‘கஸع’ குடுமி வைப்பது கூடுமா?

இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடுமி (“கஸع’ அதாவது பாதி முடியை மழித்து மீதி முடியை விட்டுவிடுவது) வைத்துக்கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்” என்று கூறினார்கள். மேலும் அவர் (ரலி) அறிவிக்கிறார் நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறுவன் பாதி முடியை மட்டும் மழித்து மீதி முடியை விட்டு இருப்பதை கண்டு அதை தடுத்தார்கள் மேலும் பின்வருமாறு கூறினார்கள் : “அனைத்தையும் மழித்துவிடு அல்லது அனைத்தயைும் விட்டுவிடு.” மேலும் உமர்(ரலி) அவர்கள் ஓர் மர்ஃபூ அறிக்கையில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  அறிவித்தார்கள் : “தலையின் பின் பகுதியை, இரத்தம் உருஞ்சுவதற்காக அன்றி வேறு காரணங்களுக்காக மழிப்பது மந்திரக்காரர்களின் செயலாகும்”
(புகாரி மற்றும் முஸ்லிம்)

ஸுனன் அபூ தாவூதில் அறிவித்துள்ளதாவது, அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் ஒர் சிறுவன் இரண்டு ஜடை அல்லது பெரிய முடிச்சு இட்டு மீதி முடியை மழித்து இருப்பதை கண்டு கூறினார்கள், “இதை மழித்துவிடு அல்லது வெட்டிவிடு ஏனெனில் இது யூதர்களின் பாணியாகும்”

அல்-மர்வதி கூறினார்கள்: ” நான் அபூ அப்துல்லாஹ் (அதாவது அஹ்மத் இப்னு ஹன்பல்) அவர்களை தலையின் பின்புறம் மழிப்பதை பற்றி கேட்டேன், அதற்கு அவர் கூறினார், ” மந்திரவாதிகள்தான் அவ்வாறு செய்வர், மேலும் யார் ஒருவரை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவரே”.

ஷேக் முஹம்மது இப்னு இப்ராஹீம் கூறினார்கள் : பாதி தலையை மட்டும் மழித்து மீதியை விட்டுவிடுவது, கஸع (குடுமி) ஆகும், இது நபி(ஸல்) அவர்களால் தடைசெய்யப்பட்டிருந்தது. இது பல பரிணாமங்களை கொண்டது:
1. தலையின் சில பாகங்களை மழித்து மீதியை விட்டுவிடுவது
2. தலையின் ஓரங்களை மழித்து நடு பகுதியை விட்டுவிடுவது 
3. தலையின் நடு பகுதியை மழித்து ஓரங்களை விட்டுவிடுவது
4. முன் பகுதியை மழித்து பின் பகுதியை விட்டுவிடுவது 
5. பின் பகுதியை மழித்து முன் பகுதியை விட்டுவிடுவது
7. ஒரு பக்கம் மழித்து மறுபக்கம் விட்டுவிடுவது 
இந்த வகைகள் ஹராமாகும்.

ஃபத்வா அல்-மர்அ அல்-முஸ்லிமா, 2/510
Previous Post Next Post