- பேராசிரியர் ஃபைசல் அல்-வாதியி
தவ்ஹீத் மற்றும் அகீதாவின் புத்தகம்
ஈமான் மற்றும் மார்க்கத்தின் படித்தரங்கள் (பற்றிய) பாடம்
1. மார்க்கத்தின் படித்தரங்கள் யாவை?
மூன்று. இஸ்லாம், ஈமான் மற்றும் இஹ்ஸான் ஆகும்.
2. நம்மீது கற்றுக் கொள்வது கடமையாக இருக்கும் நான்கு விடயங்கள் யாவை?
முதலாவது: மார்க்கக் கல்வி,
இரண்டாவது: அதன் படி அமல் செய்வது,
மூன்றாவது: அதன் பக்கம் (மக்களை) அழைப்பது,
மேலும் நான்காவது: அதில் ஏற்படும் சிரமங்களில் பொறுமையாக இருப்பது ஆகும்.
3. ஒரு முஸ்லின் மீது அறிந்து கொள்வது கடமையாக இருக்கும் மூன்று அடிப்படைகள் யாவை?
அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்வது, அவனுடைய நபி ﷺ அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது, மேலும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி அறிந்து கொள்வதாகும். ஒரு மனிதனிடத்தில் அவனுடைய கப்ரில் கேட்கப்படும் மூன்று கேள்விகளும் இவைப்பற்றியே ஆகும்.
4. உன்னுடைய இறைவன் யார்?
என்னுடைய இறைவன் அல்லாஹ் ஆவான்.
5. உன்னுடைய நபி யார்?
என்னுடைய நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆவார்.
6. உன்னுடைய மார்க்கம் என்ன?
என்னுடைய மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
7. உன்னைப் படைத்தது யார்?
அல்லாஹ்வே, என்னையும் (மற்ற) அனைத்து படைப்பினங்களையும் படைத்தான்.
8. அல்லாஹ் நம்மை ஏன் படைத்தான்?
அவனை (மட்டும்) வணங்குவதற்காக நம்மை படைத்தான்.
9. இபாதத் (வணக்கவழிபாடு) என்றால் என்ன?
வெளிப்படையான மற்றும் மறைவான, சொற்கள் மற்றும் செயல்களிலிருந்து எவற்றையெல்லாம் அல்லாஹ் விரும்புவானோ மேலும் பொருந்திக் கொள்வானோ, அவையனைத்தையும் (உள்ளடக்கக்கூடிய) விசாலமான ஒரு வார்த்தையாகும்.
10. இஸ்லாம் என்றால் என்ன?
அது, "தவ்ஹீதைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் சரணடைவது, கீழ்ப்படிதலைக் கொண்டு அவனுக்குக் கட்டுப்படுவது, மேலும் இணைவைப்பை விட்டும் அதனுடைய மக்களை விட்டும் விலகி இருப்பதாகும்."
11. இஸ்லாத்தின் தூண்கள் எத்தனை?
ஐந்து. அவை: உண்மையில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, மேலும் முஹம்மது நபி ﷺ அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி சொல்வது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத் கொடுப்பது, பிரயாணம் செல்ல சக்திபெற்றவர் கஃபாவை ஹஜ் செய்வது, மேலும் ரமலானில் நோன்பு நோற்பது ஆகும்.
12. எந்த ஒரு மார்க்கத்தையே அன்றி வேறு எதையும் அல்லாஹ் (மார்க்கமாக) ஏற்றுக்கொள்ள மாட்டான்?
அது (அந்த மார்க்கமானது) இஸ்லாம் ஆகும்.
13. எந்த மார்க்கத்தில் குழந்தைகள் பிறக்கின்றன?
இஸ்லாமிய மார்க்கத்தில் ஆகும்.
14. இறைநிராகரிக்கும் மார்க்கங்களிலிருந்து நான்கினைக் குறிப்பிடு.
யஹூதிய்யாஹ், நஸ்ரானிய்யாஹ், ஸாபியாஹ் மற்றும் மஜூஸிய்யாஹ்.
15. யூதர்களும், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களை பொருந்திக் கொள்கின்றனரா?
இல்லை. அல்லாஹ் கூறுகின்றான்: "(நபியே) யூதர்களும், கிறிஸ்தவர்களும், நீர் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும்வரை உம்மைப் பற்றி அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள்; (ஆகவே, அவர்களிடம் அல்லாஹ்வின் நேர்வழியாகிய இஸ்லாம்)தான் நிச்சயமாக நேர்வழி (அதனையே பின்பற்றுவேன்) எனக் கூறிவிடுவீராக!" [அல்-பகரா:120]
16. படைப்பினங்களில் மிகக் கெட்டவர்கள் யார்? மேலும் படைப்பினங்களில் மிகச் சிறந்தவர்கள் யார்?
படைப்பினங்களில் மிகக் கெட்டவர்கள் இறை நிராகரிப்பாளர்களே, மேலும் படைப்பினங்களில் மிகச் சிறந்தவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களே ஆவர்.
17. ஒரு இறை நிராகரிப்பாளன் நல்ல வாழ்க்கையை வாழ்வானா?
இல்லை.
18. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்பவர்கள் யார்?
அவர்கள் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆவர்.
19. இஸ்லாமிய மார்க்கம் முழுமையானதா அல்லது முழுமைப்படுத்துவதின் பக்கம் தேவையுள்ளதா?
இஸ்லாமிய மார்க்கம் முழுமையானதாகும்.
20. ஒரு முஸ்லிம் தன்னுடைய மார்க்கத்தை எங்கிருந்து எடுத்துக் கொள்வான்?
குர்ஆன் மற்றும் ஸுன்னாவில் இருந்தாகும்.
21. உன்னுடைய அகீதா (கொள்கை) என்ன?
ஸுன்னீ, ஸலஃபி (குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வை முன்சென்ற நல்லோர்களுடைய புரிதலின் அடிப்படையில் பின்பற்றுபவன்).
22. ஜாஹிலியத் (மடமைத்தனம்) என்றால் என்ன?
அது குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்விற்கு முரணான அனைத்து விடயங்களும் ஆகும்.
23. இஸ்லாத்தின் கயிறுகளிலிருந்து (சட்டங்களிலிருந்து) இல்லாமல் போகும் முதலாவது மற்றும் இறுதியான (விடயம்) யாது?
அவற்றில் முதலாவதாக இல்லாமல் போவது, அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளிப்பதாகும். மேலும் அவற்றில் இறுதியானது தொழுகையாகும்.
24. இஹ்ஸான் என்றால் என்ன?
நீ அல்லாஹ்வைப் பார்ப்பதைப் போன்று அவனை வணங்குவதாகும். நீ அவனை பார்க்கவில்லை என்றாலும், அவன் நிச்சயமாக உன்னைப் பார்க்கின்றான்.
25. {(விசுவாசங்கொண்டோரே!) நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு (பொருளை)க் கொடுக்குமாறும் (உங்களை) ஏவுகிறான். மேலும், மானக்கேடான காரியங்கள், (மார்க்கத்தில்) மறுக்கப்பட்ட, வரம்பு மீறுதல் ஆகியவற்றை விட்டும், (உங்களை)அவன் விலக்குகிறான். (இவைகளை) நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்காக அவன் உங்களுக்கு உபதேசிக்கிறான்}, என்ற அல்லாஹ்வுடைய கூற்றானது எந்த சூராவில் உள்ளது?
சூரத்துன் நஹ்லில் உள்ளது.
அல்லாஹ்வை ஈமான் கொள்வதைப் பற்றிய பிரிவு
26. ஈமான் என்றால் என்ன?
நாவினால் மொழிவது, உள்ளத்தினால் நம்பிக்கை கொள்வது மற்றும் உடலுறுப்புகளினால் அமல் செய்வதாகும். அது (அல்லாஹ்வுக்கு) கீழ்ப்படிவதால் அதிகரிக்கும், மேலும் பாவம் செய்வதால் குறையும்.
27. ஈமானின் தூண்கள் எத்தனை?
ஆறு. அல்லாஹ்வையும், அவனது மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும், மேலும் விதியையும், அதன் நன்மை மற்றும் தீமையையும் நம்பிக்கை கொள்வதாகும்.
28. ஈமான் அதிகரிக்கவும் குறையவும் செய்யுமா?
ஆம். (அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதால்) அதிகரிக்கும், மேலும் (பாவம் செய்வதால்) குறையும்.
29. ஈமானுடைய கிளைகள் எத்தனை ?
அறுபது சொச்சம் அல்லது எழுபது சொச்சம் கிளைகள் ஆகும்.
30. ஈமானுடைய கிளைகளில் மிகவும் உயர்ந்தது எது?
அவற்றில் மிகவும் உயர்ந்தது "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்ற கூற்றாகும்.
31. ஈமானுடைய கிளைகளில் மிகவும் தாழ்ந்தது எது?
அவற்றில் மிகவும் தாழ்ந்தது இடையூறு தருபவற்றை பாதையை விட்டு அகற்றுவதாகும்.
32. ஈமானுடைய சில கிளைகளைக் குறிப்பிடு.
அல்லாஹ்வையும், அவனது மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும், மேலும் விதியையும், அதன் நன்மை மற்றும் தீமையையும் நம்பிக்கை கொள்வது, தொழுகையை நிலை நாட்டுவது, ஸகாத் கொடுப்பது, ரமலானின் நோன்பு நோற்பது, ஹஜ் செய்வது, ஜிஹாத் செய்வது, நீதியுடன் நடந்து கொள்வது, பெற்றோர்களுடன் நன்முறையில் நடந்து கொள்வது, உறவுகளைப் பேணுவது, உண்மைத்தனம் மற்றும் பொறுமையை கடைப்பிடிப்பது, அமானிதத்தை பேணுவது, மார்க்கக் கல்வியைத் தேடுவது, ஹலாலானவற்றை உண்பது, வெட்கம் கொள்வது, மேலும் இடையூறு தருபவற்றை பாதையை விட்டு அகற்றுவது முதலியனவாகும்.
33. ஈமானுடைய கயிறுகளில் மிகவும் உறுதியானது எது?
அல்லாஹ்வுக்காக நேசிப்பது, அல்லாஹ்வுக்காக வெறுப்பது, அல்லாஹ்வுக்காக தோழமைக் கொள்வது மேலும் அல்லாஹ்வுக்காக பகைமை கொள்வது ஆகும்.
34. பலவீனமான முஃமின் மற்றும் பலமான முஃமின், என இவ்விருவரில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானவர் யார்?
பலமான முஃமினே அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானவர் ஆவார்.
35. அடியார்கள் மீதுள்ள முதலாவது கடமை யாது?
அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும்.
36. நபிமார்கள் யாவரும் அழைப்புப் பணி விடுத்த விடயம் யாது?
அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவது, மேலும் தாகூத்களை புறக்கணிக்கப்பது (என்பதின் பக்கம் அழைப்புப்பணி செய்தார்கள்).
37. அல்லாஹ்வுடைய அவுலியாக்கள் (இறைநேசர்கள்) என்பவர்கள் யார்?
{அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்வை உண்மையாகவே விசுவாசித்து (அவனைப்) பயந்தவர்களாகவும் இருப்பார்கள்} [யூனுஸ் : 10:63].
38. அடியார்கள் மீதிருக்கும் அல்லாஹ்வுடைய உரிமை யாது?
அவர்கள் அவனை (மட்டுமே) வணங்குவது, மேலும் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காமல் இருப்பதாகும்.
39. அல்லாஹ்வின் மீது அடியார்களுக்கு இருக்கும் உரிமை யாது?
எவர் அவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்கவில்லையோ, அவரை அவன் தண்டிக்காமல் இருப்பதாகும்.
40. அல்லாஹ்வுடைய தவ்ஹீதின் வகைகள் எத்தனை?
மூன்று வகைகள் ஆகும். அவை: தவ்ஹீதுர் ரூபூபிய்யாஹ், தவ்ஹீதுல் உலூஹிய்யா, தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்.
41. தவ்ஹீதுர் ரூபூபிய்யாஹ் என்றால் என்ன?
அது அல்லாஹ்வை, அவனுடைய செயல்களிலிருந்துள்ள படைத்தல், ஆட்சிசெய்தல், வாழ்வாதாரம் அளித்தல், நிர்வகித்தல் முதலியவற்றில் ஒருமைப்படுத்துவதாகும்.
42. தவ்ஹீதுல் உலூஹிய்யா என்றால் என்ன?
அது வணக்க வழிபாட்டைக் கொண்டு அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும்.
43. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்றால் என்ன?
அது பெயர்கள் மற்றும் பண்புகளிலிருந்து எவற்றையெல்லாம் அல்லாஹ் தனக்கு (இருப்பதாக) உறுதிப்படுத்தினானோ அல்லது அவனது தூதர் ﷺ அவர்கள் அவனுக்கு எவற்றையெல்லாம் (இருப்பதாக) உறுதிபடுத்தினார்களோ, அவை யாவற்றையும் எவ்வாறு என விளக்கம் கொடுக்காமல், (படைப்பினங்களின் பண்புகளோடு) ஒப்பாக்காமல், மறுக்காமல் (அவை எவ்வாறு வந்துள்ளனவோ அவ்வாறே அவற்றை) உறுதிப்படுத்துவதாகும்.
44. கலிமத்துத் தவ்ஹீத் (ஏகத்துவக் கலிமா) என்பது யாது?
லா இலாஹ இல்லல்லாஹ் ஆகும்.
45. லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் என்ன?
உண்மையில் வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதாகும்.
46. {நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணத்தைக் கூறியுள்ளான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
(அது) நல்ல மரத்தைப் போன்றதாகும், அதன் வேர் (பூமியில்) ஆழப்பதிந்தும் அதன் கிளை வானளாவியும் இருக்கிறது. அது தன் இறைவனின் அனுமதிகொண்டு ஒவ்வொரு நேரத்திலும் கனிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் மனிதர்களுக்கு அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக இவ்வுதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான்}, என்ற அல்லாஹ்வுடைய கூற்றானது எந்த சூராவில் உள்ளது?
சூரத்துல் இப்ராஹீமில் உள்ளது.
47. லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற சாட்சியத்தின் நிபந்தனைகள் யாவை ?
லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற சாட்சியத்தின் நிபந்தனைகளாவது: கல்வியறிவு, இஃலாஸ், உறுதியான நம்பிக்கை, உண்மைத்தனம், கீழ்ப்படிதல், ஏற்றுக்கொள்ளுதல், நேசித்தல் மற்றும் தாகூத்தை நிராகரித்தல் ஆகியனவாகும்.
48. லா இலாஹ இல்லல்லாஹ்வின் தூண்கள் யாவை?
இரு தூண்களாகும். (அவை):
1.மறுத்தல் (லா இலாஹ - உண்மையில் வணக்கத்திற்குத் தகுதியான எந்தவொரு இறைவனும் இல்லை),
2. உறுதிப்படுத்துதல் (இல்லல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர).
49. அல்லாஹ் எங்கே இருக்கிறான்? மேலும் (அதற்குரிய) ஆதாரம் என்ன?
வானத்தில் (வானத்தின் மீது) இருக்கின்றான். (அதற்குரிய) ஆதாரமாவாது, {அல்லாஹ் அர்ஷின் மீது (தன் கண்ணியத்திற்கு தக்கவாறும் மகத்திற்குரியவாறும்) உயர்ந்துவிட்டான்} [தாஹா - 5] என்ற அல்லாஹ்வுடைய கூற்றாகும்.
50. அல்லாஹ் நம்மோடு இருக்கின்றானா?
அவனுடைய அறிவு, (பேராற்றல், அறிவு முதலியவற்றினால்) சூழ்ந்திருத்தல், செவியுறுதல் மற்றும் பார்வை முதலியவற்றினால் நம்மோடு இருக்கின்றான்.
51. அல்லாஹ்வையன்றி வேறெவரும் மறைவானவற்றை அறிவாரா?
மறைவானவற்றை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியமாட்டார்.
52. கவிஞன் கூறிய வார்த்தைகளிலேயே மிகவும் உண்மையான வார்த்தை எது?
"நிச்சயமாக அல்லாஹ்வையன்றி மற்றவை அனைத்தும் அழியக்கூடியவையே" என்ற லபீதுடைய கூற்றாகும்.
53. மிகப்பெரிய நன்மை எது?
அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும்
54. மிகப்பெரிய தீமை எது?
அல்லாஹ்விற்கு இணைவைப்பதாகும்.
55. ஷிர்க் (இணைவைப்பு) என்றால் என்ன?
அல்லாஹ் அல்லாத மற்றவற்றை வணங்குவதாகும்.
56. பெரும்பாவங்களில் மிகப்பெரியவை யாவை?
அல்லாஹ்விற்கு இணைவைப்பது, பெற்றோறை நோவினை செய்வது மற்றும் பொய் சாட்சியம் கூறுவது ஆகும்.
57. பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும்பாவங்கள் யாவை?
அவை: அல்லாஹ்விற்கு இணைவைப்பது, சூனியம் செய்வது, அல்லாஹ் (கொலை செய்யக்கூடாது என்று) தடுத்துள்ள ஆன்மாவை நியாயமின்றி கொலை செய்வது, வட்டி உண்பது, அனாதைகளின் செல்வத்தை (அநியாயமாக) உண்பது, கற்புள்ள அப்பாவிகளான விசுவாசியான பெண்களின் மீது விபச்சார பழி சுமத்துவது, மேலும் போரின் போது புறமுதுகு காட்டுவது ஆகியனவாகும்.
58. இணைவைப்புடன் நல்லமலானது பயனளிக்குமா?
பயனளிக்காது. ஏனெனில், இணைவைப்பானது நல்லமலை அழித்து விடும்.
59. அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்து பலியிடுவது கூடுமா?
கூடாது. "அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்து பலியிடுபவரின் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும்" என்ற ஹதீஸின் காரணத்தினால் ஆகும்.
60. துஆவின் முக்கியத்துவம் என்ன?
துஆ என்பது இபாதத் ஆகும்.
61. இறந்தவர்கள் மற்றும் நமக்கு முன்பு இல்லாதவர்களிடம் துஆ செய்வதன் சட்டம் என்ன?
பெரிய வகை இணைவைப்பாகும்.
62. "யா ரஸூலுல்லாஹ்! (அல்லாஹ்வுடைய தூதரே!)" என்று நாம் துஆவில் சொல்வது கூடுமா?
அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திப்பது கூடாது.
63. அப்துல் கஃபா, அப்துர் ரஸூல், அப்துல் ஹுசைன் என்று நாம் பெயர் வைப்பது கூடுமா?
கூடாது. ஏனெனில், அது இணைவைப்பிலிருந்து உள்ளதாகும்.
64. குறி சொல்பவனிடத்தில் செல்பவனுடைய தண்டனை என்ன?
நாற்பது இரவுகள் அவருக்கு தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. அவனை (அவன் சொல்வதை) உண்மைப்படுத்தினால் முஹம்மது ﷺ அவர்கள் மீது இறக்கியருளப்பட்டதை நிச்சயமாக அவர் நிராகரித்து விட்டார்.
65. சூனியத்தின் சட்டம் என்ன?
சூனியம் இறைநிராகரிப்பாகும்.
66. நுஷ்ராஃ என்றால் என்ன?
சூனியம் செய்யப்பட்டவரிடமிருந்து சூனியத்தை நீக்குவதாகும்.
67. நுஷ்ராஃவின் சட்டம் என்ன?
(சூனியத்தை) சூனியத்தைக் கொண்டே நீக்குவதாக இருந்தால் அனுமதியில்லை. ஷரீஅத்தாக்கப்பட்ட ருகய்யாஹ்வைக் கொண்டு செய்வதாக இருந்தால் அனுமதிக்கப்பட்டதாகும்.
68. ஷரீஅத்தாக்கப்பட்ட ருகய்யாஹ்விற்கான சில ஆதாரப்பூர்வமான துஆக்களை குறிப்பிடு.
அல்லாஹும்ம! ரப்பன்னாஸ் அத்ஹிப் அல்-பஃஸ, வஷ்ஃபி அன்தஷ்-ஷாஃபிய் லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக, ஷிஃபாஉன் லா யுஃகாதிரு ஸகமன்.
(பொருள்: அல்லாஹ்வே! மனிதர்களின் இறைவனே! துன்பத்தைப் போக்கி (இவருக்கு) குணமளித்திடுவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு எந்த ஒரு நிவாரணமுமில்லை. அது எந்த நோயையும் விட்டுவைக்காத நிவாரணமாகும்).
பிஸ்மில்லாஹி அர்கீக மின் குல்லி ஷையின் யூஃதீக, மின் ஷர்ரி குல்லி நஃப்ஸின் அவ் அய்னின் ஹாஸிதின், அல்லாஹு யஷ்ஃபீக.
(பொருள்: உனக்கு நோவினைத் தரும் அனைத்தையும் விட்டும், ஒவ்வொரு ஆன்மாவின் தீங்கை விட்டும் அல்லது பொறாமைக்கார கண்னை விட்டும் உனக்கு அல்லாஹ்வுடைய பெயரைக் கொண்டு நான் ஓதிப்பார்க்கின்றேன். அல்லாஹ் உனக்கு நிவாரணமளிப்பானாக).
69. தாயத்துகளை தொங்கவிடுவது கூடுமா?
கூடாது. ஏனென்றால், அது இணைவைப்பிலிருந்து உள்ளதாகும்.
70. வேதம் கொடுக்கப்படாத காஃபிரால் அறுக்கப்பட்ட பிராணியின் (அதை உண்பதின்) சட்டம் என்ன?
அனுமதிக்கப்பட்டதல்ல.
71. தவக்குல் என்றால் என்ன?
நலவை ஈட்டுவதிலும், தீங்கை நீக்குவதிலும் ஷரீஅத்தான காரணிகளை எடுத்து செயல்படுவதோடு அல்லாஹ்வின் மீதிருக்கும் உள்ளத்தின் உண்மையான சார்ந்திருத்தலுக்கு (தவக்குல் எனப்படும்).
72. "நான் அல்லாஹ்வின் மீதும் பின்பு உங்களின் மீதும் தவக்குல் வைத்துள்ளேன்" என்று கூறுவது ஆகுமானதா?
அது (அவ்வாறு கூறுவது) ஆகுமானதல்ல.
73. எதனைக் கொண்டு நாம் சத்தியம் செய்வோம்?
அல்லாஹ்வுடைய பெயர்களில் ஏதேனும் ஒரு பெயரைக் கொண்டு அல்லது அவனுடைய பண்புகளில் ஏதேனும் ஒரு பண்பினைக் கொண்டு (நாம் சத்தியம் செய்வோம்).
74. சில ஹராமான சத்தியங்களைக் குறிப்பிடு.
மூதாதையர்களைக் கொண்டு, கண்ணியத்தை அல்லது அமானிதத்தைக் கொண்டு சத்தியம் செய்வது, மேலும் அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு செய்யப்படும் அனைத்து சத்தியமுமாகும்.
75. அல்லாஹ் அவன் நாடிய எதைக் கொண்டும் சத்தியம் செய்வானா?
ஆம். ஏனெனில், அவனே அனைத்தையும் படைத்தவன் ஆவான்.
76. அல்லாஹ்வைத் திட்டுவது, மேலும் அவனது தூதர் ﷺ மற்றும் அவனது மார்க்கத்தைத் திட்டுவதன் சட்டம் என்ன?
பெரிய வகை இறைநிராகரிப்பாகும்.
77. முஸ்லிம்கள் எதைக் கொண்டு தீர்ப்பளிப்பார்கள்?
குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வைக் கொண்டு (தீர்ப்பளிப்பார்கள்).
78. தாகூத் என்றால் என்ன?
ஒரு அடியான் அவன் வணங்கக்கூடிய அல்லது பின்பற்றக்கூடிய அல்லது கீழ்ப்படியக் கூடியவற்றிலிருந்துள்ள விடயங்கள் (எவற்றிலேனும்), அவனுடைய வரம்பை மீறுவதாகும்.
79. தாகூத்களின் தலைகள் எத்தனை?
ஐந்து.
1. இப்லீஸ் (அவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக),
2. அல்லாஹ்வையன்றி தான் பொருந்திக் கொண்ட நிலையில் வணங்கப்படுபவன்,
3. தன்னை வணங்குவதன் பக்கம் மக்களை அழைப்பவன்,
4. மறைவான ஞானம் (தனக்கு இருப்பதாக) வாதிடுபவன்,
5. மேலும் அல்லாஹ் இறக்கி வைக்காத (சட்டங்களைக்) கொண்டு தீர்ப்பளிப்பவன்.
80. லாத், உஸ்ஸா மற்றும் மனாத் என்பன யாவை?
அவை ஜாஹிலியத்தில் அல்லாஹ்வைத் தவிர்த்து வணங்கப்பட்டுவந்த சிலைகளாகும்.
81. ஜின்களுடைய இருப்பை மறுப்பதன் சட்டம் என்ன?
ஜின்களுடைய இருப்பை மறுப்பது குஃப்ர் ஆகும்.
82. தொழுகையை விடுவதன் சட்டம் என்ன?
குஃப்ர் ஆகும்.
83. சஹாபாக்களை திட்டுவது மற்றும் அவர்களை சபிப்பதன் சட்டம் என்ன?
குஃப்ர் ஆகும்.
84. {முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் (இஸ்லாத்தை ஏற்க) முதலாவதாக முந்திக் கொண்டவர்களும் (அவர்களின் சொல், செயல்களாகிய) நற்கருமத்தில் அவர்களைப் பின்பற்றினார்களே அவர்களும், அவர்களை அல்லாஹ் திருப்தியடைந்தான், அவர்களும் (அல்லாஹ்வாகிய) அவனை திருப்தியடைந்தனர். அன்றியும், சுவனபதிகளை அவர்களுக்கென அவன் தயாராக்கி வைத்திருக்கின்றான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அவற்றிலேயே நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள். இது மகத்தான வெற்றியாகும்)} என்ற அல்லாஹ்வுடைய கூற்றானது எந்த சூராவில் உள்ளது?
சூரத்துத் தவ்பாவில் உள்ளது.
85. சஹாபாக்களைத் திட்டக்கூடியவர்கள் யார்?
ராஃபிதாக்கள் ஆவர்.
86. இஸ்லாத்தை உரிமைகோரக்கூடிய கூட்டங்களில் மிகவும் வழிகெட்டவை யாவை?
பாதினிய்யாஹ், ராஃபிதாஹ், ஜஹ்மிய்யாஹ் மற்றும் சூஃபிய்யாக்களில் வரம்பு மீறியவர்கள் ஆவர்.
87. ஜனநாயகம் என்றால் என்ன?
ஒரு (மக்கள்) கூட்டம் தன்னைக் கொண்டு தானே ஆட்சி செய்து கொள்வதாகும்.
88. ஜனநாயகத்தின் சட்டம் என்ன?
பெரிய வகை இணைவைப்பாகும்.
89. ஹிஸ்பிய்யாஹ்வின் (இயக்கப் பிரிவினையின்) சட்டம் என்ன?
ஹராம் ஆகும்.
90. அல்லாஹ்விற்கு பெயர்கள் மற்றும் பண்புகள் உள்ளனவா?
ஆம். அவனது கண்ணியத்திற்கு ஏற்றவாறு அவனுக்கு பெயர்களும், பண்புகளும் உள்ளன.
91. சூரத்துல் இஃக்லாஸை எழுது.
பேரருளாளன், பெரும் கருணையாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்).
(நபியே!) நீர் கூறுவீராக அவன் 'அல்லாஹ்' ஒருவனே! அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!). அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.
92. அல்லாஹ்வுடைய பெயர்கள் எத்தனை?
(அவை) நிறைய உள்ளன. அவற்றினுடைய எண்ணிக்கை நமக்கு தெரியாது. அவற்றிலிருந்து ஒரு தொன்னூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. எவர் அவற்றை அறிந்து, மனனம் செய்து, மேலும் அவை அவசியமாக்குபவற்றைக் கொண்டு அமல் செய்வாரோ, அவர் சொர்க்கம் நுழைவார்.
93. அல்லாஹ்வுடைய பெயர்களிலிருந்து பத்தினைக் குறிப்பிடு.
அர்-ரஹ்மான் (பேரருளாளன்), அர்-ரஹீம் (பெரும் கருணையாளன்), அல்-மலிக் (உண்மையான அரசன்), அல்-குத்தூஸ் (மிக பரிசுத்தமானவன்), அஸ்-ஸலாம் (சாந்தியளிப்பவன்), அல்-முஃமின் (அபயமளிப்பவன்), அல்-முஹய்மின் (அடியார்களைக் கண்காணிப்பவன்), அல்-அஸீஸ் (யாவரையும் மிகைத்தவன்), அல்-ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) மற்றும் அல்-முதகப்பிர் (பெருமைக்குரியவன்).
அல்லாஹ்வை ஈமான் கொள்வதன் சிறப்பு
94. அல்லாஹ்வுடைய பெயர்கள் என்னெவன்று அழைக்கப்படும்?
அழகிய பெயர்கள் (என்று அழைக்கப்படும்). அல்லாஹ் கூறுகின்றான்: {இன்னும், அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக் கூறுவோரை விட்டுவிடுங்கள், அவர்கள் செய்து கொண்டிருந்தவைக்குரிய கூலியைக் கொடுக்கப்படுவார்கள்}. (அல்குர்ஆன்: 7:180)
95. எது அதிகமானது அல்லாஹ்வுடைய பெயர்களா அல்லது அவனுடைய பண்புகளா?
அவனுடைய பண்புகள் அதிகமானதாகும்.
96. அவனுடைய பண்புகளிலிருந்து பத்தினைக் குறிப்பிடு.
கருணை, அறிவு, ஆற்றல், கண்ணியம், பெருமை, கண்காணித்தல், படைத்தல், செவியேற்றல், பார்த்தல் மற்றும் நாட்டம் ஆகும்.
97. அல்லாஹ்வுடைய பண்புகள் என்னெவன்று அழைக்கப்படும்?
அவனது உயரிய பண்புகள் (என்று அழைக்கப்படும்). {வானங்களிலும், பூமியிலும் மிக்க மேலான வர்ணனை (பண்பு) அவனுக்குரியதே} (அல்குர்ஆன் : 30:27), {அல்லாஹ்வுக்கோ மிக்க மேலான வர்ணனை உண்டு} (அல்குர்ஆன் : 16:60)
98. அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கின்றது என்று கூறியவர்கள் யார்? எதைக்கொண்டு அல்லாஹ் அவர்களுக்கு மறுப்பளித்தான்?
அவர்கள் யஹூதிகள் ஆவர். அல்லாஹ், (பின்வரும்) அவனுடைய கூற்றைக் கொண்டு மறுப்பளித்தான். {அவர்களுடைய கைகள் தாம் கட்டப்பட்டிருக்கின்றன. அன்றியும் இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். எனினும், அல்லாஹ்வுடைய இரு கைகளும் விரிக்கப்பட்டே இருக்கின்றன. அவன் நாடியவாறெல்லாம் செலவு செய்கிறான்} (அல்குர்ஆன் : 5:64).
99. அல்லாஹ் படைத்துள்ள ரஹ்மத்துகள் எத்தனை?
நூறு ரஹ்மத்துகள் ஆகும்.
100. அவற்றிலிருந்து பூமியில் இறக்கியது எத்தனை?
ஒரு ரஹ்மத் ஆகும்.
101. அல்லாஹ்வுடைய ரஹ்மத் மற்றும் அவனுடைய கோபம் என அவை இரண்டில் எது மிகைத்துவிட்டது?
அவனுடைய ரஹ்மத் அவனது கோபத்தை மிகைத்துவிட்டது.
102. எதை கொண்டு அல்லாஹ்வின் பக்கம் வஸீலா (நெருக்கத்தை) தேடுவோம்?
அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகள், நல்லமல்கள், மேலும் ஒரு ஸாலிஹான மனிதருடைய துஆ முதலியவற்றைக் கொண்டு (வஸீலா தேடுவோம்).
103. 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என்பதன் பொருள் என்ன?
ஜின்கள் மற்றும் மனிதர்கள் என அனைவருக்கும் அவர் அல்லாஹ்வுடைய தூதர் ஆவார் என்பதாகும்.
104. அனைத்து மனிதர்களையும் விட நாம் அதிகமாக நேசம் வைப்பதற்கு கடமையானவர் யார்?
அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள்.
105. அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் யாவை?
1. அல்லாஹ்விற்காக இஃக்லாஸுடன் செய்வது மற்றும்,
2. அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களைப் பின்பற்றுவது ஆகும்.
106. நபி ﷺ அவர்களுடைய வழியில் ஒரு அமல் இல்லையென்றால் நாம் அதனை என்னெவன்று அழைப்போம்?
பித்ஃஅத் என்று அழைக்கப்படும்.
107. {மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதியளிக்கவில்லையோ அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா? (கூலி கொடுப்பது மறுமை நாளில்தான் என்ற) தீர்ப்புப்பற்றிய (அல்லாஹ்வுடைய) வாக்கு இல்லாதிருந்தால், அவர்களுக்கிடையில் (இது வரையில்) தீர்ப்பளிக்கப்பட்டே இருக்கும். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு}, என்ற அல்லாஹ்வுடைய கூற்றானது எந்த சூராவில் உள்ளது?
சூரத்துஷ் ஷூராவில் உள்ளது.
108. பித்ஃஅத் என்பது தீமை மற்றும் வழிகேடானதா?
ஆம்.
109. பித்ஃஅத் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா?
பித்ஃஅத்தானது நிராகரிக்கப்படும். அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டான்.
110. மார்க்கத்தில் நல்ல பித்ஃஅத் என ஏதும் இருக்கின்றதா?
மார்க்கத்தில் நல்ல பித்ஃஅத் என எதுவுமில்லை. மாறாக, அனைத்து பித்ஃஅத்களும் வழிகேடாகும்.
111. {(உங்களில்) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு, அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது}, என்ற அல்லாஹ்வுடைய கூற்றானது எந்த சூராவில் உள்ளது?
சூரத்துல் அஹ்ஸாபில் உள்ளது.
மேலும் பல மொழிபெயர்ப்புகளைக் காண:
t.me/salafimaktabahmpm
-மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.