وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ
என்ற வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
குர்ஸி என்பது அல்லாஹு தஆலா அவனது பாதங்களை வைக்கும் இடம்.
நூல்: அத்தௌஹீது இப்னு ஹுஸைமா - 1/248, இமாம் அப்துல்லாஹ் பின் அஹ்மத் (ரஹ்) அவர்களின் அஸ்ஸுன்னா - 586, இமாம் தப்ரானி (ரஹ்) அவர்களின் முஃஜமுல் கபீர் - 12404.
இமாம் அபுஜஃபர் அத்தஹாவி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அர்ஷும், குர்ஸியும் உண்மையாகும்.
நூல்: ஷரஹு தஹாவியா - 267
மேலும் மறைவானவற்றை நம்புவது :
மறைவான விஷயங்களில் ஆதாரபூர்வமானவைகளை உண்மைப் படுத்தி நம்பிக்கை கொள்ள வேண்டும். உதாரணமாக அர்ஷ், குர்ஸி, சொர்க்கம், நரகம், கப்ரின் இன்பமும், வேதனையும், சிராத்து, மீசான், போன்றவைகளை மாற்று விளக்கம் கூறாமல் நம்ப வேண்டும்.
மறைவானவற்றை நம்பிக்கை கொள்வது ஈமானின் அடிப்படைகளில் ஒன்று. நமது புலனுக்கு அப்பாற்பட்டவைகளில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவைகளில் உள்ளவைகள் தாம் இங்கே கூறப்பட்டுள்ளவைகள்.
- உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி
.