அனைவருக்கும் அன்புகாட்டுவோம்.

அல்லாஹ், எல்லையில்லாக் கருணையாளன். அவனே முழு உலக மக்களினதும்  படைப்பாளன் . பராமரிப்பாளன். மற்ற அனைவரும் அவனது படைப்புக்கள்.

الرحمن ، الرحيم 
அளவில்லா அருளாளன் , நிகரில்லாக் கருணை உள்ளவன் என்பது அவனது அழகிய பெயர்களில் 
உள்ளதாதும்.

الرؤوف، العفو ، الودود
அன்பாளன், பாசமுள்ளவன், பரிவு காட்டுபவன் போன்ற பல பெயர்கள் அவனது  அன்பு, பாசம், பரிவு என்பவற்றைக் குறிக்கும் பல பெயர்கள், பண்புகள் அல்லாஹ்வுக்கு உள்ளன.

கடுமையாக நோய்வாப்பட்ட அய்யூப் (அலை) அவர்கள் தனது இரட்சகனிடம்

وَأَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ (الأنبياء /٨٣) 

என்னை கடுமையான நோய் பீடித்துள்ளது. நீ கருணையாளர்களுகெல்லாம் கருணையாளனாக இருக்கின்றாய்.(அல்அன்பியா-83) எனக் கூறி தனது பிரார்த்தனையில் கூறிப் பிரார்த்தித்தது போல நாமும்
 நமது பிரார்த்தனையில்
ياأرحم الراحمين 
கருணையாளர்களுகெல்லாம் கருணையாளனே! என்று பிரார்த்தனை செய்யும் வழக்கம் உடையவராக இருக்கின்றோம்.

மக்களோடு கருணையாக நடப்பவர் என்ற  சிறப்பு பெயருக்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூட அல்லாஹ்விடம் கருணையை வேண்டுமாறு பணிக்கப்பட்டுள்ளார்கள்.

وَقُل رَّبِّ ٱغْفِرْ وَٱرْحَمْ وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ (المؤمنون - 118) 

எனது இரட்சகனே! (எனது பிழைகளை) மன்னிப்பாயாக! நீ அருள் செய்வாயாக! நீ கருணையாளர்களுகெல்லாம் கருணையாளனாக இருக்கின்றாய்  என நபியே நீர் பிரார்த்தனை செய்வீராக (அல்முஃமினூன்-118) என அல்லாஹ் கூறுகின்றான்.

இது போன்ற பல  வாசகங்களை கருணைக்குரியவனாகிய அல்லாஹ்விடம் கூறி நாம் பிரார்த்தனை செய்வது அவனது அன்பு கருணையினால் நல்லதைப் பெற்றுக் கொள்ளவே அன்றி, வேறு எந்த நோக்கமும் கிடையாது.

அல்லாஹ்வின் அர்ஷில் 
أبي هريرة  قال: قال رسول الله ﷺ: لمّا خلق الله الخلق كتب في كتاب، فهو عنده فوق العرش: إن رحمتي تغلب غضبي (متفق عليه )
அல்லாஹ்  ஒரு பதவிவேட்டை தன்னிடம் எழுதி அதை அவன் தன்னிடம்  வைத்துள்ளான். அதில்
"நிச்சயமாக எனது கருணை எனது கோபத்தை முந்தி விட்டது" என அல்லாஹ் பதிந்து வைத்துள்ளான் என 
அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள்க கூறினார்கள். ( புகாரி, முஸ்லிம்)
 
ஷைத்தானும் அவனது ஷிர்க்கான வழியைத் தேர்வு செய்வோரும் நரகம் போகக் கூடியவர்கள் என்பதை  அல்லாஹ் அறிந்த பின்பும் அவர்களுக்கு உணவளிப்பது அவனது கருணையின் வெளிப்பாடாகும்.

அல்லாஹ்வுக்கு மாறு செய்து அவனைத் திட்டுகின்ற மனிதர்களே உலகில் அதிகமாக வாழ்கின்றனர். இருந்தும் அவன் அவர்களுக்கு உணவளிப்பதில்லையா!?

நபி ஸல் அவர்கள் கூறுவது போன்று
«الراحمون يرحمهم الرحمن، ارحموا من في الأرض يرحمكم من في السماء»
அன்பு காட்டுபவர்களோடு கருணையாளன் (அல்லாஹ்) அன்பு காட்டுகின்றான். எனவே பூமியல் உள்ள மக்களுக்கு கருணை காட்டுங்கள். வானில் இருக்கும் கருணையாளன் (அல்லாஹ்) உங்களுக்கு கருணை காட்டுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

புயல், அணர்த்தம், அசாதாரண சூழ் நிலை, பசி, பட்டினி என்ற அனைத்து துன்பங்களின் போது  முஸ்லிம்,  இந்து, கிரிஸ்தவர் என்ற வேறுபாடு காட்டாது   மதம் கடந்து அனைவரையும் அன்பாகப் பார்ப்போம். அல்லாஹ்வின் அன்பைப் பெறுவோம்.

எம்.ஜே.எம்.
ரிஸ்வான் மதனி 
Previous Post Next Post