அல்லாஹ்வின் சூழ்ச்சி பற்றிய தெளிவு

وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ؕ وَيَمْكُرُوْنَ 
وَيَمْكُرُ اللّٰهُ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏
மேலும், (நபியே!) நிராகரித்துக்கொண்டிருப்போர் உம்மை அவர்கள் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மை அவர்கள் கொலை செய்யவோ, அல்லது உம்மை அவர்கள் (ஊரை விட்டு) வெளியேற்றி விடவோ, உமக்கு விரோதமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்த (நேரத்)தை (நினைத்துப் பார்ப்பீராக!) அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்,  (அவர்களுக்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான்,  இன்னும் சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் மிக்க மேலானவன்.
(அல்குர்ஆன்: 8:30)

அல்லாஹ்  சிறந்த சூழ்ச்சியாளன் என தன்னைப் பற்றிக் கூறுவதற்கு முன் மனிதர்களில் உள்ள தீய சூழ்ச்சியாளர்களைப் பற்றி எடுத்துக் கூறிய பின்பே தன்னை சூழ்ச்சியாளர்களில் சிறந்த சூழ்ச்சியாளன் என்று குறிப்பிடுகின்றான்.

அதன் வேறுபாடு பின்வருமாறு.

யதார்த்தத்தமான நிலையை வெளிப்படுத்தவே அல்லாஹ் சூழ்ச்சி செய்கின்றான்.

மனிதர்களாகிய நாம் அதனை மறைக்கவே சூழ்ச்சி செய்வோம்.

அதன் காரணமாகவே அல்லாஹ்வின் சூழ்ச்சி அனைத்தும் சிறந்ததாகவும் நமது சூழ்ச்சி தீயதாகவும் கொள்ளப்படுகின்றது.

அல்லாஹ்வின் சூழ்ச்சி பிரகாசமானது. நமது சூழ்ச்சியோ இருள் நிறைந்தது.

அல்லாஹ்வின் சூழ்ச்சி  நீதியானது. நமது சூழ்ச்சி அநீதியானது.

கலாநிதி முஸ்தஃபா மஹ்மூதின் விளக்கத்தில் இருந்து...

தமிழ் தழுவல் 
எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
Previous Post Next Post