அர்ஷை எவ்வாறு நம்புவது

அல்லாஹ் கூறுகிறான்: 

 ذُو الْعَرْشِ الْمَجِيْدُ ۙ 

 (அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன். 

 (அல்குர்ஆன் : 85:15) 
                                                
 رَفِيْعُ الدَّرَجٰتِ ذُو الْعَرْشِ‌  يُلْقِى الرُّوْحَ مِنْ اَمْرِهٖ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ لِيُنْذِرَ يَوْمَ التَّلَاقِ ۙ 

 (அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது தன் கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான். 

 (அல்குர்ஆன் : 40:15) 
                                                
 اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى 

 அர்ரஹ்மான் அர்ஷின்மேல் உயர்ந்தான் . 

 (அல்குர்ஆன் : 20:5) 
                                                
 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍ بِاَمْرِهٖ  اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌  تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ 

 நிச்சயமாக உங்கள் இர ட்சகனான அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மேல் உயர்ந்தான்- அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். 

 (அல்குர்ஆன் : 7:54) 
                                                
 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

 நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது, 'லா இலாஹ இல்லல்லாஹுல் அலீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அரீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி, வ ரப்புல் அர்ளி, வ ரப்புல் அர்ஷில் கரீம்' (நன்கறிந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; மகத்தான அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், சிறப்புக்குரிய அரியாசனத்தின் அதிபதியுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை) என்று பிரார்த்தித்து வந்தார்கள். 

 நூல்: ஸஹீஹுல் புகாரி : 7426. 
                                                
 அர்ஷ் என்ற சொல் அரபியில் அரசனின் சிம்மாசனத்திற்கு சொல்லப்படும். ஸபா நாட்டு ராணியைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: 
                                                
 اِنِّىْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِيَتْ مِنْ كُلِّ شَىْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِيْمٌ 

 “நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது. 

 (அல்குர்ஆன் : 27:23) 
                                                
 அர்ஷ் என்பது அனைத்து படைப்புகளின் முகடு ஆகும். வானங்களிலும், பூமியிலும், அவ்விரண்டிற்கும் இடையில் உள்ள படைப்புகள் அனைத்தும் அர்ஷின் கீழ் உள்ளன என இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். 

 நூல்: தஃப்ஸீருல் குர் ஆனில் அளீம் - 4/243 
                                                
 மேலும் படைப்புகளில் மிகப்பெரியது அர்ஷும், அதன் முகடும்தான் என்றும் கூறினார்கள். 

 நூல்: தஃப்ஸீருல் குர் ஆனில் அளீம் - 4/247 
                                                
 அர்ஷை மலாயிகா சுமந்து கொண்டு இருக்கிறார்கள். 
                                                
 اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُوْنَ بِهٖ وَيَسْتَغْفِرُوْنَ لِلَّذِيْنَ اٰمَنُوْا‌  رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ 

 அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 

 (அல்குர்ஆன் : 40:7) 
                                                
 وَّالْمَلَكُ عَلٰٓى اَرْجَآٮِٕهَا ‌ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَٮِٕذٍ ثَمٰنِيَةٌ 

 இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள். 

 (அல்குர்ஆன் : 69:17) 
                                                
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 உயர்ந்தோனான அல்லாஹ்வின் அர்ஷை சுமந்து கொண்டிருக்கும் மலாயிக்காக்களில் ஒரு மலக்கைக் குறித்து அறிவிப்பதற்கு எனக்கு அனுமதிக்கப்பட்டது. அவரது காது சோனைக்கும் தோள்பட்டைக்குமான இடைவெளி எழுநூறு வருட பயண தூரமாகும். 

 நூல்: சுனனு அபிதாவூது - 4727, 
 இமாம் பைஹகி (ரஹ்) அவர்களின் அல் அஸ்மா வஸ்ஸிஃபாத் - 846. 
                                                
 அர்ஷ் உயர்ந்த சுவனமாகிய ஃபிர்தௌஸிற்கு மேல் உள்ளது. 
                                                
 அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரிஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்கு இந்த (நற்) செய்தியை அறிவிக்கலாமா?' என்று (நபித் தோழர்கள்) கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றைத் தன்னுடைய பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காக (அல்லாஹ்) தயார்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொரு இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் எனும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும். அதற்கு மேலே அளவிலா அருளாள(ன் இறைவ)னின் அரியாசனம் (அர்ஷ்) இருக்கிறது. இன்னும் அ(ந்த படித்தரத்)திலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன என்று கூறினார்கள். 

 அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) 
 நூல்: ஸஹீஹுல் புகாரி : 7423. 
                                                
 அர்ஷின் அளவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மதிப்பிட முடியாது என இப்னு அப்பாஸ்( ரலி) அவர்கள் கூறினார்கள். 

 நூல்: அத்தௌஹீது இப்னு ஹுஸைமா - 1/248, 
 இமாம் அப்துல்லாஹ் பின் அஹ்மத் (ரஹ்) அவர்களின் அஸ்ஸுன்ன -586 
                                                

 மேலும் மறைவானவற்றை நம்புவது :
                                                
மறைவான விஷயங்களில் ஆதாரபூர்வமானவைகளை உண்மைப் படுத்தி நம்பிக்கை கொள்ள வேண்டும். உதாரணமாக அர்ஷ், குர்ஸி, சொர்க்கம், நரகம், கப்ரின் இன்பமும், வேதனையும், சிராத்து, மீசான், போன்றவைகளை மாற்று விளக்கம் கூறாமல் நம்ப வேண்டும். 
                                                
மறைவானவற்றை நம்பிக்கை கொள்வது ஈமானின் அடிப்படைகளில் ஒன்று. நமது புலனுக்கு அப்பாற்பட்டவைகளில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவைகளில் உள்ளவைகள் தாம் இங்கே கூறப்பட்டுள்ளவைகள். 
                                                
இமாம் அபுஜஃபர் அத்தஹாவி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 
அர்ஷும், குர்ஸியும் உண்மையாகும். 

 நூல்: ஷரஹு தஹாவியா - 267

 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி 
                                                . 
Previous Post Next Post