நீ உனது றbப்பைப் பற்றி தப்பெண்ணம் வைக்காதீர்


 وَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟ شَيْـًٔا وَهُوَ خَيْرٌ لَّكُمْۖ وَعَسَىٰٓ أَن تُحِبُّوا۟ شَيْـًٔا وَهُوَ شَرٌّ لَّكُمْۗ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ 
ஒரு விடயம் உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் நிலையில், நீங்கள் (அறியாமல்) அதனை வெறுக்கலாம். ஒரு விடயம் உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும் நிலையில் நீங்கள் (அறியாமல்)  அதனை விரும்பலாம். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
[அல்குர்ஆன் 2:216]

இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:

அல்லாஹ் -ஸுப்ஹானஹு- அனைத்தையும் படைத்தவன், அவற்றின் இரட்சகன், அவற்றிற்குச் சொந்தக்காரன். அவன் படைத்தவற்றில் அவனுக்கு ஆழமான நோக்கம் இருக்கின்றது, அவற்றில் முழுமையான அருட்பாக்கியமும் இருக்கிறது, அவற்றில் பொதுவான மற்றும் விசேடமான அருளும் இருக்கிறது. அவன் செய்வதைப்பற்றி கேள்வி கேட்கப்படமாட்டான்; அடியார்களோ கேள்வி கேட்கபடுவார்கள். இது அவன் மிகைத்தவன், வல்லமையுள்ளவன் என்பதற்காக மாத்திரம் அல்ல; மாறாக, அவன் பூரண அறிவும் வல்லமையும் கிருபையும் ஞானமுடையவன் என்பதற்காகவேயாகும்.
ஏனெனில், நிச்சயமாக அவன் தீர்ப்பு வழங்குகின்றவர்களில் மிகவும் நேர்மையாகத் தீர்ப்பு வழங்குகின்றவன், இரக்கம் காட்டுவார்களில் மிகவும் இரக்கம் காட்டுபவன்; ஒரு தாய் தன் குழந்தை மீது வைத்திருக்கும் இரக்கத்தைவிட அவன் தன் அடியார்கள் மீது அதிக இரக்கமுள்ளவனாக இருக்கிறான்.

நூல்:
مجموع الفتاوى ج٨ص٧٩

قال شيخ الإسلام ابن تيمية رحمه الله: ((وهو -سبحانه- خالق كل شيء، وربه، ومليكه، وله فيما خلقه حكمة بالغة، ونعمة سابغة، ورحمة عامة وخاصة، وهو لا يُسأل عما يفعل وهم يُسألون، لا لمجرد قدرته وقهره؛ بل لكمال علمه وقدرته ورحمته وحكمته.
فإنه -سبحانه وتعالى- أحكم الحاكمين، وأرحم الراحمين، وهو أرحم بعباده من الوالدة بولدها)).


-ஸுன்னாஹ் அகாடமி
Previous Post Next Post