுண்டு 

எப்படி?

முஸ்-ஹஃபிலிருந்து (குர்ஆனிலிருந்து) நேரடியாக ஓதுங்கள். 

கையில் முஸ்-ஹஃபை வைத்து கொள்ளுங்கள் அல்லது உங்களுக்கு முன்னர் *ஓர் மேசையிலையோ அல்லது வேறு ஏதேனும் ஓர் பொருளிலோ* வைத்து விட்டு உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அவ்வளவை ஒவ்வொரு ரக்அத்திலும், நேரடியாக கிதாபிலிருந்தே ஓதுங்கள்.

ஒரு ரக்அத்துக்கு ஒரு பக்கம் இரண்டாவது ரக்அத்தில் இரண்டாவது பக்கம் என நீங்கள் ஓதலாம் அல்லது அதை விட சற்று அதிகமாகவோ அல்லது சற்று குறைவாகவோ கூட‌ ஓதலாம்; நீங்கள் ஓதுவதற்கு அல்லாஹ் எவ்வளவு உதவுகின்றானோ அவ்வளவு ஓதுங்கள். 

இந்த வழியில், ஒரே நேரத்தில் நம்மால் தராவீஹ்யையும் தொழுக முடியும் மேலும் குர்ஆனையும் அதிகமாக ஓத முடியும் அல்ஹம்துலில்லாஹ். 

கடமையில்லாத தொழுகையில் நேரடியாக குர்ஆனிலிருந்து ஓதுவது முற்றிலுமாக சரியான ஒன்று தான். 

 ஷேக் இப்னு பாஸ் கூறினார்கள்: 

தொழுகையில் குர்ஆன் ஓத வேண்டும் என்பதை குர்ஆன் மற்றும் ஸுன்னா குறிப்பிடுகிறது, அது முஸ்-ஹஃபிலிருந்து ஓதுனாலும் சரி அல்லது மனனத்திலிருந்து ஓதுனாலும் சரி. ஆயிஷா رضي الله عنها அவர்கள் தன்னுடைய விடுவிக்கப்பட்ட அடிமை தக்வானை ரமதானில் தான் கியாம் அல்-லைல் தொழுவதற்கு அவரை முன்னின்று தொழுகையை நடுத்துமாறு சொன்னார்கள் மேலும் அவர் முஸ்-ஹஃபிலிருந்து ஓதுபவராக இருந்தார். அல்-புகாரி இதனை தன்னுடைய ஸஹீஹில் குறிப்பிட்டுள்ளார்…” 
(ஃபதாவா‌ இஸ்லாமியா, பாகம் 2 – ஷேக் இப்னு பாஸ்)

கேள்வி?

ஆனால் அதிகமான அசைவுகள் உதாரணத்திற்கு முஸ்-ஹஃபை எடுப்பது அல்லது பக்கங்களை திருப்புவது போன்ற செயல்கள் தொழுகையை முறித்துவிடும் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன்!

இது ஒரு பலவீனமான கருத்து.
மேலும் தொழுகையில் முஸ்-ஹஃபிலிருந்து நேரடியாக பார்த்து ஓதுவதற்கு அனுமதியுண்டு என்பது தான் பலமான மற்றும் சரியான கருத்தாகும். 

அதை நான் எவ்வாறு கூற‌ முடியும் ? 

ஆதாரம்:

1. நமது அன்னை‌ ஆயிஷா رضي الله عنها அவர்கள் அதை செய்பவர்களாக இருந்தார்கள்

இமாம் அல்-புகாரி கூறினார்கள்: 

ஆயிஷா رضي الله عنها அவர்களிடம், *முஸ்-ஹஃபிலிருந்து பார்த்து ஓதி*, ரமதானில் தனக்கு தொழுகை நடத்தக்கூடிய ஓர் அடிமை இருந்தார்கள்.”
[அல்-புகாரி (1/245)]

*ஆயிஷா رضي الله عنها அவர்களுக்கு அது போதுமானதாக இருந்தால் நமக்கும் அது போதுமானதே.*


இமாம் அந்-நவவீ கூறினார்கள்:

“அவர் மனனம் செய்திருந்தாலும் அல்லது செய்யாவிட்டாலும், அவர் முஸ்-ஹஃபிலிருந்து ஓதினால் அது அவருடைய தொழுகையை முறிக்காது. மாறாக அவர் அல்-ஃபாத்திஹாவை மனனம் செய்யவில்லை என்றால் *கண்டிப்பாக* அவர் முஸ்-ஹஃபிலிருந்து ஓத வேண்டும், மேலும் அவர் தொழுகும் போது சிலசமயம் அவர் பக்கங்களை திருப்பினால் அதனால் அவருடைய ‌தொழுகை முறிந்துவிடாது….இதுவே எங்களுடைய கருத்து மேலும் மாலிக், அபூ யூஸுஃப், முஹம்மது மற்றும் அஹ்மது ஆகியோரின் கருத்தும் இதுவேயாகும்.” 
(அல்-மஜ்மூ’, 4/27) 

ஷேக் இப்னு பாஸ் கூறினார்கள்: 

*தொழுகையில் குர்ஆன் ஓத வேண்டும் என்பதை குர்ஆன் மற்றும் ஸுன்னா குறிப்பிடுகிறது, அது முஸ்-ஹஃபிலிருந்து ஓதுனாலும் சரி அல்லது மனனத்திலிருந்து ஓதுனாலும் சரி.*

2. பக்கங்களை திருப்புவது மற்றும் முஸ்-ஹஃபை எடுப்பது போன்றவை தொழுகையை முறிக்காது.

ஆதாரம்

அபூ கதாதா அல் அன்ஸாரி رضي الله عنه அறிவித்தார். 

நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை ‘உமாமா’வைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். *ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள்.*
(அல்-புகாரி 516 மற்றும் முஸ்லிம்‌ 943) 

தொழுகும் போது குழந்தையை தூக்குவது மற்றும் ஸஜ்தா செய்யும் போது குழந்தையை கீழே இறக்கிவிடுவது நிச்சயமாக பக்கங்களை திருப்புவது அல்லது முஸ்-ஹஃபை எடுப்பது போன்றவற்றை விட அதிகமான அசைவுகளை உண்டாக்கும். 

மேலும் நபி صلى الله عليه وسلم அவர்கள் குழந்தையை தூக்கியுள்ளார் மேலும் ஒவ்வொரு முறை ஸஜ்தா செய்யும்போதும் குழந்தையை கீழே இறக்கிவிட்டுள்ளார்கள் என்றால், அத்தகைய ‌அசைவுகள் தொழுகையை முறிக்காது என்பதற்கு அது *சான்றாக* அமைகிறது. 

இருப்பினும், அதில் ஏதேனும்‌ பிரச்சினை இருக்கும் என்றால், அவர் அந்த அசைவுகளை சுலபமாக தவிர்த்து விடலாம் எவ்வாறெனில், ஒருவர் முஸ்-ஹஃபிலிருந்து அவர் ஓத நினைக்கும் ஒர் குறிப்பிட்ட பக்கத்தை திறந்து, பின்னர் அதனை தன் முன்னால் இருக்கும் மேசையின் மீது வைத்து விடலாம்.
பின்னர் அவர் வலப்புறம் உள்ள பக்கத்தை முதல் ரக்அத்திலும், இடப்புறம் இருக்கும் பக்கத்தை இரண்டாவது ரக்அத்திலும் ஓதலாம். 
இவ்வாறு செய்வதனால் அவர் “அவசியமின்றி” ஒரு அங்குலம் கூட‌ நகர தேவையில்லை மேலும் இதன் மூலம் அவர் முஸ்-ஹஃபிலிருந்து நேரடியாகவும் ஓத முடியும். 

முடிவுரை:

எனவே அது ஸுன்னாவாக இருக்கட்டும்‌ அல்லது நஃபிலாக இருக்கட்டும், முஸ்-ஹஃபை திறந்து அதிலிருந்து நேரடியாக ஓதுங்கள்.‌ 
மேலும் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து நன்மை அடையுங்கள். 

அல்லாஹ் நம்முடைய‌ இபாதத், நம்முடைய துஆ, நம்முடைய தவ்பா ஆகியவற்றை ‌ஏற்றுக்கொள் வானாக. ஆமின்.

மேலும் அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.
Previous Post Next Post